Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய் வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே களிப்போடங்கே தேடாமுகமாக வாழ்வைத் தொலைத்தவர்கள் மதில்மேலொட்டுகின்ற சுவரொட்டி மருந்துக்கும் தெரியாது விதிநொந்து போகாமல் விழுதுகள் ஆனவர்கள் உதிக்கின்ற தமிழீழ உயர்வுக்காய் உழைத்தவர்கள் விதிக்கின்ற கட்டளையை விரும்பி யேற்றவர்கள் மண்ணின் விடிவுதன்னை மகிழ்வாய் தேடியவர் எண்ணத்தை மாற்றார்க்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டால் கண்மணிகள் கரும்புலிகள் கூற்றுவனை வலிந்தழைத்து மின்னலென வெடிமுழங்க மலர்சாய்ந்து போனவர்கள் கல்லறைகள் தோன்றாது கழிவிரக்க அஞ்சலியால் இல்லாத உடலுக்கு கண்ணீரைத் தானழைத்து வெந்து உடல்கருகும் வேங்கைகள் ஆனவர்…

  2. சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிதைப்போம்_அவன்... சிரசுக்கு வைப்போம் ஆப்பு சிலேடையாய் இணையத்தில் மட்டும்... சிங்கம் போல சிலிர்ப்போம் சிந்திய ரத்தம் காயும்முன்னே... சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம் நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்..... நம் உறவுகள் படும் துன்பத்திலும் நம்மில் சிலர் செய்யும் செயலை.. நான் எப்படிச் சொல்ல.........? நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்... நாளைக்கே ஆளைக்காட்டுவனாம். இருபதாயிரம் கொடுத்தால்... இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம் ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்... காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால் சாப்பாடு கொடுக்கலாமாம்.... விடுவோமா நாம்...? ஆடடிச்சு குழம்பு வச்சு... பூநகரி மொட்டைக்க…

    • 11 replies
    • 1.6k views
  3. “விடுதலை” செய்யுங்கள் புல்லோடும் புயலோடும் கல்லோடும் கடலோடும் பேச முடிந்த கவிஞர்களே! என்ன திடீர் மௌனம் உங்களுக்குள்ளே? புயலுக்கு முந்தியதா? பிந்தியதா? என உங்கள் மௌனங்களுக்கு உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா? நல்ல கதை. புயல்களை புதிது புதிதாய் பிறப்பிப்பதே நீங்கள்தானே. நீங்களே தூங்கினால் நாளைய பொழுதுகளின் நம்பிக்கையை யார் கொடுப்பது? நீண்ட இரவுகளின் இராச்சியத்திற்கு உங்கள் இமைகளை அனுமதிக்காதீர் கசியும் உங்கள் கண்களைத் துடையுங்கள் கடலலை மோதும் ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள் முள்ளிவாய்க்காலில் சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை சாட்சியுடன் எழுதுங்கள் காற்றில் தவழும் அத்தனை அலைகளுடனும் உரையா…

  4. யாழ்ப்பாண கிழவனின் புலம்பல் கவிதை - இளங்கவி ராஜபக்க்ஷ மாத்தையா அடிசிட்டாராம் புடிச்சிட்டாராம் புலிகளையே மடக்கிட்டாராம்;என்று வெடியெல்லாம் வெடித்து அங்கே தமிழனை வீதியிலே போட்டிட்டாங்கள்.... வன்னி தமிழரெல்லாம் வாழ்வு இழந்து நிற்கையிலே அவசரமாய் தேர்தல் வைக்க அந்தக் கூட்டம் அலையுறாங்கள் அதுக்காய் வால்பிடிச்சு அங்கே இடம்பிடிக்க கறிக்கடை காகங்களாய் கண்டதெல்லாம் அலையுதுகள்.... வட்டுக்கோட்டை தீர்மானத்தில் ஈழமென்று தீர்வை வைக்க தமிழர்கள் எதிர்கட்சியாகி; எங்கள் ஈழத்தீர்வை சொல்லியிருந்தோம்... பழைய குருடி கதவை திறடி;என்று எங்கள் பழையவர்கள் மறுபடியும் பதவிக்கு ஆசைப்பட...... தமிழனை காக்கவென்று தரணியிலே அவன் உதிச்சான்.... …

  5. ஈழம் என்பது தமிழ் மக்களின் கனவாம் சிங்களம் சொல்கிறது ஆமாம் ஈழம் என்பது எங்கள் கனவுதான் உங்களால் எங்கள் உறக்கத்தைத்தான் கலைக்க முடியும் எங்களை உறங்க வைக்காத ஈழக்கனவை யாராலும் கலைக்க முடியாது -யாழ்_அகத்தியன்

