Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய ட்ரம்ப் கோப்புப் படம்: டொனால்ட் ட்ரம்ப் கத்தாருடனான ராஜாங்க உறவை முறித்துக்கொள்வதாக சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில், இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப…

  2. இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு; குறைந்தது நான்கு பேர் பலி துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை காவல்துறையினர் முழுமையாக மூடியுள்ளனர். இஸ்திக்லால் தெரு என்ற தெருவில் நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் காவல்துறையினரும் விரையும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். குர்திய தீவிரவாத இயக்கமான டிஏகே அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. …

  3. டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட…

  4. Published By: SETHU 21 MAY, 2023 | 11:55 AM தனது எவ்16 ரக போர் விமா­னங்­களை உக்­ரே­னுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு மேற்­கு­லக நட்பு நாடு­க­ளுக்கு தான் அனு­மதி வழங்­க­வுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. ஜி7 உச்­சி­மா­நாட்­டுக்­காக ஜப்­பா­னுக்கு சென்­றுள்ள தலை­வர்­க­ளிடம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இத்­தீர்­மா­னத்தை நேற்­று­முன்­தினம் அறி­வித்தார் என அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜெக் சுலீவன் தெரி­வித்­துள்ளார். இந்த விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­து­வதில் உக்­ரே­னிய விமா­னி­க­ளுக்கு அமெ­ரிக்கப் படை­யினர் பயிற்­சி­களை வழங்­குவர் எனவும் சுலீவன் கூறினார். எவ்16 போர் விமா­னங்­களை வழங்­கு­மாறு உக்ர…

  5. சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், புதிய கொவிட் மாறுபாடு அதன் தீவிரப் போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/303392

  6. ஐரோப்பிய ஒன்றியத்தில்... உக்ரைன் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு, "பல தசாப்தங்கள்" ஆகும்: பிரான்ஸ் ஜனாதிபதி! ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார். ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்ட…

  7. உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன்? வெளியானது அதிர்ச்சி தகவல் உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன் என, இதுவரை புரியாத புதிராக இருந்துவந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. புதிதாக வெளியான அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிதி வோலோடிமிர் சேலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 91 நிமிடங்கள் உரையாடலுக்கு பின்னரே இந்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது உறுதிப்பட்டுள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 25ஆம் திகதி, சேலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மா…

  8. 103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார். கடந்த கால வாழ்க்கை திம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு விவசாயியை திருமணம் செய்துள்ளார். கணவருடைய வருமானம் மிகக்குறைவுதான். கணவர் உட்பட அங்கு வசிக்கும் சக கிராமத்தினர் புதுமனைவி வந்ததும் குழந்தை பெற்ற…

    • 0 replies
    • 300 views
  9. பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு இறுதி மரியாதை க்யூபாவின் கிழக்கு நகரான சாண்டியாகோவில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ தனது மறைந்த சகோதரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி மரியாதையை வழிநடத்திச் சென்றார். அந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் தனது 90 ஆவது வயதில் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோவால் முன்னஎடுக்கப்பட்ட புரட்சியின் சோஷிலிச கொள்கைகளுக்கு மரியாதை வழங்கப்போவதாக ராவுல் காஸ்ட்ரோ சூளுரைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க புராதனச் சின்னங்கள் மற்றும் சாலைகளுக்கு அவரின் பெயர் சூட்டுவதை க்யூபா தடை செய்யும் எனவும் அவர் அறிவித்தார். மே…

  10. படக்குறிப்பு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் 2008ஆம் ஆண்டில் இரு நாடுகள் தீர்வை முன்வைத்தார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது." "கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!" அது 2008ஆம் ஆண்டு. அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்த…

  11. உச்சி மாநாட்டை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பிறகு, சமாதானத்துக்கு முயலும் வடகொரியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள், மீண்டும் தாயகத்துக்கு சட்டவிரோதமாக திரும்ப முயற்சி, இஸ்ரேல் கடல் பகுதியில் நீராவிக் குளியலுக்கு வரும் அரிய வகை கர்ப்பம் தரித்த சுறாக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. 'முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை': டோனல்ட் ட்ரம்ப் மிச்சிகனில் நடைபெற்ற விவாதம் ஒன்றில்சக போட்டியாளர்களுடன் ட்ரம்ப் (மார்ச் 3) அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார். நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார். "இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார…

