உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
எத்தியோப்பியா, தான்சானியாவுக்கு பிரதமர் பயணம் எத்தியோப்பியா மற்றும் தான்சானியாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் 6 நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். ஆப்பிரிக்க நாடுகளிடையே உள்ள உறவை வலுப்படுத்தவும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் மன்மோகன் சிங் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் மாநாடு மே 24, 25-ம் தேதிகளில் அடிஸ் அபாபா நகரில் நடைபெறவுள்ளது. அல்ஜீரியா, எகிப்து, கென்யா, லிபியா, நமீபியா, நைஜீரியா, ஸ்விட்சர்லாந்து உள்பட 15 நாட்டுப் பிரதிநிதிகள் பங்கு கொள்ளும் அந்த மாநாட்டில் மன்மோகன்சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார். அடிஸ் அபாபாவில் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அப்போது ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர…
-
- 4 replies
- 456 views
- 1 follower
-
-
ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்க வேண்டாம்: ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம் ராஜீவ் காந்தி படுகொலையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் 24.05.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, ராஜீவ்காந்தி கொலையில் திமுகவை தொடர்பு படுத்திப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, ராஜீவ்காந்தி கொலை மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. மிகவும் உணர்ச்சிகரமான அந்த துயரச் சம்பவத்தை யாரு…
-
- 0 replies
- 751 views
-
-
ஜெயலலிதாவை சோனியா டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா? இல்லையா? செவ்வாய்க்கிழமை, மே 24, 2011, சென்னை: நாங்கள் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அவர் டீ-பார்ட்டிக்கு அழைத்ததாக பத்திரிகைகளில்தான் படித்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அவரை சோனியா காந்தி டீ-பார்ட்டிக்கு அழைத்தாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்: கடந்த வாரம் நான் உங்களை சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகிவிட்டது.…
-
- 1 reply
- 733 views
-
-
இந்தியாவின் 3 கலைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் மத்திய அரசு 2010-11 ஆம் ஆண்டில் பண்பாடு குறித்த அறிக்கையில், ’’ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வங்கதேசத்துடன் இணைந்து கூட்டாக கொண்டாடப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும். …
-
- 0 replies
- 963 views
-
-
கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லா உமர் கொல்லப்பட்டாரா??? Taliban leader Mullah Omar killed 2011-05-23 11:27:30 Kabul: Afghan Taliban leader Mullah Mohammad Omar has been killed in Pakistan, Xinhua cited a private television channel as stating on Monday. "Mullah Omar was killed on way from Quetta to North Waziristan," Afghanistan's TOLO television stated. However, it did not provide details on how he was killed and by whom. Meanwhile, a security official confirmed the killing, saying: "It is correct that Mullah Omar has been killed." But he did not disclose details. Omar was considered the spiritual leader of the Taliban m…
-
- 1 reply
- 770 views
-
-
பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் முகாமில் தரித்து நின்ற இரண்டு பாரிய யுத்த விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் அமைந்துள்ள மஹரான் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சில இராணுவ வீரர்களை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் சீன இராணுவப் படைவீரர் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனினும் அல் கய…
-
- 0 replies
- 665 views
-
-
கனிமொழியை சந்தித்தார் கலைஞர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கிறார் கனிமொழி. தனது மகள் கனிமொழியை சந்திக்க கலைஞர் இன்று டெல்லி சென்றார். அவர் இன்று மாலை திகார் சிறையில் கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் இருந்தனர். கனிமொழியுடன் சிறிது நேரம் கலைஞர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து விடைபெற்றார். நக்கீரன்.
