கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மரம் செடி இலைகள் போல மண் வாழும் உயிர்கள் போல மூச்சுவிடத் தெரிந்த முதலை நீருக்குள் எதற்காய் போச்சு? கூடுகள் குகைகள் இன்றி நீரடியில் உறங்கலாச்சு நரிக் குகையில் சிங்கம்போகும்; குயில் முட்டை காக்கை கூட்டில்; காக்கைகள் மனிதர் வீட்டில்; புற்று மண் எறும்பு கட்ட, பாம்புக்கு அதுவே கட்டில்; உன்சுவர் எனது வீட்டில் என் கலப்பை உனது வரப்பில் அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் எண்ணமே முதலைக் கில்லை நீரடி எல்லாம் இங்கே பூமித் தாய் கருப்பை போல எல்லைகள் இல்லா தேசம் திசைகூட அழியும் ஆங்கே மனிதர்கள் பிரித்துப் போட்ட நிலம் பார்த்து சோகத்தோடு அழுவதே முதலைக் கண்ணீர் தெரிந்தபின் குறை சொல்லாதீர் நன்றி : பாலகுமாரன் http://tnmurali.bl…
-
- 0 replies
- 678 views
-
-
[size=5][/size] [size=5]குழந்தை[/size] புட்டிப் பாலை எட்டிப் பறித்துக் குடித்தது குட்டி பலூனை தட்டித் தட்டிச் சிரித்தது தொட்டில் மீது பெட்சீட் நனைத்தது தூங்கும்போது "நரி வெருட்டி" சிரித்தது இரவிரவா கத்தியழுது அப்பா அம்மாவின் நித்திரையைக் குழப்பியது தவழ்ந்து தவழ்ந்து பின் தள்ளாடி நிமிர்ந்து பெற்றோர் கைபிடித்து நடை பழகியது என , இவையெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லையெனினும் வேறோரு குழந்தை செய்வதைப் பார்த்து நாமும் அப்போது இப்பிடித்தானோ!? என உள்ளுக்குள்ளே சிரிப்பது வழமை! நன்றி : கவிதையின் கவிதைகள் .
-
- 4 replies
- 641 views
-
-
[size=3] ஈழமெழுமெனப் போரிட்ட வீரப்பெண் சேனையை தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே மாவீரர் நினைவேந்தக் கார்த்திகைக்கு மலர்தூவப் போவீரோ.. வாழ வழியேதுமற்றுச் சாகக் கிடந்தால் சுருக்கிட்டு சாவெனச் சொல்லும் ஈனச் சமூகமிது பசியால் துடிக்கும் குழந்தையைப் பெற்றவள் இதயத் துடிப்பறியா இனமே உடலைவருத்தி உலையேற்றினால் பாலியல் தொழிலாயிது ?[/size] [size=3] வயிற்றுக் கஞ்சிக்கு கைநீட்டினால் பிச்சைக்காரரென்கிறது உடலைக் கடித்துக் குதறி காசெறியும் காமப்பிசாசுகள் அதற்கும் விபச்சாரியென்கிறது தோள் சுமந்த எறிகணைகள் வெடித்துச் சிதறியபோது சுதந்திரப் பறவைகளென்றோம் தரைப்படை வான்படை கடற்படை கட்டிக் களமாடென சிங்களப்படை வீழ்கிறதென எக்க…
-
- 34 replies
- 2.3k views
-
-
[size=4]கள்ளமில்லா உன் பார்வையால் என்னைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாய் திசை மறந்த பறவையாய் திகைக்கிறோம் நானும் என் காதலும் நாணயத்தை தடவிப்பார்த்து மதிப்பிடும் கண்ணில்லாக் கிழவி போல் உன் மனம் தடவி அறிந்து கொண்டேன் நீ சொல்லாத காதலை.. சாளரத்தின் வழியே உடல் நனைக்கும் மழைத்தூறலாய் என் மனதை நனைத்தது காதலுக்கு நம் பெற்றோரிடம் சம்மதம் கிடைத்த தருணங்கள் பூட்டிய கதவை இழுத்து சரிபார்ப்பதாய் ஒவ்வொரு முறையும் என்னிடம் செல்லச் சண்டையிட்டு உறுதி செய்து கொள்கிறாய் உன் மீதான என் காதலை செடி முழுக்க பூத்திருக்கும் ரோஜாவாய் நம் மனத்தோட்டத்தில் மலர்ந்திருக்கின்றன என்றும் வாடாத காதல் பூக்கள்...[/size]
-
- 0 replies
- 721 views
-
-
