கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
-
- 4 replies
- 2.3k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …
-
- 0 replies
- 1.9k views
-
-
காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 17 replies
- 3.2k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான் இங்கே கருக்கப்பட்ட எம் …
-
- 0 replies
- 1.5k views
-
-
தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம் ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம …
-
- 4 replies
- 1.8k views
-
-
ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜூன் மாத "கணையாழி" இதழில் வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை, யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! அஸ்மிதா எனும் குட்டி தேவதை ----------------------------------------------------- எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு அஸ்மிதா எனும் குட்டி தேவதை கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள். கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை எங்கள் வீட்டில் விரித்து வைத்து, நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து வானவில் காட்டுகிறாள். அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா, அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில் அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம். க…
-
- 4 replies
- 1.6k views
-
-
எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம். வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம். எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி. எப்படிப் பொறுப்போம். இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம். கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின. அனியாயங்களைச் செய்தவன் ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க - என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லி காட்ட ஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை ஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன் வட்டு வாக்கால் பாலம் தாண்ட தேக்கி வைச்ச மீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட வார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து வரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன் இந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "-------------------------------------------------------------------" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "-------------------------------------------------------------------" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "-------------------------------------------------------------------" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "-------------------------------------------------------------------"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
-
- 6 replies
- 8.1k views
-
-
பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…
-
- 2 replies
- 12.4k views
-
-
நீ எனக்காக பிறந்தவள் .... என்னை காதலிக்க.... எதற்காக தயங்குகிறாய் ...? கவலையை விடு .... நான் உனக்காகவே .... பிறந்தவன் ......!!! என் காதல் பைங்கிளியே .... அவனவன் காதல் ... அவனால் ..... தீர்மானிக்கபடுவதில்லை .... எல்லாம் வல்ல அவனே ... நிச்சயிக்கிறான் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன் நீ ... எத்தனை... முறை மறுத்தாலும் .... நான் .. அதற்கு பலமுறை .... முயற்சிப்பேன் .... ஆனால் ... உன் அனுமதியில்லாமல் .... உன்னை ஏற்க மாட்டேன் .... ஒருமுறை என்னை .... காதலித்துப்பார் ..... பலமுறை என்னையே .... வணங்குவாய் ....!!! ^ என் காதல் பைங்கிளியே காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.6k views
-
-
போதும் என்ற மனமே........? -------- குடியிருக்க குடிசையுண்டு.... கூடிவாழ குடும்பமுண்டு...... தூங்கியெழ திண்ணையுண்டு.... அதிகாரம் செய்ய உறவுகளுண்டு.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? பாசத்தை காட்ட பெற்றோர்.... வேசத்தை காட்ட பதவி .... மோகத்தை காட்ட மனைவி .... பாவத்தை போக்க கோயில்.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? கொள்ளிவைக்க ஆண்குழந்தை கொஞ்சி விளையாட பெண்குழந்தை ... தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் ....... கொட்டி கொடுக்க மாமன் சொத்து .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? குடித்து கும்மாலம் போட நண்பன் .... ஊர்கதை பேச ஆலமரத்தடி...... பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்.... பகட்டாக திரிய ஒரு வாகனம் .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? …
-
- 0 replies
- 948 views
-
-
