Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. பாக்கிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தினால் இந்தியாவுக்கும் தமக்கும் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தீவிரவாதத் தடுப்புக்கான புதிய கொள்கை தொடர்பான அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா இயக்கம் மீண்டும் செயல்படுவதை தடுப்பதில் - அமெரிக்க இராணுவமும் நேட்டோ படையும் உறுதியாக உள்ளது ஆப்கானிஸ்தான் மற்றும் பக்கிஸ்தான் பகுதிகளில் அல் கொய்தா அழிக்கப்பட்டு விட்டாலும், அவர்கள் வேறு இடங்களில் தங்கள் நடவடிக…

  2. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டோர்ஸ் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஸ்டோர்ஸ் கான் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டோர்ஸ் கான் மீது பாலியல் குற்றஞ்சுமத்திய பெண்ணின் சாட்சியத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதேவேளை பிணைக்காக ஸ்டோர்ஸ் கான் செலுத்திய ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச்செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் பிணையற்ற விடுதலையை அவருக்கு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைகளில் தொடர்ந்து ஆஜராவதாக ஸ்டோர்ஸ் கான் வழங்க…

  3. சவுதியில் தீ விபத்து : 6 இந்தியர்கள் பலி! _ வீரகேசரி இணையம் 7/2/2011 5:37:42 PM Share சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 இந்தியர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களின் உடலை இந்தியா கொண்டு வர இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் இ.அகமது தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32501 விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  4. திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகள் திறப்பு திருவனந்தபுரம், ஜுன் 27 (டிஎன்எஸ்) திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இருவர் முன்னிலையில் இன்று (ஜுன் 27) காலை திறக்கப்பட்டது. இந்த அறைகளில் விலைமதிப்பற்ற தங்க நகைகளும், பழமைவாய்ந்த அரிய பொருட்களும் இருப்பதாக பலரும் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இந்த அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. சமீபத்தில் தனியார் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இன்று காலை அந்த அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எனினும் ஊடகத்தினர் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. அறைகளை சோதனை செய்த பின்…

    • 3 replies
    • 2.4k views
  5. பாலியல் குற்றச்சாட்டு:ஸ்ட்ராஸ் கான் விடுவிப்பு பாலியல் குற்றச்சாட்டில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் ஐ.எம்.எப்., தலைவர் ஸ்ட்ராஸ் கான் நிபந்தனை ஜாமின் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார்.ஐ.எம்.எப்., தலைவராக இருந்த போது பாலியல் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டு கைதானார். இதனால் அப்பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோர்ட் அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமின் ஏதுமின்றி விடுவித்தது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=267709 Judge agrees to release Strauss-Kahn without bail Former International Monetary Fund leader Dominique Strauss-Kahn walked out of court without bail and free from house arr…

    • 1 reply
    • 474 views
  6. இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கி…

  7. 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகிறார்? சென்னை, ஜூலை. 1- 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி அப்ரூவராகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திகார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது. ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு கிடைத்த ரூ. 214 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் இதுவரை தாக்கல் செய்த 3 ஜாமீ…

  8. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது திடீர் தாக்குதல்! பிரான்ஸ் நாட்டின் அதிபரான நிக்கோலஸ் சார்கோசியை பார்வையாளர் ஒருவர் திடீரென தாக்கி நிலைகுலையச் செய்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் நிக்கோலஸ் சார்கோசி தெற்கு பிரான்சி்ல் உள்ள டொலுயீசில் நடைபெற்ற மேயர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் கையசைத்தும் கைகுலுக்கிக் கொண்டும் சென்ற சர்கோசியைத் திடீர் என்று ஒருவர் பலமாக அவரது சட்டை காலரைப் பிடித்து இழுத்தார். இதில் சார்கோசி நிலை தடுமாறினார். அப்போது அருகிலிருந்த மெய்க்காவலர்கள் சுதாரித்துக்கொண்டு சர்கோசியைப் பிடித்துக் கொண்டனர் உடனே சர்கோசி சுதாரித்துக் கொண்டு வ…

    • 0 replies
    • 514 views
  9. உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு _ வீரகேசரி இணையம் 6/30/2011 5:38:46 PM சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும். வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிக…

  10. ஊழல் எதிர்ப்பு லோக்பால் சட்ட வரம்பினுள் பிரதம மந்திரியைக் கொண்டு வருவதற்கு இந்தியப் பிரதம மந்திரி ஆதரவு தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு லோக்பால் சட்டத்தின் விசாரணை வரம்புக்குள் பிரதம மந்திரியை உள்ளடக்கத் தாம் தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இன்று டெல்லியில் நாளேடுகளின் ஆசிரியர்களுக்கு அளித்த நேர்காணலின்போது, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது அமைச்சரவைக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். லோக்பால் சட்டம் குறித்த அனைத்து முடிவுகளும் அனைவரும் ஏற்றுக்கொண்ட பின்னர்தான் இறுதி செய்யப்படுமென அவர் கூறினார். லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதம மந்திரியை உள்ளடக்குவதற்கு ஆள…

    • 0 replies
    • 486 views
  11. 'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி [Wednesday, 2011-06-29 10:58:04] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, யூரோ கரன்சியை கைவிட்டு, பழைய கரன்சியான, டச்மார்க்கிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் மத்திய வங்கியான, பண்டெஸ் வங்கி, டச்மார்க் சின்னம் பதித்த ரூபாய் நோட்டுகளை அச்சிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, "டச்மார்க்' சின்னம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மன் நாட்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பின், டச்மார்க் கரன்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவின் டாலருக்குப் பிறகு, உல…

