கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…
-
- 9 replies
- 1.4k views
-
-
பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்
-
- 9 replies
- 1.9k views
-
-
பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…
-
- 8 replies
- 1.7k views
-
-
அடங்காநா வாய்பேசில் இவர்சொல்கொடு வாளெனெவே வீசும்புலவர் தொடங்காப்பா போற்பொய் யாகும்வீணே நீபார் வந்தபயன் பொருள்: உனது நாவை அடக்கமுடியவில்லை எனில் பேசற்க, இல்லையேல் நீ கூறும் சொற்கள் கொடிய வாள் வீச்சுக்கே ஒப்பானது. ஆதலால் நீ இந்த பூமியில் வந்து பிறந்ததன் பயன் ஒரு புலவனின் இயற்றப்படாத பாடல் போன்று பொய்யாகிப்போகும்.
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்... என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்... இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்... தமிழா! நீ பேசுவது தமிழா? உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை... 'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை... இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை... தமிழா! நீ பேசுவது தமிழா? வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?' வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?' துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?' தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? தம…
-
- 2 replies
- 6.4k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…
-
- 10 replies
- 1.8k views
-
-
திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
தனிமையும் பிரிவும் தனிமைத் துயரில் வாடிய போது தனிமை மரணத்திலும் கொடியது என உணர்ந்தேன் தன்னிச்சையாய் நீ பேசிய சொற்கள் தண்ணிலவாய் என் நெஞ்சைத் தணித்தன அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தையும் பகிர்ந்தேன் ஆசையாய் நீ கேட்கிறாய் என்பதை அபிநயம் காட்டும் உன் முகம் கூறிற்று பருகப் பருக பாலும் புளிக்குமாம் பழகப் பழக நட்பும் புளித்தது உனக்கு படிக்கப் படிக்கக் கருத்துக்கள் ஊறுமாம் பழகப் பழக நட்பும் ஊறிற்று எனக்கு சிறு புன்னகைக்கும் மறுக்கிறது உன் உதடு - என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை மறுப்பின் காரணம் சிறுபிள்ளைத்தனமாய் செய்யாத தப்புக்கு சிந்தை கலங்கி மன்னிப்பும் கேட்டேன் காயத்தை மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டெனில் காலங்க…
-
- 19 replies
- 2.6k views
-
-
ஒட்டு படை ஒழிகிறது...... ஓலங்கள் தந்தது ஒட்டுப் படை -அந்தோ ஓடியே ஒளியுது அந்த படை... அவலங்கள் ஆயிரம் தந்த படை - அந்தோ அழியுது பாரது அந்த படை... இனவாதி யோடது இருந்த படை இளைஞரை யுவதியை பிடித்த படை.... காட்டியே கொடுக்கின்ற கயவர் படை கண்களை கட்டியே கடத்திய படை... சுட்;டு வெட்டியே கொன்ற படை - அதை சுற்றியே அழிக்குது புலிகள் படை..... கொடுமையாய் கொடுமைகள் ஆடியதே கொடியாரை தமிழரை சாடியதே... கடத்தியே கப்பங்கள் பறித்ததுவே அவர் உயிர்களை வேறது குடித்ததுவே.... எத்தனை எத்தனை இன்னல்களை எண்ணியே எண்ணியே தந்ததுவே... அந்தோ பாரது அழிகிறதே ஆனந்தம் எமக்கு பிறக்கிறதே.... ஒட்டு படைய…
