கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கண் மூடி உள் நினைக்க படம் போல உன் நினைவு விரியும்! தடம் மாறி பல மனம் மாறி அலைந்த என்னை உன்னோடு அணைத்துக் கொண்டாய் உள்ளத்தில் அமிர்தத்தை தெளித்துச் சென்றாய் வனம் போல் இந்த மனம் பல மிருகங்கள் அதில் நடமாடும் உன்னிரு கரம் பட்டதாலே அவை சாந்தமாகிச் சாதுக்களான விந்தையென்ன? உருவத்து அழகில் மயங்குவது சில மாதத்தில் முடியும் உள்ளத்து அழகில் வாழ்நாள் உள்ளளவும் மயங்கலாம் என்று உன்னாலே அறிந்தேன்! நில்லாத உயிர் நிலைக்காத வாழ்க்கை எல்லாமே புரிகிறது நீயில்லாத வாழ்வை நினைக்க நினைவெல்லாம் சுடுகிறது! திட்டுவது போல் பாசாங்கு செய்வதும் சற்றே என் முகம் வாடினால் 'என்னடா' என்றென்னைத் தழுவி அணைப்…
-
- 9 replies
- 1.6k views
-
-
மனிதா..மனிதா... கலைக்கு விசிறியாய் இரு... "தல"க்கு விசிறியாய்.. இராதே... திரைக்கு விசிறியாய் இரு.. விஜய்க்கு விசிறியாய் இராதே.. தமிழ்த்தாய் செத்துக்கொண்டிருக்கிறாள்.. அவளுக்கென இல்லையாம் ஊர் சுற்றும்.. உல்லாசப்பிறவிகளுக்கு ஊரெல்லாம் மன்றம். தமிழன் பட்டினியில் இறப்பெதெதிர்த்து.. தீக்குளிக்க ஆளில்லை.. தலைவனென்றும் கட்சியென்றும்.. தன்னிலை மறந்து தீக்குளிக்கிறான்.. அண்ணன் தம்பியாயிருந்தும்.. யாரோ நடிகனுக்காய்.. வீட்டினுள்ளே.. அடித்துக்கொண்டு..தலையுடைத்து
-
- 12 replies
- 1.7k views
-
-
ஓவியங்கள் செந்-தமிழ் ஓலைக்காவியங்கள் உள்ளத்து உணர்வுகளின் உன்னதக் கோலங்கள் கண்கண்ட கவிதைகளை கவர்ந்திடும் வண்ணமிட்டு கலை நயம் கலந்து காட்சியாக விரியவிடும் எண்ணற்ற சிந்தனையை-மன எண்ணத்தில் தீட்டி விடும் மாசற்ற புதுமை மொழி மண்ணுலகில் மகிமை வரி பட்டறிந்த பண்டிதனும் பாரறியா பாமரனும் பார்த்து அறியும்-இனிய பன்னாட்டு தொடர்பு மொழி எதுகை மோனையில்லை எடுகோள் எதுவுமில்லை தூரிகை தூவிவிடும் தூய்மையான கவிதை
-
- 12 replies
- 9.9k views
-
-
சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..! அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்? ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான் இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்! பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு உய்யாரமாயுலவ உயர்த…
-
- 1 reply
- 929 views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீதான் கைதியாய் வாழ்கிறாய் * நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டாமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உ…
-
- 1 reply
- 822 views
-
-
மேக விசும்பலால் கண்ணயற, கடைவானைப் பார்த்தேன். துருத்திய மூக்கின் நுனி குருதி பட்டு சிவந்தது இடி மீறும் குண்டொலியால் செவிபிளந்து ஊன் கதறியது நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது. "ஏ! கடவுளே! பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் அண்ட மீன்களை ஒருமுறை இவ்வேழை நோக்கவியலாதா? நாளுமோர் மீன் முளையும் நானும் போய் நுழையவியலாதா?" நீட்டிய உயிர்க்கிளை மீதொரு நாட்டிய விழி புதைய விண்ணுலகன் நாவில் பிரிந்து எச்சில் ஊறியது என்னுள் செவிப் பறைகள் அறைந்து கொண்டது. செல்க! செல்க! மானிடனே செல்கவே! புவிக் கோளம் தாண்டி அக்கினியில்லா மீன்களைத் துண்டிக்கச் சென்றேன் என்னில்லப் புறாவின் சிறகெடுத்து. சாந்தமில்லா மீன்கள் வீணி…
-
- 2 replies
- 1.1k views
-
-
படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு : http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 12 replies
- 2.5k views
-
-
