கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…
-
- 15 replies
- 21k views
-
-
கவிதைகள் ----------------------------------------------- எனக்கு வந்த கடிதம்---------------------------------- அன்பானவளே நீ நலமாக இருக்கின்றாயா---- நீ எப்பவும் படிப்புபடிப்பு என்று செல்கின்றாய்- நான் நீ போகுமிடமெல்லாம் வருகின்றேன் அது உனக்குத் தெரியாது ஆனால் நீ நல்ல பெண் ஏதோ உன் அழகு என்னை மயக்கியது? உன் நல்ல குணம் நடைகள் எனக்குப் படித்தது எவ்வளவோ பணம் இருந்தும் நீ ஒரு சராசரி மனிதர் போல இருப்பாய் --- என் காதலை என்னிடம் நேரில் சொல்ல எனக்குப் பயமாக இருக்கின்றது என் காதலை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய் என எனக்குத் தெரியும் இருந்தாலும் நான் நேரில் சொல்லாட்டியும் கடிதம் முலமாக எழுதி அனுப்புகின்றேன் நீ அத…
-
- 141 replies
- 17.7k views
-
-
புத்தன் காந்தி யேசு பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக தமிழா நீ புத்தன் ஆக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உனக்கு மொட்டையடித்து காவியுடை மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ காந்தியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சுட்டு விட்டு கோவணம் மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ யேசுவாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சிலுவையில் அறைந்துவிட்டு ஒரு துண்டு துணி மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ புலியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை பார்த்து தலை வணங்கி விட்டு போவான்.
-
- 9 replies
- 2.2k views
-
-
-
யாழ்கள உறவுகளுக்காக மீண்டும் காதல் மொழி இசைத்தொகுப்பில் இருந்து ஓர் புதிய பாடல் உங்களுக்காக... http://vaseeharan.blogspot.com/ இங்கே அழுத்துங்கள் பாடலைக் கேட்கலாம் பல்லவி பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு காலையிலும் தினம் மாலையிலும் நீ காதல் மொழியைப் பேசு (2) மலர்களின் மேலே மனம் மோதும் மௌனம் கூட கவிபாடும் பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு இதயக் காதல் மொழியில் கொஞ்சம் கொஞ்சும் இசை கலந்தால் நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி சரணம் 1 காதல் மொழியைப் பேசும் இதயம் கோடி முறை பிறக்கும் உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து புத்தம் புது உயிர் வளர்க்கும்(2) எழுத்தின் வடிவம் உணரும் முன்பே எழுந்தது காதல் மொழி …
-
- 22 replies
- 2.8k views
-
-
புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
இனி எம் காலம்!. தெறிக்கும் பொறி பறக்கும் புலி படை கண்டு பகை கலங்கும்! வெளிக்கும்! இனிச் சிரிக்கும்-கதிர் தமிழர் கிழக்கில் உதிக்கும்! எதற்கும் இல்லை கலக்கம்!எட்டு திசையும் இங்கே வெளிக்கும் பதுங்கும் புலி பாயும் இனி பொறுப்பதில்லை!. விலங்கு உடைக்கும்! வெடிக்கும் சிங்களக் கூடம்! வேங்கை அடக்கும்! பேரினத்தீயை! எடுக்கும் ஓட்டம் மகிந்த கூட்டம்! பறக்கும் எம் கொடி தலை நகரில்!
-
- 6 replies
- 1.4k views
-
-
மனத்தின் ரணங்களால் மரணத்தின் வாசலில் மண்டியிட்டு தினமும் கண்ணீர் வடிக்கும் நான் ஒரு பெண் என்னோடு கதை ஆனால் வதைக்காதே நான் ஒரு நிலவு என்னை ரசித்திடு தொட நினைக்காதே நான் ஒரு கிளி எனை பறக்கவிடு அடைக்க முயலாதே நான் ஒரு வாசமுள்ள பூ மோர்ந்து பார் கசக்கி எறியாதே நான் ஒரு புல்லாங்குழல் என்னை வாசித்திடு முறித்து எறியாதே நான் ஒரு புரியா கவிதை எடுத்து படி மடித்து வீசாதே நான் ஒரு நெருப்பு எரிய விடு அணைக்காதே தயவுசெய்து தள்ளி நில்லு எனை அணைக்காதே மரணத்தின் வாசலில் நான்
-
- 14 replies
- 2.4k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். இறைவனுக்கு என்னோடு வா! இறைவா! என்னோடு வா! அழைக்கின்றேன் - உன்னை துதிக்கின்றேன் உன்னை அருள் தரும் வாழ்வு - இனி புதுசுகம் தரும் வாழ்வு மனிதத்தை விதைத்து நேசத்தை வளர்ப்போம்!! மாயத்தைக் களைந்து உண்மையை உடுப்போம்!!! போர்களை ஒழிப்போம்! புதுமைகள் செய்வோம்! பாவங்களை மன்னிப்போம்! பகைவர்களை நேசிப்போம்!! பயந்துவிடாதே! மரங்கள் இல்லை இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். அன்னை எனது ஜனனத்திற்காக பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ உன் விரல்களை பற்றிக் கொண்டு - தான் நடை பழகினேன் - இன்று உனக்கு முன்பாகச் செல்வதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் அசைவுகளைக் கண்டு பேசத் துவங்கியவன்!! இன்று உன்னை விடவும் பேசுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் விரல்களைக் கொண்டு எழுதப் பழகியவன்-இன்று உன்னை விடவும் எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! எத்தனை இரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...! வலிகளை மட்டும் கற்றுத் தந்தவன் நான்.... என் வலி கண்டதும்.... - நீ ஏன் துடிதுடித்துப் போகிறாய்? தாய் என்பதாலா...?
