கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பார்த்தவுடனே பாசமாய் பண்பாக அக்கா என்றழைத்தாய் பயத்துடனும் அன்போடும் புன்னகையோடு எனை அண்மித்தாய் அணமித்த உன்னை இன்புடன் அரவணைத்தேன் தம்பியென பாசத்தோடும் கண்டிப்போடும் பாதுகாத்தேன் தம்பியுனை இருவீட்டில் பிறந்திருப்பினும் இருவரும் உறவுகள் ஆனோம் அன்றாடம் என் வீட்டுக்கு வந்தாய் அனுதினமும் உந்தன் வீட்டில் நான் பிறந்த நாளின் போது பாயாசம் ஊட்டி விட்டதை மறக்க முடியாது நான் மயானம் செல்லும் வரை எவ்வளவோ கலகலப்பாக எப்பொழுதும் இருந்த நமக்குள் யார் கண்பட்டதோ தெரியலியே யாம் இருவரும் எதிரிகளானோம் என்று தணியும் இந்த கோபம் என்னால் முடியவில்லை உனை நீங்க முயல்கின்றேன் உனை அணைக்க முரட்டு கோபம் எனை தடுக்குதே என் கூடப்பிறவாத தம…
-
- 19 replies
- 27.1k views
-
-
-
புதிய பாதைகள் படைப்போம் அழகிய பூமி, அதைத் தொடும் எல்லையற்ற வானம் இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள். அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள் இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில் அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்? என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்? ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம் ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம் எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய் உதித்து விந்தைகள் புரிந்த கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம் பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…
-
- 2 replies
- 865 views
-
-
கவிப்பேரரசு கண்ட கருப்பு நிலா அளவாகத்தீயெரிந்தால் அதனை விளக்கென்போம் அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம் அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால் களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து ம் தற்போதைய எமது நாட்டு நடப்பிற்கும் இந்த கவிதை மிகப்பொருத்தமாக இருக்கின்றது. பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழங்கதை. இன்று பொறுத்தவர் இழந்து நிற்பதுதான் மிச்சம். புரிந்தால் அனைவரும் அணிதிரள்வோம். விடுதலை என்னும் சிறகை விரிக்கவே விரைந்து உதவுவோம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்ச்சைக்குரிய கோடநாடு எஸ்டேட் குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். "காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே" பாரதிதாசன் பாராட்டிப் பாடினார் உன்னை இப்படி! அதற்கு நேர் எதிராக இப்போது நடக்கிறாய்; அது எப்படி? ஆட்சியிலிருந்த அதிமுகவின் அராஜகப் பட்டியலில் சூழ்ச்சியால் கவர்ந்து கட்டியது கோடநாடு அரண்மனை! மலைப் பகுதியில் மண் வீடு கட்டுவதற்கே மலை மலையாய் விதிமுறைகள் தொல்லை! மாளிகை யொன்றைக் கட்டியதற்கு மறுப்பேதுமில்லை தடுப்பாருமில்லை! மளமளவென்று மாளிகையும் எழுப்பி- மரங்கள் இரண்டாயிரத்தையும் வெட்டியே பரப்பி; மவுனம் சாதித்தே மழுப்பிடலா மென்றும் தருணம் பார்த்தே தட்டிக் கொண்ட…
-
- 2 replies
- 1k views
-
-
பெண்ணே நீ.. மலரல்ல வாட... மானல்ல இரையாக... கண்ணல்ல கரைய.. நிலவல்ல எட்ட வைக்க... தேனல்ல எறும்பு மொய்க்க.. வண்டல்ல ஏமாற..! பெண்ணே நீ மதுவல்ல மயங்க... தண்ணியல்ல அடிக்க.. மஞ்சமல்ல தூங்க.. தங்கமல்ல கிண்ட... புதையலல்ல தோண்ட... மாவல்ல பிசைய... "குவிட்" அல்ல போர்த்திக்க.. பொன்னல்ல பதுக்கி வைக்க தேசமல்ல கட்டிக் காக்க...! பெண்ணே நீ புயலல்ல வீச.. எரிமலையல்ல வெடிக்க.. பறவையல்ல பறக்க.. கூண்டுக் கிளியல்ல விடுவிக்க.. ஈழமல்ல சுதந்திரம் வாங்க..! பெண்ணே நீ சரக்கல்ல திருட... சக்கரையல்ல ருசிக்க.. பிகரல்ல மாட்ட... பாடமல்ல படிக்க.. முத்தல்ல மூழ்கித் தேட சிப்பியல்ல திறக்க..! …
