கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விழித்தெழு தமிழா விழித்தெழு- நீ விடியலின் எல்லையில் விழித்தெழு... பகையவர் கோட்டைகள் சரித்திடுவோம்- புலியென ஆகியே புறப்படுவாய்... இது வரை இருந்தாய் இது போதும் இனியும் எழுவாய் புயலென நீயும்... பதுங்கும் புலியது பாய்வது முறையே படுக்கைக்கு போகுமா பாருக்கு உரைப்பாய்... கிளி பிள்ளை வந்தின்று கிண்டல்கள் பொழியுது பார்த்தே சிரித்து புலியது பதுங்குது... அர்த்தங்கள் புரிவாய் அணியாய் திரள்வாய் பறையது அடித்து பட்டாசு கொளுத்து.. பொய்யா பகையதின் பொய்யதை எறிவாய்... உன் தமிழ் வெல்லும் உரித்துடன் ஏற்ப்பாய்...
-
- 12 replies
- 2.3k views
-
-
-
இன்றைய கவிதை 06.08.2007 ஆண் பெண் படைத்து அங்கம் வேறாக்கி அந்தரங்க உறவு காட்டி அற்புதங்கள் செய்தவன் யார் ? பார்க்கும்போதே ஈர்க்கும் சக்தி பார்வையாலே பேசும் மொழி கண்ணை மூட கற்பனை கண்திறந்தால் அற்புதம் படைத்தவன் யார் ? சிறிய குறிப்பு இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம் நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 9.5k views
-
-
திரு முருகு - வ.ஐ.ச.ஜெயபாலன் தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது. நிலா முகத்தி மான்விழியாள் முல்லைச் சிரிப்பழகி தேன் மொழியாள் என்று சொன்ன கவிதை எல்லாம் பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள். வேங்கை மரத்தடியில் உடைந்த புல்லாங்குழல் பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும் கண் சிமிட்டிக் கண்ணனும் வந்தவர் என்கிறாள் ஏளனப் பணிவு இதில் வேறு எள்ளல் சிரிப்பு. வெறிக்கும் சோம மது புறக்கணிப்பின் ஆலகால விசம். எல்லார்க்கும் தேன் கமழ்ந்து எட்டாத குறிஞ்சி மலர். விந்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…
-
- 7 replies
- 1.5k views
-
-
போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு மனசில் கனவின் கரு விதைக்கும் தூக்கத்துக்கு வழிவிட்டு எழுந்து போடா சூரியனே. பாவமடா உன் நிலவும் கணணியிலே குந்தி இணையத்தில் அழுகிறதோ மூன்று தசாப்தங்கள் தூங்காத தாய்களது தேசத்தை நினைக்கின்றேன். படை நகரும் இரவெல்லாம் சன்னலோரத்துக் காவல் தெய்வமாய் கால்கடுத்த என் அன்னைக்கு ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை. பாசறைகளை உடைத்து உனக்குப் புட்பக விமானப்…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஏழையவன் பசியால் துடிக்க சீபோவென துறத்தி விட்டு துடிக்கம் ஏழை தனை ரசித்துக்கொண்டு கற்பனையுருவத்திற்கு பக்தியென்னும் உயிர் கொடுத்து தன் மனக்கல்லில் பதித்தான் மூடநம்பிக்கை பயத்தை பக்தியென்று.. புரணங்கள் புதைத்து அன்பை சிதைத்து ஆடம்பர வாழ்வை கடவுளுக்காய் கொடுத்து பக்தியென்னும் உச்சம் சொல்ல ஏழையவன் சிரிந்தான் படைத்தவன் தத்துவம் என்னிடத்தில் தீண்டாத ஜென்மங்களாய் நானிருக்க எத்தனை எத்தனை கற்பனைகள் இவ்வுலகில் கடவுளக்காய்....
