கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
My PayPal AC: visjayapalan@gmail.com தமிழகத்திலும் உலகிலும் பாலை இசைத் தொகுப்பைக் கேட்ட பலருக்கு இனித் தமிழர் என்கிற படல் மிகவும் பிடிதிருக்கிறது. எனது பாலை இசை தொகுப்பை கடனாக யாழ் இணையத்தில் தரவிறக்கம் செய்த 5000 பேரில் 10% ரசிகர்கள் விலைகொடுத்திருந்தாலே இப்படி முடக்கப்படாமல் எனது பணிகளைத் தொடர வாய்ப்புக் கிடைதிருக்கும். ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எனது பணிகலைத் தொடர்வதோடு தொடர்ந்தும் கடன் அடிப்படையில் யாழ் இணையத்தில் அவற்றை பகிர்ந்துகொள்ள இயலும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=43413 இதுவரை ரஞ்சினி பிராங்பேர்ட், கோகிலா அவுஸ்திரேலியா, பறவைகள் கனடா மட்டுமே எனது நனம்பிக்கைக்கு வலுச் சேர்த்துள்ளனர். எனது பாலைக் கடன்களை அடைக்கவும் விடுதலைக்கான ஆய்வ…
-
- 3 replies
- 1.2k views
-
-
புத்த மைந்தர்களின் புனித்தக் கொள்கைகள்........ கவிதை...... புத்தனிடமும் கேட்கவில்லை புத்த மதத்திடமும் கேட்கவில்லை இறையாண்மை கொண்ட இலங்கைத் திரு நாட்டின் புத்த மதத்தை பின்பற்றும் புத்த மைந்தர்களிடம் கேட்கின்றோம்.... போரை முன்னெடுக்க எந்தப் புனித மதமும் சொல்லுமா...? அந்த மதத்தை பின்பற்றும் அதன் மைந்தர்கள் தான் சொல்வாரா...? ஆம்..! இலங்கையில் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்.....! தமிழ் இனத்தை கொல்லுங்கள்....! அவர் இரத்தத்தில் குளியுங்கள்.....! தமிழர் கண்களைப் பிடுங்கி கொத்தும் காக்காய்க்கு போடுங்கள்......! இத்தனையும் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்....! எங்கள் உரிமைப் போரை …
-
- 6 replies
- 1.2k views
-
-
-
செருப்புகளும் மதங்களும் விற்பனை சந்தையில் நிறைய குவிந்து கிடக்கின்றன செருப்புகள் போல் மதங்களும் தங்களுக்குள் விவாதித்து விவாதித்து தாங்களாகவே அடித்துக் கொள்வதிலும் சளைத்தவையில்லை ஒன்றையொன்று அளவுகளிலும் அழகுகளிலும் தான் வெவ்வேறாக இருக்கின்றன சில அறுந்தும் சில தேய்ந்தும் செருப்புகளை போலவே பல வேளைகளில் செருப்புகள் உயர்வானவைதான் மனிதயினத்தை காவுகள் கேட்கும் மதங்களைவிடவும் kavimathi.com
-
- 1 reply
- 828 views
-
-
மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம். புலிகளினி அழிந்தாரென்ற கிழவன் செத்தும் புலிதன் வீரம் மாறாமல் வீச்சோடு மீண்டு எழ மீளவும் புலிகளொடு போராட புத்த புதல்வர்கள். போராடிப் போராடி புலிகளிடம் தோற்றவர்கள் ஈடாடி இயங்க முடியாமல் ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு பாரெல்லாம் பழுதென்று பதுக்கின ஆயுதங்கள் தாவென்று வாங்கி தம் பலம் இழந்தவர்கள். கிளிநொச்சி வீழ்ந்திடுமாம் கொடியேற்றிக் குத்தியனை முதலமைச்சராக்கும் கனவோடு மகிந்த மாத்தையா உதயநாணயக்கார கனவுகளில் மண். மாவீரர் மாதம் நெருங்கும் ஐப்பசியில் மகிந்தவுக்கு அட்டமத்தில சனி. சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல் இது சாத்திரம் சொல்லும் விதி. மகிந்தவுக்கும் ஏழரை மாத்த முடியா விதி. ம…