-
- 0 replies
- 598 views
-
-
இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா பீ.பீ.சி May 23, 2011 உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ…
-
- 0 replies
- 1k views
-
-
ரஜினி நலம்பெற வேண்டி பாரதிராஜா தலைமையில் 500 இயக்குநர்கள் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில்,பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்,வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார்,ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முகசுந்தரம், சசிமோகன், மேலும் பல இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்கள்,செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். கூட்டம் ஆரம்பம் ஆகி, தமி…
-
- 0 replies
- 691 views
-
-
‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெ.வுக்கு கி. வீரமணி கண்டனம் திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும். நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். “ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண…
-
- 0 replies
- 589 views
-
-
கனிமொழியைக்கண்டு காந்திஅழகிரி கண்ணீர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரியின் மனைவி காந்தி இன்று டெல்லி நீதிமன்றத்தில் சந்தித்தார். இன்று காலை டெல்லி வந்த காந்தி, தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தார். காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார். எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார். இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்க…
-
- 1 reply
- 905 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அயர்லாந்திற்கு செல்லும் ஒபாமா, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, 3 நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரன் உட்பட, பிரிட்டிஷ் மகாராணியையும் ஒபாமா சந்திக்கவுள்ளார். அங்கிருந்து பிரான்ஸ் பயணமாகும் அவர், பிரான்சில் இடம்பெறவுள்ள ஜி-8 எனும், உலகின் பலமிக்க எட்டு நாட்டுத் தலைமைகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஒபாமா, பின்னர் போலந்து ஊடாக அமெரிக்கா திரும்புவார். அண்மையில் அல்கைதா அமைப…
-
- 3 replies
- 592 views
-
-
. பாக். கடற்படைத் தளத்தில் பயங்கர தாக்குதல் - 10 பேர் பலி-சண்டை நீடிக்கிறது கராச்சி: கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தில் புகுந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 2 விமானங்களை அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர். 12 மணி நேரமாக நடந்து வரும் சண்டையில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் மேஹ்ரான் என்ற கடற்படைத் தளம் உள்ளது. இங்கு நேற்று இரவு பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் 12 முதல் 15 பேர் வரை புகுந்தனர். அருகில் உள்ள விமானப்படை அருங்காட்சியகம் வழியாக இவர்கள் கடற்படைத் தளத்துக்குள் புகுந்து விட்டனர். உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த 2 விமானங்களை அவர்க…
-
- 1 reply
- 664 views
-
-
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி காயமடைந்தார். சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது. இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ஹஸன் அலியை தோற்கடித்தவரும், ஈழ நண்பருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனிதம் பாராட்டு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அன்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஈழ பிரச்சனையில் எப்போதும் கரிசனம் கொண்டிருந்து வருபவர். மனிதம் அமைப்பின் நெடுங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது. அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது. அந்த இடத்த…
-
- 2 replies
- 733 views
- 1 follower
-
-
வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. தென்சூடான் படைகளுக்கும் வட சூடான் படைகளுக்குமிடையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தென் சூடானின் எல்லைப்பகுதியின் அபே(Abyei) நகரம் -வட சூடானின் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக கார்ட்டொமினைத் (Khartoum) தளமாகக் கொண்டு இயங்கும் சூடான் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பும் உறுதி செய்திருகிறது. எண்ணெய்வளச் சிறப்பு மிக்க இந்தப் பிரதேசம் மீண்டுமொரு போர் ஆரம்பமாவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் தென்படுவதாக எச்சரித்…
-
- 1 reply
- 547 views
-
-
உடுக்கை இழந்த கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது.. தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது. இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.. பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது. நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும்இ கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும்இ இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் …
-
- 0 replies
- 854 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவது அவசியம்: மன்மோகன் சிங் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசிய…
-
- 0 replies
- 655 views
-
-
ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சோனியா தெரிவித்தார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில், 'ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும்போது, சோனியா இதைத் தெரிவித்தார். மேலும் பேசிய சோனியா காந்தி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும். நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள். பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை …
-
- 2 replies
- 1.1k views
-
-
யேமனுக்கான அமெரிக்க, பிரித்தானிய, ஐ.ஒன்றிய தூதுவர்கள் ஆயுதபாணிகளால் சுற்றிவளைப்பு யேமன் நாட்டிலுள்ள அமெரிக்க பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ்வுக்கு விசுவாசமான ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யேமன் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பது குறித்து யேமன் தலைநகர் சனாவிலுள்ள எமிரேட்ஸ் தூதரகத்தில் இத்தூதுவர்கள் கலந்துரையாடி வரும் நிலையில் இம்முற்றை இடம்பெற்றுள்ளது. வளைகுடா கூட்டுறவுப் பேரவையின்தலைவர் அப்துல் லத்திவ் அல் - ஸயானியும் முற்றுகையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். வளைகுடா நாடுகளின் மத்தியஸ்தத்துடனான ஒப்பந்தமொன்றில் யேமன் …
-
- 2 replies
- 502 views
-
-
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது. ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய…
-
- 0 replies
- 663 views
-
-
இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி Sunday, May 22, 2011, 18:27இந்தியா29 viewsAdd a comment கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது. இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார். அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார். இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த…
-
- 1 reply
- 787 views
-
-
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும். வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காம…
-
- 1 reply
- 747 views
-