அண்ணன் புலம்பெயர்ந்த நாட்டில் சட்டி பானையோடு சண்டை பிடிக்கிறான் தம்பி உள்ளான் சண்டைக்குள் என்பதால் * எல்லாம் இருக்கிறது புலத்தில் எனக்கு எல்லாமுமான என் குடும்பத்தை தவிர * ஊரில் இருந்துவரும் கடிதம் பிணப்பாரமாகவே வருகிறது இறந்தவர்களின் செய்தியோடு வருவதால் * புலத்தில் பட்டினி கிடந்து உழைத்தும் என் குடும்பத்தின் பசியைத்தான் போக்கமுடிந்தது தூங்கவைக்க முடியவில்லை * புலத்தில் வயிறு முட்ட உண்டாலும் வீசவில்லை அம்மாவின் கைவாசம் * நேத்தி வைத்த கோயிலிலும் செல் விழுகிறது யாரிடம் போவேன் என் வீட்டை காப்பாற்ற * அங்கு விழுந்தால்தான் வெடிக்கும் செல் இங்கு விழுகிறதா என்றாலே இறக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜம்மு பேபி மிகவும் விரும்பி படிக்கும் கவிதைகளிள் புதுவைஇரத்தின துரை அண்ணாவின் கவிதைகள் தான் முதலிடத்தில் அடங்கும் அந்த வகையில் இந்த பக்கத்தில் நான் புதுவைஇரத்தின துரை அண்ணா எழுதிய கவிதைகளிள் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளை இணைக்கிறேன் !!அவர் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு அதிலும் எனக்கு பிடித்த கவிதைகளை இங்கே இணைக்கிறேன் .........முதலாவதாக நான் தெரிவு செய்யும் கவிதை "காதல் பற்றிய ஒரு கவிதை" எவ்வளவு அழகான வரிகள் கற்பனை என்பதை நீங்களும் வாசித்து பாருங்கள்!! காதலிக்க கற்று கொள்!! காதலே உன்னதம் காதலே பரிபூரணம் காதலே நேசிப்பின் "நிலாவரை" ஆதலால் மானுடனே! காதல் செய்வாய். காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்' யாரை காதலிக்கலாம்? …
-
- 0 replies
- 2.6k views
-
-
என் காதலை... சொல்லவிடாது.. என்.. கரிய வண்ணம்.. தடுக்கின்றதே... இதயமெல்லாம் நீ.. பரந்த பின்னும்.. என்.. ஆசையைச் சொல்ல பெண்ணே... பயமாக இருக்கிறதே.. கையை நீட்ட சொல்லி.. இந்த வண்ணம்.. எப்படி ஒத்துப்போகும்.. என நீ கேட்டுவிட்டால்.. என் மௌனத்தைத் தாங்கிக் கொள்வேன்.. உனக்காக என்றால்.. மரணத்தையும் வாங்கிக்கொள்வேன்.. ஆனால் நீ இல்லையென்று சொல்வதனை மட்டும் என்னால் உள் வாங்கிக் கொள்ள முடியவே முடியாது.. சொல்லாத காதல்.. செல்லாத காசாம்.. இருந்துவிட்டுப் போகட்டும்.. நிராகரிக்கப்பட்ட.. காசோலையாக.. என் காதல் மாற வேண்டாம்.. காதல் வங்கியில்.. அபராதம்.. பெற்று என்னிதயம்.. சுக்குநூறாய் உடைய வேண்டாம்.. இப்படியே.. உன் எ…
-
- 13 replies
- 2.4k views
-
-
இருத்தல் பெருந்தொகையில் இடம் பெற்ற கவிதைகளில் ஒன்று. பெருந்தொகை பற்றி விமர்ச்சகர் பேராசிரியர் மு.நிதியானந்தன் நிகழ்த்தும் விமர்சன உரை தீபம் தொலைக் காட்சியில் வெள்ளிக்கிளமை இடம் பெறுகின்றது. நேரம் இங்கிலாந்து 8.30 - 9.30, கண்ட ஐரோப்பா 9.30 - 10.30. வருகிற சனிக்கிளமை 13.10.2007 இருந்து 18.10 வரை பரிசில் இருப்பேன். இலக்கிய நண்பர்களைச் சந்திக்க விருப்பம். ஜெயபாலன் இருத்தல் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு. இனி வானத்துச் சிப்பி வயிற்றுள் மிழிருகின்ற …
-
- 5 replies
- 1.5k views
-
-
நான் படித்தவனல்ல படிபிக்கப்பட்டவன் அனுபவங்களால். உங்க ஊர் பள்ளியில்தான் நீங்கள் பட்டம் பெற்று இருப்பீர்கள் நான் ஏடு துவக்கியதுதான் சொந்த ஊர் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்ததே மூன்று பாடசாலையில். யுத்தம் என்பதை நீங்கள் பாடத்தில் படித்திருப்பீர்கள் அனால் நான் யுத்தத்துக்குள் பள்ளி சென்றவன். குடை இல்லை என்பதற்காக பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள் நான் குண்டு மழைக்குள்ளும் பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன். நீங்கள் காகிதத்தில் செய்த ரொக்கேற்றுகளைத்தான் வகுப்பறையில் பறக்கவிட்டு இருப்பீர்கள் நான் குண்டு விமானங்கள் சுற்ற சுற்ற படித்திருக்கிறேன். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்னைப்போல் அயுத வெடிசத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
