கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மீண்டு வராத காலத்தின் நினைவுகளை துவட்டத் தொடங்குகிறான் சாம இரவில் விழிப்படைந்த வேடன். அன்றொருநாள், குறிதவறியிருக்கலாம். அன்றில், நரகத்தின் வாசலில் நிறுத்தி நழுவிச்சென்ற விரல்களில் இருந்து ஒழுகிய, பூப்படைந்த வாசம், இன்றில் அறையெங்கும் நிறைந்து யன்னல்களால் வெளியேறத்தொடங்குகிறது உவர்த்த இதழ்களும் நெகிழ்ந்த முதல்களும் வசீகர தழுவல்களும் இரைகொள்ளும் பேரலையாய் கவிழ்ந்துவிழ, பெரும் தீ ஆற்றொனாப் பெரும் தீ.
-
- 3 replies
- 898 views
-
-
வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் இன்றி ஆர்ப்பரித்தே எழுந்திடாமல் கூப்பாடு போட்டு இங்கே கும்ம…
-
- 2 replies
- 751 views
-
-
கனதிகள் அற்ற காகிதக் கப்பலாய் மாறி கவலைகள் அற்று நான் கண்வளர வேண்டும் நினைவின் விளிம்புவரை நிழல்தரும் அனைத்தும் நிர்மூலமாக்குவதாய் நெருடலாய் நிதம் நிகழும் நெருக்குதல்கள் நீங்க நிழற்குடையின் கீழ் நான் நீள்துயில் கொள்ள வேண்டும் மனவறையின் பக்கம் மண்டிய படி கிடக்கும் மூச்சுப் புகமுடியாப் புதரின் முடிவற்ற மீதங்களை மட்டுப்படாத காலத்தால் கருனைக் கொலை செய்திட மனம் ஆர்ப்பரிக்கிறது ஆயினும் அறுதியிட முடியா ஆழத்தில் கால்பதித்து அகக்கதவை எப்போதும் அறைந்து சாற்ற முடியாத அகத்தின் அறம் இழந்து அளக்கமுடியா ஆளத்தை அடிமுடி தேடியபடியே அல்லலுடன் கடக்கிறேன்
-
- 2 replies
- 675 views
-
-
TODAY IS MY LOVELY MOTHER'S 95TH BIRTH DAY. MISSING YOU AMMA. மறக்க வில்லை அம்மா நான் வண்டி இன்னும் வரவில்லை. மாறவும் இல்லை அம்மா நான் வளமைபோல் பயணக் காசோடு வாசலில் வந்து காத்திரம்மா 1 அம்மா * போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் …
-
- 3 replies
- 946 views
-
-
என் கவிதையை ரசிக்கிறாய் கண்ணீர் விடுகிறாய் காதலை வெறுக்கிறாய் உயிரே ...!!! என் காதல் வரிகள் எழுத்துக்கள் அல்ல -உன்னை நினைத்து எழுதும் ஆத்மாவின் உயிர் வரிகள் ....!!!
