உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
குஷ்பு பேசியும் அழியாத தமிழ்..!' சென்னை, டிச.9,2009 : மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, தமிழ் சொற்களை பிழைகளுடன் உச்சரித்து, பார்வையாளர்களை குரலெழுப்பச் செய்துவிட்டார். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார், முதலமைச்சர் கருணாநிதி. 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு, 'வள்ளுவர்' என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்'' என்றும் கூறினார். 'உளியின் ஓசை' என்பதற்கு 'ஒளியின் ஓசை' என்றார்.…
-
- 1 reply
- 796 views
-
-
மனித உரிமை நாள் : இன்று பத்தாம் நாள் மார்கழி 2009 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது சபையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பத்தாம் நாள் மனித உரிமை நாளாக பிரகண்டனப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிர…
-
- 0 replies
- 431 views
-
-
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு வருகிற பிப்ரவரி 6‐7ல் இடம்பெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். உலகத் தமிழர் மாநாடு குறித்து நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு சுய நிர்ணயம் கேட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் போராடியும் அந்த உரி்மை கிடைக்கவில்லை. இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஐரோப்பியா, அமெரிக்கா உள்பட ஐநா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இதுவரை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவிலலை. தாய் தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கர்நாடகாஇ மகாராஷ்டிரா செல்லும் தமிழர்கள் மிக எளிதாக தாக்கப்படுகின்றனர். மக்களின் வாழ்வுரி்மை பிரச்சனை எதுவும் தீ்ர்க்கப்படவில்லை. குறிப்பாக ஆந்திராவில் பாலாறு, கர்நாடகாவில் காவேறு,…
-
- 0 replies
- 760 views
-
-
செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது.எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் ரூ.68,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் 500 போன் அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று ஈராக்கில் ஒரு நிமிட இடைவெளியில் 3 கார் குண்டுகள் வெடிக்கப்பட்டு 103 பேர் கொல்லப்பட்டு 193 பேர் படுகாயமடைந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=7qFHUej4aaA&feature=player_embedded Iraq blasts kill at least 103 Last Updated: Tuesday, December 8, 2009 | 8:32 AM ET Comments24Recommend22CBC News Iraqi security forces and rescuers search for survivors at the site of a bomb attack near the new Finance Ministry building in Baghdad on Tuesday. (Khalid Mohammed/Associated Press)A co-ordinated series of bomb blasts on Tuesday left at least 103 people dead and more than 197 wounded in Baghdad. Three car bombs went off within minutes of each other, …
-
- 0 replies
- 456 views
-
-
. சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி . இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவர் அரசியலை விட்டு விலகப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், திமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009-2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் இடஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார். இதற்காக கருணாநிதிக்கு அருந்ததியர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில…
-
- 3 replies
- 1.1k views
-
-
தென்காசி, டிச. 4: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அத் திட்டம் நிறைவேறவில்லை. இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தபோது, சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளில் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் குறிப்பிடத்தக்கவர். 10-ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித் தார். பின்னர் திருவனந்தபுரத்தில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த போதே வனத்துறையில் வேலை கிடைத்ததால், பாதியில் படிப்பைவிட்டு புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, ஆங்கிலேயர்களை விரட்ட தர்மபரிபாலன சங்கம் செயல்பட்டு வந்தது. அதில் தன்னையும் இணைத்துகொண்…
-
- 4 replies
- 1.1k views
-
-
கோப்பன்ஹேகன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்வதற்காக 100 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் 15 000 மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://en.cop15.dk/greetings/send http://en.cop15.dk/about+cop15/contact முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 717 views
-
-
டெல்லி: கோவை உலகத் தமிழ் [^] செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி [^] தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜுன் திங்கள் இறுதியில்; 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. இன்றைய கடிதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அண்ணா 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் பேசியதை நினைவூட்ட விரும்புகிறேன். நாளைய தினத்திலிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்…
-
- 4 replies
- 1.5k views
-
-
