கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வயிற்றுப் பசியை வாலிபப் பசி வென்றது கையில் குழந்தையுடன் இன்னொரு ஏழ்மை சமுதாயம்
-
- 3 replies
- 1.5k views
-
-
எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…
-
- 12 replies
- 2.6k views
-
-
மறந்துவிட்டாயம்மா...! நானும் கருப்பையில் தான் கற்பம் தரித்தேன் என்னையும் பத்து மாதம் தான் சுமந்து பெற்றாள் தாய்ப்பால் ஊட்டித்தான் சீராட்டினாய் இவர்தான் தந்தை என்றும் அறிமுகப்படுத்தினாள் இது ஆண்சாதி என்றும் இது பெண்சாதி என்றும் இது தாவரங்கள் என்றும் இது விலங்கினம் என்றும் அவள்தான் அன்று இனம் காட்டினாள்! ஆனால்... சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும் அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும் பணம் உறவின் வேடம் என்றும் மதம் பகையின் தோழன் என்றும் சாதி காதலின் எதிரி என்றும் ஏனே அன்று அவள் அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!! எழுதியவர்: நித்தியா
-
- 220 replies
- 28.6k views
-
-
வாழ்க்கையின் வெறுமை என் இளமைப்புத்தகத்தின் இரவுப்பக்கங்கள் வெறுமையாய் கிடக்கின்றன இன்னும் எழுதப்படாத ஓர் கவிதையை எண்ணி.... எனது வானம்... இருள் மூடிக்கிடக்கிறது இதுவரை காணாத அந்தப் பௌர்ணமிக்காக... மெல்ல மெல்ல காலத்திருடனிடம் களவு போகின்றன-என் நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான் சேர்த்துவைத்த கனவுகளின் ஒளிநிறமும்.... நிசப்தம் விழுங்கிய நீண்ட இரவொன்றில்... நிமிர்ந்து பார்க்கிறேன் மழை இருள்மூடிய காரிருள் வானில் பளிச்செனத் தெரிந்தது தனிமை மூடிய-எனது வாழ்க்கையின் வெறுமை. -ஈழநேசன்- கள உறவான ஈழநேசனின் கவிதையை களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே களமேற்றியிருக்கிறேன்.
-
- 16 replies
- 6.1k views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
விடிந்தும் விடியாததொரு காலை அம்மணமாய் கிடக்கும் என் சோதரி உடலை என் மேலங்கி கொண்டு போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்... உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்! கல்லாகி போகாத மனிதனென்று நாம்...............ஆனதால்........... கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால் உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி மனசு - கனக்கிறோம்- ஆயினும் எலும்பெங்கும் வலிக்கிறது! அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை! இன்றும் உம் தோழர் - எம் அடிமடியில் தீ மூட்டுவதை எப்பிடி மன்னிக்க? மறக்க? வலிக்குது! தேரோடும் வீதியில் சேறள்ளி கொட்டிவிட்டு கோயில் வாசல் அது வருகையில் விடைபெறுகிறேன் ... புலிதான் எல்லாமென்றொரு புராணமா? கேவலம்... நீரல்ல...போய்விட்டீர் இன்னும் உம் காலடி தொழுப…
-
- 7 replies
- 1.8k views
-
-
பூவனமே பொன்மலரே மறந்தாயா என்னை? புருவமதில் என் உருவமதில் இருக்கின்றாய் பெண்ணே! சிறு கவியாய் பெரும் கனவாய் சிதைக்கின்றாய் என்னை -போ வழி விடவா வரம் தரவா? வாடுதடி நெஞ்சு! காதலனாய் உன் கால் கொலுசாய் இருந்தேனே ஒரு பொழுது காலமெலாம் போனதடி என் கண்களை இனி சுட்டு தள்ளு! இருப்பேன் டா உனக்காய் இருப்பேன் டா என்றாயப்பொழுது இருக்கேன்மா இருக்கேன்மா நீதான் எங்கே இப்பொழுது? சிறுமலரே -பனிமழையே செண்பகமே - நான் பாவமா இல்லையா சொல்லு? உன் பார்வையதால் இந்த பாவியெனை- அன்று ஏன் கொன்றாய் சொல்லு! கேளடியோ-மயிலழகே என் வாசலதை மண்மூடி போனாச்சு -ஏனடியோ வண்ண கோலம் இனி அது எதுக்கு சொல்லு! :wink:
