கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …
-
- 14 replies
- 1.7k views
-
-
உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…
-
- 7 replies
- 4.2k views
-
-
அகதி கனத்த இதயத்தை கையில் பிடித்து மூச்சு முறிய முண்டியடித்து இழப்புகளுக்குள் இறுகி முன்னுக்கு நிற்கும் முந்நூறு பேரையும் முந்தியதாக நீண்டு நிற்கின்றன கைகள்……… துடிப்பின் துருவங்களுக்கு சென்றிருக்கும் எம் தேசத்தில் பூஜ்ஜியப் பெறுமானம் எனச்சொல்லப்படும் உயிருக்கு உணவையும் ஒலி வரட்சியடைந்து ஒய்ந்து போயிருக்கும் தொண்டைக்கு பருக தண்ணீரையும் பன்னீராய் நாடி…… நீட்டப்பட்ட கைகள் சாமானிய நிலையடையும் அன்றாவது சமாதானம் சாத்தியப்படுமா? அகதி வாழ்கை முற்றுப் பெறுமா? எம்.எஸ்.எம்.சறூக் சம்மாந்துறை. நன்றி - லங்காசிறி இணையம்
-
- 0 replies
- 702 views
-
-
என் கவிஞன் எங்கே? ------------------------------ கண்ணாலும் காணவில்லை காதாலும் கேட்கவில்லை உன்னை காணாமல் தேடுகிறேன். என் கவிஞ! நீ எங்கே இருக்கிறாய்? செந்தமிழின் சொல்லெடுத்து உன் பேனா பெரும் செல்லடிக்கும் போதும் எழுதியதே கண்ணால் கண்டு உன்னோடு கதைத்த பொழுதுகள் இன்னும் என் நெஞ்சத்துள் உருகுகிறதே வாழ்வு பெரும் சோகம் வன்னி வாழ்வு பெரும் சோகம் என் மண்ணில் கிடந்து உழன்றெழுந்தாய் எழுதினாய் உன் கவிதைகளை என்கவிஞ! உன் கவிதை கண்டு என்மனம் எப்பொழுதும் ஆறுமடா! ஈழத்து கவிஞன் என்று உன்னை போற்றாதார் யாருண்டு? எதிரவர்க்கு கூட உன்தமிழ் பிடிக்குமடா? இனி அழக்கண்ணீரில்லை என்பதற்கு பிறகு உன்னைக்காணவில்லை …
-
- 27 replies
- 8.8k views
-
-
தளரும் நிலையது வந்திடலாமோ _இனியும் எழுந்திடமல் என்னினமே இருந்திடலாமோ புலரும் பொழுதின் தடையுடைக்க _புயலாய் இறங்கிடோமோ புலத்தில் நாம் புதுக்களம் கொண்டிடோமோ நிலமிழந்ததிற்காய் _நீ நிலைகுலைந்திடலாமோ வாழ்ந்த வளமிழ்ந்ததிற்காய் _உன் பலம் மறந்திடலாமோ கண்ணில் நீரேழுந்திட கலங்கிடும் காலமல்ல _இது உணர்வுகளில் தீஎழுந்திட எரிமலையாகிடும் நேரமிது வேரடி மண் பறித்து பகை வெற்றிகொண்டடிட _நீ வேரிழந்தவனாகிடலாமோ உறவைக்கொன்று _தமிழ் மகவை புணர்ந்து ஊடுருவ நிற்குது சிங்களம் _இன்று மாதகல் தனதென்று மார்தட்டுறான் கொடியவன் _அவனுக்கு சவரிவீசி ஆலவட்டம் பிடித்தொருகூட்டம் மகிழ்கிறது . கவரி மானினம் நீ _தமிழா புலத்தில் புது வே…
-
- 0 replies
- 836 views
-
-
இனம் தின்னும் ராஜபக்சே கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! …
-
- 1 reply
- 827 views
-
-
-
வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…
-
- 13 replies
- 2.5k views
-
-
அம்மா நீ வேண்டும் கூட்டுக்குள் புறா போல் நானும் வாழ்கின்றேன் போகும் இடம் தெரியவில்லை போகவும் யாரும் விடவும் இல்லை அம்மா என்றழைக்க அம்மா இங்கில்லை உறவு என்று எனை அணைக்க எனக்கு யாருமில்லை அரிச்சுவடி படிக்கவில்லை அம்மா நடை பழக்கவில்லை அம்மா முகம் பார்த்து தூங்க ஒரு புகைப்படம் கூட எனக்கில்லை என்னை ஏனம்மா தனியாக விட்டுசென்றாய் நான் உன்னை அம்மா என்று அழைக்கமுன்பே அதை கேளாமல் சென்றாயே உன்னைத்தான் நான் நம்பிவந்தேன் அம்மாவே என்னை எங்கே விட்டுசென்றாய் அம்மாவே அன்னம் உண்ண பழக முன் கஞ்சி குடிக்கின்றேன் அம்மா எனக்கு ஒரு வாய் சோறூட்ட நீ எப்பொழுது வருவாய் அம்மா தரையில் உறங்குகிறேன் அம்மா உன்மடி உறங்க நீ வருவாயா அப்பா எங்கே அம்மா உன்னோடு கூட்டி ச…
-
- 14 replies
- 3.2k views
-
-