-
- 4 replies
- 1.5k views
-
-
இல்லை...இல்லை... - இரத்தின “மை” Saturday, 13 January 2007 உணவுக்கு மரவள்ளிகூட இல்லை உயிர்காக்க மருந்தில்லை நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை பொங்கலுக்கு சக்கரையில்லை பாறணைக்கு காய்கறியில்லை பள்ளிசெல்லும் பையனுக்கு குமுழ்முனை பேனையில்லை குழந்தைக்கு பால்மாயில்லை எக்ஸ்றே இயந்திரத்துக்கு எனேஜி இல்லை எக்ஸ்போவில் ரிக்கறில்லை ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை. ஏ நைனுக்கு விழிப்பில்லை மரக்கறிக்கு உரமில்லை சந்தையில் மீனில்லை விலைவாசிக்கு குறைவில்லை தேரிழுக்க பக்தனில்லை ஏர்பிடிக்க வலுவில்லை மனித உரிமைக்கு மதிப்பில்லை சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை விசாரணைகளுக்கு முடிவில்லை மிகிந்தலைக்கு பாதையில்லை மகிந்தரின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
எது அழகு.. ஏகாந்தம்..இளவேனில்.. இல்லாத கடவுள்.. இருக்கின்ற கோவில் வாசப்பூக்கள்..வரண்ட வேர்கள்.. பழைய சிற்பம்..புதிய நுட்பம்.. மெல்லிய ஆடை.. மெல்லியல் ஆடல்.. பஞ்சுமேகம்..பிஞ்சுப்பாதம்.. நெடுஞ்சாலை..நீர்வீழ்ச்சி குண்டுகுழி..காடும்மேடும். பளபளமேனி..பட்டுஆடை.. வசீகரப்புன்னகை..வைரங்களில் நகை மிடுக்குநடை..சின்னஇடை அமுதப்பேச்சு..வண்ணப்பூச்சு.. வெளியில் தளுக்கு உள்ளே அழுக்கு சிந்தை நொந்து..சிந்தை நொந்து சின்னஅறிவைக் கேட்டு பார்த்தேன்.. எது மெய் அழகு...
-
- 12 replies
- 3.4k views
-
-
வீடிழந்த நிலவிலிருந்து தள்ளி நிற்கிறாள் கொங்கைக் கிழத்தி. முகத்திலே கொற்ற வஞ்சி சருமங்கள் ரொம்ப பிஞ்சு கானல் கவிதை காணின் நாணுவாள்; பேணுவாள் மயிர்க் கிளர்ச்சி கொள்வாள், உயிர்த் தளர்ச்சி வரையிலும். மன்மதன் இவன்; இங்கித மில்லை இவனிடம் கொங்கை மாந்தர் காணின் தங்காது போகும் சடரூபன் சிருங்காரம் மிகுவானன்; அகங்காரம் தகுவானன். யாவும் படைத்த கிங்கிரன்; தாபத்திலே நிகரில்லா இந்திரன். நாணியவள் மேல் கூசம் காணுகின்றான் கூசாது. ஏனெனவோ எங்கெனவோ கேட்காமல் போவாளா அ(ச்)சாது.? குறுஞ்சீலை களைப்பான்; இருகை வைத்தே ஆயிரம் செய்வான் நுனி நாக்கில் குழைப்பான் இனி தடுக்காது போய்விடின். படுக்காது போன நிலவை கொடுங்கீறினான் சொல்லிங்கே சேர…
-
- 4 replies
- 1.3k views
-
-
எழு..எழு..தமிழா எழு...எழு..- எங்கள் விடுதலை காண எழு..எழு.... அடிமையாய் தினம் வாழ்கிறாய் அட தமிழா அதை உடை எழு..எழு... போர்களம்..ஏறி..புகு...புகு... எங்கள் புலி படை கூட எழு..எழு.. விடுதலை காண எழு..எழு... எங்கள் விடியலை தேட..எழு..எழு.. இதுவரை நீ உறங்கினாய் போதும் இனி..இனி..எழு..எழு... விடுதலை காண எழு...எழு... தமிழா விரைந்து நீ எழு..எழு... அந்நியன் வந்து எம்மைஆழ்வாத அவன் காலிலே நீ வீழ்வதா....?? முந்தையர் ஆண்ட குடிதனில் இந்தையர் வந்து ஆழ்வதா...?? அட வீரம் கொண்ட தமிழா -நீ விடுதலை காண எழு..எழு... இதுவரை நீ அடிமையாய் இருந்தது போதும் இனி..எழு..எழு.... விடியலை தேடியே எழு...எழு.. இனி விரந்தே தமிழா எழு...எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
