கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பூக்கள் கூட உன்னைப் ப்போல் புன்னகையால் முகம் மலர்ந்ததில்லை சமாதான புறா கூட உன்னைப்போல் சமாதானம் பேச உலகம் சுற்றியதில்லை உலக பேச்சுவார்த்தை மேசைகளுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த சமாதான புறா நீயல்லவா உன்னோடு ஆயுதம் குழந்தையாய் உறங்கியபோதும் அழகு தமிழ் சொல்லெடுத்து செல்வன் நீ அற்புதமாய் போரடினாயே வழிகாட்டி பலகைகூட காட்டிவிட்டு இருந்துவிடும் தளபதியாய் நீ இருந்தபோதும் கூடவே கைபிடித்து கூட்டி வந்து விட்ட தாயல்லவா நீ தேசத்தின் குரலோடு ஈழத்தின் விடிவிற்காய் அகிலம் சுற்றி வந்த ஈழத்தின் குயிலே கூட்டைவிட்டு நீ வாரக்கணக்கில் அல்லவா உலகம் சுற்றி வந்தாய் ஏன் ஏன் எங்கள் கூட்டில் இருந்தபடியே நீ நிரந்…
-
- 4 replies
- 3.3k views
-
-
தேசக்காற்றே அனல் வீசியதேன் - எம் தேவனையும் நீ பறித்ததேன் தேசத்தின் குரல் ஓயந்து நாம் திகைத்து நின்றோம் - இன்று தேசியகீதமே அழிந்ததம்மா ! அலையொன்று அடித்தோய்ந்ததம்மா அந்த ஆண்டவனும் எம்மை மறந்தானம்மா தமிழின் செல்வனை பறித்தானம்மா எம் தாயக வேள்வியை அணைத்தானம்மா
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலை வேள்வியில் விறகானாய்! வீரர்களின் சுடர்களுடன் இணையானாய்! வெந்திட்ட புண்ணுக்குள் வேல்கொண்டு குத்திவிட்டார் தந்திரமாய்ப் பேச்சுவார்த்தை புதைகுழிக்குள் தள்ளிவிட்டார் விந்தையல்ல நீதிகொல்லல் எங்களுக்கே என்று காட்ட இயந்திரக் கழுகுகொண்டு குண்டுவீசிக் கொன்று விட்டார்! ஆயுதங்கள் போரில்நிற்க அறிவுடனே பேசி நின்று ஆயிரமாய்ப் பொய்யுரைப்போர் நேரெதிர்க்கும் ஆற்றல்தன்னைத் தகர்ப்பதற்கு ஆள்அழித்தல் என்றுநிற்கும் கோழைகளால் அகம்அழவே அகிலமெங்கும் தமிழரினம் கலங்குதம்மா! சத்தியத்தைத் தலைநிமிரற் கிடமளியோம் என்பவர்க்கே சுற்றிநின்று துணைபுரிவோர் இதற்கும்கூடத் தலையசைப்பார் பற்றிநின்று சுதந்திரத்தை மீட்கநிற்போர் வழிமறுப்பார் பற்றுகின்ற தீபெருக மட்டுமன்றி என்னச…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழம் வரும் வேளையென்றே நினைத்திருந்தோம்..அண்ணா... பேரிடியாய்.. உன் பிரிவை உள்வாங்கிக்கொண்டோம்.. வேதனையில்.. விழுந்த நெஞ்சங்களை காணுகின்றோம்.. தமிழ்ச் செல்வன் அண்ணா உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்.. பூத்திருக்கும் புன்னகையில் ஒளி தருவாய்..நம் தலைவரவர் கரமிணைந்து செயல் புரிவாய்.. நெஞ்சமெல்லாம் வாடி நிற்க எங்கு சென்றாயோ.. நேசமெல்லாம் கண்டு கொள்ள ஒளிந்து கொண்டாயோ.. அழுதுவிடவேண்டாமென்று.. விழிகளிடம் சொன்னேன்.. இதயம் கிடந்து அழுகிறதே யாரிடம் சொல்வேன்.. புலிகள் பலம் குறையுமென்று. எதிரிகள் நகைப்பார்.... உன்னை விதைத்த இடம்.. செழிக்கும் அதை வீணர்கள் அறியார்.. வீரப்புலித் தலைவரரவர்.. சோர்வது இல்லை.. அவர் கரங்களிலே.. உறுதி சேர்ப்…
-
- 4 replies
- 2.4k views
-
-
கொஞ்சி விளையாட..!!! புலர்ந்தது பொழுது மலர்ந்தது என் வதனம் எழுந்தேன் படுக்கைவிட்டு தொழுதேன் உன்கால்களை ஏன் என்று நீ கேட்கிறாயா? எப்போதேனும் உன் கால்களை வார நான் குனியும் போது உனக்கு ஐயம் வராதல்லவா? சரியன்பே கொஞ்சம் சிரி உன்னிதழ்விரித்து... குளிர்த்து நீராடிவிட்டு குளிர்போக சுடுநீரில் அன்பைக் கலந்து அணங்கு நான் தேநீர் தயாரிக்க போகணும் அன்பே... சிரி ஒருமுறை சிரி குவி உன்னிதழைக் குவி கவி நீயானாலும் பல கவி நான் எழுதுவேன் உன்னிதழ் மேல்..! மங்கை நான் அருகிருக்க அங்கை அள்ளத் துடிக்கையில் அன்பே... கொங்கைகள் ஏங்குமடா! சங்குக் கழுத்தும் உன்னிதழ் முத்தத்திற்காக காத்திருக்குதடா! பொங்குகின்ற இன்பம் கோடி மங…