    • 28 replies
    • 3k views
  12. சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமைதாங்கவுள்ள முதல் பெண் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர் பதவிக்காக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் திருமதி கிறிஸ்டைன் லகார்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 24 பேர்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழுவினரின் வாக்கெடுப்பின்மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திற்கு பெண்ணொருவர் தலைமை தாங்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/23904-2011-06-28-19-44-49.html http://www.youtube.com/watch?v=L64fgMno2Ho&feature=player_embedded

    • 1 reply
    • 600 views
  13. இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள். 2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது.…

  14. ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சு​விடலாம்!) ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம். ''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?'' ''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ள…

    • 0 replies
    • 803 views
  15. தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில், தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீதசபாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாதது தான். மாவட்டத்தில் குறிப்பிட்ட ஜாதியினருக்குத் தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் இன்றைக்கு நெல்லை மாவட்ட அமைச்சரான இசக்கி சுப்பையாவின் பின்னால் அணிவகுத்து செல்கிறார்கள…

    • 0 replies
    • 793 views
  16. கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக விசாரணை நடத்தும் நீதிமன்றம் அதன் தலைநகர் நாம்பென்னில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் 1970களின் இறுதியில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பல விடயங்கள் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமானது. பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த உறுப்பினர்கள், ஐநாவின் அனுசரணை தீர்ப்பாயத்துக்கு முன்னால் நிற்கின்றார்கள். ஆரம்ப கட்ட விசாரணைகள் இந்த வாரம் ஆரம்பித்துள்ளது…

  17. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி http://viduthalai.in/new/home/archive/12270.html

  18. காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது, இப்போது கிடையாது-ஜெயலலிதா டெல்லி: காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பதாக நான் 2010ம் ஆண்டு கூறிய நிலை இப்போது இல்லை. அந்த வாய்ப்பு அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட ஒன்று. இப்போது நிலைமை வெகுவாக மாறி விட்டது. அந்த ஆதரவு வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... காங்கிரஸுக்கு இப்போதும் உங்களது ஆதரவு உள்ளதா? காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக நான் கூறியது 2010ம் ஆண்டு இருந்த சூழ்நிலையின் அடிப்படையில்தான். அது ஒருமுறை கூறப்பட்ட வாய்ப்புதான். இப்போது அது இல்லை. 2010க்குப் பி…

  19. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை சி.பி.ஐ. கைது செய்தனர். அவர் திகார் சிறையில் உள்ளார். முன்னதாக ராசாவின் வீடுகள் திருச்சி திருவானைக் காவலில் உள்ள அவரது அண்ணன் ராமச்சந்திரனின் வீடு, சகோதரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை செய்தது. அப்போது சொத்துக்கள் சம்பந்தமாக பல ஆவணங்களை சி.பி.ஐ. கைப்பற்றியது. இந்த சொத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களை சி.பி.ஐ. மத்திய வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராசா, அவரது அண்ணன் மற்றும் சகோதரி, வருமான விபரம், சொத்து விபரம், ஆகியவற்றை திரட்டினர். இதில் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அத…

  20. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம். தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் ம…

  21. ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்திய நடுவன் அரசின் அமைச்சர்கள் பதவி இழப்பதால் புது டில்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பினாமிப் பிரதமராகப் பதவி வகிக்கும் மன்மோகன் சிங் “கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் எனக்கில்லை” என்று கண்ணீர் சிந்தாத குறையாகச் சொன்னார். தெற்கு ஆசியாவின் பிராந்திய வல்லரசும், உலகப் பொருளாதாரத்தில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இடம்பெறும் இந்தியாவின் அதியுயர் அரசியல் தலைவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 180 ஊழல் நாடுகளில் இந்தியா 84ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒரு இலட்சம் கோடிக்கு மே…

  22. http://www.maalaimalar.com/2011/06/25154017/Pakistan-foreign-minister-hina.html

    • 2 replies
    • 1k views
  23. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இங்கு மீன் பிடித்தால் வலைகளை பிடுங்கி விடுவோம் என்று கூறினர். இதனால் பாதியிலேயே கரை திரும்பி விட்டோம். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56720

  24. முதலம‌ை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதாவை ம‌க்களவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ரும், பாஜக மூத்த தலைவருமான சு‌ஷ்மா சுவரா‌ஜ் ‌இ‌ன்று ச‌ந்‌‌‌தி‌த்து பே‌சினா‌ர். செ‌ன்னை போய‌ஸ் கா‌ர்ட‌னி‌ல் உ‌ள்ள முதல்வர் இ‌ல்ல‌த்த‌ி‌ல் இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு நடைபெ‌ற்றது. இந்த சந்திப்பின்போது முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ஜெய‌‌ல‌லிதாவு‌க்கு சுஷ்மா, வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டா‌‌ர். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பாஜக குரல் எழுப்பும் என்று தெரிவித்தார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56674

  25. Jun 26, 2011 கடந்த திங்கள் முதல் ஆரம்பித்த LE BOURGET விமானக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. AIRBUS ன் பிரபலத் தயாரிப்பான A380 மற்றும் லிபியப் போரில் பல சாதனைகள் நிகழ்த்திய RAFALE, மற்றும் Patrouille de France விமானங்களின் வர்ணஜார சாகசங்கள், சூரிய விமானம், Eurocopter இறுதித் தயாரிப்பான X3 போன்றவை சாகசங்கள் காட்டித் திறமையை நிரூபிக்க உள்ளன. வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கான இலவச தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியவர்களிற்கு 13 யூரோக்களும் 7 வயதிற்குக் குறைந்தவர்ளிற்கு இலவசமாகமும் நுழைவுக்கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கடந்த நாட்கள் நிகழ்ந்த கண்காட்சியில் AIRBUS A320…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.