உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம். * காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர். * இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.
-
- 0 replies
- 272 views
-
-
நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம் பின்லாந்து (94%) டென்மார்க் (91) நோர்வே (87) சுவிட்சர்லாந்து (87) சுவீடன் (84) லக்ஸம்பேர்க் (81) பிரான்ஸ் (81) ஆஸ்திரியா (81) எஸ்டோனியா (80) பிரித்தானியா (79) …
-
- 0 replies
- 272 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது. * கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம். * மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.
-
- 0 replies
- 272 views
-
-
மரியண்ணா ஸ்ப்ரிங் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 2020 இல் எடுக்கப்பட்ட யுக்ரேனிய குறும்படம் ஒன்றின் காட்சி, போர்சூழலில் எடுக்கப்பட்டதாக பரப்பப்பட்டது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 19 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பான பொய்ச்செய்திகளும் பலவிதமாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற பொய்ச்செய்திகளைத் தவிர்ப்பது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போர் தொடங்கியதிலிருந்து, போலியான செய்திகளும், தவறான தகவல்களுடன் கூடிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ஏராளமாக பரவி நம் செல்பேசிக…
-
- 0 replies
- 272 views
-
-
இராக் கட்டுப்பாட்டுக்குள் குர்துக்களின் பிராந்தியம் மீண்டும் வர காரணம் என்ன?, பாகிஸ்தானில் வாழும் மூன்று தலைமுறை பெங்காலிகளுக்கு குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 272 views
-
-
உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளாக அமேசான் காடுகள் இருக்கின்றன அமேசான் மழைக்காடுகள் வழியாக செல்லும் சர்ச்சைக்குரிய சீன ரயில்வே திட்டம் குறித்து பரிசீலிக்க பெரு நாடு ஒத்துக் கொண்டுள்ளது. சீனப் பிரதமரின் பெரு நாட்டுக்கான விஜயத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத் துவக்கத்தில் இத்திட்டத்திற்கான பிரேசிலின் ஒப்புதலை சீனப் பிரதமர் லீ கேகியாங் பெற்றுள்ளார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிலிருந்து பெருவிய துறைமுகத்துக்கு சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வேகமாகவும், குறைந்த செலவிலும் கப்பல் மூலம் எடுத்த…
-
- 0 replies
- 272 views
-
-
12 JUL, 2024 | 12:28 PM உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது. ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்த…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TOMAS TERMOTE படக்குறிப்பு, முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் 27 மார்ச் 2024, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது. 1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது. அதோடு சேர்த்து …
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ச…
-
- 0 replies
- 272 views
-
-
Published By: Rajeeban 07 Mar, 2025 | 04:04 PM அணுவாயுதங்களை பயன்படுத்தி தனது ஐரோப்பிய சகாக்களை பாதுகாப்பது குறித்து ஆராயவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஸ்ய போரில் அமெரிக்கா ஐரோப்பாவின் பக்கம் இல்லாத நிலையை எதிர்கொள்வதற்கு ஐரோப்பா தயாராகவேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் எமது நட்புநாடுகளை பாதுகாப்பது குறித்த மூலோபாய விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி எங்கள் அணுசக்தி பாதுகாப்பு எங்களை பாதுகாக்கின்றது அது முழுமையான இறையாண்மை என தெரிவித்துள்ளார்.எங்கள் அயலவர்களை விட பிரான்சின் அணுவாயுதங்களே எங்களை பாதுகாக்கின்றன என அ…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இத…
-
- 1 reply
- 272 views
-
-
ஹெய்டியில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 60 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க முயன்ற போது வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேலும் இந்த வெடி…
-
- 0 replies
- 272 views
-
-
இந்தோனேசியாவில் 300 ஆண்டுகள் பழமையான கடல்சார் அருங்காட்சியகம் தீக்கிரை : இந்தோனேசியாவில்; 17-ம் நூற்றாண்டில் டச்சு காலணித்து ஆட்சிக் காலத்தின்போது கட்டப்பட்ட பழமையான கடல்சார் அருங்காட்சியகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. 17 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியாவில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி விலையுயர்ந்த தேயிலை, கோப்பிவிதை மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைப்பதற்காக ஜகர்த்தா நகரில் மிகப்பெரிய கிடங்கு ஒன்றை 17-ம் நூற்றாண்டில் அமைத்திருந்தது. டச்சு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1945-ம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பின்னர் இந்த கட்டிடம் ; கடல்சார் கண்காட்சி கூடமாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டு இங்கு ப…
-
- 0 replies
- 272 views
-
-
சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த செய்திகளே அனைத்து செய்தித்தாள்களின் தலையங்கத்தையும் ஆக்கிரமித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில…
