Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போய்விடு! அடேய் கருணா துரோகியே! தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு! கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா கருணா என்று பெயர் வைத்தது? சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்! மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்! உனைப் போன்ற மிருகங்களிற்கு சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே! பாரினில் நீயொரு படு பாதகனென்று ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது! இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்? "கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு! நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன் அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்? இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர் இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு! பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட ஒற்றர் கூட்டத்து பிச…

  2. வேருக்கு வீறுதரும் விழுதுகளே! விழித்தெழுக!! தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறதே! மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறதே! இனவாதம் தினவெடுத்து இரத்தம் கேட்டு அலைகிறதே! ஆதிக்க அசுர பலம் ஆன்ம…..பலம் ஒடுக்க விளைகிறதே! வேருக்கு வீறுதர விழுதுகளே! விழித்தெழுக!! கந்தகம் குதறும் கார்காலப் பொழுதினிலே… காரணம் பல கூறி கண் வளர்தல் ஆகாது. ஊர், உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும், உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிந்து வாரும்! வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோவது ஏன்? வீணே வெளிப்புலத்தில் விலகி நின்று வாடுவதேன்? நேர் கொண்டு போர் நின்று நிமிர்வெய்தும் நேரமிது! கார்மேகம் கலைத்தெறியக் கரம் கொட…

  3. Started by வர்ணன்,

    ஆவி ஈந்தவர் முகத்தில் ... ஈ மொய்க்கும்..! ஆசுவாசமாய்.... இருக்கையின் இருபுறம் இரு கை ..விரித்துக்கொண்டே சொல்கிறாய் - புலி முடிந்ததென்றே! தளங்களை வென்றவர்... வென்றதெல்லாம் தளங்களா? எமக்காய் தலங்கள்! நாவில் ஈரமென்று .. யாரோ சொன்னார்... மெய்யில்லை நண்பா நண்பா! உனக்கு................. அதன் சுவையரும்புகளில்.. நஞ்சின் கசிவு! சாணம் மேல் ஈயாய் கிட...! உரம் அது என்று தெரிந்தும்.. ஈரத்தை உறிஞ்சு.... மண்ணில் புதைக்கும் நாள் வந்தால்.... எழுந்து பறப்பாய்..!! இருப்பதை ஏளனம் செய்தாலும்... ஆலமரத்தை உன்னால் தனித்து.... ஆண்டியாக்க முடியுமா? வேர்களுக்கும் - விழுதுகளுக்கும் எதிரி ஆவாய்!

  4. தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்... என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்... இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்... தமிழா! நீ பேசுவது தமிழா? உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை... 'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை... இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை... தமிழா! நீ பேசுவது தமிழா? வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?' வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?' துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?' தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? தம…

  5. அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான் அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான் அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான் அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா -------------------------------------------------------------------------------- கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான் துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது -------------------------------------------------------------------------------- ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார் கோவிலுக்கு போனால் நீ …

    • 7 replies
    • 1.9k views
  6. அடங்காநா வாய்பேசில் இவர்சொல்கொடு வாளெனெவே வீசும்புலவர் தொடங்காப்பா போற்பொய் யாகும்வீணே நீபார் வந்தபயன் பொருள்: உனது நாவை அடக்கமுடியவில்லை எனில் பேசற்க, இல்லையேல் நீ கூறும் சொற்கள் கொடிய வாள் வீச்சுக்கே ஒப்பானது. ஆதலால் நீ இந்த பூமியில் வந்து பிறந்ததன் பயன் ஒரு புலவனின் இயற்றப்படாத பாடல் போன்று பொய்யாகிப்போகும்.