உயிர்கள் அற்ற உடல்களோடு உறங்கி இருக்கிறேன் பிணங்கள் எரியும் வெளிச்சத்தில் நிலாரொட்டி உண்டிருக்கிறேன் குண்டு மழைக்குள்ளும் குடையோடு இடம்பெயர்ந்திருக்கிறேன் அசைக்கமுடியாத ஆணிவேரின் உச்சியிலிருந்து சுனாமியால் தப்பியிருக்கிறேன் இருபத்தி நான்கு மாதங்கள் இருட்டறையில் சிவராத்திரி மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன் பெயர் தெரியாத பனிமலை தேசத்தில் பிணமாய் உருண்டிருக்கிறேன் கைப்பாசை உதவியோடு ஐந்துநாள் பட்டினியை பிச்சை எடுத்து முடித்திருக்கிறேன் விழுந்தால் மீனுக்கு நான் பாய்ந்தால் எனக்கு நான் தெரிந்தும் கப்பல்விட்டு கப்பல் பாய்ந்திருக்கிறேன் ஆனால்..... என்னை மூச்சுவிட்டுக் கொண்டே முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால் மூ…
-
- 3 replies
- 981 views
-
-
கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?
-
- 16 replies
- 6.5k views
-
-
காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன். சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!! எல்லாமே நீ தானடி!! கவனக் குறைவாக நான் எனது வாழ்க்கை காரை ஓட்டி அக் சிடண்ட் பட்ட போது உயிர்ப் பிச்சைதந்த Air Bag.. கயவர்கள் எனைப்பிடித்து அதளபாதாளத்தில் தள்ளிவிடும் அகால நேரங்களில் என் சுவாசத்திற்கு உதவும் ஒட்சிசன் சிலிண்டர்.. எனக்குள் இருக்கும் வியாதிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்.. நான் சோர்வடையும் நிலையில் instant ஆக அன்பைப் பொழிகின்ற ATM மிசீன்.. என் உடலை செழிப்புடன் வைத்திருக்க ஊக்குவிக்கும் Fi…
-
- 24 replies
- 3.6k views
-
-
முன்றில்வேம்பு வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன். பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன். கோவிற்பொங்கலில் நீறு பூத்த தணற் பாவைகளாய் வெளியேநின்ற சிறுவரை எனது பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு அதிர்ந்தமனசை 'அது அது அவர் அவர் ஊழ்வினைப்பயன் ' என தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன். எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன் அம்மணமாக மாமா இருந்ததை கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன். ஆண்குறிவிறைக்க நோய…
-
- 7 replies
- 2.3k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் லண்டன் ஸ்ரைலில் பி எஸ் 3 வாங்க பிளாசா போனேன் பிற்சாவோடு நிற்கையில் லப்டப் அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் உன்னைக் காண ஐ ஆர் கொண்டு ஸ்கான் செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் போல திறில்லாய் இருந்தாய்..! புளூருத் சிக்னலாய் என்னைத் தந்தேன் மொபைல் போன் கமராவாய் நீ என்னைப் பார்த்தாய். ஐபொட் ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி 4இல் இசைதேடி எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு. ஜி பி எஸ் நவிகேற்றராய் நீ வந்ததால் கை வேயில் ரவுண்டெபவுட் தேடி அலையும் நிலை களைந்தேன். டிஜிற்றல் கமராவாய் நீ அருகில் காணும் காட்சிகளோ பல மெகா பிக்சல் அளவுகளில். என்ன மாயமோ நானறியேன் சடின்லி.. பென்ரியம் 4 காட்டிஸ்க் போல ஸ…
-
- 9 replies
- 2.2k views
-
-
உனக்காக இருக்கவா..? உன்னோடு இருக்கவா..? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு * நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக * நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் * நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் * நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்..? -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.7k views