-
- 0 replies
- 272 views
-
-
பட மூலாதாரம்,X.COM/DRDO_INDIA/STATUS படக்குறிப்பு,இந்தியா லேசரால் இயக்கப்படும் ஆயுதத்தை சோதித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகடா பதவி, பிபிசி நிருபர் 15 ஏப்ரல் 2025, 08:16 GMT பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்று சந்தேகிக்கப்படும் டிரோன்கள் மற்றும் எதிரி நாட்டு ஏவுகணைகளை அழிக்க லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஏப்ரல் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் நடத்தியது. எதிர்காலத்தின் "மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்"(ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்பம்) என்று அழைக்கப்படும் ல…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில் ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர கட்டிடம் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதியதால் தீப்பிடித்து எரிந்தது. அப்போது கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. - REUTERS அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி…
-
- 0 replies
- 272 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கல…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ் [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 09:00.09 மு.ப GMT ] பிரான்ஸ் குடிமகனிற்கு மரண தண்டனையை நிறைவேற்றினால், இந்தோனேஷியா கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் குடிமகனான Serge Atlaoui என்பவரை போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி கடந்த 2008ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு கைது செய்து மரண தண்டனை வழங்கியது. சமீபத்தில் பிரான்ஸ் குடிமகன் உள்பட 10 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற இந்தோனேஷிய அரசு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து, தனது நாட்டு குடிமகனை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பிரான…
-
- 0 replies
- 272 views
-
-
பீகார் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தின் பாகல்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல் தடவையாக சோனியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை பிரதமர் ஒரு வாடிக்கையாகவே மாற்றிக்கொண்டார். மோடி நாட்டில் இருப்பதை விட விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பதுதான் அதிகம். தேர்தலுக்காக மட்டுமே அவர் பீகாருக்கு லட்சக்கணக்கான மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி பீகார் மக்களை திசை திருப்பி வருகிறார். பீகாருக்கு அவர் அறிவித்திருக்கும் சிறப்பு நிதிஉதவி நடைமுறையில் சாத்தியமில்லாதது. பழைய திட்டங்களை புதியவைகளாக அறிவிப்பதில் மோடி கெட்டிக்கார…
-
- 0 replies
- 272 views
-
-
காதலியை சிறையில் திருமணம் செய்தார் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு இலண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார். 2011 ஆம் ஆண்டு இலண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ், 37 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ்…
-
- 1 reply
- 272 views
-
-
பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு வித்தியாசமாக தீர்வை வழங்கிய யுகாண்டா மக்கள், ரமலானுக்காக தினமும் 22 மணி நேரம் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 272 views
-
-
ஆப்கான் பெண்கள் வெளியில் செல்லத்தடை : தலிபான்கள் புதிய உத்தரவு ஆண் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 1990களில் பெண்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். தற்போது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பாடசாலைகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் பெண் நிருபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், முழு உடலை மறைக்கும் …
-
- 0 replies
- 272 views
-
-
வட கொரிய அமைச்சர் ஸ்வீடன் பயணம்: அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமா? பகிர்க வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, வட கொரி…
-
- 1 reply
- 272 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை நிர்வாகிகள் அறிவிப்பு!ஆனால் அதிபர் ஷீ ஜின் பிங்கின் அடுத்த வாரிசு எங்கே? அமெரிக்காவில் இன்றும் நீடிக்கும் குழந்தை திருமணங்கள்! ஆயிரக்கணக்கான சிறுமிகள் வயதான ஆண்களுக்கு கட்டாயமாக கட்டிவைக்கப்படும் அவலம்!! பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு!! மற்றும் அரசரின் விமரிசையான இறுதிக்கிரியையைக் காணக்குவியும் தாய்லாந்து மக்கள்! ஓராண்டாக செய்யப்பட்ட பிரம்மாண்ட ஏற்பாடுகள் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 272 views
-
-
வெனிசுவேலாவின் அதிகாரபூர்வமற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பலி-பலர் காயம், அமெரிக்கா சென்றடைந்த ஆப்கன் மாணவிகளின் ரோபோடிக் கனவு! ஆப்கன் பெண்களுக்கு புதிய விடியலைத்தருமா? மற்றும் கால்நடைகள் மீதேன் வாயு வெளியேற்றுவதை குறைக்க கென்யாவில் புதிய முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 272 views
-