உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்:வாசுதேவ நாணயக்கார THURSDAY, 19 MAY 2011 04:47 இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்…
-
- 2 replies
- 705 views
-
-
பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று…
-
- 2 replies
- 846 views
-
-
ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம்: வைகோ ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார். இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்…
-
- 0 replies
- 586 views
-
-
கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடங்களில் ஓட்டு போட்டீர்கள்? சீமான் இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், …
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சராக தமிழர் தேர்வு சிங்கப்பூர்: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் ஆளும் மக்கள் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதமர் லீ ஹிசின் லூங்ன், தனது அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார். இதன்படி, சிங்கப்பூர் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழரான சண்முகம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=242747 Mr K Shanmugam . கே சண்முகம் Sembawang GRC . . செம்பவாங் குழுத்தொகுதி http://www.cabinet.gov.sg/content/cabinet/appointments/mr_k_shanmugam.html http://www.parliament.gov.sg/mp/k-shanmugam…
-
- 0 replies
- 576 views
-
-
கரிநாநிதிக்கு ஐயா பழ நெடுமாறனின் பகிரங்கக் கடிதம்....... மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்குஇ வணக்கம். "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல்இ எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது. "பொடா' சிறையில் நான் இருந்தபோதுஇ நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன…
-
- 1 reply
- 983 views
-
-
நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை. தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர். புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139 தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள். வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000. இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது. இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்... எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள். இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்…
-
- 1 reply
- 2.1k views
-
-
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்த நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் மொரனோ தெரிவித்துள்ளார். மேலும் லிபியாவின் இராணுவ தலைரான கடாபியின் மகன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். நீதி வழங்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.அதனை நாங்கள் செய்வோம். லிபியாவுக்கு என்று எந்த விலக்கும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, கடாபி ஆதரவு இராணுவ படையினர் பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில்…
-
- 3 replies
- 818 views
-
-
தேர்தல் முடிவு வெளியிடும் நாளான நேற்று மானாட மயிலாட ஒளிபரப்பிய கலைஞர் ரி.வி! சனி, 14 மே 2011 15:00 தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று, அதைப் பற்றிய செய்திகளை, கலைஞர் "டிவி' வெளியிடாமல், "மானாட மயிலாட' நிகழ்ச்சியை ஒளிபரப்பியதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்; பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். தமிழக சட்டசபை ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதை நேரடியாக ஒளிபரப்ப மற்ற தொலைக்காட்சிகளைப் போலவே, கலைஞர் "டிவி'யும் நேரடி ஒளிபரப்பும் வாகனங்களுடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் காத்திருந்தது. காலை 8 மணி முதல், ஓட்டு எண்ணிக்கை குறித்த செய்திகளையும் வெளியிடத் துவங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கை முடிந்து, முதல் சுற்று, இரண்டாவது சுற்று என, அடுத்தடுத்த சுற்றுகளில் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
பூச்சியத்திலிருந்து ராச்சியம்! அங்கிருந்து மீண்டும் பூச்சியம்!! கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார். முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இருந்த ராம.நாராயணனும், செயலாளராக பணியாற்றிவந்த சிவசக்தி பாண்டியனும் பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து அவர்களின் ராஜினாமாவை சங்கத்தின் செயற்குழு ஏற்றுக்கொண்டது. சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. நக்கீரன்
-
- 0 replies
- 935 views
-
-
இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவம் தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டது. போரின் கடைசி மூன்று நாட் களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வேடிக்கை பார்க்க நடந்து முடிந்த இந்த இனப்படுகொலை, இப்போது ஐ.நா. அறிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ராஜபக்ஷே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது சரியான விசாரணை நடைபெற்றால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. குழு அறிக்கை …
-
- 0 replies
- 1.4k views
-
-
நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின. இதில் 4 மாநில முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய முதல்வர் தருண்கோகாய் மட்டும் மீண்டும் முதல்வராக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா என 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக கடந்த ஒரு மாதங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் ஐந்து மாநிலத்தின் மொத்த தொகுதிளை பார்லிமென்ட் தொகுதிக்கு இணையாக கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் 100க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இதன்மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் க…
-
- 0 replies
- 848 views
-
-
பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக சென்னை, மே 13: சட்டப் பேரவைத் தேர்தலில் 27 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள தேமுதிக பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. 13-வது சட்டப் பேரவையில் (2006-2011) பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தது. அந்த இடத்தை இப்போது தேமுதிக பிடித்துள்ளது. அதிமுக அணியில் இடம்பெற்ற தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாகிறது: பேரவையில் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் சில விதிகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்று இருக்க வேண்டும். பேரவைக் கூட்டம் ந…
-
- 10 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கரக் குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கரக் குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இவர்களில் முதலிடத்தில் லஷ்கர் இ தொய்பா தலைவரான ஹபீஸ் சயித் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியா இதுபோல எத்தனையோ முறை பல பட்டியல்களைப் பாகிஸ்தானிடம் கொடுத்து விட்டது. ஆனால், அதை வாங்கிக் குப்பைக் கூடையில் போடுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது பாகிஸ்தான். இந்த நிலையில் தற்போது பின்லேடனை அதிரடியாகச் சுட்டுக்கொன்றுள்ள அமெரிக்காவைப் பார்த்து அதே பாணியில் இந்தியாவும் செயற்பட்டு மும்பையில்…
-
- 2 replies
- 614 views
-
-
இதயம் இனிக்க வேண்டும், கண்கள் பனிக்க வேண்டும். இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம். சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்…
-
- 9 replies
- 2.3k views
- 1 follower
-
-
கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!! Posted by admin On May 13th, 2011 at 10:13 am / No Comments தமிழக சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க முன்னணியில் திகழ்கின்றது. இதன் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 149 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 33 தொகுதிகளில் தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன. saritham.com
-
- 13 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 70 இராணுவ வீரர்கள் பலி _ வீரகேசரி இணையம் 5/13/2011 9:52:28 AM Share பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் அந்நாட்டு துணை இராணுவப் படையை சேர்ந்த 70 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் வரை இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெஷாவர் நகரின் வடக்குப் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த இயக்கமும் இத்தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை.
-
- 4 replies
- 540 views
-
-
நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்? சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர். திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்: 1. மின்வெட்டு தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திர…
-
- 1 reply
- 892 views
- 1 follower
-
-
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! சென்னை: தி்முக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அக்கட்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிடும் சூழல் வலுத்துள்ளது. இதனால் நாளை சிபிஐ கோர்ட்டில் ஆஜராகவுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உறவு கசந்து வெகு நாட்களாகிறது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இரு தரப்பும் பல்வேறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து பூசல் பெரிதாகாமல் கட்டுக்கோப்புடன் இருந்து வந்தன. இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவை மிகக் கடுமையாகவே மிரட்டி வந்தது காங்கிரஸ். அதை வைத்து மிரட்டித்தான் 63 சீட்களை அது திம…
-
- 1 reply
- 753 views
-
-
மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை கேரளா : காங்கிரஸ் முன்னிலை கேரளாவில் காங்கிரஸ் கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னணியில் உள்ளது. ---------------------------------- மேற்கு வங்கம்: காங்கிரஸ் முன்னிலை மேற்கு வங்கத்தில் 6 கட்ட தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னணியில் உள்ளது. சிபிஎம் கட்சி 9 இடங்களில் முன்னணியில் உள்ளது. # மேற்கு வங்கம்- திரிணமூல் 15, சிபிஎம் 9ல் முன்னிலை # கேரளா- காங் 7, இடதுசாரிகள் 5 இடங்களில் முன்னிலை
-
- 6 replies
- 1k views
-
-
மதுரைக்கு வந்த 'தமிழ்' சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! துரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை அன்று. ஆனால் தாய் மொழியாம் தமிழ்ப் பாடத்திலேயே தோல்வியைத் தழுவுவோர் சங்கம் வைக்கும் அளவுக்கு பெருகி வருகின்றனர் இன்று. பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பார்த்த மதுரை மாணாக்கர்கள் பலருக்கும் அதிர்ச்சி. காரணம், பலர் தமிழில் பெயில் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 209 ஆகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பெரும் வருத்தமும், கவலையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தமிழில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. 2010ல் இது 111 ஆக எகிறியது. .இன்த ஆண்டு 209 ஆக உயர்ந்து தமிழ் ஆர்வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
3-வது குற்றப் பத்திரிகையில் ஜெகத் கஸ்பர்? விரிகிறது ஸ்பெக்ட்ரம் வலை ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கனிமொழியைத் தொடர்ந்து, அவருடைய நண்பர் ஜெகத் கஸ்பரும் அடுத்துத் தாக்கலாக இருக்கும் குற்றப் பத்திரிகையில் சிக்குவார் எனத் தெரிகிறது. அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து, கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கிய கஸ்பரின் 'தமிழ் மைய' கணக்குகள் அம்பலத்துக்கு வரத் துவங்கி உள்ளன! அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி, ஜெகத் கஸ்பர் நடத்தும் 'தமிழ் மையம்’ அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. மீடியாக்களில் முகம் வந்துவிடுமோ என, ரெய்டுக்குப் பிறகும் இருட்டு அறையிலேயே உட்கார்ந்திருந்த கஸ்பர், நீண்ட நேரத்துக்குப் பி…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-