சட்டைக்குள் புகுந்துதினம் சில்மிசம் செய்த _என் கிராமத்துக்காற்றே, அந்த ஆலமர மடத்தில் _உன் ஸ்பரிசம் தந்த சுகமும் விளையாடிக்களைத்த மம்மல்போழுதில் வந்தெனை ஆரத்தழுவி வியர்வைதுடைத்த பரவசமும் _இன்று நினைவுகளில் மட்டுமே ! எல்லைகளில் உயர்ந்த பனைகளோடு உரசி சிரித்தவள் நீ , முல்லையின் வாசத்தோடு முற்றத்து மண் அள்ளிக்கொட்டி ஆக்கினைசெய்தவள் நீ , நேற்கொழுவில் நேற்கதிகளோடு சல்லாபித்து நெஞ்சைத் தொட்டவள் நீ , ஏகாந்த இராத்திரியில் மஞ்சம் வந்து _கன்னம் கொஞ்சிப்போனவள் நீ , என் கிராமத்துப்பூங்கற்றே வேலிக்கிழுவையும் ஆடுதண்டுப்பூவரசும்_உன் தரவுகளின் ஆமொதிப்பாளர்களாக இ (த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை மாற்றமில்லாமல் நீ வந்து…
-
- 3 replies
- 815 views
-
-
எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள் கவிதை - இளங்கவி கலைஞரே வாழ்க வாழ்க தமிழின் காவியத்தலைவனே வாழ்க எண்பத்தாறு வருடங்களை தமிழருக்காய் அர்ப்பணித்த தமிழ் நாட்டுச் சிங்கமாம் நீ தமிழினத்தின் தங்கமாம்...? விடிவெள்ளியாய் நினைத்து விளக்கின்றிக் காத்திருந்தோம் எரி நட்சத்திரமாய் விழுந்து ஈழத்தின் குலையறுத்தாய் குடும்பப் பாசத்துக்காய் உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய் எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய் இன்றுவரை உயிர் வாழ்வாய்.... ஈழத்தில் நிலத்தினிலே குரும்பையெல்லாம் கருகிவிழ வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய் நீயோ வேண்டுமந்த பதவியென்றாய் எதிரியின் தீயிலே நாமெரிய நீ வேண்டிய பதவிபெற்றாய் வேண்டியதை பெற்றதனால் பிறந்த நாள…
-
- 12 replies
- 2.7k views
-
-
தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ள…
-
- 0 replies
- 1k views
-
-
அறிமுகமாகாமல் நான் ஆமீ அட்டித்த குண்டில் அம்மாவின் கருவறையோடு நானும் அஷ்தியானவன் அம்மாவின் கல்லறைக்குள் அறிமுகமாகாமல் நான்
-
- 0 replies
- 774 views
-
-
முள்ளிவாய்க்கால் ஒரு நீண்ட தவத்தை உடைத்தெறிந்து நெடிய பயணத்தின் முடிவுரை எழுதிய தீயினால் வேகாமல் பொய்யினால் வெந்த மண் ஆயிரம் ஆயிரம் கனவுகளை கருக்கியெறிந்த மண் அன்னிய சக்திகளின் பசிக்கு இரையாகி பட்டினியில் வெந்த மண் வேரோடு விழுதுகளையே வீசியெறிந்த மண் வரலாற்றில் தன்மீது கறை படித்த மண் எம் கனவெல்லாம் தன்னுள்ளே கரைத்தெறிநத மண்
-
- 1 reply
- 982 views
-
-
நீ என்றும் என் காதலி.... கவிதை - இளங்கவி அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன், யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய மு…
-
- 4 replies
- 2.1k views
-
-
நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ண…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழிச்சியின் ஓர் வீரப் படைப்பு அருமையான படைப்புக்களை ஒரு தமிழிச்சி துணிவுடன் படைத்துள்ளார். பொதுவாகவே தமிழ் பெண்களின் வீரமிகு எழுத்துக்கள் ஆண்களின் படைப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்ற போது ஒரு தமிழிச்சி இதோ வீறு கொண்டெளுகிறாள். நாம் தான் அவளை ஊக்குவிக்க வேண்டும். http://reginidavid.wordpress.com/
-
- 0 replies
