Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது. ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது. அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்…

  2. கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. சி.பி.ஐ. கோர்ட் சம்மனை ஏற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஜாமீன் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மாதம் 23ந் தேதி மனுதாக்கல் செய்தனர். இருவர் தரப்பிலும் கோர்ட்டில் வாதிடப்பட்டது. அவர்களை ஜாமீனில் விடுவிக்க சி.பி.ஐ. வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்க…

  3. தயாநிதி மாறனுக்கு எதிராக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் புகார் கூறப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுப் பேசிய சுவாமி, ஏர்செல் விவகாரத்தில் பயனாளிகள் நேரடியாக பலனடையவில்லை. ஆனால் நேரடியாக பலனடைந்தவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் தன்னை நிர்பந்தித்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் குற்றம்சாட்டியதையடுத்து தயாநிதி மாறன் சர்ச்சையில் சி…

  4. லிபியா நாட்டு அதிபர் கடாபியின் வீடு அந்த நாட்டு தலைநகர் திரிபோலியில் உள்ளது. இந்த வீட்டு வளாகத்தின் மீது நேட்டோ ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் அந்த வீட்டு வளாகம் தீ பற்றி எரிகிறது. திரிபோலியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குண்டுகள் வீசப்பட்டன. இன்று காலையில் குண்டு வெடிக்கும் சத்தம் திரிபோலி நகரில் பலமாக கேட்டது. இந்த குண்டுவீச்சில் தொலை தகவல் தொடர்பு மையங்கள் பலத்த சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள யப்ரான் நகரை கைப்பற்றினார்கள் nakheeran.in

    • 0 replies
    • 512 views
  5. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி மாறன் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தயாநிதிமாறன் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன் என்றார். இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ.க., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. …

  6. கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று தனது பிறந்த நாள் செய்தியாக கட்சித் தொண்டர்களுக்கு கூறியி ருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. யாருடைய நட்பை, ‘கூடா நட்பு’ என்று சொல்கிறார் என்பதுதான் அரசியலில் இப்போது பரபரப்பு டாக். பிறந்த நாளின்போது எப்போதும் உற்சாகமாக இருப்பவர், கருணாநிதி. பல மணி நேரம் தொண்டர்களைச் சந்தித்து கட்சியினரை உற்சாகப்படுத்துவார். கடந்த 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் மிகச் சாதாரணமாக முடிந்திருக்கிறது. தனது மகள் கனிமொழி சிறையில் இருக்கும் போது பிறந்த நாள் வேண்டாம் என்று கருணாநிதி சொல் லவே, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியானார்கள். பேராசிரியர் அன்பழகன்தான், ‘மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் வேளையில் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்தால…

  7. June 7, 2011 கருணாநிதிக்கு மக்கள் கொடுத்திருப்பது விருப்ப ஓய்வு கிடையாது; கட்டாய ஓய்வு. அதனால் தான், அவரது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது,” என, அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:முந்தைய ஆட்சியில், முதல்வரின் குடும்ப வாரிசுகள் எனக்கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கேற்று, தமிழகத்தை சீர்குலைத்தனர். 14வது சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என்பதற்காக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கினர். 2006ல், மக்கள் தெளிவான தீர்ப்பை வ…

  8. கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். அன்னா ஹசாரேவை தொடர்ந்து ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் இறங்கியுள்ளார். ராம்தேவ் உண்ணாவிரத்தை கைவிட மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசின் வேண்டுகோளை மறுத்த ராம்தேவ், திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். தான் அறிவித்தப்படி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இன்று (04.06.2011) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=55256

  9. நான் உங்கிட்ட என்ன கேட்டேன்……. என்னடா இது ? சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி விட்டு, செந்திலோடு பேசிய டயலாக் இது. இப்படித்தான் தயாநிதி மாறனிடம் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இந்த மாறன் சகோதரர்களுக்கு, தங்கள் மனதில் பெரிய ***** என்று நினைப்பு. யாராக இருந்தாலும், தங்களுடைய பண பலத்தால் விலைக்கு வாங்கி விடலாம் அல்லது, மிரட்டி விடலாம் என்ற இறுமாப்பு. அந்த இறுமாப்பால் தான் அழியப் போகிறார்கள். ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், சிவசங்கரன் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம். ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன், கேடி சகோதரர்களின் தந்தை முரசொலி மாறனுக்கு நண்பர்…

    • 1 reply
    • 906 views
  10. ஐரோப்பாவில் வெள்ளரிக்காய் (குக்கும்பர்) ஈகோலி எனும் பக்ரீரியா தொற்று ஏற்பட்டு ஆட்களைக்கொல்லுகின்றதாம். வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இந்த இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டிடம் இருந்து வந்த குக்கும்பரில்தான் இந்த தொற்று ஏற்பட்டது என கூறப்பட்டது ஆனால் உண்மையில் ஜேர்மனியில்தான் இந்த தொற்று ஆரம்பமாகியது. இதனால் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ப…