[size=5]மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! [/size] சிறகு விரிச்சி பறக்குதே -மனசும் சித்தாடைக் கட்டி விரியுதே கொத்தோட பறிச்சவன் யாரடி கொண்டாட தேதியுந்தான் கூறடி. சித்திரையில் முளைத்தவனோ சினம் கொண்டே பிறந்தவனோ கத்திரியிலும் குளிரெடுக்க கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ? மலர் வனமே சென்றாலும் மணமேனோ வீசலையே- கட்டாந்தரையில் நானும் களையெடுக்கப் போனேனே.. கடுகுவெடிக்குமுன்னே காதை பொத்தி நின்றேனே களவு போனது நிஜம் தானோ கண்ணுறக்கம் மறந்ததேனோ? சொல்லுனக்காய்த் தேடித்தேடி சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தம் பயில்கின்றேன. மன்றாடித்திண்டாடி நானும் மயங்கித…
-
- 2 replies
- 677 views
-
-
எங்கள் நிலைகள் காக்கப் படுவதற்காய் எழுச்சியுடன் புறப்பட்டீர்கள்.. உங்களுக்காய்ச் சிலைகள் ஊர் தோறும் எழுந்துள்ளன.. எங்கள் இடங்கள் கவரப் படுவதைத் தடுக்க விளைந்தீர்கள் உங்கள் படங்கள் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.. நீங்கள் வீழ்ந்ததனால் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. நீங்கள் சருகாகிச் சாய்ந்ததால் நாங்கள் இன்னும் கருகாதிருக்கிறோம்.. நீங்கள் மெழுகாகி உருகினீர்கள் நாங்கள் ஒளியை அனுபவிக்கிறோம்.. உங்கள் உடல்கள் சாய்ந்ததால் எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிற…
-
- 1 reply
- 490 views
-
-
கார்த்திகை ஒளிர்கிறது மலரும் மலர்கிறது கண்ணீர் அரும்பிட கண்களில் படர்ந்தவர் நினைவுகள் மனதில் பெருகிட… மரணம் மண்டியிட மண்ணில் வீழ்ந்தோம் அன்னை மடிமீது அந்நிய ஆதிக்கம்… உயிர் மூச்சு நெருப்பாக்கி உற்ற கடமை செய்தோம்..! உறவுகள் எமக்கு உலகெங்கும்.. உணர்வுகள் எமக்குள்ளும் உயிர் வாழ… உங்கள் உரிமைக்காய் உயிர் கொடுத்தோம்…! உறங்கும் நாள் குறித்தோம் எங்கள் வாழ்வுக்காய் அல்ல… உங்கள் பிஞ்சுகள் உரிமை கொண்டாட தமிழன் நான் "தனித்துவமானவன்" எண்ணங்கள் காத்திடுங்கள்…! இன்னும்… உற்ற அன்னை உள்ளுக்குள் அழுகிறாள்... உருவில்லை என்றாலும் எங்கள் மூச்சுகள் உணருது..! உங்கள் மூச்சொடு இறுதி இலட்சியம் வென்றிடுங்கள் வீணடிக்காது விரைந்து வீர வரலாறு இறுதி அத்தியாயம் எழுத…
-
- 20 replies
- 2.2k views
-
-
-உமா- ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது. இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன. …
-
- 0 replies
- 521 views
-
-
புலவரின் சாபம் பொய்க்காது...... http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c126.0.403.403/p403x403/404322_545401095474745_294603601_n.jpg தமிழ் தேசியத்தின் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜீவ் காந்திக்கு ராஜீவ் உயிரோடு இருக்கும் போதே அறம் பாடினார். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் பலித்தது. புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார். எவ்வாறு ராஜீவ் சாக வேண்டும் என்று அறம் பாடினாரோ அவ்வாறே செத்து மடிந்தார் ராஜீவ் காந்தி. ஆனாலும் புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருக்கிறது. பாடலை நீங்களே படியுங்கள். ---------------------------------------------------------- சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கண…
-
- 3 replies
- 657 views
-
-
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்! பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம் பக்கத் துறவின் முறையார், தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்த…
