உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
வீரகேசரி இணையம் 7/22/2011 7:44:48 PM கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப் பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும். இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும்…
-
- 0 replies
- 496 views
-
-
தமிழக பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படை! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் எரிவளி(கேஸ்) வளங்களை இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 23.07.2011 அன்று சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல், எரிவளி(கேஸ்), மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க தமிழகத்தின் நரிமணம், அடியக்க மங்கலம், கோவில் களப்பால், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தையும் குத்தாலத்தில் கிடைக்கும் எரிவளியையும்(கேஸ்) இந்திய அரசு தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும். பற்றாக்குறைக்கு வெளிநாடுகளில் கச்…
-
- 1 reply
- 762 views
-
-
'கிரேக்கத்தின் மீட்சி'- பிரசல்ஸ் மாநாட்டில் பேச்சு கிரீஸுக்கான இரண்டாவது பொருளாதார மீட்சித் திட்டத்திலுள்ள மிக சிக்கலான விடயங்கள் பற்றி ஐரோப்பியத் தலைவர்கள் விவாதித்துவருகின்றனர் கடன் நெருக்கடி ஏனைய ஐரோப்பாவில் யூரா நாணயத்தைப் பயன்படுத்துகின்ற மற்றைய நாடுகளுக்கும் பரவிவிடாதபடி நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் இந்தப் பேச்சுவார்த்தைகள இடம்பெறுகின்றன. ஆட்சித் தலைவர்களான நிக்கோலா சார்கோஸி மற்றும் அங்கேலா மேர்க்கல் ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை நடைபெற்ற ஏழு மணிநேர பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட கூட்டுத் தி்ட்டமொன்றை ஜேர்மனியும் ஃபிரான்ஸூம் பிரசல்ஸ் மாநாட்டில் முன்வைத்திருக்கின்றன. புதிய திட்டம் பற்றிய விளக்கங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்பட வில்லை…
-
- 1 reply
- 512 views
-
-
அதிகாரிகளின் கவனயீனத்தால் 3 பேர் நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு மரணம்!பலவீன இருதயம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 3 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர். இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அ…
-
- 0 replies
- 725 views
-
-
அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து க…
-
- 5 replies
- 1.3k views
-
-
உலகின் மிகப்பெரிய அகதி முகாம். ஆபிரிக்காவின் கொம்பு (Horn Of Africa) நாடுகளில் மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக வானம் பொய்த்த காரணத்தால் விவசாயம் படுத்துவிட்டது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் பாரிய உணவு நெருக்கடி தோன்றியுள்ளது. சீரான அரசமைப்பு இல்லாத சொமாலியாவில் ஏற்பட்ட வறட்சி மக்களை அயல் நாடு கென்யா (Kenya) அகதி முகாம்களில் தஞ்சம் அடைய வைத்துள்ளது. வட பகுதி கென்யாவிலும் கடும் வறட்சி நிலவுகிறது. அது போல் எதியோப்பியா, டிஜிபுட்டி ஆகிய நாடுகளிலும் கடந்த இரு வருட வறட்சி மக்களை அகதி முகாமுக்குச் செல்ல வைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய அகதி முகாம் கென்யாவில் இயங்குகிறது. யூனிசெப் சிறுவர் நிதியம், ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவன…
-
- 2 replies
- 1.2k views
-
-
கென்யாவில் 5 டொன் சட்டவிரோத யானை தந்தங்கள் எரிப்பு சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டொன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பூர், தான்சானியா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுமார் 5 டொன் யானை தந்தங்கள் கென்யாவிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார். சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங…
-
- 0 replies
- 532 views
-
-
தங்கபாலு ராஜினாமாவை கட்சி மேலிடமும் ஏற்றுக் கொண்டு உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நடிகர் சிவாஜிகணேசனின் 10வது ஆண்டு நினைவு தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவரது ஆட்சி காலத்தில் சிறப்பாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமாவை கட்சி மேலிடமும் ஏற்றுக் கொண்டு உள்ளது.…
-
- 3 replies
- 659 views
-
-
வீரகேசரி இணையம் 7/21/2011 12:22:31 PM தமது வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து அணு செறிவாக்கல் செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் குவாம் மாகாணத்தில் உள்ள போர்டோ அணு செறிவாக்கும் ஆலைகளை குறித்த விமானம் உளவு பார்க்கும் வேளையிலேயே அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவுச் சேவையான சி.ஐ.ஏ யுக்கே அவ்விமானம் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தாக அவ்வதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை இத்தகைய எதிரிகளின் விமானங்கள் பலவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.l…
-
- 0 replies
- 574 views
-
-