நெருப்பு நீ, நீர் நான். சூரியத் தகட்டில் வெப்பந் தணியா நெருப்பு நீ, வா! வந்தனை பூமியை உருட்டு; திரட்டு; என்னோடு இணைந்து பிரட்டு. என்னுள் ஊடுருவி உள் துளை கக்கிய தீயெடுத்து நாக்கிலே குழை. அணை என்னை; அல்லது அணைப்பேன் உன்னை. பிதுக்கி யெடுத்தவாறு பதுங்கி வா! தொடு முத்தமிடு தீ முழுவதுமாய் கக்கு, முடிந்தவரை போராடுகிறேன். சத்தமிடு, மொத்தமும் இடு. இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை தாக்கு; தேக்கு காதல் ரசங்களை (உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு. சுவடெரித்து விட்டு திரும்பச் செல்; இல்லயெனில் எனை நீரென்றும் பாராமல் கொல். உடுத்து; படுத்து; உன் கோப வெறிக்கு ஆளாகாத என்னை உன் சாம்பலிலே கிடத்து. அகல விரி விழ…
-
- 2 replies
- 1k views
-
-
வாழ்க்கை என்பது என்ன வாழ்வின் அர்த்தம் என்ன வாழாதிருந்தால் என்ன வாழ்வை அனுபவிப்பதென்பதென்ன அழகான பெண்ணை மணப்பதாலா அழகாக உடலை அமைப்பதாலா பகட்டாக வாழ்வதாலா "சத்தான" உணவுண்டு ஆயுளை பெருக்குவதாலா பிள்ளை குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதாலா.. தினம் தினம் ஏக்கங்கள் வயிற்றுப்பசி உடல்பசி பொருள்பசி ஓ.... பலவாயிரம் ஆண்டுகள் மனிதம் இப்படித்தானே கழிந்தது, உனக்கென்ன அர்த்தம் தேவை... "சும்மா" வாழ்ந்துவிட்டு போ.. உன் மூதாதயரை வாழ்ந்துவிட்டுப் போ... மூதாதயர் வாழ்ந்தது தான் வாழ்வா "சமயம்" பல வழி கூறும் பிரிவுகளை மேலும் பெருக்கி உள குளப்பத்தை தான் தூண்டும் பொய்யான, "நம்பிக்கை" தான் வாழ்க்கை என்று விளங்காமல் ஏற்கச் சொல்லும் கிறிஸ்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
எந்த வெள்ளை புறா நடந்து சென்ற பாத சுவடுகள் இந்த நட்சத்திரங்கள்?! வானம் இரவு நேரங்களில் போர்த்திக் கொள்ளும் பொத்தல் நிறைந்த போர்வையா இந்த நட்சத்திரங்கள்?! பால் நிலா தோட்டத்தில் பூத்திருக்கும் தேன் மல்லிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! வானம் சுத்தம் செய்யப்படுவதற்காய் தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா இந்த நட்சத்திரங்கள்?! மேக தேவதைகளின் உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல் தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! நிலாவிற்கு வர்ணம் பூசினப்போது சிந்தின துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! விதியினை எழுதும் எழுதுகோலில் மை உள்ளதா என்று இறைவன் உதறிப் பார்த்த துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! வானம் …
-
- 6 replies
- 1.7k views
-
-
வருகிறதாம் - பொங்கல்! மனசும் எம்மிடமில்லை அதில் தூங்கும் மகிழ்வும்.. உன்னிடம் பகிர இல்லை! பானை வட்ட விளிம்பு நுரை மூட பட்டாசு கொளுத்தி.. மகிழ்ந்த காலமெலாம்......... பறந்தே போச்சு! வாழ்வை...... நடு வீட்டில் ......... உயிர்கொண்ட கற்றாளை போலவாக்கிச்சுதாம் -காலம்! எதிரிகளெல்லாம் இருந்த காலம் போய் - கூட இருப்பவரே குரல் வளை உடைக்கும் காலம் ஆனபின்னே... நீ காலமாகிடு பொங்கலே... நமக்காய் ஒரு காலம் வந்தபின் திரும்பிடு!