-
- 2 replies
- 950 views
-
-
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்! கடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... எண்ணற்ற சினிமாக்களால் உன் புத்தி ரேகை மழுங்கியது........ லாட்டரிச் சீட்டுகளைச் சுரண்டியதாலேயே உன் உழைப்பு ரேகை உருக்குலைந்தது........ தங்கைகளின் திருமண ஏற்பாட்டில் அலைந்து திரிந்ததில் உன் திருமண ரேகையும் தொலைந்து போனது..... முதுமை ரேகை மட்டுமே முறியாமல் உள்ளது....... கொஞ்ச நாட்கள் கழிந்தால் உன் குறையெல்லாம் போய் விடும் போ! -கவிஞர் கலைவேந்தன்
-
- 3 replies
- 2.4k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
-
- 5 replies
- 1.3k views
-
-
நீயும்..! நானும்...! நிலாவொளியில் நீல கடலின் நீள் கரையில் நினைவுகள் மறந்து நீயும் நானும் பாலை வனத்தில் பற்றியெரியும் வெய்யிலில் வெற்றுக் கால்களுடன் நீயும் நானும் மாலை நேரத்து மஞ்சள் வானத்து மறையும் சூரிய அழகில் நீயும் நானும் எரிமலை வாசலில் எகிறி பாயும் எரிகுழம்பில் எமை மறந்து நீயும் நானும் வாச மலர் தோட்டத்தின் வண்ண மலர்களிடையே பாச பிணைப்பில் நீயும் நானும் இருபகை நாடுகளின் இடைவிடா யுத்தத்தின் இடை நடுவே நீயும் நானும் இந்த உலகத்தின் அத்தனை முரண்களிலும் இரு முரண்களான நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காத்திருப்போம் ஒன்று சேர..!
-
- 56 replies
- 6.8k views
-
-
நீ சொல்லும்வரை நானும் நினைக்கவில்லை மனசெல்லாம் பாரம் ஆனாலும் அது கனக்கவில்லை. எவளைப் பார்த்தாலும் ஏதாவது எழுதிப்பார்ப்பது ஒரு காலம்! ஆவி உயிர் ஆன்மா முன்றும் ஒன்றானாலும் ஒருத்தியிடம் ஒன்றிப்போனேன் இந்தச் சில காலம். என் பழைய கவிதைகளையெல்லாம் தூசு தட்டி படித்து ரசித்தாள்! "கவிதை ஒன்று கவிதை படிக்கிறது" எங்கோ படித்ததை சொல்லிக்காட்டி அசத்தினேன்! ஆர்ப்பாட்டமான மகிழ்ச்சியில் இன்னும் சில கவிதைகளுக்காய் எண்ணங்களைப் போட்டு கசக்கினேன். தொடர்ந்து வந்த இருவருக்குமான தனிமையில் முத்தங்களுக்கான முனைப்புக்களில் சில முன்னகர்வுகளுடன் வெற்றியின் உதயக்களிப்பில் நான்... இடையில் கைமறித்தவள் "யாரந்த கவிதையில் வந்தவள்!" "எவள் அன்ற…
-
- 9 replies
- 1.9k views
-
-
-
- 47 replies
- 5k views
-
-
தீயின் வம்சமடா நாம் தீமை கண்டால் தீது செய்தால் தீக்கிரையாக்கிடுவோம் விழிகள் திறந்தே உறங்கிக்கொள்வோம் விடியல் வரும் நாள் கண்ணயர்ந்து கொள்வோம் உரசிப்பார் பற்றிக்கொள்வோம் பிரிதல் ஒன்றும் பிரியப்போவதில்லை இணைவோம் எம் லட்சியம் ஈடேறும்போது அரசியல் ஆட்டம் காண எம் ஆட்சி பீடம் ஏற இணைவோம் புரியும் அன்று பிரிவு ஏன் - எம்முள் பிளவு ஏன் ? கிழக்கில் தோன்றும் இருளெல்லாம் - ஓர்நாள் வடக்கில் வெளிச்த்திற்கு அஸ்த்திவாரம் ஓட ஓட விரட்டி எம்மை கொன்றொழித்த ஓர் காலம் ஓடுஓடுவென அரசை கொன்றொழிப்போம் எம் காலம் கருநாகம் படையெடுத்தால் கலங்கிப்போகாதே - அதன் கடிவாளம் எம்மிடத்தே கவலை கொள்ளாதே வீசும் காற்றும் வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!
