உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
நியூயார்க்: பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படும் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்கேல் ஜாக்சன், சில ஆண்டுகளாக மூச்சுக்குழாய் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை மேற்கொண்டும் பலன் இல்லை. இந்த நிலையி்ல தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றி லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் முன்னாள் புலனாய்வு நிருபர் இயான் ஹால்ப்ரீன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில…
-
- 6 replies
- 2.1k views
-
-
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பை வீசியதாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவ்வாறு அவர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பாக்தாத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூ வீசிய சம்பவமே இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் சென்னை போலீஸாரை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அமெரிக்க தூதரகம் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் வா…
-
- 0 replies
- 916 views
-
-
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்ற வாக்குப்பதிவில் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வாக்களிப்பதால் பிரிவினைவாத அமைப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் வாக்குப்பதிவில் முன்னேற்றம் காணப்படுவதால் பிரிவினைவாத அமைப்புகளுக்கு தொடர் பின்னடைவு வெட்டவெளிச்சமாகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவுகளில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். குறிப…
-
- 0 replies
- 825 views
-
-
ஈராக்கிற்கு வந்திருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் முன்டஸிர் அல் சைதிக்கு, மெர்சிடிர் காரை பரிசளிக்க உள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஹ்ரைன் தொழிலதிபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கல்ஃப் டெய்லி என்ற நாளிதழுக்கு தொழிலதிபர் குரேஷ் கான் புனீரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லிமோஸின் ரக மெர்சிடிர் காரை சைதிக்கு வழங்க விரும்புவதாகவும், அதை பாக்தாத் வரை தானே ஓட்டிச் சென்று அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். சைதியை ஆதரிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பாக இதனைத் கருதுவதாகவும், இதன் மூலம் நீங்கள் (சைதி) தனியாக இல்லை என்பதை அவருக்கு உணர்த்த விரும்புவதாகவும் புனீரி கூறியுள்ளார். …
-
- 1 reply
- 1.8k views
-
-
பிறந்த குழந்தையின் மூளையில் கால் அமெரிக்க மருத்துவர்கள் அதிர்ச்சி! வீரகேசரி நாளேடு 12/18/2008 8:08:27 PM - பிறந்து மூன்றே நாளான ஆண் குழந்தையொன்றின் மூளையில் சிறிய கால் ஒன்று வளர்ச்சி அடைந்திருப்பதைக் கண்டு அமெரிக்க கொலோராடோ ஸ்பிரிங்ஸ் சிறுவர் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு மூளையில் கால் ஒன்று வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்படுவது, உலக மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது தொடர்பில் மேற்படி மருத்துவமனையின் மருத்துவரும் மூளை சத்திரசிகிச்சை நிபுணருமான போல் கிராப் புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விபரிக்கையில், 3 நாள் வயதான சாம் எஸ்குயிபெல் என்ற குழந்தையின் மூளையில் வளர்ந்துள்ள காலொன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குழந்…
-
- 1 reply
- 2.1k views
-
-
லண்டன்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும், நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. மீதமாகும் சாப்பாட்டைக் கூட வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என சமையல்காரர்களுக்கு ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளாராம். உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம். கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர…
-
- 1 reply
- 1.6k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியில், எலி விழுந்து கிடந்த சோடாவைக் குடித்த 30 வயதுப் பெண் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதுச்சேரி, ஒட்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. 30 வயதாகும் இவர், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, செவன் அப் பாட்டிலில் அடைக்கப்பட்ட சோடாவை கடையில் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது அதில் எலி ஒன்று செத்துக் கிடந்துள்ளது. இதை சாந்தி கவனிக்காமல் குடித்துள்ளார். குடித்து முடித்த பின்னர்தான் எலி கிடந்ததைப் பார்த்தார் சாந்தி. இதையடுத்து வாந்தி எடுத்தபடி மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அவரை முதலியார்ப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட…