-
- 4 replies
- 1.2k views
-
-
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... ..... செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 6 replies
- 1.7k views
-
-
"""" ஏய் சிங்களா ஏனழுதாய்.??? எங்கே இப்போ சிரி....."""" ஏய் சிங்களா இப்போ நீ சிரி ஏன் அழுதாய்...??? உன் நெஞ்சில் என்ன வலி..?? இது யார் போட்ட பழி...??? எத்தனை நாள் நாம் அழுதோம் எம் விழிகள் யார் துடைத்தார்...??? கண்ணீர் கொட்டி நாமன்று கதறியன்று அழுகையிலே கை தட்டி நீ சிரித்தாய்.... தெருக்கிளிலே எம் இனங்கள் பிணங்களாகி வீழ்கையிலே கை தட்டி நீ சிரித்தாய்... எங்கே இப்போ நீ சிரி ஏன் அழுகிpறாய்...??? உன்னவரை நீ ஏவி உறவு உயிர் பறிக்கையிலே எங்கள் நெஞ்சம் பதைத்தடா விழிகளது நனைந்ததடா... வெய்யிலில் எரிந்து மழையில் விறைத்து மர நிழலில் நாமன்று வாழையிலே உன் விழிகள் கலங்கலயே உன்…
-
- 5 replies
- 1.3k views
-
-
"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே..."""" உறங்கி கிடந்த புலிகளே நீங்கள் உறுமி இன்று எழுகவே.. கயவன் வந்து ஆடுறான்- எங்கள் தலையில் குண்டை போடுறான் களத்தில் உயிரை பறிக்கிறான் கதறி தமிழன் அழுகின்றான்... கண்ணீர் ஆறாய் ஓடுதே கடலெனவே பாயுதே குருதியிலே புலவுகளே குளியல் தினம் செய்யுதே... எங்கள் மனம் பதைக்கிறதே ஏக்கத்திலே தவிக்கிறதே சொந்த புமி அழிகையிலே எங்கள் வேங்கை தூங்குவதோ....??? காத்திருந்த போதும் இனி களத்தில் வித்தை காட்டுங்களேன் அன்னை மண்ணில் வாழும் - அந்த அந்நியரை கலையுங்களேன்..... தூங்கியது போதும் இனி - உங்கள் தூக்கங்களை கலையுங்களேன் துட்டமுனு படைவிரட்டி - எங்கள் ஈழமதை காணுங்களேன்....!!![/color] …
-
- 16 replies
- 2.7k views
-
-
-
"""""தலைவன் பார்கிறான் இலக்கு"""" அண்ணணின் கையிலே துவக்கு அவன் பார்கிறான் அங்கொரு இலக்கு எங்களின் தேசம் மீள் நமக்கு - இனி இன்னல்கள் இல்லை எமக்கு... அமைதி வரவது இருக்கு -தமிழா அழுகையை நீ இனி ஒதுக்கு ஆண்டே ஏழதில் இருக்கு அடிமை உடையுது உனக்கு... கண்ணீர் கதறலை ஒதுக்கு கரிகாலன் எழுகிறான் நமக்கு அச்சம் உனக்கது எதுக்கு? அண்ணன் பார்கிறான இலக்கு... விடுதலை விடியுது உனக்கு விழி நீரதை நீயது ஒதுக்கு கவலைகள் கதறல்கள் விலக்கு கரிகாலன் பார்கிறான் இலக்கு..... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 893 views
-
-
புத்தாண்டே தருவாயா....??? யுத்தங்கள் இல்லாத தேசங்கள் வேண்டும் யுக்திகள் இல்லாத பாசங்கள் வேண்டும்... வறுமைகள் ஒழிகின்ற வாழ்வது வேண்டும் ஏழை பணக்காறன் சமனாக வேண்டும்... உலகெல்லாம் ஒரு நாடாய் உருவாக வேண்டும்... உண்மைகள் உரைக்கின்ற உலகாக வேண்டும்... பேதங்கள் மறைகின்ற பெரு நாடாய் வேண்டும்.... ஜாதிகள் ஒழிகின்ற ஜாதகம் வேண்டும் யாவரும் ஒரு தாய் பிள்ளையாய் வேண்டும்... இன்னல்கள் தொலைகின்ற இல்லறம் வேண்டும்.... இவையாவும் நீக்கிடும் ஆண்டாக வேண்டும்... இரண்டாயிரத்து ஏழே இது நீயாக வேண்டும்....!!![/color] -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.9k views
-