புவிவெப்பமடைந்து வருவதால் கங்கை நதி தோன்றும் கங்கோத்ரியில் 1 1/2 கிலோமீட்டர் தூரத்துக்கு பனிக்கட்டி இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமி வெப்பமயமாதல் பிரச்சினை தற்போது உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று பூமியில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் புனித நதியும், மிகப்பெரிய முக்கிய நதியுமான கங்கைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கங்கை நதி பனிபடர்ந்த இமயமலையில் கங்கோத்ரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கு படிந்திருக்…
-
- 0 replies
- 697 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான எபூ படேலுக்கு லூயிஸ்வில்லி கிராவிமேயர் மத நல்லிணக்க விருது [^] கிடைத்துள்ளது. வருடந்தோறும் கிராவிமேயர் விருதுகளை லூயிஸ்வில்லி கிராவிமேயர் அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த விருதை நிறுவியர் சார்லஸ் கிராவிமேயர். இசை, அரசியல் [^] அறிவியல், மனோதத்துவம், கல்வி [^], மதம் ஆகிய பிரிவுகளில் ஐந்து பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான மத நல்லிணக்கத்திற்கான விருது 32 வயதாகும் எபூ படேலுக்கு வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசுத் தொகையும் கிடைக்கும். எபூ படேல் அமெரிக்காவின் சிகோகா நகரில் வசித்து வருகிறார். பல்மத இளைஞர் அமைப்பை நிறுவி அதன் செயல் இயக்குநராக இருக்கிறார் படேல். 2007ம் ஆண்டு இவர் …
-
- 0 replies
- 487 views
-
-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இன்று முதல் 3 நாட்களுக்கு பார்சல் பொருட்கள் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 'டிசம்பர் 6' பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் அனைத்து இரயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர், எலெக்ரானிக் ஸ்டெதஸ்கோப் கருவிகள் கொண்டு சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 5 வழிபாதை பாதுகாப்பு கருதி தற்போது ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட…
-
- 0 replies
- 614 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் மெட்வடேவ், பிரதமர் புடின் ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார். நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து ரஷ்யா புறப்படும் முன்பாக, ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்துள்ள பேட்டியில், “அண்டை நாடுகளின் உதவியால் தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்படுகிறது. மாபெரும் வல்லரசு நாடான ரஷ்யாவால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் கைவிடுமாறு செய்ய முடியும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவது முடிவுக்கு வந்தால், பாகிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படும்” என்றார். இந்தியாவைப் போல…
-
- 0 replies
- 528 views
-
-
சென்னை: சென்னை நகரில் உள்ள அனைத்து டீக் கடைகளிலும் ஒரே சீராக டீ விலை ரூ. 5, காபி ரூ. 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறதாம். காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பால், சர்க்கரை, டீத் தூள், காபி தூள் ஆகியவற்றின் விலை காரணமாக டீ, காபி ஆகியவற்றின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர். சென்னை நகரில் காபி, டீ ஆகியவற்றின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றாக உள்ளது. சிலர் விலையை உயர்த்தாமல் தொடர்ந்து பழைய விலையில் டீ, காபி போட்டுத் தருகின்றனர். இந்த நிலையில் தற்போது டீ, காபி ஆகியவற்றின் விலையை ஒரே சீராக நகர் முழுவதும் மாற்றியுள்ளனர். அதன்படி டீ விலை ரூ. 5 எனவும், காபி விலை ரூ. 6 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 15…
-
- 0 replies
- 991 views
-
-
அரக்கோணம் அருகே அனுமதியின்றி வைத்திருந்த 25 கிலோ வெடிபொருள், 18 ஜெலட்டின் குச்சிகள், ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரக்கோணம் அருகே அனுமதியின்றி வைத்திருந்த 25 கிலோ வெடிபொருள், 18 ஜெலட்டின் குச்சிகள், ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் பிள்ளையார்குப்பம் பகுதியில் சிலர் அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்திருப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. …
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கையில் தமிழினத்தை அடியோடு ஒழிப்பதற்கு அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக பாஜக, அஇஅதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறியதுடன், இலங்கை தமிழர்களின் இக்கட்டான நிலை குறித்து வேதனை தெரிவித்தன. இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசின் மீதான தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போருக்குப் பின் இந்திய எடுத்த நிலைப்பாட்டால், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டதாக அவர்கள் குறைகூறினர். இலங்கையின் வடக்குப்பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து அரசின் அறிக்கைக்குப்…
-
- 0 replies
- 508 views
-
-
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓட்டெடுக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். வருகிற 2011 ஆம் ஆண்டு முதல் திரும்பத் தொடங்கிவிடும் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிலாரியிடம், ஆப்கானிஸ்தானை கைகழுவிவிட்டு அமெரிக்கப் படைகள் ஓட்டமெடுக்கிறதா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிலாரி, "நிச்சயமாக இல்லை, இதனை நான் மிகவும் அழுத்தமாக கூற விரும்புகிறேன்" என்றார். "ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த எங்களது ஆய்வு மிகச்சரியானதே என நிரூபிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 461 views