-
- 19 replies
- 3.2k views
-
-
வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…
-
- 7 replies
- 2k views
-
-
கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்…
-
- 15 replies
- 2.6k views
-
-
செவ்விளநீர் மர நிழலில் மண்ணழைந்து- செம்பருத்தி பூ இதழ்பிரித்து பொட்டு வைத்து மெல்லிய காற்றில் அணிஞ்சில் பழ கோது கொண்டு விசில் ஊதி.......... ஐஸ் பழ வான் பின்னால் ஓடி அடித்து பிடித்து சில்லறை கொடுத்து நாவில் பனியுருக நாவால் உதட்டை துடைத்து துடைத்து சுவைத்தோமே வருமா வருமா? மீண்டும்-அந் நாட்கள் ? சுகம் தருமா தருமா? பாட நேரம் வெளியோடி காளிகோயில் மாமரம் மீதேறி பறித்து வந்த மாம்பிஞ்சை ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே அக்காலம் வருமா வருமா? சுகம் தருமா தருமா? கள்ளன் பொலிஸ் விளையாடி கள்ளனுக்கு பொலிஸ் "ஊண்டி போட " அவன் அழுதுகொண்டு வீட்டை -ஓட அப்பா கிட்ட உதை வாங்கினோமே வருமா வருமா அந்நாள்? சுகம் தருமா தருமா? …
-
- 23 replies
- 3.3k views
-
-
வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி
-
- 29 replies
- 3.9k views
-
-
இதயம் அனலில் வேகுதடி- எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி! செல்லமாய் என்னை கிள்ளு- உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு! சுட்டெரிக்கும் வெய்யில் கூட மழையென்றாச்செனக்கு! சுந்தரி நீ கள்ளி - பாரேன் உன் உதட்டு சிவப்பில் என் உயிர் ஒளிந்து கொண்டதடி! நெருப்பை நீர் அணைக்கும்! மழையை மண் அணைக்கும்! நான் கொண்ட காதலை நீ அணையேன்- மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்! ஆயிரம் பாஷை இங்காகலாம்! உந்தன் செல்ல அதட்டல் பேச்சே- தாய் மொழிடி எனக்கு! ஏய்டா என்பாய் குட்டிமா- என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே! ஏது வாழ்வு ? அதுவல்லவோ ? என் இருகரங்களில் -தலை சாய்த்து குழந்தை என்றாகி நீ தூங்கு! நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன் தந்தையென்றாகாமலே - உன்னை …
-
- 23 replies
- 3.7k views
-
-
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!
-
- 7 replies
- 1.6k views
-
-
காற்றே நலமா? என்னை தாங்கி நின்ற தாய் நிலமே நலமா? கடலே நலமா? அலையே நலமா? கரை தூங்கும்-கட்டுமரமே நீ- சுகமா? மரத்தடி பிள்ளையாரே நலமா? எங்கள் மனங்களில் வாழும் மறவர் குலமே நீங்களும் நலமா? ஒற்றை பனை மரமே - நலமா? உயிர்வாழ பால் தந்த பசுவே நீயும் நலமா? பள்ளிக் கூடமே நீ நலமா? பாடம் சொல்லி தந்த - குருவே நீங்களூம் நலமா? முரட்டு வீதியே நீ நலமா? அதில் முக்கி முக்கி போகும் மாட்டுவண்டிலே நீ நலமா? தோழர்களே நீங்க நலமா? தோழியரே நீரும் சுகமா? முச்சை கயிறு அறுந்து போக ஓடி போன நான் விட்ட பட்டமே நீ நலமா? எங்கு நீ இருந்தாலும் என்னையும் கேளேன் "நீ நலமா?" வயல் வெளியே நலமா? வரம்புகளே நீங்கள் சுகமா? ஆழக்கிணறே நீ ந…
-
- 41 replies
- 6.6k views
-
-
அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…
-
- 2 replies
- 1.9k views
-
-
