உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கச்சத்தீவில் தமிழர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55969
-
- 0 replies
- 321 views
-
-
மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை. வார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கண்ணாடி காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம தலைவர் எம்.எம். கத்காரி கூறுகையில், காணாமல் போன கண்ணாடி குறித்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் பல இங்கு உள்ளன. அவை க…
-
- 9 replies
- 930 views
- 1 follower
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார். தனி விமானத்தில் நேற்று நண்பகல் முதல்வர் டில்லி புறப்பட்டுச் சென்றிருந்தார். இச் சந்திப்பின் போது இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேச்சு நடத்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரைச் சந்தித்த பின்னர் இன்று மதியம் 12 ம…
-
- 0 replies
- 547 views
-
-
அமெரிக்காவை மிஞ்சும் சீனா அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது. கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார். கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது. கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட…
-
- 1 reply
- 535 views
-
-
சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது. இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என “நேட்டோ” நாடுகளை வலியுறுத்தியது. ரஷ…
-
- 0 replies
- 548 views
-
-
சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. சிங்கள மொழி படத்தில் பூஜா நடிக்க கூடாது. மீறி நடித்தால் தமிழ் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதை எதிர…
-
- 0 replies
- 722 views
-
-
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார். முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்! தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பா…
-
- 2 replies
- 739 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (13.06.2011) மதியம் 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் நாளை (14.06.2011) மதியம் 12 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும், வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு பிரச்சினை நீடித்து வருகிறது. ஏற்கனவே, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறும், பொது வினியோக திட்டத்திற்கு வழங்குவதற்காக இப்போது வழங்கப்படும் மண்எண்ணெய் அளவை அதிகரித்து கூடுதல் ஒதுக்கீடு செய்யுமாறும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதம…
-
- 0 replies
- 357 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் : யுவராஜா அவர், ‘’பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிசத் ஆகிய மதவாத அமைப்புகள் நாட்டில் மதமோதல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இவர்களுக்கு பாபா ராம்தேவ் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். ஆயுதப்பயிற்சி அளிப்போம் என்று கூறிய அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பாபா ராம்தேவை கண்டித்து சென்னையில் 15-ந்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லியில் இருந்து தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு அறிவித்து உள்ளது. ஊழலுக்கு எதிராக நடுநிலையோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டிய முதல்-மந்திரியை ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்க…
-
- 1 reply
- 774 views
-
-
http://www.youtube.com/watch?v=u9WdRU_wx3E&feature=player_embedded#at=505 http://www.youtube.com/watch?v=yDwyJSZUA6A&NR=1
-
- 0 replies
- 431 views
-
-
சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணி வண்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:- இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் …
-
- 0 replies
- 525 views
-
-
உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது. இப்பசுவின் மரபணுக்களில், இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை, தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள், பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசு, மனிதர்களின் தாய்ப்பாலைப் போல, விட்டமின்கள் கொண்ட, பாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, பிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.…
-
- 2 replies
- 627 views
- 1 follower
-
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, ராம்பால் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச்சுடன் அறிமுக வீரராக டான்ஜா …
-
- 0 replies
- 424 views
-
-
காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ள தி.மு.க. தயங்குவது ஏன்? 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க.வின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுவது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை மாதம் பொதுக்குழு கூடும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸூடனான கூட்டணியில் பாதிப்பு இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கருணாநிதி கூறினார். ஆனால், காங்கி…
-
- 4 replies
- 937 views
- 1 follower
-
-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்கேம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 11.06.2011 அன்று டெல்லியில் வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 2ஜி வழக்கு முறைகேட்டில் தொடர்புடைய பணம் மீட்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்துப் பேசிய சுப்பிரமணியன் சாமி, 2ஜி வழக்கில் தொடர்புடைய லஞ்சப் பணம், தீவிரவாதிகள் உதவியுடன் சர்வதேச அளவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க மத்திய அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாட வேண்டும். இல்லை என்றால் இந்த பணம் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது சந்தை சரிவடையும். நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும். தேசவிரோத சக்திகள் நாட்டிற்க…