-
- 0 replies
- 935 views
-
-
மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் - 6, இறுதிப் பகுதி ) ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான். வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்தி…
-
- 0 replies
- 811 views
-
-
ஜோர்ஜ் புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் பொது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப்பொருளாகக் கொண்டு இணைத்திள விiளாயட்டுக்கள் பல உருவாக்கபட்டுள்ளன. உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் விளையாட்டு ஒன்று http://play.sockandawe.com என்ற இணையதள முகவரியில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இதில் 1.4 மில்லியன் பேர் புஷ்ஷை சரியாக இலக்கு வைத்து காலணியால் அடித்ததாக மேற்படி இணையதளம் தெரிவிக்கின்றது. நீங்களும் உலக பயங்கரவாதியை ஒரு முறை காலணியால் அடிக்க முயற்சி செய்து பாருங்கள். ஜானா
-
- 0 replies
- 668 views
-
-
ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் "மனதை வாசித்தல் தொழில்நுட்பம்' உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் த…
-
- 24 replies
- 7.2k views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, அவர்களின் நிலைகள் மீது ஆப்ரிக்க கடல்பகுதியில் உள்ள நாடுகள் தரை, வான்வழித் தாக்குதல்கள் நடத்தலாம் என ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் அமைதிப் படையை அனுப்பும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளித்த நிலையில், இந்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ளது. ஆப்ரிக்காவின் பெரும்பாலான தெற்குப் பகுதி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக ஐ.நா. அங்கீகரித்த அரசுகள் அப்பகுதியில் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. கடந்த சில மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் சரக்குக் கப்பல்களை கடத்தி…
-
- 0 replies
- 479 views
-
-
ஈராக் நாட்டில் உள்ள அனைத்து பிரித்தானிய இராணுவத்தினரும் வருகின்ற வருடம் ஜூன் மாதத்திற்கு இடையில், ஈராக் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என பிரித்தானிய அதிபர் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டிற்கு சென்று, தனது நாட்டு இராணுவத்தினரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/world/gordon-br...2008-12-17.html செய்தி:குயிலி
-
- 0 replies
- 486 views
-
-
கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள். ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும் தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும் வலிமையானது இந்தத்தாக்குதல். வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை. மாவீரன் ஸய்தி ! முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான். அமெரிக்க வல்லரசின் இராணுவம், அதன் உளவுத்துறைகள், அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்.. இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம். நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து வி…
-
- 9 replies
- 4.2k views
-
-
சீனாவைச் சேர்ந்தவர் ஜாங். இவர் கடந்த ஆண்டு ஒரு நாய்க்குட்டியை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார். பொமரெனியன் இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி என்று நினைத்துத்தான் அவர் வாங்கினார். ஆனால் அதை வளர்ப்பது கடினமாக இருந்தது. அடிக்கடி அவரை கடித்து வைத்தது. அதோடு அதன் நடத்தை அசாதாரணமானதாக இருந்தது. வழக்கமான நாய்க்குட்டி போல அது நடந்து கொள்ளவில்லை. அது குரைக்கவில்லை. அதற்கு பதிலாக அது உறுமிக்கொண்டே இருந்தது. அதன் வால் நீளமாக வளர்ந்து கொண்டே இருந்தது. கடந்த கோடைக்காலத்தில் அதனிடம் இருந்து கெட்டவாசம் வீசியது. அந்த வாசனையை நீக்குவதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பாட்டினாலும், அந்த கெட்ட வாசனை போகவே இல்லை. இதை தொடர்ந்து அந்த நாயை அவர் டாக்டரிடம் கொண்டு போய்க்காட்டினார். அப…
-
- 0 replies
- 962 views
-
-
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தபோது அவர் மீது ஒரு டெலிவிஷன் நிருபர் தனது `ஷூ'வை கழற்றி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷூ வீசிய அந்த நிருபர் முந்தாசர் பிரபலம் ஆகி விட்டார். அவர் செய்தது சரிதான் என்று அமெரிக்க ஆதரவு நாடுகளில் பொதுமக்கள் கூறி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரை விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடக்கிறது. ஆளுக்கு ஒரு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு பேரணியாக செல்கிறார்கள். ஆங்காங்கே தூணில் `ஷூ'வை தொங்க விடுகிறார் கள். அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று அந்த டெலிவிஷன் நிறுவனமும் அறிவித்து விட்டது. சவூதி அரேபியாவை சேர்ந்த ஒரு கோடீஸ்வரர…