  6. அந்த இறுதி நிமிடங்கள்..... கவிதை - இளங்கவி.... ஆயிரம் சூரியன்கள் எங்கள் இதயத்தை எரித்துவிட..... அந்தாட்டிக்கா பனிமலைகள் எங்கள் கண்களில் உருகிவர..... அண்டசராசரமும் எங்கள் உயிரினை பிடுங்கிட.... ஆழிப்பேரலையில் எங்கள் வாழ்வெல்லாம் மூழ்கிவிட...... அமைதியானது எங்கள் இறுதி நிமிடங்கள்...... அழிக்கப் பட்டது எங்கள் எங்கள் உயிர்களின் சுவடுகள்.... நமை காத்திருந்த வேங்கையெல்லாம் வேட்டுப்பட்டு செத்து விழ.... கடல்தாண்டி அக்கரையில் நாற்காலிக்கு போட்டி எழ.... புலம்பெயர் தேசத்திலே நாங்கள் பிணம்போல நின்றிருக்க..... பொய்யான செய்திகளால் எங்கள் காதுகள் நிரம்பிவிட...... புலிகள் முடிந்தார்களாம்.... தமிழர் இனி அடிமைக…

  7. அம்மா முகம் தெரியாது அகரவரியும் தெரியாது ஆண்டவனும் கைவிட்ட அநாதைகளாய் தமிழர் நாம் அகதிமுகாம்களிலே வாடுகிறோம்.. குளிப்பதற்குக் கூட கும்பலாய் தான் போகவேணும் குடிதண்ணீர் பெறுவதற்கும் குழந்தை முதல் குமரி வரை குத்துக்கல்லாய் நிக்கவேணும் கட்டிக்கொள்ள மாற்றுச்சேலையில்லை காலுக்கொரு செருப்புமில்லை கழிவறைக்குப் போவதற்கும் காவலுக்குச் சிங்கள நாய்கள் ரண்டு கன்னியரின் கற்பு எல்லாம் காடையரால் சூறையாட காட்டிக்கொடுக்கும் நாய்களும் கண்டபடி குதறிவிட கண்ணிரண்டால் பார்த்தும் கூட காதிரண்டால் கேட்டும் கூட கன்னியவள் கற்பை காப்பாற்ற முடியவில்லை எம்மால் நாலுசுவருக்குள் நடப்பதெல்லாம் நடுவெளியில் நடக்குதைய்யா தட்டிக்கேட்க யாருமில்லை …

  8. பனி படர்ந்த வயல்களும் பசுமாட்டுத் தொழுவமும் பனம்பழம் பொறுக்கிய பனங்கூடலும் பசிமறந்து பட்டாம் பூச்சியாய் திரிந்த பள்ளிக்கூடக் காலமும்_இன்று பகலின்றி இரவின்றி பாதகனின் கொடுஞ்சிறையில் பசி போக்க வழியின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறோம் அநாதைகளாய்... குண்டுமழை நடுவினிலும் குருதிமழை நடுவினிலும்_நின்று வெஞ்சமராடிய வேங்கைகளை வஞ்சகத்தால் கொன்றுவிட்டு நெஞ்சுரத்தோடு பேசுகிறான் வடக்கின் வசந்தமென்று..... பி.கு_ எனக்கு கவிதை என்ன என்பதே தெரியாது. இளங்கவி அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அவருடன் கேட்கும் போது அவர்தான் கவிதை பற்றி சொல்லி எழுத ஊக்கம் தந்தார். எனது முதல் கவிதை இளங்கவி அண்ணாக்கே.

    • 13 replies
    • 1.9k views
  9. கூடாரத்திலும் மலர்கின்ற மலர்கள் இளங்கவி - கவிதை வதைமுகாம் கூடாரங்களில் அடைபட்டுக்கிடக்கும் குடும்பத்தின் குரலொன்றாய் இந்தக் கவிதை அந்த இருண்ட இரவின் இருளடைந்த கூடாரத்தில்.... சிறிதாக முனகிடும் சிறுமியின் குரலொன்று.... ''அம்மா வியர்க்கிறது வெளியில் நிற்போம் வா....'' சும்மா கிடவடி சிங்காரி சிலிர்த்துக்கிட்டு போறாவாம் சிங்களவன் காத்திருக்கான் உன்னை தூக்கிகிட்டே போவானாம்..... நான் சின்னப்பொண்ணு தானே எனக்கேது பயமம்மா.... உள்ளே கிடப்பதனால் என் சட்டை நனையுதம்மா... அடியேய்.. சொல்லுக் கேள் உன் சட்டை வியர்வைக்காய் சட்டென்று நீ வெளியே போனால்..... சிறு பெட்டையென்றும் பார்க்காமல் பிச்சிடுவான் ரொட்டியை போல்.... …