    • 5 replies
    • 1.4k views
  7. Started by இலக்கியன்,

    கண்கள் இருந்தும் குருடனாக.............. காது இருந்தும் செவிடனாக.......... கால்கள் இருந்தும் முடவனாக............. தலை இருந்தும் முண்டமாக........... உயிர் இருந்தும் ஜடமாக................ ஏனெனில்? ..... ஒரு அகதி http://elakkiyan.blogspot.com/2007_01_22_archive.html

  8. யுத்த காலத்தில் களத்தில் இருப்பவர்களுக்குதான் களநிலைமை தெரியும். யுத்த களத்தில் சில நேரங்களில் பின்னடைவு ஏற்படுவது இயல்பு, இக்காலங்களில் நம்மவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆதரவும்தான் நம்மவர்கள் வெற்றிகளை விரைந்தெடுக்க உதவும். இது நேரங்களில் சில மூதேவிகள் நம்மவர்களிடத்தில் பயத்தையும், சோர்வையும் ஏற்படுத்த முனையகூடும், அப்படி முயலும் சில மூதேவிகளை இங்கும் நாம் கான்கிறோம். அவர்களின் வெற்றுக்கூச்சல்களை புறந்தள்ளி புத்தி புகட்டுங்கள். தமிழர்களின் பொற்காலமாக கருதப்படும் பிற்கால சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வை இது சமயம் குறிப்பிடுகிறேன் பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்க…

  9. வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…

  10. Started by ஜனனி,

    பாஞ்சாலி அடி பாஞ்சாலி ஒரு கணவன் கிடைப்பதற்கே நாங்கள் பாடாத பாடு பட வேண்டியுள்ளது ஐந்து கணவர்களை மிக எளிதில் அடைந்து விட்டாயே! (இதை நான் எழுதல என் தோழி ஒருத்தி எழுதினா. )

    • 5 replies
    • 1.3k views
  11. ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…

    • 10 replies
    • 1.8k views
  12. திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…

  13. தனிமையும் பிரிவும் தனிமைத் துயரில் வாடிய போது தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன் தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள் தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன் ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று பருகப் பருக பாலும் புளிக்குமாம் பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம் பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம் சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன் காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில் காலங்க…

    • 19 replies
    • 2.6k views
  14. இல்லை...இல்லை... - இரத்தின “மை” Saturday, 13 January 2007 உணவுக்கு மரவள்ளிகூட இல்லை உயிர்காக்க மருந்தில்லை நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை பொங்கலுக்கு சக்கரையில்லை பாறணைக்கு காய்கறியில்லை பள்ளிசெல்லும் பையனுக்கு குமுழ்முனை பேனையில்லை குழந்தைக்கு பால்மாயில்லை எக்ஸ்றே இயந்திரத்துக்கு எனேஜி இல்லை எக்ஸ்போவில் ரிக்கறில்லை ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை. ஏ நைனுக்கு விழிப்பில்லை மரக்கறிக்கு உரமில்லை சந்தையில் மீனில்லை விலைவாசிக்கு குறைவில்லை தேரிழுக்க பக்தனில்லை ஏர்பிடிக்க வலுவில்லை மனித உரிமைக்கு மதிப்பில்லை சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை விசாரணைகளுக்கு முடிவில்லை மிகிந்தலைக்கு பாதையில்லை மகிந்தரின்…

    • 1 reply
    • 1.2k views
  15. பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்

  16. வீடிழந்த நிலவிலிருந்து தள்ளி நிற்கிறாள் கொங்கைக் கிழத்தி. முகத்திலே கொற்ற வஞ்சி சருமங்கள் ரொம்ப பிஞ்சு கானல் கவிதை காணின் நாணுவாள்; பேணுவாள் மயிர்க் கிளர்ச்சி கொள்வாள், உயிர்த் தளர்ச்சி வரையிலும். மன்மதன் இவன்; இங்கித மில்லை இவனிடம் கொங்கை மாந்தர் காணின் தங்காது போகும் சடரூபன் சிருங்காரம் மிகுவானன்; அகங்காரம் தகுவானன். யாவும் படைத்த கிங்கிரன்; தாபத்திலே நிகரில்லா இந்திரன். நாணியவள் மேல் கூசம் காணுகின்றான் கூசாது. ஏனெனவோ எங்கெனவோ கேட்காமல் போவாளா அ(ச்)சாது.? குறுஞ்சீலை களைப்பான்; இருகை வைத்தே ஆயிரம் செய்வான் நுனி நாக்கில் குழைப்பான் இனி தடுக்காது போய்விடின். படுக்காது போன நிலவை கொடுங்கீறினான் சொல்லிங்கே சேர…