-
- 0 replies
- 897 views
-
-
மும்பையில் கடந்த 26-ந் தேதி நடந்த அந்த பயங்கர சம்பவம் உலகம் முழுக்க புயலடித்த தீ போல் பரவியபடி இருக்கிறது. ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக உலக நாடுகள் உணர்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்தே தீர வேண்டும் என எல்லா நாடுகளுமே ஒருமித்த கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்க போகிறதோ? என இந்தியா-பாக் இரு நாட்டு எல்லை பகுதிகளிலும் `திகில்' உறைந்து போய் கிடக்கிறது. உலகம் அழியும் வரை என்னவெல்லாம் நடக்கும்? என்பதை 500 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போயிருக்கிறார் ஒருவர். பெயர்: நாஸ்டர் டாமஸ். ஊர்: பிரான்சில் உள்ள புனித ரெமிடி. பிறப்பு: 1503. இறப்பு: 1566. நாஸ்டர் டாமஸ் உலக மறிந்த மகா ஞானி. இவர் கணித்து சொன்ன எந்த விஷயமும் தப…
-
- 9 replies
- 7k views
-
-
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன். முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சிய…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஈராக் ஊடகவியாளார் நேற்று அமெரிக்க அதிபர் புஷ் மீது தனது பாதணியை களற்றி எறிந்தார்.அதன் பின்னர் அவர் ஈராக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புஷ் மீது தாக்குதல் நடத்திய ஊடகவியாளரின் பெயர் Muntadhar al-Zaidi என தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திய நபர் புஷ்சினை தீய வார்த்தைகளால் பேசினார். ஈராக் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர் ஆவேசமாக பேசினார். ஈராக்,பாக்தாத்தில் தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை விடுவிக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை ஈராக் மக்கள் புகழ்ந்து பேசி வருவதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்…
-
- 4 replies
- 1.9k views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் புஷ் பாக்தாத்தை சென்றடைந்தார்.அங்கு ஈராக் அதிபருடன் அவர் ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். புஷ் மீது தனது பாதணியை தூக்கி எறிந்த ஊடகவியாளர் " நாய் நாய்" என பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பாதணியால் எறிந்த ஊடகவியாளர்! http://www.tamilseythi.com/world/Bush-2008-12-14.html -குயிலி
-
- 27 replies
- 6.2k views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன. காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன. இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன. எந்த சவாலையும் சந்திக…
-
- 0 replies
- 1k views
-
-
உலக அழகியாய் ரஷிய பெண் : இந்தியாவுக்கு இரண்டாவது இடம் on 14-12-2008 03:47 ரஷியாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா 2008-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த
-
- 1 reply
- 1.7k views
-
-
சார்கோஸியின் கருத்து தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் [13 - December - 2008] ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் தெஹ்ரானிலுள்ள பிரான்ஸ் தூதுவரை அழைத்து ஈரான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை நீக்குவேன் எனக் கூறிய ஒருவருடன் கை குலுக்கமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி இவ்வார முற்பகுதியில் தெரிவித்திருந்தார். இதனைத் தெரிந்து ஈரானுக்கான பிரான்ஸ் தூதுவர் பேர்னாட் பொலெட்டியை அழைத்து ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவ்வாறான கருத்துகள் மீண்டும் வெளியிடப்பட்டால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்படுமென ஈரான் தெரிவித்துள்ளதாக பொலெட்டி தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 600 views
-
-
மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை சுட்டுக் கொன்ற போலீஸ் சனிக்கிழமை, டிசம்பர் 13, 2008, 12:12 இலவச நியூஸ் லெட்டர் பெற ஹைதாபாத்: இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர். இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையி…
-
- 10 replies
- 2.1k views
-
-
நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்? 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார். ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். 1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோ…
-
- 9 replies
- 1.9k views
-
-
கருணைக்கொலை (ஒளி வடிவில்) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவர்.
-
- 0 replies
- 1.3k views
-