உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரதமர் பதவியை ஏற்கும் முழுத் தகுதியும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு- சரத்குமார் சென்னை: இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். சரத் பிறந்த நாள் இளைஞர் தினம் பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில், …
-
- 1 reply
- 585 views
-
-
வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…
-
- 1 reply
- 560 views
-
-
பாகிஸ்தானின் மறைமுகப் போர்: அத்வானி மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப் போர் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மும்பையில் மூன்று இடங்களில் புதன்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை எல்.கே.அத்வானி வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தனது மென்மையான போக்கை கைவிட வேண்டும். புதன்கிழமை மும்பையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் சமரசம் இல்லை என்ற நிலையை இந்தியா எடுக்க வேண்டும். பயங்கரவாத்தின் வேர்களை களைய…
-
- 2 replies
- 338 views
-
-
2ஜி விவகாரம்: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐயிடம் பாஜக நேரில் வலியுறுத்தல் டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தில் முன்பு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குனர்ர் ஏ.பி.சிங்கை நேரில் சந்தித்து பாஜக குழு வலியுறுத்தியது. வழக்கமாக சிபிஐ இயக்குனர்கள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதில்லை. ஆனால், தற்போது பாஜக எம்பி பிரகாஷ் ஜாவதேகர் தலைமையில் 5 எம்பிக்கள் அவரை சந்தித்த அனுமதி கோரியதையடுத்து, சிங் அவர்களை அனுமதித்தார். இதையடுத்து ஜாவேத்கர், மாயா சிங், சிவகுமார் உதாசி, பூபேந்திர யாதவ் மற்றும் ஜகத் பிரசாத் நடா ஆகியோர் அடங்கிய குழு ஏ.பி.சிங்கை இன்று சந்தித்து ஸ்பெக்ரம் லைசென்ஸ் விற்பனைக் கொள்கைக்கு ப.சிதம்பரம…
-
- 2 replies
- 367 views
-
-
கனிமொழிக்கு காட்டிய சென்டிமெண்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும்! சென்னை: கனிமொழிக்குக் காட்டிய சென்டிமென்டை கருணாநிதி எனக்கும் காட்டியிருக்க வேண்டும். அன்று அவர் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மகளே பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்தாவுடன் ரஞ்சிதா தோன்றிய செக்ஸ் வீடியோ பொய்யானது என கூறி வருகின்றனர். அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்த சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார். இப்போது முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்கள் சிலரை அழைத்து தனியாக பேட்டி கொடுத்து வருகிறார் ரஞ்சிதா. அப்படி சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "முன்பை விட நான் இப்போது அழகாக இருப்பதாக கூ…
-
- 8 replies
- 774 views
-
-
9 ஜூலை 2011, தெற்கு சூடான் என்ற புதிய தேசம் உதயமாகியது. அன்று முதல் ஆப்பிரிக்க கண்டத்தின் 54 வது நாடாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் 193 வது நாடாகவும் இணைந்துள்ளது. இந்தப் புதிய தேசத்தை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் அங்கீகரித்துள்ளன. தெற்கு சூடானின் எண்ணை வளத்தை நுகரும் சீனாவும் இராஜதந்திர உறவுகளைப் பேண முன்வந்துள்ளது. இதற்கிடையே, தமிழ்த் தேசியவாதிகள் வழமை போலவே தெற்கு சூடானுடன், தமிழீழத்தை தொடர்பு படுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். இவ்விரண்டு தேசியப் பிரச்சினைகளுக்கு இடையில் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும், இறுதிக் கட்ட தீர்மானம் தொடர்பாக பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. சூடான் நாட்டின் மொத்த எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு தெற்கு சூடானில் உள்ளது. ஒரு துளி எண்ணெய…
-
- 0 replies
- 362 views
-
-
இந்தோனேஷியாவில் எரிமலை குமுறுகிறது _ வீரகேசரி இணையம் 7/15/2011 4:56:33 PM Share இந்தோனேஷியாவில் சுலாவெஸி மாகாணத்தில் எரிமலையொன்று வெடித்துச் சிதறி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேஷியாவின் சுலாவெஸிமாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள லோகொன் எனும் எரிமலை நேற்று இரவு வெடித்துச் சிதறியது. புகையுடன் கூடிய தீச்சுவாலையுடன் எரிமலைக் குழம்பையும் (லாவா) கக்குகின்றது. இதன்போது சுமார் 4800 அடி உயரத்திற்கு தூசு மற்றும் சிறுகற்களும் தெறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் வசி்ப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாற…
-
- 0 replies
- 330 views
-
-
சன் டிவி சக்சேனா - அய்யப்பன் மீண்டும் கைது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 15ம் தேதி, சக்சேனா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம…
-
- 0 replies
- 769 views
-
-
மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்! Posted by இரும்பொறை on 15/07/2011 in உலகம், செய்தி மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின. ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம். கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள். வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல…
-
- 5 replies
- 761 views
-
-
குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் ஒன்றரை மணி நேரமாக பேசிய நால்வர்- வீடியோவில் சிக்கினர் Posted by இரும்பொறை on 15/07/2011 in செய்தி மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபரா ஹவுஸ் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கண்காணிப்பு கேமராவில் அவர்கள் பதிவாகியுள்ளனர். அவர்கள் யார், என்ன பேசிக் கொண்டிருந்தனர் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும், என்ஐஏ குழுவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த ஓபஹா ஹவுஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசியக் க…
-
- 0 replies
- 477 views
-
-
ஒயின் ஷாப் ஊழியர் தயாரிப்பாளரான கதை - வெளிவராத பகீர் பின்னணி நமது அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்கான காலம் இன்று இல்லாமல் போகலாம். நாளை... நாளை மறுநாள்...’ நீக்ரோ இன மக்கள் தங்கள் விடுதலைக்காகப் பாடிய இந்தப் பாடல் தான், தற்போது தமிழக திரையுலகினருக்கு சுதந்திர கீதமாகியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தான் பட்ட வேதனைகளை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் செல்வராஜ். இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட புகாரில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டார். சக்சேனா கைது செய்யப்பட்டதை விட, அவருக்கு ‘ஆல் இன் ஆலாக’ இருந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டதுதான் திரையுலகினருக்கு இனிப்பூட்டும் செய்தி. இந்நிலையில்…