மாறிய மக்கள்! மாறாத அம்மா? சில வழக்கு மொழிகள் பழமொழிகளாக, பொன்மொழிகளாக உருபெறுதல் காலம் தரும் பதிவாகும். 'அம்மா திருந்த மாட்டார்' எனக் கூறிய பொழுதெல்லாம் நம்மை விரோதியாய் நோக்கியவர்கள் சொல்கிறார்கள்: 'அம்மா, எந்தக் காலத்திலும் திருந்தவே மாட்டார்' என்று. அம்மா பதவியேற்பு விழா யாருக்கு மகிழ்ச்சி என விழாவை தொலைக்காட்சியில் உற்றுநோக்கியவர்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக இந்துத்துவா தீவிர ஆதரவாளர் 'துக்ளக்' சோவிற்கு மகிழ்ச்சி. அவரது தோழர் அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சி! நாம் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரையாளராக எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு: 'அவாள் மடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது'. ஆம்! அம்மாவ…
-
- 1 reply
- 748 views
-
-
சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள். சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார். ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 1k views
-
-
இந்திய கிராமங்களும் இடம்பெயரும் மக்களும் ஆர். கண்ணன் வாழ்க்கை வாய்க்கப் பெற்றவர்கள் வளம் பெற்றார்கள். கனவுகளைத் துரத்தி, கடைசியில் கானல்நீரையே கண்ட கணிசமான மனிதர்கள், குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். இது அன்றும் நடந்தது. இன்றும் தொடர்கிறது. பரம்பரைகளின் பின் பரம்பரைகள் வேருடன் சாய்கின்றன. புரட்சிகளின் பின் புரட்சிகள் உருவாகின்றன. ஆனால், கிராம சமுதாயங்கள் மாற்றம் காண்பதே இல்லை. இக்கருத்து இன்றைக்கு, நேற்றைக்கு கூறப்பட்டதல்ல. 1832-ம் ஆண்டு இந்திய கிராமங்களைப் பற்றி சார்லஸ் மெட்காஃப் என்பவர் கூறியவை தாம் இவை. மேலும் கிராமங்கள் சின்னஞ்சிறு குடியரசுகள் எனவும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்பதோடு அநேகமாக அந்நியர்களின் உதவியின்றியே செயல்பட…
-
- 0 replies
- 473 views
-
-
விரட்டும் பொலீஸ், மதுரையைக் காலி செய்யும் அழகிரியின் சகாக்கள் அட்டாக் பாண்டியின் கைது, அழகிரியின் கூட்டத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது. தென் மாவட்டங்களை ‘அழகிரி நாடு’ என்று தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் அழைத்து வந்தன. அங்கு அழகிரி இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது. அழகிரியின் தளபதிகளாக அட்டாக் பாண்டியன், தளபதி, மன்னன், கோபிநாதன், எஸ்.ஆர்.கோபி, மூர்த்தி, பொட்டு சுரேஷ், மிசாபாண்டியன் ஆகியோர் வலம் வந்தனர். மதுரையில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மிரட்டப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டனர். அதிகாரிகளும் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவர்கள் ஆக்கிரமித்த, அபகரித்த இடங்கள…
-
- 0 replies
- 533 views
-
-
கருணாநிதி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுத்த நடவடிக்கையால் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சட்டமன்றத் தோல்விக்குப் பின்னர் தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒரு கருத்துக் கேட்பு படிவமும் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கலாமா?’ என்று கேட்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் செய்ய மூத்த மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து கருணாநிதி தொகுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு July 20, 2011 அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று சென்னை வருகிறார். இதையொட்டி நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்திக்கவுள்ளார். அப்போது ஹிலாரியிடம் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசுவார் என்று தெரிகிறது. நேற்று டெல்லி வந்த ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஹிலாரி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முன்னுரிமை அளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. பயங்கரவாதத் தா…
-
- 0 replies
- 353 views
-
-
சென்னை அரங்கை அதிரவைத்த ஹிலாரியின் தமிழ் வணக்கம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இன்று புதன்கிழமை தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், சிந்தனையாளர்கள் முன்னிலையில் ஹிலாரி உரையாற்றினார். 'வணக்கம்' என்று தமிழில் கூறி ஹிலாரி கிளின்டன் தனது உரையை ஆரம்பித்தபோது பார்வையாளர்களின் கரகோஷசத்தால் அரங்கம் அதிர்ந்தது. தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா தனது பாரம்பரிய பூகோள நலன்களை தெற்காசியாவிலிருந்து அயற் பிராந்தியங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். …
-
- 3 replies
- 1k views
-
-
வீரகேசரி இணையம் 7/20/2011 5:16:20 PM தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா மொஹமட் ஒமர் உயிருடன் உள்ளதாகவும் அவர் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்தி பொய்யானதெனவும் அவ்வமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையக் கட்டமைப்புக்கள் 'ஹெக்கிங்' செய்யப்பட்டுள்ளதுடன் அதனூடாகவே இவ்வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரே இதற்கு முழுப்பொறுப்பெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. முல்லா ஒமர் உயிரிழந்து விட்டதாக அவ்வமைப்பின் பேச்சாளர்களான சபியுல்லா முஜாஹிட் மற்றும் குஹாரி மொஹமட் யூசுப் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து குறுஞ்செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இச்செய்தி பொய்யான…
-
- 2 replies