-
- 2 replies
- 623 views
-
-
நன்கு விபரம் தெரிந்த வயது ..... விடிந்தால் மாவட்ட விளையாட்டு ... பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ... பலருடன் போட்டிபோடும் .... மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!! நாள் முழுவதும் கற்பனையில் .... முதலிடத்தை பிடித்ததாய் .... கனவும் வேறு வந்துதுலைத்தது..... திடீரென திடுக்கிட்டு எழுந்து ..... மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!! ஆரம்பமானது ஓட்டப்போட்டி ..... மைதானம் வானை தொடும் வரை ... கரகோஷம் நான் வெற்றிபெற ... முகம்தெரியாதவர்கூட கத்தும் .... என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!! எல்லை கோட்டை நெருங்கும் .... ஒருசில நொடியில் யார் முதலிடம் .... யார்...? இரண்டாம் இடம் ...? முடிவை தெரிவிக்க தடுமாறும் .... நடுவரின் பரிதாப நிலை .....!!! நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...? நொடி…
-
- 2 replies
- 780 views
-
-
நிர்வாண மரங்கள் கிளைகள் தளிர் நிறைக்க இலையாடை அணிந்து தம்மை அழகாக்க ஆயத்தமாகின்றன பூமியின் காதலன் நிதம் கதிர் பரப்பி தூங்கிக் கிடக்கும் வேர்களைத் தட்டி எழுப்ப கிளைகள் எங்கணும் மகிழ்வின் துடிப்பில் மொட்டுக்கள் பூக்களாகி மாலை கட்டி நிற்கிறது மரம் மறைந்து வாழ்ந்த பறவைகள் மரங்களில் அமர்ந்து மகிழ்வாய்க் காதல் செய்ய மன நிறைவாய் தளிர்கள் நாளும் பொழுதும் விரிந்து நாட்டியமாடும் மங்கையராய் நடை பரப்பி நிதம் நகைக்க வைக்கின்றன பார்க்கும் இடம் எங்கும் பச்சை வண்ணம் காண பசுமை கொண்ட மாந்தமனம் மனதெங்கும் மகிழ்வோடு துன்பங்களைத் தூர வைத்து இயற்கை எழிலை எல்லையின்றி எங்கும் நிரப்பிக்கொள்ள போதும் இன்று என எண்ணித் கதிர்க் குடை சுருக்கக் கதிரவன் காலம…
-
- 12 replies
- 1.2k views
-
-
மனதினில் தோன்றும் மாயைகள் எல்லாம் முறியாத முட்களாகி சிந்தை முழுதும் சிதைத்து முந்தை வினை முழுதும் முடிவற்றதாக்கித் தினம் மதி கொன்று விதி வெல்ல வேளை பார்த்திருக்கிறது அன்பென்னும் அச்சாணி ஆட்டம் கண்டபடி என்றும் அச்சுறுத்தலைத் தந்து அகத்தின் அறம் தொலைய அல்லல் மட்டும் என்றும் அறிதியிடா நிலமாய் ஆணவத்தின் ஏணியில் எப்போதும் அமர்ந்தபடி எல்லைகள் அற்றதான எண்ணங்கள் விதையாகி ஏகமாய் எங்கும் பரவி எதிர்மறை விருட்சங்களை எங்கெங்கோ நாட்டி ஏக்கமுறச் செய்கிறதாய் எக்காளமிட்டபடி தினம் எதிர்வலம் வருகின்றன நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்வுகளில் நிழல்கள் நாற்ற மனம் துறந்து நேர்வழி சென்றிடினும் நூற்பதற்கான நிலையற்று நகர்வதற்காய்த் தினம் நிறம் மங்கியதான ந…
-
- 7 replies
- 732 views
-
-
கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன். கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு! கால்கள் மூன்றாகி நடக்கையில், மனம் மட்டும், அங்கும் இங்குமாய், மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது! காலம் தான் எவ்வளவு குறுகியது! கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில், யாரோ பந்து விளையாடுகின்றார்கள்! களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள், காதுக்கு இனிமையாய் இருக்கின்றன! கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது! அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில், ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது! முதுமை என்பது, முந்திய அனுபவங்களின் இரை மீட்புக் காலம் போலும்! பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன! இழந்து போன சந்தர்ப்பங்கள், எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை! இமை வெட்டும் நேரத்தி…