  17. ஒட்டு படை ஒழிகிறது...... ஓலங்கள் தந்தது ஒட்டுப் படை -அந்தோ ஓடியே ஒளியுது அந்த படை... அவலங்கள் ஆயிரம் தந்த படை - அந்தோ அழியுது பாரது அந்த படை... இனவாதி யோடது இருந்த படை இளைஞரை யுவதியை பிடித்த படை.... காட்டியே கொடுக்கின்ற கயவர் படை கண்களை கட்டியே கடத்திய படை... சுட்;டு வெட்டியே கொன்ற படை - அதை சுற்றியே அழிக்குது புலிகள் படை..... கொடுமையாய் கொடுமைகள் ஆடியதே கொடியாரை தமிழரை சாடியதே... கடத்தியே கப்பங்கள் பறித்ததுவே அவர் உயிர்களை வேறது குடித்ததுவே.... எத்தனை எத்தனை இன்னல்களை எண்ணியே எண்ணியே தந்ததுவே... அந்தோ பாரது அழிகிறதே ஆனந்தம் எமக்கு பிறக்கிறதே.... ஒட்டு படைய…

    • 4 replies
    • 1.5k views
  18. நெருப்பு நீ, நீர் நான். சூரியத் தகட்டில் வெப்பந் தணியா நெருப்பு நீ, வா! வந்தனை பூமியை உருட்டு; திரட்டு; என்னோடு இணைந்து பிரட்டு. என்னுள் ஊடுருவி உள் துளை கக்கிய தீயெடுத்து நாக்கிலே குழை. அணை என்னை; அல்லது அணைப்பேன் உன்னை. பிதுக்கி யெடுத்தவாறு பதுங்கி வா! தொடு முத்தமிடு தீ முழுவதுமாய் கக்கு, முடிந்தவரை போராடுகிறேன். சத்தமிடு, மொத்தமும் இடு. இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை தாக்கு; தேக்கு காதல் ரசங்களை (உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு. சுவடெரித்து விட்டு திரும்பச் செல்; இல்லயெனில் எனை நீரென்றும் பாராமல் கொல். உடுத்து; படுத்து; உன் கோப வெறிக்கு ஆளாகாத என்னை உன் சாம்பலிலே கிடத்து. அகல விரி விழ…

  19. எழு..எழு..தமிழா எழு...எழு..- எங்கள் விடுதலை காண எழு..எழு.... அடிமையாய் தினம் வாழ்கிறாய் அட தமிழா அதை உடை எழு..எழு... போர்களம்..ஏறி..புகு...புகு... எங்கள் புலி படை கூட எழு..எழு.. விடுதலை காண எழு..எழு... எங்கள் விடியலை தேட..எழு..எழு.. இதுவரை நீ உறங்கினாய் போதும் இனி..இனி..எழு..எழு... விடுதலை காண எழு...எழு... தமிழா விரைந்து நீ எழு..எழு... அந்நியன் வந்து எம்மைஆழ்வாத அவன் காலிலே நீ வீழ்வதா....?? முந்தையர் ஆண்ட குடிதனில் இந்தையர் வந்து ஆழ்வதா...?? அட வீரம் கொண்ட தமிழா -நீ விடுதலை காண எழு..எழு... இதுவரை நீ அடிமையாய் இருந்தது போதும் இனி..எழு..எழு.... விடியலை தேடியே எழு...எழு.. இனி விரந்தே தமிழா எழு...எ…