-
- 1 reply
- 745 views
-
-
[size=5]விழியோரங்களில் மலரும் துளிப்பூக்களின் வாசங்களை நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின், தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை, மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை, கணநேர ஈனப்பிதற்றல்களை, பொய்நாக்குகளின் வீணிகளை, விலக்கி சீராக்கமுடிகிறது படுக்கையொன்றை இலகுவாக அவளால். இது திணிக்கப்பட்டதா என்றாலும் தவிர்க்கமுடியாதா என்றாலும் தெரியாதென்பதே பதிலாகுகிறது. வகையறியும் பார்வைகளை தகையுரியும் நாவுரைகளை முகைகருக்கும் வசவுகளை பகைபெருக்குமோர் பல்லவிகளை நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று. தினவெடுத்த மிருகங்களின் நாவுகளில் படிந்திருக்கும் அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள், தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில் இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்…
-
- 10 replies
- 1.4k views
-
-
நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? நன்றி : சேரனின் கவிதைகள் http://www.kala…
-
- 0 replies
- 572 views
-
-
தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் காவியமான வீரப் புதல்வர்களுக்கும் வீரவணக்கம்! [size=4]புன்னகை தவழும் பொன்முகத்தோனே.....![/size] ------------------------------------------------------------ எம் மண்ணின் அழகாய் வலம் வந்த புன்னகை தவழும் பொன்முகத்தோனே தமிழர் இன்னல் களையும் வாஞ்சையுடன் உலகின் திசைகள் நாடி நின்றானே வெள்ளை மனிதரின் பெரும் வஞ்சகத்தால் புன்னகைப் பொன்முகம் சாய்ந்ததன்றோ! தமிழ் மான மரபினை மண்ணிலே பதிந்தவர் தமிழீழ மண்ணின் காற்றிலே கலந்தவர் பொய்மையின் நீட்சியாய் தொடரும் உலகிலே உண்மையின் சாட்சியாய் உயிர் துறந்தோரே! காலமும் பொய்த்தது களமும் போனது நினைவுகள் மட்டுமே நெஞ்சினில் வாழுது கனவுகள் தாங்கியே களத்தின் வீழ்ந்தவர் எம் மனதினுள் வா…
-
- 15 replies
- 872 views
-
-
[size=4]என் இரவுகள் அவள் குரல் கேட்டே விடிந்தது என் விடியல்கள் அவள் முகம் பார்க்க துடித்தது என் விரல்கள் அவள் தலை கோத விழைந்தது என் சுவாசம் அவள் வாசத்தால் நிறைந்தது என் குறும்புத்தனங்கள் முழுதும் அவளின் செல்ல கோபத்திற்கவே உருவானது நான் வாங்கும் பொருட்கள் எல்லாம் அவளாலே அழகானது ஏனோ நான் காதல் சொன்ன போது அவளின் மொழி மட்டும் மௌனமானது..![/size]
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=2][/size] நான் காதலெனும் தடாகத்தில் தகுதியின்மை கண்டு தரையில் விடப்பட்ட ஒற்றை மீன் உனது நீதிமன்று குற்றப்பத்திரிகையே இல்லாமல் மரணதண்டனை விதித்தது எனக்கு. இலங்கையின் இன்றைய சிறைகளைப்போலவே காரணமில்லாமல் நம் உறவில் கத்திரி போட்டவளே சொல் என்ன குற்றம் கண்டாய் என் அன்பின் ஆழத்தில். அடியேய் மரியான ஆழி உன் மனதிடம் மடிப்பிச்சை கேட்க வேண்டும். வைரமானவற்றை வைரத்தால் அறுப்பார்களாம் வைரத்தை தோழி உன்னால்தான் அறுக்க முடியும். ஏய் உழவன் மகளே என் நெஞ்சில் வேதனையை விதைத்தவளே வந்து பார் விளைச்சலை அற்புதமாய் இருக்கிறது. நீ கனவுகளை அடைமானம் வாங்கி கவிதைகள் தரும் அடைவுக்காறி. வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://youtu.be/Gj3Fs8IQscE