கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
UNSUNG EULOGY பாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இணையதள வரலாற்றில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஒரு அரிய வாயப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை கச்சேரிகளை அடுத்த மாதம் முதல் வாரம் வரை உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம். உலகம் முழுவதும் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தமிழர்கள் தினமலர் இணையதளத்தை தொடர்ந்துபார்த்து, படித்து வருகின்றனர். இந்த நேரடி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பை அனைவரும் கண்டு களிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கின்னஸ் சாதனை: சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக இசை…
-
- 0 replies
- 1.5k views
-
-
உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…
-
- 0 replies
- 1.3k views
-
-
காதல் என்றால் என்ன ...? காதலித்துப்பார் புரியும் ...! ^ காதலிப்பது எப்படி ...? காதலோடு பார் வரும் ...! ^ காதலோடு பார்ப்பது ...? அன்போடு பார் புரியும் ....! ^ அன்போடு பார்ப்பது....? பிரபஞ்சமாக பார் வரும் ....! ^ பிரபஞ்சம் என்றால் ....? பஞ்ச பூதங்களின் கூட்டு .....! ^ பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....? பஞ்சபூத கூட்டே மனிதன் ....! ^ மனிதன் என்றால் ....? மனிதம் நிறைத்த உள்ளம் ....! ^ மனிதம் என்றால் ....? பகுத்தறிவோடு வாழ்வது ....! ^ பகுத்தறிவு என்றால் ...? இத்தனை கேள்வியும் கேட்காமல் தானே கண்டறியும் அறிவு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை
-
- 0 replies
- 854 views
-
-
இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.
-
- 0 replies
- 679 views
-
-
சிங்களமே உனக்கு சொல்கிறேன் நீ எங்கள் சொந்தமில்லை வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை விட்டு போய்விடு உன் வீட்டுக்கு வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும் ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும் பொன்சேக பொடியாகிவிடுவான் கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா மகிந்தவின் வாடகை வீட்டிலா உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே எண்ணாதே பேய்த்தனமய்..வெறீ நாயே தருகிறோம் உனக்கு காலக்கெடு எண்ணி எண்ணி சாவையெடு
-
- 0 replies
- 930 views
-
-
குடு முஸ்தபாவின் குடு அடி...(சிறையிருந்து [i] சிறகடித்து பறந்த என்னை சிறகொடித்து சிறயடைத்தீர்..... இந்தோ சீறியே வருகின்றேன் சிறு காலம் பொறுத்திடுவீர்... உறுமியே உலவிடுவேன் ஊடகத்தில் ஏறிடுவேன்.... வன்னி புலி புலியென்று வசையதை பொழிந்திடுவேன்.... எண்ணில்ல இடர்களை எண்ணி உமக்கு தந்திடுவேன்.... அறிவாழி என்னையா நீர் அடைத்து வைத்தீர்....??? என்ன யான் செய்தேன் என்று என்னை நீர் இழித்தீர்.... வங்கியில் ஒரு கொள்ளை சின்னதாய் ஒரு சின்ன கொலை.... கள்ள மட்டையில் காசு கறந்தேன் தாலி கொடிகள் தனை அறுத்தேன்.... கன்னியவளை கற்பழித்தேன் இதை விட வேறென் செய்தேன் இது தப்பா..…
-
- 0 replies
- 980 views
-
-
காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆட்சிகள் மாறுகின்றன ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான் கோரத்தின் காட்சியும் அதுவே கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, பரிதாபத்தின் காட்சியும் அதுவே பட்ட துயருக்கு நீதி வேண்டும் பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும் நம் செல்வங்கள் வாழ வேண்டும் நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் நம் தமிழீழ கனவும் மலர வேண்டும் மீரா குகன்
-
- 0 replies
- 817 views
-
-
நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? நன்றி : சேரனின் கவிதைகள் http://www.kala…
-
- 0 replies
- 571 views
-
-
ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.
