உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரட்டிப்பாகும் என்கிறார் காப்பர் தங்களது கென்சவேட்டிவ் கட்சியின் ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்பட்ட பின்னர் இளைஞர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகையும் அறிமுகப்படுத்தப்படும் என காப்பர் அறிவித்திருக்கிறார். கென்சவேட்டிவ் கட்சி ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊடக்கத்தொகை 500 டொலர்களிருந்து 1000 டொலர்களாக அதிகரிக்கப்படுமென்று இன்று காப்பர் அறிவித்திருக்கிறார். அதேநேரம் வரவுசெலவுத்திட்டம் சமப்படுத்தப்படுமிடத்து இளைஞர்களுக்கான புதிய உடல் வலுவூட்டல் ஊக்கத்தொகையா…
-
- 0 replies
- 731 views
-
-
அமெரிக்காவில் குர்-ஆன் எரிப்பு, ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் கொலை ஏழு ஐ.நா. பணிப்பாளர்கள் உட்பட பன்னிரண்டு பேர் இன்று அப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் புளோரிடா மாநிலத்தில் "தீவிரவாத" அமெரிக்கர் ஒருவரால் இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர்-ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பழி வாங்கும் நோக்குடனேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக எண்ணப்படுகின்றது. Twelve people were killed Friday in an attack on a U.N. compound in northern Afghanistan that followed a demonstration against the reported burning last month of a Quran in Florida, authorities said. The fatalities comprised seven U.N. workers and five demonstrators, officials said. Another 24 people w…
-
- 6 replies
- 1.4k views
-
-
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்! கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த …
-
- 1 reply
- 3.8k views
-
-
சீபீஐ அமைப்பு செல்பேசி ஒதுக்கீடு தொடர்பான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது செல்பேசி அலைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சீபீஐ அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்கெனச் சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சயினி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எண்பதாயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும், மேலும் எட்டுப் பேருக்கும் எதிராகவும், மூன்று தொலைத்தொட்ர்பு நிறுவனங்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகச் சிறையில் உள்ள ராசா உட்பட்ட நான்கு பேருக்கும் எதிராக, ஏமாற்றியமை, ஆவண…
-
- 1 reply
- 803 views
-
-
விமானத்தின் கூரையில் தீடீர் தூவாரம்! அமெரிக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்! Posted by uknews On April 2nd, 2011 at 8:10 pm / No Comments 118 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் கூரையில் திடீரென துவாரம் ஏற்பட்டதால் அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸை சேர்ந்த இவ்விமானம் கலிபோர்னியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடியோசை போன்ற சத்தம் கேட்டதாக விமானத்தில் பயணம் செய்த பிரெண்டா ரீஸ் எனும் பெண் தெரிவித்துள்ளார். “விமானத்தின் கூரையில் திடீரென பாரிய துவாரம் ஏற்பட்டது. அதற்கூடாக வானத்தை பார்க்க முடிந்தது’ என அவர் கூறினார்.வி…
-
- 1 reply
- 756 views
-
-
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கும் இயக்குநர்! மெளனத்தை...அச்சத்தை... உடைப்போம்! மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்! இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது. 'பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்...’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக…
-
- 0 replies
- 747 views
-
-
சனிக்கிழமை, 2, ஏப்ரல் 2011 (7:0 IST) இலவச செல்போன்: புதுவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச செல்போன், அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் என்று புதுவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: புதுவை ழூனியன் ஆட்சி பரப்புக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெற்று 40 தொகுதிகள் பெற வழிசெய்வோம். மக்களின் தற்கால அவசர மற்றும் அவசிய தேவைகளை கருத்தில்கொண்டு ஏழை, எளிய மக்களும் நவீன யுத்திகளை கையா…
-
- 0 replies
- 612 views
-
-
சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியது. மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா தற்போது இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனங்களில் கையெழுத்திட மறுத்தமை, ஆப்கானிஸ்தானில் கைதிகள் நடத்தப்பட்ட முறை தொடர்பாக தவறுகளை ஏற்க மறுத்தமை, வெளிநாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தவறியமை உட்பட, அண்மைய ஆண்டுகளில் கனடா எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தக் கருத்து ஏற்பட்டுள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி (Salil Shetty) கூறினார். இஸ்ரேல் தொடர்பான கனேடிய …
-
- 1 reply
- 602 views
-
-
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாக…
-
- 4 replies
- 885 views
-
-
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? சனி, 26 மார்ச் 2011( 21:12 IST ) தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது. FILE ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரித…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஜெ.வை சந்தித்தேனா? வைகோ ஆவேசம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உ…
-
- 0 replies
- 2.1k views
-
-
கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ? இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம். Spring election likely as all three opposition parties reject Tory budget Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable. The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also …
-
- 8 replies
- 1.2k views
-
-
மகிந்தாவும் குழுவினரும் ................இடி விழுந்து மரணம் ************************************************* இன்று முட்டாள்கள் தினம் ஜாக்கிரதை ( ஏப்ரல் பூல்)
-
- 1 reply
- 1k views
-
-
-
இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்திய மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் சுமார் 18 கோடி அதிகரித்து, தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியை எட்டியிருக்கிறது என்று நாட்டில் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் இந்தியர்கள். ஆனால் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எப்போதைய கணக்கெடுப்பிலும் இல்லாதவாறு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மந்தமாகி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தக் கணக்கெடுப்பு இந்திய அரசு எதிர்கொள்ளும் சவால்களின் அளவையும், வெற்றிகளையும் தோல்விகளையும், காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்திய மக்கள் தொகை, பிரேசிலின் மொத்த மக்கள் தொகை …
-
- 1 reply
- 952 views
-
-
இந்த மாதம் 25 அன்று குவைத்தில் ஏற்பட்ட மிக மோசமான மண் புயல் (Sandstorm)தொடர்பான ஒளித்தொகுப்புகள் http://www.youtube.com/watch?v=_hoZr1JaJlA&feature=player_embedded குவைத்தில் ஏற்பட்ட இந்த புயாள உருவான புழுதி துபாய் வரை பரவி, விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது தொடர்பான செய்திகள் link1 link2
-
- 0 replies
- 1.1k views
-
-
Thursday, March 31st, 2011 | Posted by thaynilam ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவிற்கு நான்காவது இடம் ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில் ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக ஹபெர்க்’ என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27) இந்தோனேஷியா (9.25) பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10)- ஆஸ்திரேலியா (1.39)- ஜப்பான் (1.90)- அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அ…
-
- 3 replies
- 805 views
-
-
Full text: China's National Defense in 2010 The Information Office of China's State Council on Thursday issued a white paper titled "China's National Defense in 2010". Following is the full text of the document: China's National Defense in 2010 http://news.xinhuanet.com/english2010/china/2011-03/31/c_13806851.htm China white paper highlights US military 'competition' China says the United States is increasing its military presence in the Asia-Pacific region, which is becoming more "volatile". It also says there has been a rise in operations directed against China. The views were made in China's National Defence white paper, issued by the governm…
-
- 0 replies
- 438 views
-
-
http://www.youtube.com/watch?v=tb5vZaUf5vE&feature=player_embedded 14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன. இச் சம்பவம் கடந்தவருடம் இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகும்வரை இக் காணொளி வெளியிடப்படவில்லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட்டக் கொட்ட அவனை அவர்கள் இழுத்துச் சென்று மிரட்டிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உலகில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 29 Mar 2011
-
- 0 replies
- 447 views
-
-
[கருணாநிதியின் குடும்ப மரம் : http://rste.org/wp-content/uploads/2011/03/karunanidhi-family-tree-2.jpg ] கருணாநிதி ஆட்சியில் எல்லாம் இலவசம்… இலவசம்… இலவசம்…’ என்று கேலி செய்கிறார்கள். அவர்கள் இலவசத்தை கேலி செய்யவில்லை. இந்த இயக்கத்தை கேலி செய்கிறார்கள்; கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த இயக்கம் ஏழைகள் உள்ளவரை, அந்த ஏழைகளுக்காக இலவசமாக எதையும் வழங்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்…’’ இலவசங்கள் குறித்த விமர்சனங்களுக்கு முதல் வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்தான் இது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இலவச அரிசி, இலவசமாக மிக்ஸி அல் லது கிரைண்டர் என்று தேர்தல் அறிக்கையை இந்தத் தேர்தலுக்கும் வெளியிட்டிருக்கிறது தி.மு.க. ‘அடுத்து, இலவச ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் கொடுத்தாலும் க…
-
- 1 reply
- 949 views
-
-
ரொறன்ரோ விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டவருக்கு எதிராகப் பயங்கரவாதம்சார் குற்றச்சாட்டு! பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் ஒருவரை ரொறன்ரோ பொலிசார் கைதுசெய்திருக்கிறார்கள். செவ்வாயன்று இரவு ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமானத்தில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பிரித்தானியாவின் ஹீத்துறூ விமான நிலையம் ஊடாக எகிப்தின் ஹெய்ரோ நோக்கிப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த இந்தச் சந்தேகநபர் குறிப்பிட்ட விமானம் ஏறி அமர்ந்த பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபரது பெயர் விபரங்கள் மற்றும் அவர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல்கள் எதுவுமே இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இந்தச் சந்தேக நபர்…
-
- 1 reply
- 818 views
-
-
சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன…
-
- 2 replies
- 1.1k views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது ஏப்ரல் 2ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்…
-
- 0 replies
- 521 views
-
-
கனடா கொள்வனவு செய்ய விரும்பும் எவ்.35 தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாம் கனேடிய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவுசெய்ய முற்படும் எவ்.35 வகையினைச் சேர்;ந்த தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் கனடா எதிர்பார்க்கும் தொகையினை விட 25 மில்லியன் டொலர் அதிகமானதாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இந்த வகை விமானங்கள் ஒவ்வொன்றையும் 100 மில்லியன் டொலருக்கே கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைப்பு கூறுகிறது. தற்போது கனேடிய விமானப்படையின் பயன்பாட்டின் கீழ் இருக்கும் எவ்-75 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்களுக்குப் பதிலாக எவ் 35 வகையினைச் சேர்ந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை கனடாவ…
-
- 0 replies
- 692 views
-