-
- 27 replies
- 5.6k views
-
-
காபன் இரு ஒட்சிசன் துணை சேர ஒரு மூலக்கூறாகி அந்தரிக்கும் வழியில் இலை வாய் வசம் அகப்பட்டு பச்சைய உருமணியின் பஞ்சணையில் தண்ணியடித்து தான் கிடக்க.. சூரியக் கதிரின் நீல சிவப்பு விளக்குகள் ஊக்கமூட்ட தாக்கம் நடக்க நிலை குலைந்து குளுக்கோசானது..! குளுக்கோசும் சும்மா கிடக்காமல் இணைந்து சுருண்டு மாப்பொருளாகி கலக்கிட்டங்கியில் சேமிக்கப்பட.. உணவுச்சங்கிலியில் காத்திருந்த சேவலும் பேடும் காதல் கொண்டு களித்திருந்த வேளையில் களைப்பு மிகுதியில் பசியெடுக்க தானியமாய் கொத்தி உண்டு மகிழ்ந்தது..! சேவலின் உணவுக்கால்வாயில் நொதியப் பீரங்கிகள் கொண்டு உடைபட்டு அகத்துறிஞ்சப்பட குருதியில் அடைக்கப்பட்டு ஈரலுக்குள்…
-
- 12 replies
- 1.8k views
-
-
இயற்கையால் இணைக்கப்பட்ட நம் உறவு ஒன்றோடு ஒன்று கலந்திட்ட அழகிய வாழ்க்கைத் தோட்டம்! இங்கே வாழும் நாம் எப்போது சிந்திப்போம்? ஆண்கள் தப்பா? பெண்கள் தப்பா? சந்தேகப் பட்டிமன்றம் போட்டு வாதிட்டு வாதிட்டுக் களைத்துவிட்டோம் ஆனாலும் தீர்ப்புகள் மட்டும் மாறி மாறி வந்து போகின்றது நாம் இருட்டுக்குள் வாழ்வதால் வெளிச்சத்தில் சண்டை போடுகின்றோமோ எம் அறிவுக்கண் எப்போதுதான் திறக்கும்? எமக்குள் தப்புகள் வரும்போது மட்டும் நானா? நீயா? என சண்டை போடும் நாம் எப்போது இருவருக்கும் பங்குண்டு என ஏற்றுக்கொள்வோம்? வாழ்கை நொந்து கொள்வதற்கு அல்ல அழகாய் வாழ்வதற்கு இது இருவரும் சேர்ந்தால்தானே முடியும் எப்போத…
-
- 10 replies
- 1.8k views
-
-
அழகிய திருமுகம் பார்த்து சில நொடி சிரித்தேன் மறு நொடி இதயம் புகுந்தாய் …. தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே நான் உன் இதயம் புகுந்தேன் என்று ஏற்க மறுக்கும் உன் பார்வை அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை. கற்பனைகளுக்குள் காலடி வைத்தது எந்தன் இதயம். …. ஒருநாள் பொறுக்க வைத்து மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே. ….. தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை. சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய். பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே ====================================================================== முதல் பார்வையில் வரும் காதல் பற்றி எழுத்து பிழைகளு…
-
- 1 reply
- 3.6k views
-
-
வெல்க தமிழ் இயல்பாய் எழுவாய்! புயலாய் சுழல்வாய்! தமிழா!..... இதுவே முடிவாய் முயல்வாய்! எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க. விழுதுகள் பலமெது? - இது விடை தரும் காலம் அழுது தொழுது அலைந்தது போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம் விரைவீர்! எழுவீர்! வெல்க உரைப்பீர்! அழுகிய பண்டமாய், அனாதிப் பிணங்களாய், குருதிவடி நெஞ்சமாய் குமுறியது போதும். எழுவீர்! எழுவீர்! எண்திசை வெளிக்கும் எங்களின் எழுச்சியில் எல்லாமே சிறக்கும். அழகுறு அன்னையின் விழி நகை மலர, உலகொரு சொல்லதில் உயர்வதைப் பகர, தெளிவுறு தலைவனின் திறனது வெல்ல எழுவீர்! எழுவீர்! வெல்லும் தமிழ் சொல்ல. ப…
-
- 5 replies
- 3.3k views
-
-
காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?
