Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டுபாயிலும் கொரோனா வைரஸ் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் கொரோனா வைரசினால் இதுவரை சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தாய்வான் மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்ச…

    • 0 replies
    • 288 views
  2. மலேசியாவில் நேற்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 40 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேஷியாவில் அகதிகளாக இருந்தவர்களே அந்த படகில் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான படகில் 44 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் 4 பேர் மட்டும் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது - http://www.thinakkathir.com/?p=51563#sthash.nJKm9Lfp.dpuf

  3. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, …

    • 0 replies
    • 288 views
  4. கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட…

  5. பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்து கொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபன்களுடனான மோதல்களின் போது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே, படைவீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தற்கொலையும் ஒரு பெருந்து…

  6. உலக உணவு தினம்: 69 கோடி பேர் பட்டினியில் வாழும் உலகில் நாம் எதிர்கொள்ளும் அபாயம் என்ன? சரோஜ் பதிராணா பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு உணவுப் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும் என்ற ஐ.நா எச்சரிக்கைக்கு நடுவே உலக உணவு தினம் (அக்டோபர் 16) கடைபிடிக்கப்படுகிறது. "எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற பிரச்னைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில், ப…

  7. மனிதர்கள் - யானைகள்: நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால் இருக்கும் துயர் மிகு கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற `அஸ்ஸாம் டீ`- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் - யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும். Image captionஅஸ்ஸாமில் உள்ள டீ தோட்டம் சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிர…

  8. நியுயோர்க்கில் கொரோனா வைரஸ் அதிவேகபுகையிரதத்தை விட வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ஆளுநர் அன்றூ குயுமோ மருந்துகள் மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நியுயோர்க் நிலங்கரி சுரங்கத்தில் சிக்குண்டுள்ள கனரி பறவை போல காணப்படுகின்றது,நியுயோர்க் வேகமாக பாதிக்கப்படுகின்றது நியுயோர்க்கில் தற்போது நடப்பது நாளை கலிபோர்னியா இலினொய்சில் நடக்கலாம்,எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட உச்சநிலையை விரைவில் அடைந்துவிட்டோம், அது நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் அனுப்புகின்ற உயிர்காக்கும் கருவிகள் போதுமானவையாகயில்லை எனவும் அவர் கு…

    • 1 reply
    • 288 views
  9. ஜேர்மனியில்... விமானிகள், வேலைநிறுத்தப் போராட்டம்: நேற்று 800 விமானங்களை இரத்து! விமானிகளின் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கை காரணமாக, ஜேர்மனியின் லுஃப்தான்சா எயார்லைன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 800 விமானங்களை இரத்து செய்யவுள்ளது. அத்துடன், அதன் இரண்டு பெரிய மையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து ஏறக்குறைய அனைத்து பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களையும் இரத்து செய்வதாக ஜேர்மன் கேரியர் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது. லுஃப்தான்சா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் வியாழன் தொடக்கத்தில் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநடப்பு செய்யப் போவதாகக் கூறியது. இந்த முடிவான…

  10. இதற்கென, காலராடோ மாகாணத்திலுள்ள பியூப்லோ ரசாயனக் கிடங்கில், தானியங்கி இயந்திரங்களைக் கொண்ட, முழுவதும் மூடப்பட்ட பிரத்யேக ரசாயனக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனக் கூடத்தில், ஒரே ஒரு "மஸ்டர்டு' குடுவை சோதனை முறையில் புதன்கிழமை அழிக்கப்பட்டது. அந்தக் குடுவையில் அடைக்கப்பட்டிருந்த மஸ்டர்டு ரசாயனப் பொருள் வெளியே எடுக்கப்பட்டு, அதனுடன் மாற்று ரசாயனப் பொருள் கலந்து செயலிழக்கச் செய்யப்பட்டது. எனினும், 2,600 டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அந்தக் கிடங்கில், புதன்கிழமை அழிக்கப்பட்டது சில கிராம்களே எனக் கூறப்படுகிறது. ஆயுதங்களை அழிப்பதற்கான இந்த ரசாயனக் கூடம், வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித…