-
- 6 replies
- 1.3k views
-
-
தற்போது களத்தில் காதல் வாசம் வீச்தொடங்கியுள்ளது. ஜம்முவிற்கும் காதல் வந்திடுச்சு அதனால் எனது பழைய கவிதைகளை இங்கு தூசு தட்டி ஜம்முவை வரவேற்கின்றேன் 01 தேய்ந்து போகின்றேன் நீ நடந்த பாதையெங்கும் விழி வினா வீசி காத்திருக்கின்றேன் தாண்டிச்சென்ற பூங்காற்றே மீண்டும் வருவாயா ? காத்திருப்பதில் எத்தனை ஆணந்தம் பூமி காத்திருருக்கின்றது மழையின் வருடலிற்காய் பூக்கள் காத்திருக்கின்றன வண்டின் தீண்டலிற்காய் வானம் காத்திருக்கின்றது நிலவின் நெருக்கத்திற்காய் அன்பே நான் காத்திருக்கின்றேன் உன்தன் உறவிற்காய் பத்துமாதம் அன்னை காத்திருந்தாள் இப் ப+மிமீது உன்னை பூப்பறிக்க வைக்க பல வருடம் நான் காத்திருக்கின்றேன் என் பள்ளியற…
-
- 8 replies
- 1.4k views
-
-
நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!
-
- 3 replies
- 1k views
-
-
முகாரி ராகங்கள் பாறைக்கு பச்சைப் பட்டுடுத்தி அழகு பார்க்கும் அலங்காரங்கள் பத்தொண்பதாம் நூற்றாண்டின் புதிய பரிநாமங்களின் புதிய பரிமாணங்கள் தேசத்திற்காய் தேகத்தையும் மறந்து தேயிலையிற்கை கறுக்கும் அவர்கள் பெருந்தோட்ட பயிர்களின் தலைமுறைகள் கொழுந்தெடுக்கவென குழந்தையையும் தொழுவத்திலிடும் மலிவான கூலிகள் இந்த நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்புகள் முகவரிகளுக்காய் போராடும் ஆயுதம் ஏந்தா போராட்ட காரர்கள் இவர்கள் முயற்சி இல்லா முகாரி ராகங்கள்
-
- 2 replies
- 1.1k views
-
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
விழி மூட முடியவில்லை விடியும் வரை கண்ணே!! விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே விடியலுக்காய் உன்னை தேடி........... வில்லங்கங்கள் பல உண்டு வில்லன்ளும் பல உண்டு விடயம் அறிந்த பெற்றோர் உண்டு விட்டு வைப்பார்களா எம்மை........... விதி விட்ட வழி என்று கண் கலங்காதே வியாக்கியானங்கள் பேசாதே விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!! விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!! விரியத் துடிக்கு பூவே நீ விருப்பத்தோடு காத்திரு வீரத்தோடு நான் வருவேன் விரைவில் உனைக் கைப்பிடிக்க............. எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட…
-
- 44 replies
- 4.6k views
-
-
01.04.2002 அன்று கரவை பரணீ என்ற பெயரில் யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இன்று இங்கு உறங்கிய தமிழினம் இன்று விழித்துக் கொண்டது. ஊடுருவிய சிங்களம் அங்கு ஆட்டம் காணுது விடுதலைவேண்டிய வீரர்கள் விரைந்து வருகின்றார்கள்.... இங்கு உறங்கிடும் தங்கள் உறவுகளை விழிக்கச் செய்கின்றார் கல்லறைக்குள் உறங்கிடும் சகோதரர்கள் கண்விழித்தெழுகின்றார் தலைவன் காட்டிய பாதையில் சென்ற நம் வீரர் வெற்றி பெறுகின்றார்.. அடிமை விலங்கு ஓடித்து தமிழன் அங்கு பறக்கத் தொடங்கி விட்டான் பட்டினிச் சாவு ஒழிந்து அவர்கள் பாடத் தொடங்கி விட்டார் காசிற்காய் Nபுhராடிய சிங்களம் இன்று சிலையாகி விட்டது... நாட்டிற்காய் போராடிய ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…
-
- 7 replies
- 1.4k views
-