-
- 0 replies
- 671 views
-
-
நூறாண்டுகளாக பேய்காட்டுவதே தூதரின் இலக்கணம் - அதையும் தாண்டி இது நம்முடைய செயல் கணம் இது எதிர்பார்த்ததுதான்.. என்றாலும் இதில் மேனனுடைய ஆளுமையை கொஞ்சம் சீர் தூக்கி பார்ப்போம். அதாவது பழையபடி புலிகளுடைய பாணியில் எடுத்தியம்புகிறார் தமிழர் சிக்கலுக்கான தீர்வு தமிழர்களால் தான் தீர்க்கமுடியும். என்று கூறுகிறார் . அதாவது இவர்கள் ஏற்படுத்திய மாகாண சபைக்கான தீர்வை கூட இப்போது குறைந்த பட்ச தீர்வாக அதட்டி சொல்லமுடியாத நிலைமை.. போக கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதில் உள்ள ராஜதந்திரம் தெளிவாக விளங்கும்.அதாவது தீர்வு தீர்வு என கூவி கொண்டே இழுத்தடித்து தொடர்ந்து தமிழர் தரப்பை தனக்கு பகடை காய்களாக பயன்படுத்துவது. இதை பயன்படுத்தி தொடர்ந்து சிங்களத்தின் மீது ஆதிக்கம் செலுத்து…
-
- 1 reply
- 668 views
-
-
சீனா-ஆப்பிரிக்கா உறவு: கிளிண்டன் கவலை ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனாவின் பொருளாதாரத் தொடர்புகள் அதிகரித்து வருவது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் சீனா கையாண்டுவரும் முதலீட்டுக் கொள்கை, ஆப்பிரிக்காவுக்கு சீனா நல்கிவரும் உதவித் திட்டங்கள் போன்றவை எல்லா நேரத்திலும் சர்வதேச விதிகளுக்கேற்ற வெளிப்படைத்தன்மை, நல்லாட்சித் தரங்கள் ஆகிவற்றை கொண்டிருப்பதில்லை என்று கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார். தவிர சீனா தனது வியாபார நலன்களை முன்னெடுக்கும்போது எல்லா நேரத்திலும் ஆப்பிரிக்க மக்களின் திறன்களை அதில் பயன்படுத்திக்கொள்வதில்லை என்றும் கிளிண்டன் அம்மையார் குறை கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளுக்கா…
-
- 1 reply
- 610 views
-
-
உலகில் யாராவது தங்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆதரவாவது தங்களுக்குக் கிடைக்காதா என்றுதான் அவர்கள் நெடுநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான போர் உக்கிரத்தை அடைந்த நிலையில் 2008 அக்டோபர் முதல் அப்போதைய தி.மு.க. அரசிடம் இலங்கைக்கு எதிராக சட் டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஈழ ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், ‘காங்கிரஸை பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற காரணத்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்தக் கோரிக்கைக்கும் இலங்கைத் தமிழர்களின் அழுகுரலுக்கும் செவிசாய்க்கவே இல்லை. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவ…
-
- 2 replies
- 761 views
- 1 follower
-
-
திமுக கூட்டணி தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததால்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கசப்பு உணர்வு ஏற்பட்டது. திமுகவுடனான நெருக்கத்தால் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சூழல் உருவானது. இருப்பினும், திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. இதனால்தான் சட்டமன்ற தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைக…
-
- 0 replies
- 586 views
-
-
"இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். "ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20 ஆயிரம் கோடி ரூபாய்' என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்வர் அளித்த பதிலுரை:உணவு பாதுகாப்புக்காக, பொது வினியோகத் திட்டம் மூலம் இலவச அரிசி வழங்கப்படு…
-
- 0 replies
- 504 views
-
-
கடந்த 8-ம் தேதி, ராஜ்காட்டில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தைத் தொடங்க, திருப்பூர் காந்தி சிலை அருகே தமிழருவி மணியன் தலைமையில் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு ஊழலுக்கு எதிரான அறப்போராட்டம் நடந்தது. அதில் முழங்கி விட்டு இறங்கிய தமிழருவி மணியனை அவரது 'காந்திய மக்கள் இயக்கத்தின்’ தலைமை நிலையத்தில் சந்தித்தோம்! ''உண்ணாவிரதத்தாலும், இது போன்ற போராட்டங்களாலும் ஊழலை ஒழிக்க முடியுமா?'' ''ஒரு நாள் உண்ணாவிரதத்தாலும், ஒரு மணி நேரப் போராட்டத்தாலும் எந்த ஒரு சமூக மாற்றமும் நிகழ்ந்து விடாது. ஆனால், ஊழலுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோபத்தை ஏற்படுத்தினார் அண்ணா ஹஜாரே. சட்டம் - ஒழுங்கு கெடாதவாறு மக்கள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இது, கால ஓட்டத்தில் நிச்சயம் ஒரு சமூக மாற்றத்தை …
-
- 2 replies
- 781 views
-
-
சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி! 'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...! 'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவர…
-
- 0 replies
- 741 views
-
-
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த நிலையில்... கடந்த 4-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு. சிறுத்தைகள் சீறித் தள்ளினார்கள்... காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் மென்மையாக ஆரம்பித்தார். ''ஓர் ஆண்டுக்கு முன்பு வரை மாதம்தோறும் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது. அதை மீண்டும் நடத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது சரிதான். ஆனால், 'அந்த அணி, இந்த அணி’ என ஒரே மாவட்டத்துக்குள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கிட்டத்தட்ட 35 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்...'' என்று அவர் சொல்ல, பலரும் கை தட்டி ஆமோதித்தனர். புதுச்சேரி சார்பில் துணைப் பொதுச…
-
- 0 replies
- 637 views
-
-
கொழும்பு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளது. . இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் ஆகிய விடயங்கள் குறித்தே இந்தச் சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்படும். இப்படிக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பிரதம ரின் செயலாளர் கே.நாயக் ஆகியோர் நேற்றுப் பகல் இலங்கை வந்து சேர்ந்தனர். . இலங்கை வரும் முன்னர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங் கர் மேனன் நேற்று முன்தினம் சென்னை சென்று, த…
-
- 0 replies
- 320 views
-