-
- 0 replies
- 573 views
-
-
Seelan Ithayachandran முகனூல் ஊடாக அடுத்த தீர்மானம்வரை நீதிக்காகக் காத்திரு. குளம் வற்றும்வரை பொறுத்திரு. நிலம் போனாலும் மீட்பர்கள் அதனை பெற்றுத் தருவார்களென்று நம்பிக்கை கொள். நீங்கள் போராடாமலே விடுதலை வாங்கித்தரும் இரட்சகர்கள் இவர்களென்று நம்பு. இப்படியான தரகு மீட்பர்களின் அடிபணிவு கீதம் பலமாகக் கேட்கிறது. பயணித்த பாதை குரூரமும் வன்மமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் தன் முனைப்பும் சந்தேகமும் நிரம்பியதொரு வாழ்வின் இருண்ட பக்கங்கள். அங்கு மகிழ்ச்சியும் இருந்தது துரோகங்களுக்கும் குறைவில்லை. துயரமும் இருந்தது நிலம் மீட்ட நிம்மதியும் இருந்தது. இனிவரும் காலம் பட்டறிவின் பரிசோதனைக் களம். இன அழிப்பின் புதிய பரிமாணங்கள…
-
- 0 replies
- 474 views
-
-
இல்லாதவர்களின் கனவு மீள் எழுத்து : தீபச் செல்வன் அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாட…
-
- 0 replies
- 675 views
-
-
இன்ப மிது வன்றோ ஐந் திரு மாதங்களா யென்மணி வயிற்றில் நிந்தனை யோடே சுமந்தே னென் கருவை -இந் நாள் மட்டுமதை என்குழந்தை யென்றுணரவில்லை நான் பெற்றுக் கொள்ளவுமதை விரும்பிடவில்லை... என் னைபுதைத்து முளைத்தெழுந்த குழந்தாய் நின் சோகக் கருவாய் ஏனிங்கு மலர்ந்தாய் -விண் மழை போலொரு கண்ணீர்க்கதை எனக்குண்டு மனம் விட்டுசொல்லிடவே மனமொன் றிங்கில்லை... ஊர்வாய் களையிழுத்து மூடிடவே எனதுறவுகள் பேர் காப்பாற்றிக் கொள்ள மண்ணிலே -வேர் விட்டு போனதம் கெளரவம் காத்திடவேயென் விடலை பருவமதை வீணாக்கிய விரோதக்கருவிது... மணவாளனது பேருமறியா முகமறியா பேதையாய் கனவினில் ஜொலித்த யென் கற்பனைகள் -என தாசையின் தா…
-
- 0 replies
- 853 views
-
-
பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!
-
- 0 replies
- 602 views
-
-
நெஞ்சிலே ஈரம் கொஞ்சம் இருக்கா ? நம் தாயகத்தில் ,பாலுக்கு அழும் பாலகனை எண்ணிப பார் ,நீ சாப்பிடும் கேக்கு வேண்டாம் ஒரு நேர கஞ்சி யாவது ,கிடைக்கிறதா ? இங்கு அலங்கார கோவில்களுக்கு ,தினந்தோறும் அபிஷகம் , விசேட தினத்தில் விசேடமாக , அங்கு குடியிருக்க குடிசை இல்லை இங்கு பசி வர மாத்திரைகள் அங்கு பட்டினியால் யாத்திரைகள் நீ எதோ தப்பி வந்து விட்டாய் என்று எண்ணாதே , கோழை நீ ? , என்ன செய்வாய் ? போராடி பெறும் தாயகத்தில் என்ன உரிமையிருக்கிறது உனக்கு ? ஒவொரு துளி வியர்வையும் அவன் சிந்தும் ரத்தம் அல்லவா ? அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளியாவது கொடுத்தாயா? ,ஒரு நாள் என் அக்காவின் பேரன் ,என் தாயக திரை படத்தை பார்த்து ,கேள்விகளை கேட்டுவிடு , தன் உண்டியலை (piggy …
-
- 0 replies
- 745 views
-
-
தென்னகம் தந்த காலப்பிழம்பு. மண் தவப்பேறே! மானுடத் திருவே! விடுதலைச் சீற்றம் வெடித்த பிழம்பே! தன் நிலை எரித்த தாய்மைச் செறிவே! தென்னகம் கொண்ட கொள்கைக் குன்றே! என்னகம் தொட்டு எழும் மொழிமெட்டில் உன்னடி நோக்கி என்தலை வணங்கும். உன் இருப்புக்குள் எவ்வளவு நெருப்பு உண்டாய், கண்டு கொண்டோம். கந்தகம் தீய்க்கும் எங்கள் வாழ்வை நெஞ்சகங்கொண்டு நெருப்பாய் ஆனாய். எம்மினம் காக்க தென்னகம் தந்த காலப்பிழம்பே! தொப்புள் கொடியின் தாய்மைப் போரில் உத்தம தத்துவம் சொன்னவனே! நடுவன் அரசை நடுவீதிக்கழைத்து நியாயம் கேட்ட நீதிமானே! நலிந்திடாத் தமிழுனை நாளும் பாடும். ஈழவர் வாழ்விற்கு இளநகை கேட்ட அன்புத்தம்பி முத்துக்குமாரா! எத்தனை ஆயிரம் தோழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நெருப்பு தமிழனின் வாழ்வை கருக்க வந்த பிறப்பு..... முள்ளிவாய்க்காலில் பரிசளித்தாய் வகை தொகையின்றி இறப்பு.... தமிழரின் அடிவயிற்றில் நின்றெரியும் வெறுப்பு.... தமிழன் பட்டினியாம் நீயோ சிங்களனின் அடுக்களையில் நின்றெரிவாய் சிரித்து.... எங்கள் எதிரிக்கு அமைந்துவிட்டாய் அவன் சொல்கேட்கும் செருப்பு.... மறுபடியும் ஓர் நாள் எதிரிகளின் படையெரிக்க அக்கினிக்குஞ்சாய் பிறந்திடுவாய்.... அதைப் பார்த்து எதிரி ஓடிடுவான் உன்னை வெறுத்து.... காவியனின் சிந்தனைகளில் இருந்து.... அன்புடன் காவியன்