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது அவர் அறம் பாடியது போலவே ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்தார். 'இட்ட சாபம் முட்டுக' என்ற பாடலை இங்கே இணைக்கிறேன். இப்பாடல் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவதற்கு சுமார் மூன்று ஆணடுகளுக்கு முன்பே, ராஜீவ் அவர்களின் சாவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினத்துடன் பாவலரேறு அவர்களால் அறம் பாடப்பட்டது என்பதைக் கவனிக்க. மே 21, 1991 அன்று இன்றைக்குச் சரியாக இதே நாளில் ராஜீவ் கொலை நடைபெற்றது. வரலாறுகள் என்றும் மறப்பதற்கு அல்ல. சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே முந்து 'இரா சீவ்' எனும் முன்டையின…
-
- 39 replies
- 6.3k views
-
-
அழகழகா வாழைமரம்அடுத்தடுத்து குலை சாய்சிருக்குவிதம் விதமாய் உருவம் கொண்டுவிரும்பும் சுவையில் பழுத்திருக்குமாப் பிடிப்பாய் கப்பல்மனம் பிடித்த இதரைதேன் இனிக்கும் கதலி - தின்னத்தெகிட்டாத செவ்வாழைவெட்டிப் பொரித்துண்ணவிருந்து சிறக்கும் மொந்தனதால்இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்அத்தனையும் தொலைத்தோம்அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்துஅன்னியமண் வாசம் நுகர்வதனால்...#ஈழத்துப்பித்தன்22.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_23.html
-
- 0 replies
- 2.2k views
-
-
புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று தின்பதுபோல் ஈன்ற குட்டிகளை தின்னும் கரடிகள் கடற்சுறா போல் தோழில் சுமந்தவர்களை தோழில் இருந்தவாறே தலையை கடித்து குதறிய பொழுதுகள் ஏழாண்டுகள் கடந்தும் விடியாது விறைத்து நிற்கின்றது. யானையை கொன்று தந்தம் எடுப்பதுபோல் பிடரியில் அடித்தும் முதுகில் குத்தியும் தன் விரலைக் கொண்டே கண்ணில் குத்தி குருடாக்கிக் கொன்று கொன்ற பின் கட்டை விரலை வெட்டி எடுத்து கைநட்டு வைத்து பெற்ற பெருவாழ்விலிருந்து நேற்று நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்று அதற்கும் நேரமில்லை நேற்று எரியிற வீட்டில் புடுங்குவது லாபம் என்ற சூழல் இன்று எரிப்பதற்கு க…
-
- 7 replies
- 1.8k views
-
-
பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 …
-
- 0 replies
- 1.8k views
-
-
கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென்று ஒருவரும் கொல்லப்படவில்லை என்றனர் யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்புதானே என்றனர் அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோம் என்றனர் பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனர் என்று பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோம் என்று இறுதியில் யுத்தம் போராளிகளுக்கு எதிரானது என்றனர் நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு மேலும் அதை தொடர்ந்தபடி எல்லாவற்றையும் மறப்போம் என்றனர் எதையும் பகிராமல் …
-
- 0 replies
- 854 views
-
-
நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )
-
- 9 replies
- 1k views
-
-
கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை நந்திக்கடலில் விழுந்திருந்தன நிறைய முகங்கள் சயனட் குப்பிகளில் குழந்தைகள் பால் குடித்தனர். தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி குழந்தைகளை சுமந்து சென்றனர். முள்ளி வாய்க்காலின் கிடங்குகள் எல்லாம் மூடுண்டு விடுகிறது. கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர் பிணங்களும் அதன் குழந்தைகளும். கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து கடலில் அள்ளுண்டு செல்லுகிறது. முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி. விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின் குளிர் அறைகளாக மாறிவிட சித்திரவதையின் பாடல்களில் இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. பெருநிலம் மயானமாக மாற அகதிமுகாம்கள் நெருங்குகி…
-
- 0 replies
- 632 views
-
-
மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செ…
-
- 9 replies
- 1.8k views
-
-
மௌனித்த வெளியில் நின்று முனகும் குரல் - வெற்றி துஷ்யந்தன் அச்சப் பிராந்திய இரவுகளோடு நகர்ந்த நரக நாள்களின் நினைவுகளால் சூழ்ந்து கிடக்கின்றது இந்த காற்று மண்டலம். யாரெனத் தெரியா உடலங்களின் மீது பாதங்களை பதிந்து பாதைகளை தேடிய -எங்கள் ஆற்றாமைகளும் இயலாமைகளும் அரங்கேற்றம் கண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் தொலைத்தோம். உருப்பெற முடியா உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கொண்டு உள்ளுக்குள்ளே புதைத்து வெடித்தோம். விதைகளின் கனாக்களை விழிகளில் சுமந்தபடி விடுதலை பற்றிய சொல்லாடலின் பெரும் அர்த்த புஷ்டியை உணர்துகொண்டோம். ஒரு இனத்தின் பெரும் கனவின் சாத்தியம் பற்றியும், ஒரு இனத்தின் தனித்த தேசத்தின் வல்லமை பொருந்திய சுய வாழ்வுரி…
-
- 0 replies
- 684 views
-
-
கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…
-
- 0 replies
- 697 views
-
-
சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…
-
- 2 replies
- 1.3k views
-