எங்கிருந்தோ வந்து அன்பு என்னும் மூன்று எழுத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்... அவளின் கள்ளமில்லா பேச்சு என்னை கைது செய்தது அவளின் கள்ளமில்லா பார்வை என்னை உருக்கியது அவளின் கள்ளமில்லா சிரிப்பு என்னை சந்தோசப்பட வைத்தது. அவளின் துக்கம் என்னை சங்கடப்பட வைத்தது ஆனால் நானே அவளை சங்கடப்பட வைத்து விட்டேன். அதை எண்ணும் போது என் மனம் இன்னும் சங்கடப்பட வைத்தது. என்றும் பிரிவு என்னும் மூன்று எழுத்தால் பிரியாமல் இருக்க வேண்டும் நாம்......... படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன்.- யாழ்பிரியா
-
- 4 replies
- 1.7k views
-
-
கை பிடித்த போது..... என் கவிதை சிறகுகளுக்கு கால் முளைத்தது கன்னியவனை கண்ணுற்ற போது என் இலக்கிய உலகம் இனிய கதவு திறந்தது இனியவன் இமை திறந்த போது மண்ணில் விண்ணுலகம் பார்த்தது-ஆணழகன் மதிமுகம் பார்த்த போது தாய் மொழியைத் தலைக்கேற்றியது தேன்மொழியவன் இதழ் திறந்து பேசிய போது காட்டாறாக இருந்த எனை நீரூற்றாக மாற்றியது என்னவனைக் கை பிடித்த போது! நன்றி
-
- 8 replies
- 2.3k views
-
-
முள் தீண்டுகிறது ஏன்பதற்காக றோஜா மலரை வெறுக்கலாமா? வேள்ளம் வருகிறது என்பதற்காக மழையை வெறுக்கலாமா? சோகத்தின் பக்கத்தில் சொர்க்கம் இருப்பதையும் நீ சுகத்தின் பக்கத்தில் துக்கம் இருப்பதையும் நீ அறிந்து கொள்! சில சோகங்களை நேசிக்கப் பழகு சில சோகங்களை வாசிக்கப் பழகு சோகங்கள் - உன்னை சேதுக்கும் உளி - நீ சிதையாதே! து. செல்வக்குமார் என்னை மிகவும் கவர்ந்த கவி
-
- 9 replies
- 2.2k views
-
-
-
- 13 replies
- 2.4k views
-
-
ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிவு வாழ்வில் எத்தனை பிரிவுகள் தாய் நிலத்தைப் பிரிந்தேன் தாய் தந்தையைப் பிரிந்தேன் தம்பி தங்கையையும் பிரிந்தேன் செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன் கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன் சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன் பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன் நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன் இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன் மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன் இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்? பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். :cry: துளசி
-
- 8 replies
- 1.7k views
-
-
16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…
-
- 13 replies
- 2.3k views
-
-
கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.
-
- 30 replies
- 4.3k views
-
-
உயிர்ப் பூக்கள் தமிழீழம் மலர்ந்து தன் மானத்துடன் வாழவே தானத் தலைவன் தரணியில் அமைத்தான் புலிப்படை எம் இனத்தை வதை செய்த பாதகரைத் திவசம் செய்ய தலைவன் வழியினில் உதித்த உயிர்ப் பூக்கள் நீங்கள். வானத்திலிருந்து விமானங்கள் குண்டு மழை பொழிந்தாலும் அந்நியப் படைகள் ஆயிர மாயிரமாய் வந்தாலும் சிரிக்கின்ற முகத்துடன் சிட்டாகப் பறந்து சென்று தேடிவந்த பகை விரட்டியடித்து பூரித்து நிற்பதே உங்களின் இலக்கு பார் முழுவதும் வியக்கும் படைப் பலத்தைப் பெற்றீர்கள் களத்தினில் எதிரிகளைக் கொன்று காலனை உம்மிடம் அழைத்தீர்கள் உங்கள் குருதி உறைந்த தமிழ்மண்ணை உயிராய் நேசிப்போம் தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும…
-
- 6 replies
- 1.5k views
-
-