  13. சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் வியட்நாம் தனது ராணுவத்தை நிறுத்தியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- தற்போது வியட்நாம் தென் சீன கடற்பகுதியில் நிறுவியுள்ள புதிய மொபைல் ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவின் விமான ஓடுபாதைகளையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை. சீனாவை குறி வைப்பதற்காகவே சமீபகாலமாக வியட்நாம் தனது ராணுவ நிலையை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது என தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வியட்நாம் ஆளாக நேரிடும். வியட்நாம் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றான இது மாறிவிடும். கடந்த காலங்களில் நடந்த போரில் வியட்நாம் தோல்வியுற்றதை மறந்திருக…

  14. ரஷ்யாவிற்கு எதிரான... பொருளாதாரத் தடைகளால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு... 400 பில்லியன் டொலர்கள் இழப்பு: புடின் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியம் 400 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். வருடாந்திர செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போதே புடின் இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ‘முட்டாள்தனம் மற்றும் சிந்தனையற்றவை’ என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் கட்ட…

  15. பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகாகோ கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பாதுகாப்பு சோதனை முன்னதாக, கடந்த திங்கள்கிழமை…

  16. பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன. அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் ந…

  17. பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரிட்டன் குற்றவியல் விசாரணை மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐரோப்பிய விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் மீது பிரிட்டனின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமானது குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என ஏர் பஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முக்கிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் இடைத்தரகர்களை எதிர்ப்பதை உலகெங்கிலும் லஞ்ச எதிர்ப்பு சட்டங்கள் இலக்கு வைக்கின்றன. ஏர் பஸ் நிறுவனம் பிரான்சில் அதன் தலைமையகத்தை கொண்டுள்ளது. மேலும், ஐ…

  18. ஐரோப்பிய அகதிகள் பிரச்னைக்கு முக்கிய காரணமே ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் தான் என போலந்தின் பழைமைவாத ஆளுங்கட்சியின் தலைவர் காசியின்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிர்ந்து கொள்வது குறித்த விடயத்திலேயே காசியின்ஸ்கி இவ்வாறு கூறியுள்ளார்.இதற்கு முன் அகதிகள் போலந்து நாட்டிற்கு நோய்களையும், கிருமிகளையும் கொண்டு வந்து விடுவர் என்ற அவர் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. அகதிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், சிலர் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். தற்போது இவர்கள் க்ரீஸ்சிலும், இத்தாலியிலும் தங்கியுள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் தலா 160,000 அகதி…

    • 0 replies
    • 299 views
  19. கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள் மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர். இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும்…

    • 0 replies
    • 299 views
  20. நாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா? முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளி) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி தமிழக அரசுடன் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து, அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது, தினமணியில் முதல்பக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது. பேச்சுவார்த்தை 8 மணி நேரம் வரை நீடித்த நிலையிலும், அரசுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்றைய திடீர் வேலை நிறுத்தத்தால், மாலையில் பணி முடிந்து வீடுதிரும்பிய பலரும் அவதிக்குள்ளாகியதாக அந்த செய்தி …

  21. Published By: SETHU 01 AUG, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர். 45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்ட…

  22. தரைமட்டமான தீவிரவாத முகாம்கள்: சிரியாவில் குண்டுமழை பொழிந்த கனடா [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 12:49.46 பி.ப GMT ] சிரியாவில் முதல் முறையாக கனடிய போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சை நடத்தியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா(America), பிரான்ஸ்(France),ஜேர்மனி(Germany), பிரித்தானியா(Britain) உ ள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் அவர்களின் அணிவகுப்புகளை குறிவைத்து இரண்டு கனடிய போர் விமானங்கள் முதன்முறையாக குண்டுவீச்சை நடத்தியுள்ளன. அதிநவீன 2–சி.எப்.…

    • 0 replies
    • 299 views
  23. அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு! அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் திகதி முதல் அமலு…

  24. கமல்ஹாஸனுக்கும் அவரது விஸ்வரூபத்துக்கும் இவ்வளவு பிரச்சினை வரக் காரணம், ஆளுங்கட்சி டிவிக்கு அந்தப் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்க மறுத்ததா அல்லது வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை புகழ்ந்து அவர் பேசியதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. "விஸ்வரூபம்" திரைப்படம் தமிழகத்தில் ஜன…

    • 0 replies
    • 299 views
  25. உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர் ரசாயன ஆயுதங்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.