-
- 6 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழனின் குரல்: "என்று திரும்பும் எம் வாழ்வில் விடியல்?" எதிர்பார்த்து இருந்தோம்! சிங்களம்- கொன்று குவித்த பின்னர் தானோ உலகம் பார்வை திருப்பும் என்று குமைந்தோம்!???? வண்ண வான வேடிக்கை கண்டு நாளாச்சு தினம் வான் பொழியும் குண்டுமழை காணும் நிலையாச்சு! உரிமை கேட்டு குரல் கொடுத்தோம்! உயிர் நசுக்குகின்றான் எங்கள் சந்ததிகள் அனைவரையும் சாகடிக்கின்றான்! மரத்தினடி ஒதுங்குகின்றோம் நிழலுக்காக அல்ல மரணம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டதென்ன சொல்ல?!"மருந்துக்காகவேனும் இங்கு உணவைக் காணவில்லை வற்றிப்போயாச்சு வடிக்க கண்ணீரும் இல்லை! புலம் பெயர்ந்த உறவுகளே 'வேரின் நிலை கண்டீர்! வேற்று நாட்டில் இருந்தாலும் எம் வேதனைகள் அறிவீர்! ஈழத்தமிழர் வேதனையை எங்கும் சென்று உரைப…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் எழுச்சிகண்டு....... கவிதை...... தைப்பொங்கலுக்கு மகிழும் தரணியின் சூரியன் போல் உங்கள் பொங்கும் உணர்வு கண்டு இலங்கையில் சூரியர் நாம் மகிழ்ந்து விட்டோம்........ எங்களின் அழுகை நீக்க உங்களின் எழுச்சியின்னும் போதாது...! போதாது....! பொங்கி எழுந்திடுங்கள்....... பிள்ளையின் கதறல் கேட்டு பெற்றவளாய் நீர் இன்று பொங்கி எழுந்ததற்காய் பிள்ளைகளாய் மனம் குளிர்ந்து விட்டோம் துடித்து எழுங்கள் உங்களின் கிளர்ச்சியின்னும் போதாது..! போதாது...! பொங்கி எழுந்திடுங்கள்....... இலங்கைத் தமிழனின் பூகோளச் சரித்திரத்தை தன் வைர வரிகளிலே சொன்ன வைர மு(மூ)த்தண்ணன் கொதிக்கும் அவன் சொல் விதை(த்)யில் …
-
- 0 replies
- 674 views
-
-
தொலைபேசியும் தொலைத்(த)தொடர்பும்....... கவிதை.... வண்ண வண்ணச் சிட்டுக்கள் என்னை தொலைவில் நின்றும் பார்க்கவில்லை..... காரணம் தெரிந்து கொண்டேன் கையட்டக்கத் தொலைபேசி கூட என் கையில் அன்று இருக்கவில்லை...... கடன் அட்டை ஒன்றெடுத்து கைத் தொலைபேசி வாங்கி வந்தேன் அதன் பெயரோ '' நோக்கியா'' அதைக்கண்டு ஓர் சிட்டு என்னை நோக்கினாள்..... அதன் பின்னர் ''சொனி எரிக்சொன்''கு மாறினேன் அவளை சில படங்களும் எடுத்துக் கொண்டேன் அவளும் சிரிப்புக்கு மாறி தன் கண்களையும் சிமிட்டிக் கொண்டாள்..... பின்னர் ''சாம்சங்''கு மாறி அவளோடு தனிமையில் பேசி வந்தேன் என் காதலுக்கும் சரி சொல்லி என் மார்பிலும் சாய்ந்து கொண்டாள…
-
- 8 replies
- 1.3k views
-
-
உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்.., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்.., சினேகா வந்தால் செத்து போவீர்கள்.., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்.., ஆகையால், கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றி அல்ல... கஷ்டத்தில் தவிக்கும் ஈழத்தைப் பற்றி...