-
- 0 replies
- 548 views
-
-
"ஒரு தந்தையின் புலம்பல்" "முதுமையின் வாசலில் காத்து நிற்கிறேன் முதலடி வைத்து உள்ளே போக முறுக்கு மீசை கொஞ்சம் தளருது முழங்கால் மூட்டு வலிக்கத் தொடங்குது!" "தள்ளாட்டம் என்னில் வெள்ளோட்டம் பார்க்குது தனிமை என்னைத் தேடி வருகுது தத்துவம் போதிக்கும் பக்குவம் வருகுது …
-
- 0 replies
- 510 views
-
-
எங்கோ பார்த்தேன் அங்கே தொலைந்தேன் என்பேனே அது இவளைத்தான் என்றோ பார்த்தேன் அன்றே தொடர்ந்தேன் என்பேனே அது இவள் காலடித்தடம் தான் நான் மெல்லிசை ரசித்த முதல் பொழுதொன்று சொல்வேனே அது பிறந்தது இவள் கொலுசில் இருந்துதான் நான் தினம் தினம் இசைத்திடும் பல்லவி இருக்கிறதே அது பிறந்தது இவள் மொனத்தில் இருந்துதான் சூரிய தேவன் ஏவிய கதிராய் எனைச் சுட்டெரித்த கதை சொல்வேனே அது இந்தக் கண்கள் தான் வண்டுக்கு மலர்ந்த வாசமலரையெல்லாம் சூடிக்கொள்ளும் வசியக்காரி என்பேனே அவள் இவள்தான் உன் புன்னகை என்பது என்ன விலை என எனைப் பிறர் கேட்பதெல்லாம் இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான் அப்பாவிய் நான் அன்று அழுது புரண்ட கதை…
-
- 0 replies
- 690 views
-
-
நல்ல நாளு பாத்திருக்கு.... குத்தகைக்கு நாட்டை வைச்சு குண்டுகளை வேண்டி வந்து.... மிச்ச மீதி உள்ளோரையும் மிகையொலியால் அழித்திடவே மெல்ல மெல்ல துவங்கி விட்டார்.... நட்ட நடு நாசியென்ன பட்ட பகல் வேளையென்ன.... பறந்தடித்து ஓடி வந்து பாவிகளை அழித்து போறார்.... நல்ல நாளு பாத்திருக்கு நம்ம வீட்டு ஏவுகணை.... சங்கெடுத்து ஊதி உன்னை சங்கரங்கள் ஆடிடுவார்.... ஆணவத்தில் ஏறி நின்று நல்லா வந்து ஆடிப் போ.... உன்னை அடக்கம் செய்ய எம்மவரும் புதை குழியை வெட்டிவிட்டார்.....!!! வன்ன மைந்தன் -
-
- 0 replies
- 705 views
-
-
காதலின் வடிவங்கள்....... மேல் நாட்டுக் காதலும் நம் நாட்டுக் காதலும்.... ஆர்ப்பரிக்கும் கடலலையில் வேகப்படகில் நின்று விளையாடும் உணர்ச்சியது இந்த மேல் நாட்டுக்காதல் ! அமைதியான ஆற்றினிலே அந்திப் பொழுதினிலே அமைதியாகப் படகுதனில் பயணிக்கும் உணர்ச்சியது நம் நாட்டுக் காதல் ! நெரிசலான கூட்டத்தினில் நகரத்தின் வீதியிலே நிற மின் குமிழின் வெளிச்சத்திலே உலா வரும் உணர்ச்சியது மேல் நாட்டுக்காதல் ! வெண்ணிலவு பார்த்திருக்க வெண் மணலில் கால் பதித்து மின்மினிகள் ரசித்தபடி உலாவரும் உணர்ச்சியது நம் நாட்டுக்காதல் ! வாகனங்கள் சத்தத்திலே இரவில் உறங்கும் உணர்ச்சி அது ! இரவின் நிசப்தத்தில் அமைதியான உறக்கம் …
-
- 0 replies
- 553 views
-
-
ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…
-
- 0 replies
- 619 views
-
-
1947ல் இலங்கையில் சிங்கள ஆதிக்கம் ஏற்பட்டதில் இருந்து இருந்து அதனை நிராகரித்து தமிழ் இன விடுதலைக்காக உயிர்நீத்த சகல கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களுக்கும் இலங்கைத் தமிழர் சமூக விடுதலைக்காக எழுந்து சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் ஈழத் தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் வீழ்ந்த மாவீரர்களுக்கும் எனது அஞ்சலிகள் மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்…
-
- 0 replies
- 571 views
-
-
இளையராஜா. --------------------- நான் உயிர் வாழ கார்பன் - டை - ஆக்ஸைடே போதும் - அது உன் ஹார்மோனிய பெட்டியில் இருந்து வந்தால்.
-
- 0 replies
- 865 views
-
-
பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய் இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர் பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர் வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ http://gkanthan.wordpress.com/index/eelam/kaappaarru/
-
- 0 replies
- 597 views
-