- 976 views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் துரோகி கருணாய்நிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடு ஊரில் நச்சுமரம் காய்த்தென் பயன். வாழ்கின்றபோதே நீ பிணமானவன். உன்னை பெற்றவளும் பாவியே கருவில் உன்னைக் கலைக்காததால் சகுனி உன் செயலால் நல்லவனான்இளவலுக்கு முடிசூட்ட பலியான உன் இனம் எத்தனை எத்தனை கேடு கெட்டவனே வெள்ளைத் தோலில் உனை மறந்த காமுகனே அந்நய மோகத்தில் உனை மறந்தாயோ? காத்திருக்கின்றோம் புதிய தீபாவளிக்காய் இரணியன் மறைந்ததிற்கு தீபாவளி நீ இறக்கபபோகும் நாள் எமக்கு இன்னோர் தீபாவளி இந்த எட்டிமரம் பழுத்தாலென்ன இல்லாவிட்டால் என்ன
-
- 2 replies
- 932 views
-
-
தமிழனே வாழ்கையின் விழ்ச்சி நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய் இழந்தது உனை சேரும் பிரிந்தது இன்று உனை நாடும் மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும் உலகம் என்றும் உன் நிழலை அருவி கவித்தொகுப்பு தமிழருவி வானொலியின் நேரடி
-
- 0 replies
- 632 views
-
-
என் உயிர் உறவுகளே செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல் நான் துள்ளித் திரிந்த தெருக்களில் குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம் தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம் கண்களில் இருந்த கண்ணிர் வற்றி நடைப் பிணமாய் நாம் இப்போ........ ஜயகோ....! தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள் செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர் சத்துணவு திட்டமாவது தரும் படி ஏன், எதற்கு எப்படி யானோம் -? நாம் இப்படி ................? கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில் வராவிடின் தேடுங்கள் - அதற்கான பதிலைத் தேடு…
-
- 1 reply
- 804 views
-
-
உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்
-
- 0 replies
- 656 views
-
-
பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…
-
- 0 replies
- 619 views
-
-
சிவப்பு ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் காதல் வரவில்லை என் அன்புத் தோழியே என்னினம் சிந்திய குருதியின் விம்பங்கள் பட்டுத் தெறிக்கும் இதை இனிமேல் காதல் சின்னம் என்று சொல்லாதீர்கள்
-
- 2 replies
- 888 views
-
-
பாடுக மனமே வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும் பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும் நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே. வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின் எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால் கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே. உறவுகளின் ஓலங்களை அமுக்கும் தோழ தோழியரின் போர்முரசுகளே என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள். அம்மா தமிழ் மண்ணெடுத்து இன்பப் பொழுதொன்றில் நீயும் எந்தை…
-
- 23 replies
- 5.2k views
-
-
எமக்குத் தெரியும் எங்கு நீ இருக்கிறாய் என்பது அவர்கள் காட்டிய முகம் அவர்கள் காட்டிய உடல் இதிலெல்லாம் இல்லாதவன் எங்கிருப்பாய் என்பது எமக்குமட்டுமே தெரிகிறது நீ அடிக்கடி சொல்வாயே எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் என அப்படியெனில் இங்குதான் இருக்கிறார் பின் எவனுக்கும் தெரியவில்லையே... அதெப்படி தெரிவேன் பகையை மூட்டியவனுக்கும் புகையை மூட்டியவனுக்கும் என்கிறாய். அவர்கள் காட்டிய படத்தில் ஈழத்தை தவிர்த்து வானத்தைப் பார்க்கிறது உன் கண்கள் அப்போதே தெரிந்துக்கொண்டோம் அது நீ இல்லையென நீ இருக்கும் துணிவில் அனைத்தையும் உன்னிடமே விட்டுவிட்டோம் இப்போதுதான் புரிகிறது நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்பது …
-
- 3 replies
- 1.2k views
-