-
- 5 replies
- 1.4k views
-
-
உலகெங்கும் வாழும் சொந்தங்களே உயிர்காக்க நீங்கள் வாருங்களே ஒருவேளை உணவு தாருங்களே எங்களில் இறைவனைப் பாருங்களே இரவோடு இரவாக இடம் பெயர்ந்தோம் சொந்த ஊரில் நாங்கள் அகதியானோம் உடுத்த உடையோடு மட்டுமே நாங்கள் ஊரை விட்டு ஓடி வந்தோம் மரநிழலில் மதவடியில்...எங்கள் வாழ்க்கை(2) வான் கூரையின் கீழே உறங்குகின்றோம் எங்கள் உயிரள்ளிப் போகும் பகைவீட்டின் செல் மழையே எங்கள் உடல்கள் எரியும் சுடுகாட்டில் தானே வாழ்வே சமைப்பதற்கோ ஏதுமில்லை சரிந்திடவோ பாயுமில்லை குளிப்பதற்கு கிணறுமில்லை குடியிருக்க குடிசையில்லையே... விழி திறந்தால் காடாய் தெரிகிறதே ஆலமரம் நிழலாய் நிற்கிறதே- ஓடி ஓடி களைத்த எங்களுக்கு கானல் நீர்தான் தாகம் தீர்க்கிறதே பசி…
-
- 2 replies
- 1k views
-
-
அவர்களா இவர்களா ? மண் ஒழுங்கையும் மழை வெள்ளம் அரித்த மார்க்கண்டர் வளவும் மெளனம் கரைத்த சூனியப் பொழுதொன்றில் - உன் உயிர் குடித்த வேட்டொலியும் மீதமாய்........ சாட்சிக்கும் ஆளின்றி சட்டமும் அரவமின்றி காட்சிக்கு வைத்தாற் போல் காலையில் நீ கண்கள் பிதுங்கி பிடரிக்குள் புகுந்த சன்னத்தின் கோதுகள் ஆதாரமாய்.... 'புலி" செத்துக்கிடப்பதாய் பொய் சொல்லிப் போனார்கள் நீ என் அயலான் என்று சொல்லும் துணிவின்றி நானும் மெளனமாய்.... ஆளவரம் கேட்கிறது அகால இருள் திரள்கிறது ஆட்காட்டிப் பறவையின் அந்தரக் குரல்.... அவர்களா இவர்களா எவர்கள் ? என் வீட்டுப் படலையின் கிடுகுத்தட்டி விலகுகிறது மனிதவுரிமை மன்றில் - அன்றேல் ம…
-
- 2 replies
- 1k views
-
-
சரஸ்வதி துதி வெள்ளைத் தாமரையில் வெண்ணிற உடை உடுத்து வீணை தனை மீட்டிடும் வாணியே... கலை மகளே..! வெள்ளை உள்ளத்துடன் எளிய தமிழ் கவிதைகளை எழுதிட நீ உதவிடம்மா... ******** நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே... நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே இனிய தமிழ் கவிகள், கதைகள் புதுமைக் கருத்துக்கள், செய்திகள் மனம் மகிழவைக்கும் நகைச்சுவை கண்ணுக்கினிய காணொளிகள் இவை வழங்கும் யாழ் களம் நான் பயிலும் பல்கலைக்கழகம். நாளும் நாம் எழுதும் படைப்புகள் நவதானியமாய் விதைக்கப்பட, இவை வழங்கும் படைப்பாளிகள் தாமே அழகிய கொலுக்களாக, வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில் அழியாது என்றும் இவரிருக்க. உள்ளத்தில் உள்ள ஆணவத்தை அழிப…
-
- 13 replies
- 2.5k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்...... தொடர்ச்சி...... கவிதை.... வானத்தைக் குடையாக்கி மரங்களையே வீடாக்கி மண் நிலமே படுக்கையாக மறைந்திருந்தோம் எதிரியிடம்...... இந்தமுறை எதிரியுடன் இயற்கையும் சேர்ந்து எம்மை தாக்கத் தொடங்கியதை தாங்காமல் தவிக்கின்றோம்... மழை பெய்தால் மகிழுதற்கு இது மகிழ்ச்சியான ஆட்சியல்ல மகிந்தவின் ஆட்சியல்லா மரணம் தான் எமக்கு மிஞ்சும் கொடுங்கோல் ஆட்சியிலே கோபுரமா எமக்கு சொந்தம் குடிசைகள் தான் அன்று சொந்தம் கொடும் நோய்கள் தான் இன்று சொந்தம்...... பாலுக்காய் அழுகின்ற பச்சிழம் குழந்தைக்கு உணவாகக் கிடைப்பதெல்லாம் உடல் எரிக்கும் குண்டுகள்தான்..... ஏணையில் தவழ வேண்டும் எங்கள் இளங் குருத்துக்கும் …
-
- 3 replies
- 879 views
-
-
My paypal is : visjayapalan@gmail,com இதுவே இறுதி வார்த்தை. இனி சொல்ல ஒன்றுமில்லை. நான் தோற்று போய்விட்டேன். 3000 பேர்வரை என்னுடைய நம்பிக்கை அடிப்படையிலான கலை கடனாக பாலை இசைத் தொகுப்பை தரவிறக்கம் செய்துள்ளனர். REMOVED BY POET தரவிறக்கம் செய்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். -வ.ஐ.ச.ஜெயபாலன் (நமக்குத் தொழில் கவிதை ******************************************************************************** * இதற்ககுமேல் எழுதி ஆகப்போவதொன்றுமில்லை. எனினும் கலை இரசிகர்கள்மீது நான் வைத்த நம்பிக்கையை இழக்க விருப்பமில்லை. முதலில் கடனாக தரவிறக்கம் செய்யுங்கள் பாடல்கள் பிடித்துப் பதிவுசெய்துகொண்டால் கடனை செலுத்துங்கள் என்கிற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்பினே…
-
- 20 replies
- 4.3k views
-
-