-
- 34 replies
- 12.3k views
-
-
சொந்த மக்களுக்காய் அசோகச்சக்கரத்தின் அடியில் பசி கிடந்த தாயே.. தமிழன் உணர்வதை கோரிக்கையாய் நிமிர்த்தி மட்டு மாமாங்கத் திடலில் உண்ணா நோன்பிருந்தாய் அம்மா..! அன்று காட்சியில் இருந்தோரும் முதலை அமைச்சராய் அமர்ந்தோரும் இன்றும் கைலாகுகள் தருகின்றார் தமிழர் பிணக்குவியல் மேல் அரசியல் வியாபாரம் செய்கின்றார் தாயே.. அவர்களிடம் மாறாமை ஒன்றே மாறாததாய் உள்ளதம்மா..! ராஜீவின் படைகளிடம் நீ மண்டியிட மறுத்தாய்.. விடுதலை கேட்டு நின்ற சொந்த இனத்தை ஹிந்தியா முன் மண்டியிட சொன்ன கூட்டம் இன்று தமிழர் தம் அரசியல் வாரிசுகளாம் விலாசம் காட்ட களமிறங்குகின்றன தாயே...! விண்ணிருந்து நீயும் காண்பாய் அந்தக் கொடுமைகள் இங்கு அம்மா..! ஹிந்திய அதிகாரம் உன்னைக் கொன்றிருக்கலாம்…
-
- 8 replies
- 751 views
-
-
துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வ…
-
- 3 replies
- 931 views
-
-
சப்பாத்தின் விலை ஒன்பது தொண்நூறு விற்பவனிடம் வாதாடிக் களைத்துவிட்டேன் குறையும் இருபது சதத்திற்காய் வாயாற முடியாது இருந்த காலங்களில் எல்லாம் வறுமையின் கோரத்தை போக்க நட்சத்திரங்களை எண்ணியபடி வயிறை நீரால் நிறப்பியதுண்டு இது சற்றே மாறுபட்டது ஆடம்பரம் என்றோ ஆசைஎன்றோ வரையறுத்து விட்டு விட்டால் கால்கள் தேவையற்றதாய் போய்விடும் ஊரென்றால் பறவாயில்லை சப்பாத்துமுள்ளும் சாணிப் பட்டியும் கிரவல் றோட்டும் பழகிப்போன ஒன்று இது சற்று மாறுபட்டது மண்ணில் கால் படுவதே இல்லை மாறிப்பட்டு விட்டால் குளிரின் கோரம் ஊசியாய் குத்த விறைத்த கால்கள் பாறைபோல் ஆகும். இருக்கும் பழசுகளிலும் இடையிடையே ஓட்டை எப்படியும் இந்தமாதம் …
-
- 6 replies
- 887 views
-
-
தடங்களில் இருந்து எழுகின்ற கரியநாகம் பின்னந்தலையில் சுருண்டு கொள்ள, வெளியேறும் எலிகள் தலையணை விளிம்புகளை முகரத்தொடங்குகின்றன... எலிகளும் நாகங்களும் இல்லாத நாளொன்றில் நான் என்னவாக இருப்பேன். அத்துமீறி இந்த இரவுகளில் உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை கொன்றொழிக்க வேண்டும், இல்லையேல் நான் மலர்ந்துவிடவேண்டும். சாத்தியமில்லாத போதிலும் உயரித்தென்னையின் பொந்தில் இறுதியாக பார்த்த கிளி அறையின் சட்டகத்தில் வந்துவிடுகிறது. காலமுள்ளில் சிக்கிய மீனின் கண்களில் இருந்த கடல் வறண்டுபோக, ஆதியில் பெயர்தெரியாத ஒருவனின் வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் தோன்றத்தொடங்கின. "ஆழிசூழ் உலகில்" இருந்து இறங்கிய சூசையும் சுந்தரிரீச்சரும் வசந்தாவும் கோத்தராப்பிள்ளையும் ஊர…
-
- 8 replies
- 817 views
-
-
கார்முகில் திரை போட்டு வெண்பனி தூபம் இட மின்னல் தீபம் காட்ட சிங்காரமாய் தேரில் வீற்றிருக்கும் தேவதைக்கும் நாட்கணக்கில் தவமிருந்து வாரம் தோறும் பூஜை செய்து பூச்சரங்கள் மாலையாக்கி அர்ச்சனை செய்ய காத்திருக்கும் பக்தனுக்கும் உறவுகள் பலர் சேர்த்து வைத்து ஊர்வலமாய் கொண்டு செல்ல மங்கலமாய் நிறைவு பெரும் பந்தத்தின் ஆரம்பம் .
