Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 10:56 AM 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவதை வதந்தி ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் என வர்ணித்துள்ளார். நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவு…

  2. Published By: RAJEEBAN 11 DEC, 2023 | 11:24 AM guardian இஸ்ரேலிய படையினர் கான்யூனிசின் மையப்குதிக்குள் நுழைந்துள்ள அதேவேளை ஹமாஸ் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் தன்னிடம் உள்ள பணயக்கைதிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிசின் முக்கியமான வடக்கு தெற்கு வீதிக்குள் நுழைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நகரின் கிழக்கு பகுதி ஊடாக இஸ்ரேலிய படையினரின் முன்னேற்றம் கடும் மோதல் காரணமாக கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது இஸ்ரேல் கடும்குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டுவருகின்றது. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை விடுத்துள…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து வைத்தபோது நடந்த ஒரு துணிச்சலான, அபாயகரமான வான்வழி நடவடிக்கை குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இங்கு விவரிக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் விபத்துக்குள்ளான நூற்றுக்கணக்கான விமானங்களின் சிதைவுகள் மற்றும் உடைந்த பாகங்களை 2009-ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தேடி வந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது 42 மாத கா…

  4. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி 16 நிமிடங்களுக்கு முன்னர் 'அலோஹா' ஹவாய் மொழியைச் சேர்ந்த இந்த வார்த்தை ஒருவரை வாழ்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, இந்த வார்த்தைக்கு ஒருவரை 'வாருங்கள்' என்று அழைக்கும் அர்த்தமும் உண்டு. இப்படி மகிழ்ச்சிகரமான வார்த்தையைக் கொண்ட 'அலோஹா ஏர்லைன்ஸ்' விமானத்தில் 1988ம் வருடம் ஏப்ரல் மாதம் பயணம் செய்த 95 பயணிகளை நோக்கி மரணம்தான் ‘அலோஹா’ எனக் கூறியது. 1988-ஆம் வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாய் தீவுகளில் உள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே ஒரு குறுகிய பயணத்தை அந்த விமானம் மேற்கொண்டது. 24,000 அடியில் விமானம் நிலையாக பறந்துகொண்டிருந்தது. தி…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுவயது முதலே வித்தியாசமான சிந்தனை உடையவராக ஆச்சார்யா ரஜ்னீஷ் திகழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் எளிமையாக அவர் 'ஓஷோ' என அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் பின்னர் உலகம் முழுவதும் 'ஆச்சார்யா ரஜ்னீஷ்' மற்றும் 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்' என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார். 'ஓஷோ' என்றால் கடலுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று பொருள். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறக்குறைய 33 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றும் அவர் எழுதிய புத்தகங்கள்…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐசரியா பிரைதோங்யேம் பதவி, பிபிசி உலக சேவை 9 டிசம்பர் 2023 பள்ளி மாணவர்களிடையே கணிதம், வாசித்தல் மற்றும் அறிவியல் செயல்திறன் ஆகிய பிரிவுகளில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட பிசா தேர்வுகள் 2022-இல் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வரலாற்று ரீதியாகவே சிங்கப்பூர் மாணவர்கள் குறிப்பாக கணிதத்தில் மிகவும் வெற்றிகரமாக உள்ளனர். இந்த வெற்றியில் தனித்துவமான முறையில் கணிதம் கற்பிக்கப்படுவது முக்கிய பங்கு வகிக்கிறது. சிங்கப்பூர் கணிதம் என்பது என்ன? ஏன் அது வெற்றிகரமாக இருக்கிறது? பிசா (சர்வதேச அளவில் மாணவர்களை மதிப்பிடும் தேர்…

  7. 08 DEC, 2023 | 04:02 PM அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை காணப்பட்டது. தென் அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுஇமாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பினால் மூண்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை வார இறுதிவரை தொடரலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கடும் காற்று மின்னல் கடும் வெப்பம் காரணமாக தென் அவுஸ்திரேலியா கிழக்கு அவுஸ்திரேலியா வடமேற்கு அவுஸ்திரேலியா தென்கிழக்கு நியுசவுத்வ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்லோ கிம் மற்றும் மேக்ஸ் மாட்ஸா பதவி, பிபிசி செய்திகள் 8 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ஒன்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இதுகுறித்த 56 பக்க குற்றப் பத்திரிகையில் அவர் 2016-19 வரை இந்திய ரூபாய் மதிப்பில் 11.67 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த ஹண்டர் பைடன் இந்த வரி ஏய்ப்பு குற்றங்களில் பெரும்பாலானவை…

  9. மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு (WHO ) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறக்கின்றனர். 80 இலட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை அமுல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோ…

  10. அமெரிக்காவின் லோஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் …

  11. கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் மெக்கென்சி பதவி, சியோல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவில் இருந்த கிம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தை செய்தார். அவர் தனது குடும்பத்துடன் கடல் வழியாக வட கொரியாவை விட்டுத் தப்பி ஓடினார். தனது கர்ப்பிணி மனைவி, தாய், சகோதரரின் குடும்பத்தினர் மற்றும் தனது தந்தையின் சாம்பல் அடங்கிய கலசம் ஆகியவற்றோடு அவர் இந்தப் பயணத்தை ஆரம்பித்தார். இந்த ஆண்டில் நாட்டைவிட்டு வெளியேறி தென் கொரியாவிற்கு வந்த முதல் நபர்கள் இவர்களே. கோவிட் பேரிடர் தாக்கியபோது, வட கொரியாவின் அரசாங்கம் பீதியடைந்து உலகின் பிற பகுதிகளோடு தங்களது நாட்டிற்கு இருந்த தொடர்…