உன் விடியல் உன் கையில்...... கவிதை.... தமிழா நீ எழுந்திடு நம் தாய் நாடு மீட்க சேர்ந்திடு.... தமிழீழம் உன் தாயல்லவா உன் தாயை நீ கை விடலாமா...? எதிரியின் அழிப்பில் நீ என்றும் உன் இனத்தை அழிய விடலாமா...? ஒற்றுமை உணர்வின் உயிராக நமக்கு காக்கைகள் உனக்கு தெரியலையா..? அதில் ஒன்றுக்கு அநீதி இழைத்துவிட்டால் அவை எல்லாம் சேர்ந்து உன்னை தாக்காதா...? நீ உன் ஒற்றுமையின் பலம் காட்டு மலை போன்ற எதிரியும் உனக்கு மண் மேடு.... மியிர் கொட்டி பூச்சி தன் உயிர் காக்க தன் மியிர் கொண்டு உன்னை தாக்கிடுமே...! மனிதனாய் பிறந்த உங்களுக்கு ஏன் மயக்கம் இன்னும் தெளியவில்லை..! உங்கள் உரிமைக்காய் நீங்கள…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடாவில் தாயகமக்களின் இன்னல் துடைக்க ரொரன்ரோ பெருநிலத்தில் ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகம், ஸ்காபுரோ கலைபண்பாட்டுக் கழகம், பீல் கலை பண்பாட்டுக் கழகம், மார்க்கம் கலைபண்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு கலை பண்பாட்டுக் கழகங்களும் இணைந்து வழங்கிய “சிறங்கை” எனும் 27 மணித்தியாலத் தொடர் நிகழ்வில் களத்துமேடு எனும் கவியரங்கில் ஆற்றப்பட்ட கவியுரை இங்கு யாழ்க்கள நண்பர்களுக்காக பதிவிடுகிறேன். நாமுள்ளோம் அஞ்சற்க. என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த…
-
- 2 replies
- 1k views
-
-
அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம். காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 ) வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன். காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் : vaseeharan@hotmail.com (Paypal Account). Vaseeharan:…
-
- 4 replies
- 1.8k views
-
-
தமிழா வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
வானும் கனல் சொரியும்-தரை மண்ணும் கனல் எழுப்பும் அலையடிக்கும் கடலும் அதில் தாவும் எம் கரும்புலியும் வானில் பறக்கும் வான்புலியும் மதிமயக்கும் உயிர்குடிக்கும் சிங்களச்சேனை கதிகலங்கும் அவர்தம் அங்கம் சிதறும் தறுதலையாய் தரணியிலே அவமான சின்னமாய் சிங்களவனுக்கு குடைபிடிக்கும் ஓநாய்க்கூட்டம் அதன் கதிகலங்க என்சேனை அசையா எம் தலைவன் தலைமையில் அணிவகுக்கும் ஆயிரம் ஆயிரம் விடுதலை வேங்கைகள் எமக்காய் உருகும் செங்களமாடும் புலிச்சேனை காற்றில் கந்தகம் கலக்கும் இடம் எல்லாம் கரும்புலியின் தியாகவேள்வியின் உயிர் உருகும் உருகும் அந்த மானிடத் தெய்வங்கள் திவ்வியமாய் எம் இதயத்தில் நிறுத்தியே அலையும் சிங்களப் பேய்களுக்கும் தாயை விட உயர்ந்த எம் தரணிக்காய் போராடும் என்…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாரதி கண்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி.. கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராக மூர்த்தி யாவான் பாவியரை கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலேனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிளே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். தங்கதாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே!எந்நாளும் எனக்கு பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. குவளைக் கண்ணன் புகழ் யாழ்பாணத் தையனை…
-
- 0 replies
- 983 views
-
-
கண்ட நாள் முதல் இந்த நாள் வரை.... கவிதை..... உன்னுடன் சேரத்துடிக்கும் முன்னர்.....! மின்மினியாய் என் கண்ணில் வந்தாய்.... முல்லையாய் மணம் வீசிச் சென்றாய்.... காகிதப் பூவாய் எந்தன் மனம் கவர்ந்தாய்... குயில் இசைபோல் பாடிச் சென்றாய்..... உன்னுடன் சேரத் துடித்தபோது.... ! என் மனதின் எண்ணங்கள் ஆனாய்.... என் பசிக்கோ உணவும் ஆனாய்..... என் மனதில் வண்ணத்துப் பூச்சியாய் இறகும் அடித்தாய்.... தொட்டாச் சிணுங்கிபோல் சிணுங்கவும் செய்தாய்.... பின் நாளில் நாம் சேர்ந்த போது....! விடிவெள்ளியும் வானமும் ஆனோம்... மயக்கும் சூரியனும் மாலைப் பொழுதும் ஆனோம்... மயிலும் மழையும் ஆனோம…
-
- 0 replies
- 646 views
-
-
இளையராஜா. --------------------- நான் உயிர் வாழ கார்பன் - டை - ஆக்ஸைடே போதும் - அது உன் ஹார்மோனிய பெட்டியில் இருந்து வந்தால்.