-
-
வாயாடியாய் இருந்தும் அமைதியாய் வந்தமரும் புதிய மாணவிபோல் வந்தமர்ந்தாய் என் இதய வகுப்பறையில் நீ. * என் முதல் வரி நீ காதலித்தையும் மறுவரி நீ கைவிட்டதையும் எப்படியாவது காட்டிக் கொடுத்துவிடுகிறது என் கவிதைகள் * பலரோடு இருக்கையிலும் தனிமையே உணர்கிறேன் நீ இல்லாததால் * உனை மாதத்தில் மூன்று நாட்களில் என் மடியில் தாலாட்டியதுதான் ஞாபகம் வருகிறது தாய்மார்களை காணுகையில் * வானவில்லாய் நீ வந்து போனாலும் வானமாய் காத்திருக்கும் என் கவிதைகள் எப்போதும் உனக்காக -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.6k views
-
-
என்ன உலகமிது..ஐயா என்ன உலகமிது... பசியினில் மனிதன் பரிதவித்தே.. தூக்கிலிட்டு..வாழ்விழந்து போகிறதே... பார்க்க.. கேட்க மனிதத்தின் உதவியின்றி.. ஒரு சமுதாயம்.. உணவின்றி சாகிறதே.. உணவின் மேலே.. உருளுது ஒரு உலகம்.. உணவிற்காக உயிரைக் கரைத்து அலையுது ஒரு உலகம்.. பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை.. ஏற்றமும் இறக்கமும்.. ஏனிந்த உலகில்-நல் மாற்றங்கள் வருமோ மனிதனின் வாழ்வில் உனக்கான உணவை.. அளவாக அருந்து.. பிறர்க்காக உனது.. உணவினைப்பகிர்ந்து ஏழைக்கு உதவ நாளைக்கு என்றேன்.. இ…
-
- 17 replies
- 15.3k views
-
-
காலைச் சூரியனை கையெடுத்துக் கும்பிட்டு.. மாலைச் சந்திரனை வீழ்ந்து வணங்கி.. சுழன்றடிக்கும் சூறாவளிக்கு பயந்து நடுங்கி... மின்னலும் இடியும் மரணத்தின் தூதென்று ஓடி ஒளித்து.. தீயதும் சுடுவது முன்வினைப் பயனென்றும் பூமியது அதிர்ந்து பிளப்பது பாவிகள் அழிவென்றும் இயற்கைக்குள் உள்ளதை விளங்காமல் உளறிய கணங்களில்.. எதிர்வினை சொல்லி பகுத்தறிவென்று வாய் வீரம் பேசி வீண் பொழுது கழித்திடாமல் ஆயிரம் கதை கட்டி அலைந்து கொண்டிராமல்.. மூளையைக் கசக்கி விண்கலம் கட்டி விண்ணுக்கு அனுப்பி வீர சாதனை படைத்த திருநாள் இன்று..! "புட்னிக்" எனும் மனிதப்பட்சி ரஷ்சிய மண்ணிருந்து விண்ணேகி அரை நூற்றாண்டும் கடந்தாயிற்று. மனித வரலாற்றின் புது …
-
- 16 replies
- 2.7k views
-
-
புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்! பகுதி - 01 http://www.ijigg.com/songs/V2A4GBAFPB0 பகுதி - 02 http://www.ijigg.com/songs/V2A4GBBEP0 பகுதி - 03 http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0
-
- 9 replies
- 2.2k views
-
-
ஓயுதல் தீருமடா புதியதோர் ஒளி பிறக்குமடா! பாயுதல் இன்றிப் பதுங்கியிருந்த புலி பாய்ந்தே சீறுமடா! சீயத்தின் பிடறி கிழித்து விளையாடி காயங்கள் ஆற்றுமடா! சிங்கத்தை கொடியில் தாங்கியதால் வீரம் வருமோடா? அடே மோடா... பாடங்கள் இன்னும் பல இருக்கு படிக்க! கூட்டங்கள் பல கூடி கூவிப் பிதற்றி நின்றோரெல்லாம் ஓட்டங்கள் விடுவர் ஆட்டங்களின்றி தலைவன் போடும் திட்டங்கள் கண்டு திசையெங்கும் வியந்தே நிற்குமடா! பயந்தே நடுங்கிப் பகை யோடுமடா விரைந்தே எமக்கொரு தனி ஈழம் உருவாகுமடா!
-
- 4 replies
- 1.3k views
-
-
நீ வீசும் காற்றுக்காய் காதலால் துளைக்கப்பட்ட குழலே என் இதயம் * நீ எனக்குக் கொடுத்த தண்டனை எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த என்னைக் காப்பாற்றுகிறேன் என தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான் * நீ என்னில் முளைத்ததும் நான் உன்னில் முளைக்காமல் போனதிலும் தெரிந்து கொண்டது ஒரே விதையென்றாலும் வேர்விட எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை என்பதுதான் * உன்னால் புகைக்கப்பட்ட சிகரட் நான் என்றாலும் உனக்கு முன்னே இறந்துபோன பாக்கியசாலி நான் * என் வாழ்க்கை எனும் பேருந்தில் இறங்கிப் போன மறக்க முடியாத சாரதி நீ -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-