  20. Started by ஷீ-நிசி,

    அம்மா தடுத்தாள்! சின்னப் பிள்ளைகள் தீக்குச்சிகளை கையில் எடுக்கக் கூடாதாம்! அம்மா, உனக்கு தெரியாதா?! எனைப் போல ஒரு பிஞ்சுக்கரம்தானே இவைகளையெல்லாம் அடுக்கியது என்று! நகரத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால் திட்டு விழும்! கிராமத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால்தான் சோறே விழும்! குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே! ஒரு தெய்வம் ஓட்டலில் துடைக்கிறது! ஒரு தெய்வம் தீக்குச்சி அடுக்குகிறது! ஒரு தெய்வம் ஸ்பேனரால் அடிவாங்குகிறது! ஒரு தெய்வம் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது ஆம்! கீழே தெய்வங்கள் குழந்தைகளாய் வேலை செய்துகொண்டிருக்கின்றன! மேலே குழந்தைகள் தெய்வங்களாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன!!

    • 17 replies
    • 3.5k views
  21. வாழ்க்கை என்பது என்ன வாழ்வின் அர்த்தம் என்ன வாழாதிருந்தால் என்ன வாழ்வை அனுபவிப்பதென்பதென்ன அழகான பெண்ணை மணப்பதாலா அழகாக உடலை அமைப்பதாலா பகட்டாக வாழ்வதாலா "சத்தான" உணவுண்டு ஆயுளை பெருக்குவதாலா பிள்ளை குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதாலா.. தினம் தினம் ஏக்கங்கள் வயிற்றுப்பசி உடல்பசி பொருள்பசி ஓ.... பலவாயிரம் ஆண்டுகள் மனிதம் இப்படித்தானே கழிந்தது, உனக்கென்ன அர்த்தம் தேவை... "சும்மா" வாழ்ந்துவிட்டு போ.. உன் மூதாதயரை வாழ்ந்துவிட்டுப் போ... மூதாதயர் வாழ்ந்தது தான் வாழ்வா "சமயம்" பல வழி கூறும் பிரிவுகளை மேலும் பெருக்கி உள குளப்பத்தை தான் தூண்டும் பொய்யான, "நம்பிக்கை" தான் வாழ்க்கை என்று விளங்காமல் ஏற்கச் சொல்லும் கிறிஸ்து…

  22. எந்த வெள்ளை புறா நடந்து சென்ற பாத சுவடுகள் இந்த நட்சத்திரங்கள்?! வானம் இரவு நேரங்களில் போர்த்திக் கொள்ளும் பொத்தல் நிறைந்த போர்வையா இந்த நட்சத்திரங்கள்?! பால் நிலா தோட்டத்தில் பூத்திருக்கும் தேன் மல்லிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! வானம் சுத்தம் செய்யப்படுவதற்காய் தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா இந்த நட்சத்திரங்கள்?! மேக தேவதைகளின் உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல் தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! நிலாவிற்கு வர்ணம் பூசினப்போது சிந்தின துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! விதியினை எழுதும் எழுதுகோலில் மை உள்ளதா என்று இறைவன் உதறிப் பார்த்த துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! வானம் …

  23. Started by வர்ணன்,

    வருகிறதாம் - பொங்கல்! மனசும் எம்மிடமில்லை அதில் தூங்கும் மகிழ்வும்.. உன்னிடம் பகிர இல்லை! பானை வட்ட விளிம்பு நுரை மூட பட்டாசு கொளுத்தி.. மகிழ்ந்த காலமெலாம்......... பறந்தே போச்சு! வாழ்வை...... நடு வீட்டில் ......... உயிர்கொண்ட கற்றாளை போலவாக்கிச்சுதாம் -காலம்! எதிரிகளெல்லாம் இருந்த காலம் போய் - கூட இருப்பவரே குரல் வளை உடைக்கும் காலம் ஆனபின்னே... நீ காலமாகிடு பொங்கலே... நமக்காய் ஒரு காலம் வந்தபின் திரும்பிடு!

    • 4 replies
    • 1.2k views
  24. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.