-
- 24 replies
- 4.2k views
-
-
இதன் கேள்வி வடிவிலான உள்ளடக்கம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஏனையவர்களும் படித்து ரசிக்க இங்கு இணைக்கிறேன். அனுராதபுரத்தில் உயிர்க்கொடை தந்து உலகதிரத் தமிழர் தலைநிமிரச் செய்த தற்கொடை வீரர்களின் தாக்கத்தில் உதித்ததாய் இருக்கலாம் இக்கவிதை... என்றே நான் நினைக்கிறேன். முட்கள் அ.பாலமனோகரன் முட்கள் எப்போது தோன்றின? முதலில் தோன்றியவை முட்கள்தானா? இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க இயலாத உயிர்க் கலம் ஒன்று தான் தாக்கப்படுகையில் ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும். இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்த எதிர் முனைப்பு …
-
- 1 reply
- 921 views
-
-
சிங்களக்கோட்டையில் சீறியே பாய்ந்த புலிவீரர்களிற்கு காணிக்கையாக. . . . ஏறுது ஏறுது புலிக்கொடி பார் ஏற்றிடுவோர் எம் மறவர் பார் வெற்றியை முத்தமிட்ட வீரர் மாற்றான் பகைமுடித்த தோழர் தோற்காமல் நின்ற தமிழர் கூற்றவனை கொன்றழித்து காற்றிலே கரைந்திட்ட புலிவீரர் அன்று உற்றார் உறவினரை இழந்தோம் வேற்று மனிதராய் வாழ்ந்தோம் - அந்த கற்கால வாழ்க்கை கழிந்ததடா - கண்முன்னே பொற்கால வாசல் தோன்றுதடா வலிகள் தாண்டி வலிமை தாங்கி வழிகள் பல கண்டோம் எம் கதியை எண்ணி கலங்கியதில்லை - தினம் விதியை வென்று நின்றோம் பொறுமை போர்த்தி போர்க்களம் வென்று புதுமைகள் பல செய்தோம் தலைவன் வழியிலே தடைகள் பலவுடைத்து தமிழனாய் தலைநிமிர்ந்தோம் அன்னியசக்தியின்…
-
- 6 replies
- 1.7k views
-
-
பணத்திற்காய் சீதனச் சந்தையில் உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும் ஆண் ஜாதியே- நாம் உனக்காய் குரல் கொடுக்கவா? இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம் சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்... பெண்ணே விழித்தெழு! பேரம் பேசி தனது வாழ்க்கையை விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா? அவமானம்..... அவமானம்.... கேவலம் கேவலம் உன் நிலை கேவலம் பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன் நீ மட்டும் எந்த வர்க்கம்? நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள் மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள் பணம் செலுத்தி,பல் இளித்து பஞ்சனை நாங்கள் தேடவில்லை மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்.…
-
- 34 replies
- 6.4k views
-
-
புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி காலப் பெரு வெளியில் - ஈழக் கதை எழுதும் இளைய தேவரீரே! தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை தரணிக்கு விட்டுச் சென்ற தமிழ்மானப் புதல்வர்களே! வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே! கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும், இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும் சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும். நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும், இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது. வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து, விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர். இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங…
-
- 9 replies
- 2.6k views
-
-
நீ கேட்கும் போதெல்லாம் என் கவிதைகளை தந்துகொண்டே இருக்கிறேன் ஏதாவது ஒரு கவிதையை படித்துவிட்டாவது என்னைக் கேட்பாய் என்ற நம்பிக்கையில் * தினமும் நீ என்னை பார்த்தும் பாராமல் போகிறாய் அதையும் பார்ப்பம் பாரமல் பார்க்காம எத்தனை மட்டும் பார்க்கப் போறாயென்று * சொன்னா கேக்க மாட்டிங்களா என்றதை கேக்கிறதற்காகவே தினமும் மழையில் நனைந்து வரலாம் * ஒரு இரவாவது நீ தூங்குவதை தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான் கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ * நான் தொடர்ந்தும் உனக்காகவே கவிதை எழுத வேண்டும் என்பதில் எவ்வளவு ஆசை உனக்கு என் கவிதையை படித்துவிட்டு யாரு எழுதிய கிறுக்கலுக்கு …
-
- 1 reply
- 787 views
-
-
நீ வரும்வரை என்னை எவரும் கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில் கவனிக்காததென்று எதுவும் இல்லை அதற்காகவாவது உன்னோடு கூட வரலாம் நான் * உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது * தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை தடவித் தடவித்தான் என்னையே நான் தூங்க வைக்கிறேன் * உன்னை நிற்க வைத்து யார் புகைப்படம் எடுத்தது அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கல்லவா கால் வலிக்கிறது * நீங்க தூங்கவே மாட்டிங்களா என்கிறாய் நான் தூங்கினால் என்னை உன் மடியில் இருந்து தூக்கிவிடுவாயே -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 950 views
-
-
அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…
-
- 4 replies
- 1.2k views
-
-
பாயுது வேங்கை பதறுது...சிங்களம்.. பாரடா தமிழா பாரடா.. இந்த சரித்திர வெற்றிக்கு.. உதிரங்கள் ஊற்றிய மறவனைப் பாடடா.. வெகுண்டது வேங்கை.. வெடிக்கின்றபோது... தமிழன் வெற்றிக்குத் தடைகள் ஏது.. சீரிய தவைவன்... கூறிய பாதையில்.. போரிடும்..புலிகளைப் பாடு... தமிழனின் மானத்தை காத்திட உயிர் தந்த வித்துடல்.. ஆடையைக் கலைந்தாய்.. தமிழ் விழிகள் சிந்தும்.. கண்ணீர் மூடும்... அம்மணமேலுடை ஆகும்.. உணவைப் பறித்தாய்.. உயிர்கள் தவிக்க.. உயிரைப் பறித்தாய்.. உன் மத்தம் சிரிக்க.. இதுதான் கரிகாலன் அடி.. இப்போ சிரிடா சிரி... இருக்குது..பின்னூட்டமுனக்கு... இது வெறும்.. முன்னோட்டக் கணக்கு.. எத்தனை உயிர்கள் போனாலும்.. சத்திய வேள்வியில் வ…
-
- 14 replies
- 3k views
-
-
மலர்களின் அழகில் களித்திருப்போம் வேர்களின் வலிகள் புரிவதில்லை மரங்களின் நிழலில் குளித்திருப்போம் வேர்களின் தியாகம் புரிவதில்லை மண்ணுக்குள்ளே அவை புதைந்திருக்கும் எங்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஒவ்வொரு முறையும் உங்கள் மரணத்தின் போது நான் மெளனித்துப் போகிறேன் கூனிக் குறுகித் தலை குனிந்து!