  12. உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கை நிறுத்தம்! உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை செனட் குடியரசுக் கட்சியினர் தடுத்துள்ளனர். 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையில், உக்ரைனுக்கான 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அத்துடன் இஸ்ரேலுக்கான நிதி மற்றும் காசாவுக்கான உதவி ஆகியவை அடங்கும். குடியரசுக் கட்சியினர், உக்ரைனுக்கான எந்தவொரு உதவியும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் புகலிட சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனிடையே, உக்ரைனுக்கான அமெரிக்க நிதி விரைவில் தீர்ந்துவிடும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், சட்டமூலத்தை முன்னெடு…

  13. வளைகுடா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு! ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு குதிரைப்படை மற்றும் வாகன அணிவகுப்புடன் ரஷ்ய ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். அதேநேரத்தில், ரஷ்யக் கொடி வர்ணத்தில் தேசிய வான்வழி அக்ரோபாட்டிக்ஸ் விமானக் குழு, ரஷ்யாவை கௌரவப்படுத்தியது. இதன்போது, ரஷ்யாவின் ஜனாதிபதி, ஐக்கிய அரபு அமீரகத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானிடம், ‘எங்கள் உறவுகள் முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளன’ என்று கூறினார். கிரெம்ளின் அறிக்கை ‘அரபு உலகில் ரஷ்யாவின் முக்கிய பொருளாதார …

  14. லூசி வில்லியம்சன் பதவி,மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெருசலேம் 6 டிசம்பர் 2023, 10:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களின்போது பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. எச்சரிக்கை: பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விளக்கங்கள் உள்ளன. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைச் சேகரித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்த பலர், மனிதர்களின் உடைந்த இடுப்பு எலும்புகளுடன் கூடிய உடல்கள், காயங்கள், வெட்டுக் காயங்களுடன் கூடிய உடல்கள் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை தாக்குதல…

    • 12 replies
    • 972 views
  15. அமெரிக்க உதவியை ஒத்திவைத்தால் போரை இழக்கும் ‘பெரிய ஆபத்தை’ உக்ரைன் எதிர்கொள்ளும் ! காங்கிரசில் விவாதிக்கப்படும் கியிவ்க்கான அமெரிக்க உதவியை ஒத்திவைப்பது ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் தோல்வியை மேலும் ஆபத்தில் கொண்டு சேர்க்கும் என உக்ரைன் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான உக்ரைனின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவிகள் குறைந்து வருவதால் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்கு அமெரிக்காவிற்கு நேரமும் பணமும் இல்லாமல் போய்விட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான விக்டர் மானுவல் ரோச்சா, டொமினிகன் குடியரசு, அர்ஜென்டினா மற்றும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பதவிகளை வகித்தவர். 1999 மற்றும் 2002 க்கு இடையில் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தார். மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் திங்களன்று அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின்படி, ரோச்சா தனது உளவு நடவடிக்கையை 1981 இல் தொடங்கியிருக்கிறார். "ரோச்சா கியூபா குடியரசை ரகசியமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதன் ரகசிய சேவைகளின்…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோசபின் போனபர்ட்டை நெப்போலியன் விவாகரத்து செய்துவிட்டாலும், அவரது வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத உறவாகவே தொடர்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி நியூஸ் உலகம் 4 டிசம்பர் 2023 "பிரான்ஸ். ராணுவம். ஜோசபின்” நெப்போலியன் போனபார்ட் இறப்பதற்கு முன், ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை. இது தன்னை பிரெஞ்சு பேரரசராக அறிவித்துக் கொண்ட ஒருவரின் அல்லது ஐரோப்பாவின் ராணுவம் அடிபணிவதற்கு முன்பு ஒரு மூத்த இராணுவ மூலோபாயவாதியாக இருந்தவரின் மிக சுருக்கமான சுயசரிதையாக இருக்கலாம். அவருடைய பெ…

  18. குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …

  19. இந்தோனேசியாவின் மராபி மலை வெடிப்பு : மலை ஏறுபவர்கள் 11 பேர் உயிரிழப்பு. இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ராவில் எரிமலை வெடித்தபோது எழுபத்தைந்து பேர் அப்பகுதியில் இருந்தனர் என்றும் அவர்களில் 26 பேர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1361943

  20. பாரிஸ் ஈபிள் டவர் அருகே நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு : இருவர் காயம். மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டோர்மானின் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் அல்லாஹு அக்பர் என கத்தினார் என்றும், பின்னர் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கொண்டிருப்பதால் தான் வருத்தமடைந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்…

  21. இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று,…

  22. வடகொரியாவின் ஜனாதிபதியாக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது. இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு “வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமான…

  23. அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் காலமானார்! அமெரிக்காவின் முன்னாள் பிரபல இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் (Henry Kissinger) காலமானார். ஹென்றி ஹிசிஞ்சர் நேற்று (29) தனது 100 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹிசிஞ்சர் ,நிக்சன் போர்ட்டின் இரண்டு அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்று வசித்தார். 1943இல் அமெரிக்க பிரஜையான அவர், பின்னர் அமெரிக்க இராணுவத்திலும…

  24. பட மூலாதாரம்,TELEGRAM கட்டுரை தகவல் எழுதியவர், அப்தெலாலி ரகட், ரிச்சர்வ் இர்வின் ப்ரவுன், பெனடிக்ட் கார்மன், சியான் செடான் பதவி, பிபிசி அரபிக், பிபிசி வெரிஃபை 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வேறு ஐந்து ஆயுதமேந்திய குழுக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் 2020-ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலுக்கான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். பிபிசியின் செய்திப் பகுப்பாய்வு இதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் குழுக்கள் அக்டோபர் 7 நடத்தப்பட்டத் தாக்குதலைப் போலவே சில பயிற்சித் தாக்குதல்களை மேற்கொண்டு அதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இந்…

  25. இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.