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 53 அகதிகளுடன் வந்துகொண்டிருந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய சுங்க கப்பல் மீட்டுள்ளதா ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஷ்மோர் தீவுகளுக்கு அருகில் இந்த படகு நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டதாகவும் அகதிகளுடன் நான்கு படகோட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படவுள்ளனர் என்றும் குடிவரவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அகதிகள் தடுப்புமுகாமில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து தெரிவிக்க்கபட்டுவருவதும் அங்கு அண்மையில் சிறிலங்கா - ஆப்கான் அகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் 37 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. மூலம்: http://www.tamilseythi.com/world/1…
-
- 0 replies
- 432 views
-
-
வீரகேசரி இணையம் 12/4/2009 6:11:01 PM - புவி வெப்பமாதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் எதிர்காலத்தில் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்காக நேபாள நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற்றது. உலகத்தில் மிக உயரமான இடத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்தக் கூட்டம் பெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒக்சிஜன் நிரப்பப்பட்ட வாயுதாங்கிகளுடன் அங்கு சென்றிருந்தனர். மிகவும் குளிரான காலநிலையில் (17192 அடி உயரத்தில்) பனிநிறைந்த சிகரத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் சுவாரஸ்ய நிகழ்வாக உலகத்தவர்களால் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் பிரதமர், அவருக்கு அடுத்த அந்தஸ்துப் பதவி வகிப்பவர் ஆகிய இருவருடன் 20 அமைச்சர்கள் இதில் கலந்த…
-
- 0 replies
- 378 views
-
-
ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணைச் சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். ஒசாமா பின் லேதனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கோர்டன் பிறவுண் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோதே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்தார். தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மூலம்: http://www.inneram.com/200912054909/2009-12-05-05-26-37
-
- 0 replies
- 351 views
-
-
வாஷிங்டன், டிச.5:அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் அடுத்த வாரம் இலங்கை செல்ல உள்ளார்.இந்த பயணத்தின் போது தமிழர் பிரச்சனை குறித்து அவர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் இம்மாதம் 8, 9 தேதிகளில் இலங்கையில் பயணம் செய்ய உள்ளார். . அங்கு அவர் இலங்கை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார். போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனை இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும் என்று தெரிகிறது. அத்துடன் இரு தரப்பு உறவுகள் உள்ளிட…
-
- 0 replies
- 375 views
-
-
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சீக்கியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். அசுதோஷ் மகராஜ் தலைமையில் பேரணி நடத்துவதற்கு சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருபிரிவினர் இடையே மோதல், வன்முறை ஏற்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசார் மீதும் சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். சீக்கியர்களின் தாக்குதலில் பாட்டியாலா துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுக்தேவ் சிங் உட்பட 3 போலீசாரும், கலவரக…
-
- 0 replies
- 372 views
-
-
டெல்லி: சீனா [^]வையொட்டியுள்ள வட கிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் சீனா ஊடுறுவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணுவ கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை தங்களது பகுதியிலிருந்தபடி அறிந்து கொள்ள உதவும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள் மூலம் இந்த உளவு வேலையை செய்துள்ளது சீனா என்றும் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சுக்னா என்ற இடத்தில் வடகிழக்குப் பிராந்திய பாதுகாப்பை மேற்கொள்ளும் ராணுவத்தின் 33வது படைப் பிரிவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள்தான் சீனா ஊடுறுவியுள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை சீனாவில் இர…
-
- 0 replies
- 534 views
-
-
சத்தியன், ஐரோப்பா 05/12/2009, 16:15 ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் வெடிவிபத்து! 102 பேர் பலி! 135 பேர் காயம்! ரஷ்யாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 135 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரின் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் 8வது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட வெடி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வெடி விபத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 88 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பதிவு
-
- 0 replies
- 396 views
-
-
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக ஐ.நா அறிவித்துள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகிற 2010 ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா நாள் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படும். நன்றி: தேடிப்பார் உலக அரசியல்வாதிகளே, நீங்கள் கூறும் தீவிரவாதிகள் உண்மையில் சமாதான விரும்பிகள…
-
- 0 replies
- 1.1k views
-