-
- 5 replies
- 1.4k views
-
-
-
இது நான் எழுதியதல்ல இந்த லிங்கையும் தொலைத்து விட்டேன் மன்னிக்கவும் வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன் ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன் தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன் எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன் மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன் உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது கற்களும் முட்களும் காலடி நெருட புற்களும் புழுதியும் பாதம் மறைக்க கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து-தன் விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக காகமும் கழுகும் உண்டிடவென்று எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் புமி …
-
- 1 reply
- 1k views
-
-
மயூரனுக்கும் இணைந்து நடக்கும் தோழர்களுக்காகவும், செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே! எண்திசை நிமிரும் தமிழனின் மானம் ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்! தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே! எங்கே மைந்தரே! தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும் உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள். உங்கள் திருவடி நீவித் தைலமிடவும், வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும் அன்னையர் உள்ளோம். அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம். சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும் புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே! வழிகோலி வைக்கின்றீர்கள், வாழ்த்தெடுத்து விழிகசிந்து நி…
-
- 7 replies
- 1.5k views
-
-
இது எதோ ஒரு காதலர் தினத்தில் எழுதிய கவிதை .... பெண்ணென்று பிறந்து கண் முன்னே அங்கம் அங்காங்கே காட்டி நடந்து கொல்லாமல் கொல்கின்றார் அம்மா கொழும்பில் எம் குலத் தமிழ்க் கிளிகள்! பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் என்று பறந்து கொட்டும் பனியில் கொட்டாவி விடக்கூட மறந்து அண்ணனுடன் அப்பா சேர்த்து அனுப்பும் பணம் கையில்லாச் சட்டை வாங்கவும் அங்கம் கொப்பளிக்கும் ஆடை வாங்கவும் உதட்டுக்குச் சாயம் அடிக்கவும் இன்னும் பலப்... பல... செய்யவும் வீணாகக் கரைகின்றது. இந்த 'மேக்கப்' பின் பின்னால் உள்ள உண்மை உருவம் அறியாது நீண்ட 'கியூ' வில் நிற்கின்றாரம்மா பாவம் எம் இளைஞர்! சி…
-
- 18 replies
- 2.5k views
-
-
காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? அன்புக்கு ஏங்கும் இதயங்களாக நாம் உறங்கிட முற்றமில்லை பசித்திடின் புசிக்கவில்லை மானம்காகாக்க உடைகூட இல்லை பசி எமக்கு நண்பன் தரை எமக்கு மெத்தை மழை எமக்கு குளியல் எம் இருள் களைந்து ஒளியேற்ற உதவிக…
-
- 20 replies
- 2.9k views
-
-
கடலோடு பிறக்கும் அலைக்கு கரையோடு மரணம்.. காற்றோடு பிறக்கும் தென்றலுக்கு தோப்போடு மரணம்.. பூவோடு பிறக்கும் வாசத்திற்கு அந்தியோடு மரணம்.. வானோடு பிறக்கும் நிலவுக்கு நிழலோடு மரணம்.. மலையோடு பிறக்கும் நதிக்கு கடலோடு மரணம்.. மனதோடு பிறக்கும் ஆசைக்கு நிராசையோடு மரணம்.. கருவோடு பிறக்கும் குழந்தைக்கு மூப்போடு மரணம்.. காசோடு பிறக்கும் மனிதனுக்கு நோயோடு மரணம்.. புத்தியோடு பிறக்கும் கல்விக்கு ஆயுளோடு மரணம்.. ஆணாகிப் பிறக்கும் எனக்கு பெண் காதலோடு மரணம்.. பெண்ணாகிப் பிறக்கும் அவளுக்கு கனவோடு மரணம்..!