-
- 11 replies
- 1.9k views
-
-
முகாரி ராகங்கள் பாறைக்கு பச்சைப் பட்டுடுத்தி அழகு பார்க்கும் அலங்காரங்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டின் புதிய பரிநாமங்களின் புதிய பரிமாணங்கள் தேசத்திற்காய் தேகத்தையும் மறந்து தேயிலையிற்கை கறுக்கும் அவர்கள் பெருந்தோட்ட பயிர்களின் தலைமுறைகள் கொழுந்தெடுக்கவென குழந்தையையும் தொழுவத்திலிடும் மலிவான கூலிகள் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் முகவரிகளுக்காய் போராடும் ஆயுதம் ஏந்தா போராட்ட காரர்கள் இவர்கள் முயற்சி இல்லா முகாரி ராகங்கள்
-
- 2 replies
- 1.1k views
-
-
நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!
-
- 3 replies
- 1k views
-
-
-
உலக மென்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் அறிவு கொண்டு அழிவையே நேசித்து போலி கொண்டு நிம்மதியழித்து இன்பம் தேடி துன்பம் நேசித்து காலம் தனை காகிதக் குப்பையாக்கி மரணம் கொண்ட மாய வாழ்வின் உதிர்ந்த இதழின் கற்பனை கொண்டு வாழ்வின் சரித்திரத்தை இறந்த உயிரின் இரத்தத்தில் எழுதுகின்றோம்
-
- 18 replies
- 2.6k views
-
-
தமிழா தமிழா திருந்திக் கொள்ளடா... உன்னைத் திருத்திக் கொள்ளடா.. அடுத்தவனை அழித்து வாழ்ந்த உன்தன் இரக்கமற்ற பேய்க்குணத்தினை நீயும் மாற்றிக் கொள்ளடா... விடிந்திடும் பொழுதினில் மலர்ந்திடும் ஈழத்தில் நீயம் மனிதனாகடா... உன் இனத்தையே அழிக்கும் உன் குதர்க்க குணத்தினை நீயும் விலக்கிக் கொள்ளடா... உன் முதுகினில் தேக்கிடும் அழுக்கினை நீயும் கழுவிக்; கொள்ளடா.. உலகம் விழித்துக் கொள்ளுமடா... இல்லையேல் இப்பூமி கருகிப் போகுமடா... தமிழா திருந்தப் பார்.....
-
- 1 reply
- 921 views
-
-
03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…
-
- 1 reply
- 750 views
-
-
01.04.2002 அன்று கரவை பரணீ என்ற பெயரில் யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இன்று இங்கு உறங்கிய தமிழினம் இன்று விழித்துக் கொண்டது. ஊடுருவிய சிங்களம் அங்கு ஆட்டம் காணுது விடுதலைவேண்டிய வீரர்கள் விரைந்து வருகின்றார்கள்.... இங்கு உறங்கிடும் தங்கள் உறவுகளை விழிக்கச் செய்கின்றார் கல்லறைக்குள் உறங்கிடும் சகோதரர்கள் கண்விழித்தெழுகின்றார் தலைவன் காட்டிய பாதையில் சென்ற நம் வீரர் வெற்றி பெறுகின்றார்.. அடிமை விலங்கு ஓடித்து தமிழன் அங்கு பறக்கத் தொடங்கி விட்டான் பட்டினிச் சாவு ஒழிந்து அவர்கள் பாடத் தொடங்கி விட்டார் காசிற்காய் Nபுhராடிய சிங்களம் இன்று சிலையாகி விட்டது... நாட்டிற்காய் போராடிய ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
மகிந்தா ஆட்சிக்கு மரணம்... அழிவின் நிலையில் படைகளே அதனால் உதட்டில் பொய்களே எத்தனை காலம் பொளிந்திடுவீர்-உமை எள்ளி நகை தமிழ் ஆடிடுவார்... காலம் இன்னும் கடக்கவில்லை கரிகாலன் படைகள் தோற்கவில்லை பொறியினுள் வீழந்தார் பகையினரே- இனி பொறிதட்டி நீரும் கொளுத்திடுவீர்... இல்லை புலியென்றா முழங்குகின்றீர் இன்னலில் வீழந்தே கசங்கிடுவீர் காட்சிக்கு வந்த கந்தகங்கள் கரிகாலன் படையது தந்ததுவோ...?? கோமாளி கூட்டத்து கோதபாயா- நீ கொளுத்தியெறிந்த பொய்யிதுவோ...? எம்தமிழ் இதையின்று நம்பவன்றோ..? எம்மிடை பந்தாய் எறிந்தாயின்றோ..? ஆணையிறவினில் தந்ததுவை ஜயா நீரும் மறந்தீரோ...?? அலரிமாளிகை அலருமினி அடியதை கண்டுனி பதறுமினி குந்திட பங்கரை தேடுவாரே…