-
- 6 replies
- 1.8k views
-
-
அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்... பனித்துளிகள் படர்வதனால்... நான் ஏக்கப்பட்டும் பூக்களைப் பறிப்பதில்லை.. சலங்கைகள்.. அடிபட்டுக்கொள்வதை.. தலையாட்டி ரசிப்பவன்.. விமர்சகன்.. மழைத்துளி விழுந்து வழிந்து.. ஓடாவிட்டால்.... நதிகள் பாவம்.. இரவில் மட்டும் பெருமையடிக்கும்.. மின்மினிப்பூச்சிகளுக்கு.. அருந்ததி..நகர்வது.. தெரிவதில்லை.. என் திருவிழா நாட்கள்.. என் செல்வத்தைக் கரைப்பதில்லை.. இதயத்தை.. தந்தை சொன்னது போல்.. நண்பர்கள்..துன்பத்தில்.. உதவிட வரவில்லை உயிர் விட வந்தார்கள்.. கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல்.
-
- 18 replies
- 2.4k views
-
-
அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தை போல் எனை கூட்டிச் சென்றாயே * என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ * நீ எழுதிய முதல் கவிதை நான் ஒவ்வொரு பத்திரிகை குப்பைத் தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன் * உன்னை விட தொட்டால் சிணுங்கி பரவாயில்லை நீ பேசினாலே சிணுங்கிறாயே * பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா என்று கேக்கிறாய் இல்லையென்றால் நீ எனக்கு தேவதையாய் தெரிந்திருக்கமாட்டாய் -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.5k views
-
-
பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …
-
- 4 replies
- 2.3k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆண்டு இங்கு எட்டாச்சு...!! எப்போ நீ பிறப்பே என்று தான் இங்கு ஒரே பேச்சு...!! இதயத்து அறைகளிலே இளம்பிஞ்சே உன்முகம் தான்... என் கந்தகக் கருப்பையில் ஃபீனிக்ஸாய் எழுவாயா??? விரதமும் வேண்டுதலும் - உன் வரவைச் சொல்லலையே...!! வாடகைத்தாய் வாங்கக்கூட காசுபணம் எனக்கிலையே...!! சோதனைக்குழாய் முறைக்கும் - முதல் சோதனையிங்கு பணத்திலாமே?? சொச்ச ரொக்கமில்லையினா சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!! உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என் உயிரே தவிக்குதிங்கே...!! நஞ்சுரைக்கும் வல்லூறால் - என் நெஞ்சு மருகி விம்முதிங்கே...!! ஆண்டுபல போனாலும் - உன் வரவு கனவில் தான் நிஜமாச்சு...!! 'ம்மா'-னு நீ…
-
- 9 replies
- 3.4k views
-
-
மெதுவாகப் பேசலாம்... அரசியல் பேசினால்.. அடுத்த அறைச்சுவரும் கேட்குமாம்..ஏன்.. நமக்கு வம்பு... மௌனிகளாயிருப்போம்... யாரங்கே.. பேசவே பயப்படும் பேடிகள்.. இவர்கள்.. என்ற உண்மைகளை சத்தமாய்.. உள்ளே உறைப்பது.. வேறென்ன் செய்ய.. சத்தமாய் பேசிவிட்டால்.. கூட இருப்பவன்தான்.. குழி பறிக்கிறான் என்பது.. மரணத்தருவாயில் மனதறியும்.. தமிழன் காப்பியங்களிலும்.. இலக்கியங்களிலும்தான்.. உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்.. இன்றோ இழிநிலை நோக்கியல்லவா நடக்கிறான்... ஒப்பற்ற வீரன்.. தலைவனாய்க் கிடைத்தும்.. உருப்படத் தெரியாமல்.. கஞ்சாக்கும் காசுக்கும்.. சோரம் போன துரோகிகள் பாதி பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்த பாவிகள் பாதி.. …
-
- 5 replies
- 1.5k views
-
-
தும்மலுக்கு மருந்தெடுக்க போனவன் குண்டுமழையில் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தான் பிணமாக * கொள்ளி வைக்க யாரும் மிஞ்சவில்லை ஒரே குண்டில் குடும்பமே பலி * குழந்தையில் வீட்டில் ஊர்ந்து பழகியது உதவி செய்கிறது குண்டுவிமானம் வருகையில் தெருக்களில் ஊர * பத்து மாதம் சுமந்தவளும் இறந்து போகிறாள் பதினைந்து நிமிடம் சுமக்க முடியாத விமானத்தின் குண்டுகளால் * எனக்கும் யோதிடம் தெரியும் என் சாவும் குண்டுகளால்தான் எந்த குண்டால் என்பதைத்தான் கணிக்கமுடியவில்லை * குண்டுகளை தயாரிப்பவர்களே நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி, தங்கையோடு பிறந்ததில்லையா...? -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.4k views
-
-
7ம் ஆண்டு வகுப்பறை மேசையில் முதல் முதலாக கிறுக்க ஆரம்பித்தேன் இன்றும் கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் கண்ணில்படும் கரும்பலகையிலும் விளம்பர சுவர்களிலும் பேருந்து இருக்கையிலும் பிடித்த மரங்களிலும் ரசித்த உலக அதிசயங்களிலும் கிடைக்கும் வெற்றுக் காகிதங்களிலும் உன் பெயரோடு என் பெயரை எனினும் இன்றுவரை என் பெயர் கிறுக்கலாகத்தான் தெரிகிறது நான் கவிஞனான பிறகும் ஆனாலும் உன் பெயரே எனக்கு பிடித்த கவிதையாகவே இன்றும் இருக்கிறது -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.5k views
-
-
காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....