  10. அடங்காமல் பாய்ந்து நின்ற ஆறடிப் புலியடா...! இளங்கவி - கவிதை பூக்களும் பூக்காத கந்தக பூமியாய்.... பிணங்களின் குவியலில் நிரம்பிட்ட பூமியாய்..... கரும்புலி வேட்டைகள் பல நடத்திட்ட பூமியாய்.... பாய்ந்த இரத்தத்தின் ஈரம் காயாத பூமியாய்..... நாம் வாழ்ந்த பூமியின்று நடுத்தெருவில் தத்தழிக்க நாய்களும் நரிகளும் நக்குத் தீனிக்கு அலைகிறது..... புத்தரின் சரித்திரம் புதைந்து கிடக்குதாம்..... அதை புனரமைத்துக் கட்டிவிட புத்த பிக்குகள் அலையுதாம்.... போய்விடுங்கள் இங்கிருந்து எங்கள் பிணங்கள் தான் கிடக்கிறது..... நீர் விதைத்துவிட்ட விதைகளின்று முளைப்பதற்காய் தவிக்கிறது..... அநியாயத்தின் வெற்றி அதிக நாள் நிலைக்காது…

  11. நீயும் நானும் ஒன்றுதான் அங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணுக்குள் பிணம்களாய் இங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணின்மேல் பிணம்களாய் ஆராய்சி செய்வோம் இதயம் இல்லாதவர்களுக்கு எவ்வாறு ரத்த ஓட்டம்

  12. எனக்குள்ளே புதைந்து போன ஈழம் நீ உன்னை விட உன் நினைவுகளையே அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் மட்டும் என்னோடு இருப்பதால்

  13. அன்றைய இட(இதய)ப் பெயர்வும் அவளும்.... கவிதை - இளங்கவி முகத்தில் சிறுமுடிகள்... அதுதான் மீசையாம்..... சொல்லக்கேட்டதும் உடலில் ஓர் சிலு சிலுப்பு..... சிட்டுக்குருவி சிறைபிடிக்க இந்த சின்னப்பறவைக்கும் ஓர் ஆசை.... மலர் மஞ்சத்தில் படுப்பதற்கு மனதில் ஆசையெனும் பேரலை என் ஆசையெல்லாம் அடக்கிய அந்த ஓர் இடப்பெயர்வு...... ஆம்.. அன்று முகாமில்லில்லை உறவினரின் முற்றத்தில்...... அந்தக் கூட்டத்திலும் அழகான ஓர் பொற்சிலை.. என் ஆசைப் பேரலைக்கு அணைபோட்ட ஓர் தங்கச்சிலை...... என் அகதி நிலை புரியவில்லை அடிவயிற்றுப் பசிகூட தெரியவில்லை.... மூளைமுதல் முழங்கால் வரை முழுவதும் நிரப்பியது அழகான அவள் பிம்பம்...... பார்க்க மறுத்தாள் பி…

  14. மேஜர் விதுரா *** சகோதரி, முன்பின் அறியாத உனக்காகவும், உனைப்போல் தம்உயிர்களை ஆகுதியாக்கிய உத்தமர்களுக்காகவும் அழுகின்றோம்..! ஒவ்வொரு உறவுகளின் உயிர்களும் கொடியவனால் காவுகொள்ளப்படும்போது எங்களுக்கு அழுகை வருவது வழமைதான்! ஆனால்.. இப்போது எங்கள் இதயமே வெடித்துவிடப் பார்க்கின்றது! இது உங்கள் இழப்புக்கண்டு வந்த அதிர்ச்சியின் விளைவு அல்ல.. உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்..! *** மண்ணில் செய்த உங்கள் சேவைகள் விண்ணில் இருந்தும் தொடரட்டும்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர்…

    • 6 replies
    • 1.4k views
  15. மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால் குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன். ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!! சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!! எது சரி? எது பிழை? நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம். இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம். சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது. பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது. ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது. தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது. முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள் ஆனால் ஆரம்பத்தில் பிழையானது…