-
- 7 replies
- 1.3k views
-
-
அன்று நாங்கள் அமைதியாக வாழ்ந்தோம் மருதை குறிஞ்சி பhலை முல்லை நெய்தல் என நிலங்களை ஐந்தாக பிரித்து அழகான எம் நிலத்தில் அமைதியாக வாழ்ந்தோம் நெத்தலி மீன்க்ள் துள்ளி விழையாடும் கடற்கரையில் துள்ளி மகிழ்ந்தோம் குடலை நெற்கள் கதிர்விட அக மகிழ்ந்தோம் தடிமன் வந்தால் பாட்டி செய்த ஒடியற் கூழில் பஞ்சாய் பறந்து விட நிம்மதியாய் வாழ்ந்தோம் முற்றத்து செவ்வரத்தம் பூக்களில் முகம் விழித்தோம் துலா கப்பியில் தண்ணி அள்ளி சோம்பல் போக்கி முகம் கழுவினோம் தொட்டாற் சிணுங்கியை தொட்டு மகிழ்ந்தோம் பட்ட காயத்திற்கு வெட்டொட்டியால் கட்டுப்போட்டோம் நாலு மணிப்பூக்களில் நேரம் பார்த்தோம் சாலைகளில் நடக்கும் போது சுகம் விசாரித்தோம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
விழி மூட முடியவில்லை விடியும் வரை கண்ணே!! விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே விடியலுக்காய் உன்னை தேடி........... வில்லங்கங்கள் பல உண்டு வில்லன்ளும் பல உண்டு விடயம் அறிந்த பெற்றோர் உண்டு விட்டு வைப்பார்களா எம்மை........... விதி விட்ட வழி என்று கண் கலங்காதே வியாக்கியானங்கள் பேசாதே விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!! விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!! விரியத் துடிக்கு பூவே நீ விருப்பத்தோடு காத்திரு வீரத்தோடு நான் வருவேன் விரைவில் உனைக் கைப்பிடிக்க............. எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட…
-
- 44 replies
- 4.6k views
-
-
-
கடல் கடந்தபோதும் - எம் இனம் கனம் குறையவில்லை சாதி மதபேதத்தில் நாம் இன்னும் சபலத்துடன் அலைகின்றோம் விரிசல்பட்டு இனம் வீதியிலானபோதும் வீரியம் குறையவில்லை இன்னொருவன் எமை ஏன் அழிப்பான் எம்iமையே நாம் இன்றே அழித்திடுவோம்
-
- 5 replies
- 1.1k views
-
-
எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது
-
- 8 replies
- 1.3k views
-
-
இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …
-
- 24 replies
- 3.5k views
-
-
தமிழ் வென்றிடப் போகுது..! வெல்லத் தமிழினி வெல்லும் எனும்படிச் சொல்லத் தகுமொரு சூழல் வருகுது! மெல்லத் தமிழனை மெல்லத் துணிகிற புல்லர்ப் படைமிசை பூசல் பெருகுது! உள்ளத் துணிவொடு நிற்கும் தெளிநிலை கொள்ளத் தமிழினம் எங்கும் திரளுது! கள்ளத் தனமொடு காடைத் தனமதும் தள்ளப் படுமெனக் காலம் புகலுது! கொல்லைப் புறவழி வந்தனர் என்பதும் கொள்ளைச் செயல் புரிகின்றனர் என்பதும் கிள்ளுக் கீரைகள் நாமிலம் என்பதும் வெள்ளிடைக் குன்றென நன்கு விளங்குது! குள்ள நரிகளும் கூலிப் படைகளும் கள்ளிச் செடிநிகர் காவிப் பிக்குகளும் எல்லை மிகக்கடந்(து) ஈனம் புரிவது சொல்லுந் தரமின்றிச் சோகம் தருகுது! துள்ளித் திரிந்திடும் பள்ளிப் பருவத்துக் கொள்ளை அழகுக் குழந்தைகள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
-
- 47 replies
- 5k views
-
-
வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…
-
- 24 replies
- 7.4k views
-