-
- 15 replies
- 2.5k views
-
-
உன்னோடு ஓடிக்கொண்டிருந்த நதியாக நான் இருந்த போது ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது ஏனோ குளமாக தேங்கிவிட்டேன் ஆனாலும் என்னைச் சுற்றி உன் நினைவென்னும் குளக்கட்டுகளே உன்னோடு ஓடியதும் நானே உன்னோடு உருண்டதும் நானே உன்னோடு விழுந்ததும் நானே உன்னோடு கலந்ததும் நானே ஆனாலும் நீ நானில்லாமலே சேர்ந்துவிட்டாய் வாழ்க்கை எனும் கடலில் நான்தான் உன்னை நினைத்தே தேங்விட்டேன் குளமாய் இருந்தாலும் யார் வீட்டு குழம்பிலாவது நீயும் ஒரு நாள் உப்பாகலாம் நானும் ஒரு நாள் நீராகலாம் அப்போதாவது உண்மை சொல்வாயா..? ஏன் என்னை விட்டு சென்றாயென்று -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
உன் மீது நான் கொண்ட காதலை இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும் உனக்காய் எழுதிய கவிதைகளை அச்சடித்திருந்தால் புதிய காவியம் ஒன்று கிடைத்திருக்கும் நீயோ.... காதலால் எனக்கு அழகானாய் கவிதையால் எனக்கு நிலவானாய் ஆனாலும் நீ நினைத்த மாதிரியே என் இதயத்தை ஒத்திகை மேடையாக்கி உன் காதல் அபிநயங்களை அழகாய் பழகிச் சென்று விட்டாய் இதில் என்ன ஆச்சரியம் என்றால் கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர் இல்லமாலே நீ நீயாவே நடன ஆசிரியையானதுதான் திருவிழா நெரிசல்களில் தொலைத்துவிட்டாலும் தேரில் பவனி வந்து எனக்குத் தரிசனம் தருவது உன் நினைவு மட்டும்தான் மறப்பதா..? உன்னையா...? நானா..? பேசாமல் என்னை நீ செத்துப்போ…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழத்து இளம் பாடகன் சுஜித்ஜீ ராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது. listen to the song at ; http://radiospathy.blogspot.com/2007/10/2007.html http://uk.youtube.com/watch?v=JBD8qHHm_TI வாழ்வும் வரும் சாவும்; வரும் ஏதோ ஒருநாள் விடிவும் வரும் கொஞ்சம் பொறு ஓய்ந்தே இரு நாளைய நாளில் வரமாய் வரும் வீதியிலே நடக்கிறேன் விதியை நினைக்கிறேன் தமிழனாய்ப் பிறந்து நான் தினமும் தவிக்கிறேன் எங்கள் நாட்டு விடுதலை ஆனதோ விடுகதை எங்கள் மண்ணில் ஏது இல்லை இருந்தும் ஏதும் இல்லை தினம் தினம் உயிர்க்கொலை உயிர்க…
-
- 6 replies
- 1.6k views
-