  11. பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இ…

  12. அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார ந…

  13. ’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்! ’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 செப்டெம்பர் 2024, 11:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன. ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது. போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன. இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன. ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரே…

  15. கொரோனா வைரஸ் அச்ச சூழ்நிலையின் மத்தியில் மெல்பேர்ன் பேருந்து சாரதியொருவரை இனரீதியில் பயணியொருவர் அவமதித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பயணியொருவர் பஸ் சாரதியை சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு வைரசினை கொண்டுவந்தவர் என தெரிவித்து அவமதித்துள்ளார். அவர் என்னை கொரோனா என அழைத்தார்,அவர் என்னை சீனா என அழைத்தார்,நான் வைரசினை அவுஸ்திரேலியாவிற்குள் கொண்டுவந்தவன் என தெரிவித்தார் என பேருந்து சாரதி தெரிவித்துள்ளார். இதுமோசமான அருவருப்பான நடவடிக்கை என பேருந்து சாரதி குறிப்பிட்டுள்ளார். பேருந்து சாரதியின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ள விக்டோரியாவின் தலைமை நிர்வாகி டானியல் அன்றூஸ்  குறிப்பிட்ட பேருந்து சாரதியை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு…

    • 0 replies
    • 288 views
  16. இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?

  17. மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் : தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் - ஐ.நா.எச்சரிக்கை ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொ…

    • 2 replies
    • 288 views
  18. சர்வதேச சந்தைக்கு... கச்சா எண்ணை விநியோகம், நிறுத்தப்படும்: ரஷ்யா எச்சரிக்கை! தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிர்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷ்யா- பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் ஆலிபோவ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கான வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷ்யாவின் கச்சா எண…

  19. ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தை அமெரிக்க ராணுவ அலுவலகம் உறுதி செய்துள்ளார். கடற்கரை காவல்கடையினர் ஹெலிகாப்டரின் எரிந்த பாகத்தை மீட்டுள்ளனர். ஆனால், யாரையும் உயிருடன் காணவில்லை என்று கூறினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.விபத்திற்கான முழுக்காரணம்…

  20. விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள…

  21. கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த …

  22. துருக்கியின் மிகப் பெரிய பத்திரிகையான Zaman (ஜமான்), அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுவதாக, நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காவல்துறையினர் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்.காவல்துறையினர் Zaman பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்அந்த ஊடகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெள்ளிக்கிழமையைன்று பத்திரிகை அலுவலகத்தின் வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களைக் கலைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர், `தாம் ஊடக சுதந்திரத்திற்காக சண்டையிட போவதாக' எழுதப்பட்ட பதாகை ஒன…

  23. 2018ல் புழக்கத்திற்கு வர இருக்கும் புதிய தாள் நாணயங்களில் இயல்பு கடந்த கனடிய பெண்ணின் உருவகம் அமையும் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செவ்வாய்கிழமை அறிவித்தார். சர்வதேச பெண்கள் தின அர்ப்பணிப்பாக இன்று முத்திரை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். புதிய தாள் நாணயத்திற்கான போற்றுதலுக்குரிய ஒரு பெண்ணை தெரிந்தெடுக்கும் பொது ஆலோசனையை இன்று ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் நாட்டை கட்டி எழுப்பவதில் பெண்கள் ஒரு முக்கிய கருவிகளாவர். கிட்டத்தட்ட 150-வருடங்களாக வங்கி நோட்டில் கனடிய பெண் இடம்பெறவில்லை எனவும் கூறினார். பரிந்துரைக்கப்படும் பெண்கள்: கனடியராக பிறப்பால் அல்லது குடியுரிமை, கனடிய மக்களிற்கு பயன்படக்கூடிய தலைசிறந்த தலைமை…

  24. பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்க வேண்டும்: அமெரிக்க நீதிபதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் ஒன்று சேர்க்க வேண்டும் என ஒரு அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைக…

  25. பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்திற்கு பதிலளித்த அதிபர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறினார். இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.