    • 15 replies
    • 2.7k views
  11. போர்த்துக்கல்லில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. போர்த்துக்கலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தாம் தோல்வியடைந்துள்ளதாக ஆளும் சோசலிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோசே சோக்கிறற்ஸ் (Jose Socrates) அறிவித்தார். பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி, 24.4 சதவீதத்திற்கும், 30 சதவீதத்திற்கும் இடையிலான வாக்குகளைப் பெறுமெனவும், வலதுசாரிப் போக்குடைய Social Democrats கட்சி 37 சதவீதம் வரையான வாக்குகளைப் பெறுமெனவும், தேர்தலில் வாக்களித்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. Social Democrats கட்சி, புதிய ஆட்சியை அமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒ…

    • 0 replies
    • 365 views
  12. பதிந்தவர்: ஈழப்பிரியா திங்கள், 6 ஜூன், 2011 சீமான் விஜயலட்சுமி கூத்தாட்டத்தைச் சிந்திப்பதற்கு முன்னர் ஒரு தடவை அண்ணா காலத்து அரசியலை சிந்திக்க வேண்டும்… சீமான் போலவே அன்று அண்ணாவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் மீதும், அதன் போலி முகங்கள் மீதும் தயக்கமின்றி முன் வைத்தார்… அவருடைய வாதங்களை எதிர்கொள்ள பத்தாம்பசலிகளாக இருந்த அன்றைய காங்கிரஸ்காரரால் முடியவில்லை. அதனால் அவர்கள் அண்ணாவிற்கு எதிராக வகுத்த வியூகம் அக்காலத்து பிரபல நடிகை பானுமதி..! பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று காங்கிரஸ் கதை பரப்ப ஆரம்பித்தது.. அண்ணா சிந்தித்தார்… எப்படி இந்த சதிவலையை அறுத்தெறியலாம்…? சீமான் போல போலீஸ் வழக்கை சந்திக்கவோ.. பானுமதியின் கற்ப…

    • 1 reply
    • 4.8k views
  13. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோனியாவும் கைவிட... கட்சியும் கண்டுகொள்ளாமல் அமைதி காக்க... பகை முடிக்கும் நேரத்தில் களம் இறங்கியிருக்கிறார், சிவசங்கரன். இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தயாநிதி மாறன் தள்ளப்பட்டுள்ளார். முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தேர்வு செய்தது, கனிமொழியைத்தான். ஆனால் கவிஞராக இருந்த கனிமொழி ‘பதவி ஆசை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார். அப்போது, தயாநிதி மாறன் கனிமொழியோடு நல்ல உறவில் இருந்தார். இதைத் தொடர்ந்து ‘மாறன் பிள்ளைகளில் ஒருவரை டெல்லிக்கு அனுப்பலாம்’ என்று ராஜாத்தியம்மாள் மூலம் கனிமொழி காய் நகர்த்த, தயாநிதிக்கு …

  14. ஐ.நா. செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டி : அறிவிப்பு Monday, June 6, 2011, 9:00 உலகம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், தனது இரண்டாவது தவணை பதவிக் காலத்திற்கு போட்டியிடுவது குறித்து இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். 66 வயதான தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் தவிர்ந்த வேறு யாரும் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் எதுவும் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அவர் மீண்டும் 5 வருட காலத்திற்கு இப்பபதவிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் தற்போதைய பதவிக்காலம் இவ்வருடம் டிசெம்பர் 3…

  15. நகரி, ஜூன்.5- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தினமும் சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டம் குறையாமல் உள்ளது. இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்கிறார்கள். ரூ.300 கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. திருப்பதி கோவிலுக்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்விய தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள்…

  16. திருவாரூரில் இன்று (5.6,2011) (வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார். அவர், ’’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார். வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்ச…

  17. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக் காலத்தை நாடுவது தொடர்பான கருத்துகளை அவர் வெளியிட்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த விடயம் மீண்டும் சூடுபிடித்திருந்தது. நாளை (ஜூன் 6) தனது விருப்பத்தை பான் கீ மூன் அறிவிப்பார் என ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினரின் பேச்சாளர் இன்னர் பிரஸிற்குக் கூறியுள்ளார். திங்கட்கிழமை பகல் 11.30 மணியளவில் பான் கீ மூன் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலையில் ஆசிய குழுவொன்று காலை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் பான் கீ மூன் அறிவிப்பை விடுப்பதற்காக இந்த விருந்துபசாரம் இடம்பெறவிருப்பதாகவும் மற்றொரு தூதுக்குழுவொன்று இன்னர் …