-
- 0 replies
- 867 views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்..... பாகம் - 2 கவிதை..... எம் நினைவு தெரிந்த நாள் முதலாய் நாம் அறிந்ததெல்லாம் அப்பாவும் அம்மாவும்..... அதன் பின்னர் உடன் பிறந்தோர்.... அதன் பின்னர் அதிகமாய் அறிந்ததெல்லாம் பல்குழல் எறிகனையின் நெஞ்சை பிளந்துவிடும் அதன் சத்தங்கள்..... விமானச் சத்தம் கேட்டால் அம்மாவின் சொல்கேட்டு ஓடிடுவோம் குழிகளுக்குள்.... காலையில் பள்ளிபோய் மாலையில் வரும் வயதில் பள்ளத்திலே எம் வாழ்க்கை பல ஆண்டாய் செல்கிறது....... பசியென்று சொல்லிச் சொல்லி எங்கள் வயிறேதும் நிரம்பவில்லை..... பசியெனும் சொல்லுமட்டும் பாடப் புத்தகத்தை நிரப்பியது.... எங்களுக்கோ படுக்கையும் மறந்து போச்சு பாம்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடிவு நோக்கி .......... .இயற்கை தன் சுழற்சியை தொடங்கி விட்டது , பசுமை மாறி ,பழுத்து மஞ்சளாகி சில இளம் சிவப்பாகி தன் ஆழ்மனதை காட்டும் பெண்போல, அணைய போகும் விளக்கின் பிரகாசமாய் காலமகள் தன் கோலம் காட்ட புறப்பட்டு விட்டாள் . குருவிகளும் அணில்களும் ஓடி யோடி பறந்தும் நடந்தும் இரை தேடுகின்றன . ஒரு சில மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன தென்றலும் சற்று வேகமாகி சுழன்றடிக்கிறது மங்கையர் ஆடை மாற்றுவது போல மரங்களும் இலைகளை நிறம் மாற்றுகின்றன . கிளைகள் மட்டும் துன்பத்தில் துணை நிற்கும் நண்பன் போல பூமித்தாய் இத்தகைய மாற்றங்களை சந்தித்தே ஆக வேண்டுமென்பது நியதி போல மனங்களும்.. .. மனித மனங்களும் ...... சுழல்கின்றன விடிவு நோக்கி …
-
- 0 replies
- 834 views
-
-
ஏற்றி வைப்பாய் விளக்கு நாடி வந்தோம் சக்தி உன்னை நல்ல வழி காட்டு நாடு இன்றி அலையும் தமிழர் வாழ்வில் ஒளியேற்று! வாடி நிற்கும் பயிருக்கும் கருணை மேகம் நீதான் வந்து நின்றோம் உன்னடிக்கு எங்கள் துணை தாய் தான்! குங்குமத் தாயே எங்கள் குறை களைய வேண்டும் கும்பிட்டோம் உன் பதமே நிறை அருள வேண்டும் எங்கும் நிறை சக்தியம்மா நீதான் வழிகாட்டி வாழ்க்கைச் சாகரத்தில் கரை சேர்க்கும் படகோட்டி மங்களத்தின் மறுபெயரே மகாலஷ்மி நீதானே சங்கடங்கள் தகர்க்கின்ற சங்கரி நீதானே பொங்குதனம் கொண்டவளே போற்றுகின்றோம் உன்னை பகை எரித்து நாட்டிடுவாய் எம் வாழ்வில் நன்மை! கொடுமை கண்டு கொதித்தெழும் கொற்றவையே தாயே! கொடுக்கும் கரம் கொண்டவளே உமையம்மை நீயே எதிர…
-
- 0 replies
- 927 views
-