-
- 0 replies
- 617 views
-
-
கண்ணிமைக்கும் நேரத்தில் நீ தோன்றினாய் கண்கள் இரண்டையும் ஏன் திருடிச்சென்றாய் கள்ளி என்று உன்னைக் கூற - ஏனோ கன்னியே என் உள்ளம் மறுக்குதே காலம் காலமாய் கதவு மூடி காத்த இந்த கனத்த கல் நெஞ்சம் இன்று காற்றில் பறக்கும் பஞ்சாய் மாறிப் போகுதே கனவில் கண்ட நீ இன்று நிஜத்தில் உதித்தாயோ ஆயிரமாயிரம் அழகிகளைக் கண்டேன் / ஆனால் ஆணவத்துடன் அசைக்க முடியாத ஆம்பிளையாய் நின்றேன் அக்கு வேறு ஆணி வேறாய் என்னை அழித்தாயே அடிமனத்தில் அடித்த ஆணியைப் போல் இறங்கினாயே ஊமையாய் நாடகமாட உருகுகிறேன் நான் ஊதுவத்தியைப்போல் உச்சத்திலிருந்தவனை உலைய விட்டு உருக்கி விட்டாய் பாவியே உன்னால் முடியுமா இவ் உண்மையை உணர உறக்கத்திலிருந்து எழுமா உந்தன் உள்ளம் முகநூலில் தேடுகிறேன் …
-
- 2 replies
- 464 views
-
-
அழகான குக் கிராமம் .... கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே .... குடிசைவீடுகள் இடையிடையே ... வேற்று காணிகள் ,முற்பற்றைகள் .... முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ... எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ .... அந்த புற்று கோயிலாக மாறும் ...!!! வீடுகள் என்னவோ குடிசைகள் ... பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ... பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்... ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் .... கோயிலாக மாறும் போட்டியாக ... விதம் விதமான பூசைகள் .... பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!! ஊரில் குறி சொல்பவரே நீதிபதி .... ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ... யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ... பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் .... அவருக்கு வரும் கனவுகள் ... காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் .... அயல் கிராமத்தவரும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
அகோர மழை சாதாரண துளியுடன் ஆரம்பித்தது ... கொட்டி தீர்த்த அகோர மழை ....!!! வீதியோரகடையொன்றில் கூரையில் ... கூட்டத்தோடு கூடமாய் நடப்பதை.... பார்த்துக்கொண்டிருந்தேன் ......!!! வீதியிலிருந்த குழிகள் பள்ளங்கள் ... எவையும் தெரியாமல் நிரம்பிவழிய ..... சிற்றாறொன்று சிறுவீதியால் திசை ... திரும்பி வந்ததோ என வாயை ..... பிளக்கும் பெருவெள்ளம் .....!!! தள்ளுவண்டியில் காய்கறிகாரன் ..... தள்ளிவந்த வண்டிதான் மிஞ்சியது ... காய்கறிகளைகாணோம்...... பள்ளத்திலா குழிக்குள்ளா....? தேடிப்பார்க்கும் நிலையிலில்லை .....!!! நடைபாதையருகில் பெட்டிக்கடை ... பழவியாபாரி தான் நனைந்தபடி .... பழங்களுக்கு போர்வை போத்து ... இழந்த வருமானத்தை வரண்ட ... மனத்துடன் காத்திருக்கும் நிலை ...!!! சிரித்தப…
-
- 4 replies
- 1.8k views
-
-
அணு அணுவாய் காதல் கவிதை காதல் என்பது இருபால் ... கவர்ச்சியல்ல - உயிரின் உன்னத உணர்வு ....!!! @@@ காதல் இல்லாத இதயம் ... துடித்தால் என்ன ...? துடிக்காமல் விட்டால் என்ன ..? @@@ திருமணமாகாமல் இறந்து விடலாம் ... காதல் செய்யாமல் இறந்து விடாதீர்கள் .....!!! @@@ எனக்கு காதலே பிடிக்காது என்பவர்கள் ... காதலை பயத்தோடு பார்ப்பவர்கள் ....!!! @@@ எந்த நேரமும் இன்பமாய் ஆசைப்பட்டால் எந்த நேரமும் காதல் செய் ...!!!