-
- 13 replies
- 2.1k views
-
-
வரியில்லா மொழி ஒலியில்லா பேசும் அவள் கண்கள் ********* ****** படபடக்கும் பட்டாம் பூச்சியின் இறக்கைகள் பார் அங்கே அவள் இமைகளில் ********************** ஏன் இத்தனை மொழிகள் இந்த உலகத்தில் அவள் கண்களால் பேசும் இந்த மெளன மொழியே போதும் *********************************** என் பெயரின் இனிமை எனக்குப் புரிந்தது நீ... என் பெயர் சொல்லி அழைத்த போது.. ***************** வான் மதியே தேய்ந்ததுவோ உன் மதிமுகம் கண்டதாலா? ************* கவிதைகள் என்றார்கள் உன் பெயரை நான் கிறுக்கியபோது **************** வரி -என்பது எழுத்துருவைக்குறிக்கும்
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜ“ரணிக்க முடியவில்லை; திரும்பத் திரும்ப ரணங்களின் ஜ“ரணம். நாங்கள் சாதாரணங்கள். எங்களுக்கு ஏன் சதா ரணங்கள்?
-
- 4 replies
- 1.3k views
-
-
கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
-
- 7 replies
- 1.5k views
-
-
கோடைத் தாக்குதலில் உதடுகள் உலர்ந்த இலைகளை வாரி யணைத்துக் கொண்டது ஒரு ஆலமரம். பீறிட்ட ஞாபங்கள் ஒன்று சேர மெல்ல கிளைமேல் படர்ந்தேன் ஒரு பாம்புபோல. ஒரு கிளையினுள் நுழைந்த அக்கணமே கண்டேன். அங்கே பல சிற்பங்கள் செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சிறு வலியோடு தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. முன்பொருநாள் எனக்கும்.. "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்?" அதே அதிகாரத் தோரணையில் கேள்வி கேட்கப்பட்டது. என் பதிலை எதிர்பாராது உளியை கையில் எடுத்துக்கொண்டான் என்னையும் செதுக்கிய சிற்பி. நான் ஞாபகங்களுடன் வெளியேறினேன். அன்று அழுத விழிகளுடன் அதே கிளையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதால்தான் இன்று அழகிய சிற்பமாய் ஆதவனாய் நான்....…
-
- 3 replies
- 1.2k views
-
-
இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
அன்பே.... உனது வாழ்க்கை இடிந்து போகாமல் இருப்பதற்காகவே உனக்காக கட்டிய தாஜ்மஹாலை இடிக்கிறேன்... ஏனெனில் நீ இப்பொழுது இன்னொருவனின் மனைவி அல்லவா...?
-
- 3 replies
- 1k views
-
-
உயர்ந்த மரம் அடியோடு -சாய குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய தோகை மயில் அழகாய்- ஆட ஆனால் இந்த ரோஜா மலரே எப்போது பூப் பூத்தது ? ரோஜாக்குள் அந்த முள் - அந்த முள்ளுக்குள் - நீ உனக்குள் நான் எதற்குள் நாம் ?
-
- 19 replies
- 2.2k views
-