  18. சிலி நாட்டில் உள்ள சான் கர்லோஸ் நகரில் இன்று `திடீர்' என எரிமலை வெடித்தது. சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை குழம்பு சிதறியது. மேலும், வானம் முழுவதும் புகை பரவியதால் சான் கர்லோஸ் விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள அர்ஜென்டினா நாட்டுக்கும் புகை பரவியது. எரிமலை வெடித்த பகுதியில் மொத்தம் 4 எரிமலைகள் அடுத்தடுத்து உள்ளன. புகை மூட்டமாக இருப்பதால் எந்த எரிமலை வெடித்தது என தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். nakheeran.in

    • 0 replies
    • 720 views
  19. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற்று மீண்டும் அதே உற்சாகத்துடன் திரும்ப வேண்டி, அவரது ரசிகர்கள் சார்பில் சென்னை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் 03.06.2011 அன்று மாலை சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் நல்ல கூட்டம். வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கலுக்கான காரணத்தைக் கேட்ட அனைவரும் ரஜினி விரைந்து நலம்பெற்று வர மனமாற வேண்டிக் கொண்டனர். காளிகாம்பாள் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை பிரசாதங்கள் அன்று மாலையே ரஜினி வீட்டில் ஒப்படைக்கப்பட்டன. ரஜினியின் உதவியாளர் கணபதி அவற்றைப் பெற்றுக் கொண்டதும், “இன்று இரவு தலைவரைப் பார்க்க குடும்பத்தினர் சிலர்…

  20. நள்ளிரவில் ராம்தேவ் கைது - கண்ணீர்ப் புகை வீசி போராட்டம் கலைப்பு-டேராடூன் கொண்டு செல்லப்பட்டார் டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர்.உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவரு…

  21. அல்கைடா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் பாகிஸ்தானிலுள்ள முக்கிய தீவிரவாதக் குழு உறுப்பினர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் இயாஸ் கஷ்மிரி என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட மேலும் ஒன்பது பேரும் நேற்றிரவு தெற்கு வஸிரிஸ்தான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மும்பாயில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை வடிவமைக்கும் குழுவிற்கு இயாஸ் தலைமை தாங்கியதாகவும், அல்கைடா அமைப்பல் முக்கிய தளபதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ப…

    • 0 replies
    • 556 views
  22. அமெரிக்கத் தூதுவராய வாசலை விட்டு வெளியே... வரும் போது, ஜனாதிபதி ஒபாமாவின் வாகனம் வாசலில் உள்ள மேடான இடத்தில் தடைப்பட்டு நின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும், போக்குவரத்திலும் பல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வழித்தடத்தை ஆராய்வது வழமை. இதில் எப்படி கோட்டை விட்டார்கள் என்று புரியவில்லை.

    • 1 reply
    • 1.2k views
  23. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரளத்தின் புதிய முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக கூறி உள்ளார். 5 ஆண்டுக்காலம் கேரளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி முதல் அமைச்சர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வந்தார். அவரது அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை பொறுப்பு வகித்த பிரேமச்சந்திரன், பென்னிகுக், கட்டிய அணையை உடைப்போம் என்றும் புதிய அணை கட்டுவோம் என்றும் தொடர்ந்து சொன்னார். முல்லைப் பெரியாறு அணையில், 999 ஆண்டுகளுக்கான பாசன உரிமையைத் தமிழகம் பெற்று இருக்கிறது. கேரள அரசு கட்டத் திட்டமிடுகின்ற புதிய அணை, பள்ளத்தில் இடத்தில் அமைவத…

  24. முதல்வர் ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். அவருடன் நடிகர்கள் பிரபு, விஜய் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஆனதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது கமல், பிரபு, விஜய் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, சுகுமாரி, ராஜஸ்ரீ, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நக்கீரன்.

  25. தமிழக காவல்துறை இவ்வளவு வேகமாகச் செயற்பட்டு ஒரு குற்றவாளியை கைது செய்திருக்குமோ தெரியாது. ஆனால் ஒரு நடிகையின் புகாரின் பெயரில்.. துரிதமாகச் செயற்பட்டு.. அண்ணன் சீமான் மீது பாலியல் வல்லுறவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளே வைக்க முயற்சி. அண்ணன் சீமானின் அரசியல் வளர்ச்சி.. தமிழகத்தில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை அடக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் இன்னொரு அராஜமாகவே இது தெரிகிறது. --------------------------- சீமான் மீது பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: கைது செய்யவும் முயற்சி நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வலசரவாக்கம் போலீசார் இயக்குநர் சீமான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.