-
- 8 replies
- 4.1k views
-
-
செந்தமிழ் தாயின் சந்தன மேனியர் ஆந்திர எல்லையில் சரிந்தே வீழ்ந்தனர் மரக்கட்டைகள் நடுவே செம்மரக்கட்டைகளாய்..! கிரந்த மொழி பேசும் திராவிட வாரிசுகளாம் தெலுங்கர்கள் பட்சாதாபமின்றி வேட்டையாடி மகிழ்ந்தனர் செந்தமிழன் பிணம் வீழ்த்தி...! சிங்களப் பேய்கள்.. ஹிந்தியப் பிசாசுகள் குடித்த ஈழத்தமிழ் இரத்தம் காய முதல்.. கடலில் கரைந்த தமிழகத் தமிழனின் குருதி நிறம் மாற முன்.. நடந்தது சம்பவம்..! சந்தனக் கடத்தலை சாட்டி முதலைகள் வேட்டையாடி முடித்தன.. மீண்டும் ஓர் இனப்படுகொலையின் நினைவை மனதின் ஓரத்தில் இருத்தி..! புலிக்கொடி நடுவே படை நடத்திய சோழ தேசம் இன்று வீழ்ந்து மடிகிறது..! காரணம் தான் என்ன.. தமிழனை தமிழன் ஆள வழியின்றி போனதே..! மீட்போம் எம…
-
- 29 replies
- 2.1k views
-
-
உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
-
- 5 replies
- 516 views
-
-
மண் மணக்குதுகா....! ---------------------------------- சுத்திவர வேலி வேலி நிறையக் கள்ளி கரு நொச்சி சப்பாத்தி முள்ளு கிடசரியா ஆடாதோடை விண்ணாங்கு வேலிப் பருத்தி விஷ முருங்கை இடையிடையே இப்பிலி இன்னும் சொன்னால் இலவ மரம் மஞ்சோணா பூவரசு சுண்ணக்கொடி கோமரச மோதிரக்கண்ணி பேய்ப்பாவை குரங்கு வெற்றிலை கிளாக் கன்று எருக்கலை பூமுத்தை காசான்செடி பொண்டாட்டி மரம் முள் முருங்கை இப்படி இருந்த வேலிகள் எங்கே....? தோளில் துண்டு இடுப்பில் சிறுவால் பேருக்குச் சாரன் கொழுவிய சட்டை கூன் இல்லா முதுகு நேரான நடை ஊருக்கு உழைத்து யாருக்கும் அஞ்சா பேரோடு வாழ்ந்த பெருமக்கள் எங்கே....? குனிந்த தலை நிமிராத களவெட்டிக்குப் போனாலும் களையெடுக்கப் போனாலும் காட்டுக்கு விறகெடுக்க காவலின்றிப் ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வலி நான் உணரவில்லை… தாவணிப்பருவத்தில் தோழி வீடுசென்று தாமதமாக திரும்பும் நாட்களில் உன் அவஸ்தையின் வலி நான் உணரவில்லை… கல்லூரிப்பருவத்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… மணப்பந்தலில் உன் காலில் விழுந்தெழுந்த போது என் உச்சி முகர்ந்த உனது முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…
-
- 12 replies
- 14.2k views
-
-
திசை தெரியாத் தேசமொன்றில் அடைபட்ட அந்நியர் போல் அடிமைச் சாசனம் எழுதியபின் எஜமானர்களின் கல்லா நிரப்பி மீளும் பெரும் பணிச் சுமையுடன் போயிருந்த அவர்கள் - இன்று எம்முடன் இல்லை தெருநாய்கள் இயங்கும் தெருவில் துப்பாக்கி குண்டுகளால் தொளையிடப்பட்டு தூக்கி வீசப்பட்டனர் இன்னமும் மனித முகங்கள் கண்டறியப் படாத அயல் மண்ணில் கருப்பு இரவுகளின் தனிமை தணிவதற்குள் எங்கள் ஏழைத் தொழிலாளர்களின் ஜீவநாடி அடங்கிப் போனது வன்மம் கொட்டித் தீர்க்கப்பட்ட பின்னர் கண்ணீர்த் துளிகளை மட்டுமே எமக்குப் பரிசாக அளித்தன பிசாசுகள் நாளை பற்றிய கனவுகளைச் சுமந்து சென்ற ஏதிலிகள் மேல் தங்கள் குரோதத்தைக் கொட்டி மரணத்தை மட…
-
- 7 replies
- 892 views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை – உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ….!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ….!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ……!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் … செருப்பில்லாத பாதங்களேடு…. இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே …..!!! …
-
- 11 replies
- 2.3k views
-
-
இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01
-
- 2 replies
- 734 views
-