எங்களுக்கும் ஆயிரம் ஆசைகள் உண்டு.. அதில் கட்டுநாயக்கா போய் கடல் கடந்து அந்நியப்பட்டு அந்நிய தேசத்தில் கடவுச்சீட்டொன்றில் வதிவிடம் வாங்கி களித்துப் பின் கலியாணம் கட்டி இசைஞானியின் காதல் இசையில் கருத்தால் மயங்கி கலவி செய்து கலந்திப்பதும் ஒன்று...! ஆனாலும் கால்கள் நகர மறுத்தன. காலம் தடுத்து நிறுத்தின. அன்னை தேசம் அடிமை விலங்கு தாங்கி அழுது புலம்பும் நிலை அனுதினமும் அமைதி குலைத்தது...! கழுத்தில் நஞ்சு கட்டி களமதில் கருவி ஏவி சாவு பல கண்டோம் ஏன்..... கார்த்திகை 27 இல் எமக்கு ஓர் நாள் கழிப்பு கழிப்பீர் என்றோ..???! கல்லறைகள் வரிசையாய் அடிக்கி நிற்கும் கோலம்.. எம்…
-
- 109 replies
- 7.2k views
-
-
சுள்ளிகள் பொறுக்கும் காக்கையின் கனவுகளில் கூடு. கூட்டில் குலவும் இணையின் இதமான உரசலும் நெருக்கமும், நெருக்கத்தில் விளைச்சலில் கூடுநிறை முட்டைகள், சிறகணைப்பின் சூட்டில் சிலிர்த்துத் தலைநீட்டும் குஞ்சுகள், வழியெல்லாம் தேடி வாகாய்க் கொணர்ந்த இரை, இரை கேட்டு வாய் பிளக்கும் குஞ்சுகளின் பசிக்குரல், பசி தீர்க்கும் தாய்மையின் பரிவான வாய் ஊட்டல். ஓயாத பகற்கனவும் அயராத உழைப்புமாய்க் காலம் கடக்க, நனவானது முதல்கனவு கூட்டின் முழுமையில் குதூகலித்துத் துயில் கொண்ட முதல்நாள் இரவு கருத்தது மேகம் சிறுத்தது மேனி சுழன்றது காற்று உழன்றது மரக்கிளை கூடு சிதைந்தது காடு கவிழ்ந்தது உயிர்த்தெழுந்த காகம் …
-
- 0 replies
- 913 views
-
-
[size=3]போராட்டம் மறந்து, பிரிவினை தொடக்கி,[/size] [size=3]தலைமை மறந்து, தலைமை பதவி விரும்பி,[/size] [size=3]ஈகம் மறுத்து, ஈனம் பூண்டு[/size] [size=3]வலிகள் மறந்து, வடுக்கள் மறைத்து[/size] [size=3]அபகரிக்கவும், ஆழவும், [/size] [size=3]அவலத்தில் குதித்தாடும் தமிழர்களே,[/size] [size=3]மாவீரர்களின் ஈகங்களை அவமதிப்பது... [/size] [size=3]மாவீரர்களின் தியாகங்களை கூறுபோடுவது...[/size] [size=3]மாவீரர்களை[/size]யே [size=3]பங்குபோடுவது...[/size] [size=3]மாவீரர்களை வருவாய் முதலீட்டாக்குவது...[/size] [size=3]கிராதகர்களே!! நீங்கள் பிணந்தின்னியிலும் கேவலம், உங்களைப் பார்த்து தாசி கூட கேவலமாகச் சிரிப்பாள். மாவீரரின் தியாகங்களில் வியாபாரம் செய்வதை விடுத…
-
- 0 replies
- 533 views
-
-
[size=5]கார்த்திகை இருபத்தேழில் நாம் துயிலும் இல்லம் செல்வோம்.............................. தம்மினத்தை நெஞ்சில் கொண்டார் தம்மண்ணை பூசிக்கொண்டார் தலைவன் சொல்லை கொண்டார் தளரா நிலையும் கொண்டார் ...... நெஞ்சிலே உறுதி கொண்டார் நெருப்பில் அணையாத நிலை கொண்டார் தலைவனை தமையனாய் கொண்டார் தமிழீழம் வேதமாய் கொண்டார் இல்லம் துறந்து வந்தார் .....இலட்சியம் தளரா நிலை கொண்டார் கார்த்திகைப்பூவாய் மலர்ந்தார் ....நல்ல கவிதைப்பூக்கள் தந்தார் ....[/size]
-
- 0 replies
- 652 views
-
-
டோங்குவும்... டெங்குவும்..! [size=1] அதென்ன டோங்கு [/size][size=1] அதென்ன டெங்கு [/size] [size=1] எல்லாம் அப்படித்தான் [/size][size=1] போக போக [/size][size=1] சரியாகி விடும்[/size] [size=1] வசன கவிதைகள் [/size][size=1] கவிதைகளாக [/size][size=1] மாற வில்லையா.? [/size] [size=1] அதைப் போன்றது [/size][size=1] தான் இதுவும். [/size] [size=1] ரூ நாற்பது [/size][size=1] ஆயிரம் அல்ல[/size] [size=1] அதற்கு மேல் [/size][size=1] இருந்தால் [/size][size=1] உனக்கு டெங்கு [/size] [size=1] ரூ நூறோ [/size][size=1] வெறும் ஆயிரமோ இருந்தால் [/size][size=1] உனக்கு டோங்கு தான் [/size] [size=1] என்று சொல்கிறார்கள் [/size][size=1] அரசு ஆய்வ…