- 862 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை: மீள அளவிடவுள்ளது நேபாளம் _ வீரகேசரி இணையம் 7/20/2011 12:20:53 PM Share எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட குழப்பத்தினைத் தொடர்ந்து அதனை மீண்டும் அளக்க நேபாளம் முடிவெடுத்துள்ளது. உலகின் அதி உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரத்தினை 1954 ஆம் ஆண்டு அளந்த இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் அதன் பின்னர் பல்வேறு தரப்பினரல் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகள் வேறுபட்ட அளவுகளை காட்டி நின்றன. இதேபோல் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர் எனவும் மேற்பகுதியி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஆந்திராவில் யுரேனியம் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அணுமின் நிலையத்திற்கு தேவையான முக்கியமான பொருள்களில் ஒன்றான யுரேனியம் தாது ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ளதாக அணு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும்பலப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள சுரங்கங்களில் இந்தவகை தாதுப்பொருள் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும் உலகிலேயே அதிகளவிலான யுரேனியம் இங்கு கிடைக்க கூடும் என அணுசக்தி கமிஷனின் சேர்மன் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்ட்டிருக்கும் ய…
-
- 2 replies
- 1k views
-
-
ஹிலாரி கிளின்டன் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்தார்! Published on July 19, 2011-7:11 pm No Comments இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் முதலாவது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசியல் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தியா சென்றடைந்த அவர், தென்னிந்தியாவிற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார். தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்திக்கும் அவர், அமெரிக்க முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், அவர் இன்று காலை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். …
-
- 1 reply
- 615 views
-
-
சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 16:32 ஹைதராபாத்: சத்ய சாய்பாபாவின் ஆசிரமத்தில் 3-வது முறையாக சொத்துக்கள் எண்ணப்பட்டதில் ரூ. 59 கோடி மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவை எண்ணப்பட்டு வருகிறது. பாபாவின் தனி அறையான யஜுர் மந்திரில் உள்ள சொத்துக்கள் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1.90 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாய் அறக்கட்டளை அதிகாரிகள் முன்பு இன்றும் தொடர்ந்து சொத்துக்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸில் ரூ. 25 கோடி மதிப்பிலான 65 வைரக் கற்கள் கண்டெடுப்பு மும்பை: குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸ் பகுதியில் இருந்து ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13-தேதி மும்பையின் 3 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் வைர வியாபாரத்திற்கு பெயர் போன ஒபேரா ஹவுஸும் ஒன்று. குண்டு வெடித்தபோது வைரக் கற்கள் சிதறின. இந்நிலையில் நேற்று ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை வைர வியாபாரிகள் சங்க உறுப்பினர் சஞ்சய் ஷா கூறுகையில், "நேற்று ஒபேரா ஹவுஸ் பகுதியை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் சுத்தம் செய்தனர். அப்போது 65 வைரக் கற்கள் கிடைத்தன. உடனே அவை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 342 views
-
-
பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சர்ச்சை தீவிரம் : 19 ஜூலை 2011 பிரித்தானியாவில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பான சர்ச்சை உக்கிரமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவத்துடன் தொடர்புடைவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஊடக நிறுவனத்தின் பதவிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக் கேட்டல் சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியூஸ் கோர்பரசேன் சிரேஸ்ட அதிகாரிகளான ருபர்ட், ஜேம்ஸ் மோர்டொச் மற்றும் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ரெபெக்கா புருக்ஸிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பிரித்தானிய ஊடக ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்…
-
- 1 reply
- 556 views
-
-
சென்னையில் கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு செவ்வாய்க்கிழமை, ஜூலை 19, 2011, 9:12 [iST] மதுரை: சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது. 'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
16 பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை 'அப்கானிஸ்தானுக்குள் வந்தார்கள்' என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பதினாறு பூர்விக காவல்துறையினர் தலிபானால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பல சர்வதேச ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ளது. http://www.liveleak.com/view?i=710_1311028526 - http://www.nytimes.com/2011/07/19/world/asia/19pakistan.html - http://www.guardian.co.uk/world/2011/jul/18/taliban-video-shooting-pakistani-police - http://www.cnn.com/2011/WORLD/asiapcf/07/18/pakistan.executions/ இந்த ஒளிப்படத்தை LiveLeaks.com என்ற தளம் வெளியிட்டுள்ளது. இந்த தளத்தில், (இந்த தளம் ஓரளவுக்கு பிரபல்யமான தளம்) சனல் 4 - சிங்களத்தின் கொலைக்களம் இல்லை. இதில் ஒரு கணக்கை…
-
- 2 replies
- 768 views
-