-
- 0 replies
- 720 views
-
-
சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டதை திரையுலகமே கொண்டாடி வருகிறது. தி.மு.க. ஆதரவாளராகவே பல ஆண்டுகள் இருந்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட, விஜய்க்கு அப்போது கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைப் பார்த்து கொதித்து எழுந்தார். கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் மீது வழக்குகள் பாயும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கேள்விகளைத் தொடுத்தோம்... சன் பிக்சர்ஸால் விஜய்க்கு எந்த வகையில் பாதிப்பு இருந்தது? ‘‘ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்க நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் காலடி அந்த ஊரில் படக்கூடாது என்று அப்போதைய தி.மு.க. மந் திரியின் மகன் போலீஸுக்கு உத்தரவு போடுகிறார்... போலீஸாரும் நெருக…
-
- 0 replies
- 704 views
-
-
வெள்ளிக்கிழமை, 15, ஜூலை 2011 (9:6 IST) அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தியை கைவிட ஜப்பான் முடிவு ஜப்பானில் புகுஷிமா அணுஉலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது. இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார். அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார். ஜப்பானில் மொத்தம் உள்ள 54…
-
- 0 replies
- 349 views
-
-
நவீன பிச்சைக்காரிகள் கைது July 14, 2011 மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம். ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்... ''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன். உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி! ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் …
-
- 3 replies
- 865 views
-
-
. துபாய் நகரின் வெப்பம் நேற்று எறக்குறைய ஐம்பது பாகையளவை எட்டி சாதனை படைத்துள்ளது... உலகில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களைக் கொண்ட துபாய் நகரம் ஜூலைக் வெப்பக் காற்றால் கடும் வெப்பத்தில் தகிக்கிறது. போதாக்குறைக்கு இம்மாத இறுதியில் தொடங்கும் ரமலான் நோன்பால் உணவு விடுதிகளும் பகலில் மூடப்பட்டுவிடும்... யாழ் 'மட்டு' நிழலியின் "பேரீச்சம்பழ ஆன்டி"கள், கண்ணில் தெரிந்தால், தகிக்கும் பகலில் நிலவைக்(??) கண்டு குளிரலாம்... Dubai: Bus shelters across Dubai have turned into virtual roadside ovens with the air conditioning out of order in many, an XPRESS survey has revealed. A sample survey done on Sunday in Dubai's highly popula…
-
- 0 replies
- 604 views
-
-
வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!) ''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' (சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப…
-
- 0 replies
- 447 views
-
-
மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்! முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை. அதைப்போலத்தான் தயாநிதி மாறனும். கடந்த முறை 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடி. இப்போது உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, ராஜினாமா செய்துள்ளார்! ஆ.ரா…
-
- 0 replies
- 535 views
-
-
மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் : 13 ஜூலை 2011 மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். http:/…
-
- 16 replies
- 945 views
-
-
சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? 13 ஜூலை 2011 திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் .. சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்? திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி சக்சேனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதான திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளன. இந்நிலையில் சேலம் திரைப்பட விநியோகஸ்தகர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் அதிபரும், சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறனை விசாரணைக…
-
- 11 replies
- 1.6k views
-
-
மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி ! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார். ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பாயி…
-
- 7 replies
- 1.2k views
-
-
தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வா…
-
- 23 replies
- 2.6k views
-
-
ஒபாமா தங்கியிருந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த விமானங்கள் அதிபர் ஒபாமா ஓய்வெடுக்கும் கேம்ப்டேவிட் பகுதியில், அத்துமீறி நுழைந்த இரண்டு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க அதிபர் ஒபாமா, வாஷிங்டன் அருகே உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பயணிகள் விமானமும், நேற்று ஒரு சிறிய விமானமும் இந்த பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இதைக் கண்ட அமெரிக்க போர் விமானங்கள் சீறி கிளம்பி அந்த விமானங்களை இடைமறித்து கேம்ப் டேவிட் பகுதியிலிருந்து துரத்தின. இதில், ஒரு விமானம் கரோல் பகுதியில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. மற்றொரு விமானத்தை பற்றி தகவல் இல்லை. அந்த விமானத்திடமிருந்து தகவல் த…
-
- 2 replies
- 423 views
-
-
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரான பின்னர் மும்பையில் நடந்த முதல் தாக்குதல்! புதன்கிழமை, ஜூலை 13, 2011, 20:15 மும்பை: மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் மும்பையில் முதல் மற்றும் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இன்று நடந்துள்ளது. 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்டோர் பதவி விலகினர். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரானார். அமைச்சர் பதவியேற்றது முதல் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் திறமையாக கையாண்டு வந்தார் ப.சிதம்பரம் என பாராட்டப்பட்டு வந்தது. உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியும் மிகத் திறமையாகவே அவர் செயல்பட்ட…
-
- 0 replies
- 525 views
-