  16. வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி கவிதை - இளங்கவி ஐந்து சந்தி வீதியிலே ஆளுயரப் பனையின் கீழ் பனம்பழம் எடுத்து வந்து பாதி தந்த மகராசா...! என்னை பாதியாய் தவிக்கவிட்டு பாடையிலே சென்றீரோ.... பச்சைப் புல்வெலியில் பாதணியும் போடாமல் உன் பங்குக்கும் புல்லுவெட்டி என் பசுவின் பசிதீர்த்த மகராசா...! பட்டினியால் உன் உயிரை பறித்து தான் சென்றனரோ...! புலியின் ஆட்சியிலே நாம் பசியை கண்டதில்லை... கிளி நொச்சி விட்டோடி; கடைசியிலே வதை முகாமுக்குள் வந்திருந்தோம்.... இங்க என் ராசா நீ பசிதாங்க மாட்டயென்று என் பாதிக்கஞ்சி தந்திருந்தேன் இங்கே பிணிதாங்க முடியாமல் என்னை பிரிந்துதான் சென்றீரோ...! பாவியவன் குண்டு போட்ட; நாமும் படுகைய…

  17. கொடுப்பதற்கு ஏதுமின்றி கெடுப்பதற்காய் நம் உறவுமின்றி வாழ்வதற்காய் கட்டிவைத்த கல்வீடுமின்றி நடுத்தெருவில்நின்று நீ கத்தும்போதும் திறக்காது கண்கள் சர்வதேசத்தின் கண்கள் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை உசுப்பமுடியாது நடிக்கிறது ஐநா. நாவடக்கி, எம் குரலடக்கி வெடிக்கிறது எம்மவர் கத்திய தொண்டைகள்தான் இன்னும் ஏன் விலைக்கொடுப்பு இதுக்கும் மேல் ஏன் சர்வதேசம் எழும் கேள்விகள் நியாயமானதே அதிகாரவர்க்கத்தின் ஆட்சிபீடமல்லவா ஐநா. ஐக்கியநாட்டின் குறுங்கல் வடிவம் தமிழாங்கிலத்தில் நான் நா…….. நான் தான் இவ்வுலகின் சொல் என்றுரைக்கும் ஐ.நா… காசாவில் கொன்றபோது கொதித்ததே! ஈ…

  18. அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன. …

  19. சிதைக்கப்பட்ட சித்திரங்கள் கவிதை - இளங்கவி அழகான இந்தச் சித்திரத்தை அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர் இனக்கொலையின் அலையடிப்பில் நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....! ஏனென்று தெரியாமல் இறக்கும் நம் செல்வங்கள்..... அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட ஈழத்து நெருஞ்சி முட்கள்.... எதிரியின் கால்படும் இடமெல்லாம் கண்டபடி குத்தி நிற்கும்.... அவன் வாழ்வின் நின்மதியை என் நாளும் கெடுத்து நிற்கும்...... இளங்கவி

  20. இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சா…

    • 47 replies
    • 14.1k views
  21. என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து ஒற்றை ப…

    • 0 replies
    • 853 views
  22. யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா? தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா? ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது. பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது. பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது. நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது. வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது. வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது. ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனத…

    • 7 replies
    • 1.8k views
  23. வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில் வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல் கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள் மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன் மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன் வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில் மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன் தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய் ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி உன்னை யுருக்கி வீரர்களை யுருவ…

    • 2 replies
    • 2.3k views
  24. சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும் சிந்தை கலங்கவில்லை ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும் ஐயோவென்று அழவில்லை அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும் அச்சம் எழவில்லை சீனா இட்டது சில ஆணி - அப்போதும் சிறிதும் வாடவில்லை இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும் இதயம் நோகவில்லை பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும் பயந்து போகவில்லை தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது தொலைந்தது எம்மூச்சு http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

    • 6 replies
    • 1.3k views
  25. பெருமைதான்... மழை வரும்போதும் உன்னை நினைக்கிறேன் வெயில் அடிக்கும் போதும் உன்னை நினைக்கிறேன் தயவுசெய்து திருடிட்டு போன என் குடையைக் கொடுத்திடு காதல் காதல் ஒரு மயக்க மருந்து மயங்கி விழுந்தால் கல்லறையில்தான் உனக்கு விருந்து பாவம் தூக்கத்தில் உன் சத்தங் கேட்டு எழுந்து விட்டேன் ஆனால் நீ இல்லை பின்புதான் தெரிந்தது அது என் பின் வீட்டுத் தெருநாய் என்று.. என்னத்த சொல்ல அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்குது வேற ஆளப் பாத்திட்டாய் போல என்று உங்களை மாத்தவே முடியாது மலரே உன் மீது விழும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே நீ வாடாமல் இருக்க நான் விடும் கண்ணீர்த் துளிகள். …

    • 0 replies
    • 837 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.