-
- 0 replies
- 512 views
-
-
நொண்டி சாக்கும்.. நொள்ளக் கண்ணும்..! [size=1] அவரவர் விளக்கம் [/size][size=1] அவரவருக்கு [/size] [size=1] சாந்த சொரூபியாக [/size][size=1] இருந்து கொண்டால் [/size][size=1] எல்லாம் சாதிக்கலாம் [/size] [size=1] அல்லது தற்பொழுத நிலையை [/size][size=1] தற்காத்துக் கொள்ளலாம் [/size] [size=1] பொழிப்புரை சொல்ல[/size][size=1] கிளம்பி விட்டார்கள் [/size] [size=1] தொல்காப்பியம் [/size][size=1] ஐந்திணை [/size][size=1] மற்றும் சில [/size] [size=1] ஏன் சுற்றி வளைத்து [/size][size=1] சொல்வானேன்..?[/size] [size=1] மந்திரி சபை விரிவாக்கம் [/size][size=1] என்ன செய்யப் போகின்றன [/size] [size=1] என்று உங்களால் [/size][size=1] உத்திரவாதம் தர …
-
- 1 reply
- 666 views
-
-
[size=4]இனியவளே என்னுள் இருக்கும் உன் நினைவினை அழித்துவிடலமென்று நினைக்காதே அந்த சூரியன் கூட என்னை எரிக்கலாம் ஆனால் என்னுள் இருக்கும் உன் நினைவினை அழிக்க முடியாது நான் உயிருடன் இருக்கும் வரை...[/size]
-
- 2 replies
- 874 views
-
-
[size=5]அந்தக்காலம்[/size] [size=5][/size] நம்ம ஊர் பட்டசீஷன் எங்களால்தான் களைகட்டும்! கனவில் கூட பட்டம்தான் பல கலரில் வந்து போகும்! பட்டம்-நூல்-கூவக்கட்டை-நார் என்டு அலைஞ்ச நாள் அதிகம்! "இராக்கொடி" விட்டுட்டு...நித்திரை முழிச்சு இரவிரவா "இழுவை" பாத்த ஞாபகம் இன்னும் இருக்குது! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 0 replies
- 529 views
-
-
ஒரே நிறம் ஒரே தோற்றம் சந்திப்பு.. சம்பிரதாயத்துக்கு வணக்கம் கூட இல்லை கேள்வி மட்டும் முந்திக் கொள்கிறது.. எந்த ஊர் ஊரில எவடம் விசா இருக்கோ.. பதிலாய் ஊர் பெயர் மெளனம்.. ஊரில் எவடம் அதுவும் மெளனம்... நீண்ட மெளனத்திலும் தொடரும் கேள்விக்கு முடிவு வேணாமோ..?! விசா மாணவன்..!! அட நீர் ஸ்ருடென்ரே... வார்த்தையில் நக்கல்..!! அப்ப நீர் உதுக்கு சரிவரமாட்டீர்... சிந்தனையிலும் அது தெறிக்கிறது. பேச்சு நீள்கிறது.. போடர் ஏஜென்சி பிடிக்கிறது அனுப்பிறது எல்லாம்.... களவாய் இருக்கிற ஸ்ருடன்ராம் கிரிமினல்களாம்.. மெளனம் பேசியது அப்ப நீங்கள்.. நான் அசைலம்.. விசா எடுத்தோ போடர் தாண்டினனீங்கள்... இல்ல …
-
- 15 replies
- 1.9k views
-
-
[size=4]“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா”[/size] [size=4]“நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?”[/size] [size=4]“மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…”[/size] [size=4]“ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்..[/size] [size=4]எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை..[/size] [size=4]மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் மனசும் உடம்பும்..[/size] [size=4]மரமெல்லாம் பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும் வருடந்தோறும் உதிர்ந்துப்போகையில் தனித்து விடப்பட்ட வெற்றுமரத்தின் கிளைகளாக வல…
-
- 2 replies
- 524 views
-