Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…

  2. Started by P.S.பிரபா,

    இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிள…

  3. திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…

  4. Started by P.S.பிரபா,

    Oppenheimer- “Prometheus stole fire from the gods and gave it to man. For this he was chained to a rock and tortured for eternity.” என்ற கிரேக்க தேச புராணகதை வசனங்களுடன் தொடங்குகிறது Oppenheimer திரைப்படம். அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் Julius Robert Oppenheimerன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படம். முக்கியமாக அவரது இளமைப்பருவம், இரண்டாம் உலகப்போரின் முக்கிய அங்கமான மான்ஹட்டன் திட்டத்தில் அவரின் பங்களிப்பு, புகழின் உச்சியிலிருந்து அவரது சரிவு என்பவற்றை விபரிக்கிறது. பரிசோதனைக் கூடத்தை அதிகம் விரும்பாத கோட்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்ட ராபர்டை, மான்ஹட்டன் திட்டம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன் பின் அவர் எவ்…

  5. ’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம். சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனி…

  6. இயக்குநர் சித்திக் : வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நேசமணிகளை' உருவாக்கியவர் பட மூலாதாரம்,SIDDIQUE கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் நேற்று மாரடைப்பால் (ஆகஸ்ட்-8) காலமானார். அவருக்கு வயது 69. விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும…

  7. நேற்று ஊர்வசி நடித்த அப்பாத்தா திரைப்படம் பார்த்தேன். ஊர்வசியின் 700வது திரைப்படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். படம் ஆரம்பத்தில் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. தனது மகன் கேட்டுக் கொண்டதற்காக சென்னை வருகிறார் ஊர்வசி. மகன் பாசத்தால் தாயைக் கூப்பிடவில்லை மாறாக அவன் குடும்பத்துடன் சுற்றுலா போகும் போது தனது நாயை கவனிக்கவே கூப்பிடுகிறான் என்ற கட்டத்தில் இருந்து படம் கலகலப்பாகப் போகிறது. ‘ஊர்வசி ஒரு நடிப்பு ராட்சசி’ என்று கமல்ஹாசன் ஒருதடவை சொல்லியிருந்தார். அது இந்தப் படத்திலும் தெரிகிறது. படத்தை பிரியதர்சன் இயக்கி இருந்தார். பழைய பாணியிலேயே படம் இருந்தது. ஆனாலும் பார்க்கும் போது அடுத்தது என்ன என்ற ஆர்வம் இருந்தது. குடும்பமாகப் பார்க்கலாம்.

  8. பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் பவன் கல்யாண் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2023, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில…

  9. இந்திய பிரதமர், நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி செல்பி Published By: Digital Desk 3 17 Jul, 2023 | 10:29 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் எடுத்துக் கொண்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 14 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்த நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். அதனை தொடர்ந்து, அன்றிரவு பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் …

    • 1 reply
    • 403 views
  10. மதுரை: நடிகர் திலகம் சிவாஜிக்கு பெருமை சேர்த்த திரைப்படம் மட்டுமின்றி அவரையும், அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பத்மினியையும் உச்சத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘தில்லானா மோகனம்பாள்’ இதே நாளில், கடந்த 1968 ஜூலை 27-ம் தேதி திரைக்கு வந்தது. 55 ஆண்டுகளை கடந்துள்ள இப்படம், மதுரை சிந்தாமணி தியேட்டரில் அன்றைக்கு திரையிடப்பட்டது. மதுரைக்கும், இப்படத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சிவாஜிகணேசனுடன் மதுரையைச் சேர்ந்த சேதுராமன், பொன்னுச்சாமி சகோதரர்கள் படத்தில் நாதசுரம் வாசித்துள்ளனர். பாரம்பரிய கலைகளான நாதசுரம், நடனம் (ஆடல், பாடல்) ஆகியவற்றை உயர்த்தி பிடித்த படம் இது என மதுரையைச் சேர்ந்த திரை விமர்சகர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கு.கணேசன் கூறுகிறார். அவர் மேலும், கூறியத…

    • 1 reply
    • 318 views
  11. தண்டட்டி – திரைப்பட விமர்சனம் அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்க…

  12. அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்! christopherJul 23, 2023 17:46PM வெயில், அங்காடித்தெரு படங்களில் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். வாழ்வின் துன்பமான, அவலமான, திரும்பிப் பார்க்க விரும்பாத, மனதைப் பிறாண்டுகிற நிகழ்வுகளைக் காட்சிகளாகவும் கதைகளாகவும் உருமாற்றும் படைப்பாளிகளில் ஒருவர். அவரே தயாரிப்பாளர்களில் ஒருவராகி, இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் அபிமானத்தை அள்ளத் தவறிய வசந்தபாலன், இதில் அதனைச் சாதித்திருக்கிறாரா? விரக்தியின் விளிம்பில்..! ஒரு கால் செண்டரில் வேலை பார்த்த திருமேனி (அர்ஜுன் தாஸ்), அது பறி போனவுடன் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொள்கிறார். நிறுவனம் தரும் நெருக்க…

  13. Published By: NANTHINI 21 JUL, 2023 | 05:16 PM கலையுலகின் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் கற்பகத்தரு, தமிழ் சினிமா சிம்மாசனத்தில் வேறு யாரும் அமர முடியா வேந்தராக வீற்றிருந்த திரைமுடி சூடிய 'திரைச்சக்கரவரத்தி', வெள்ளித்திரையில் நவரசங்களை நவநூறுகளாக அள்ளி வழங்கிய நவரச நாயகன், கலைமகளின் மூத்த கலைமகன், உலகின் தவநடிகபூபதி, சிரம் தாங்கிய சிகை முதல் பாத நகம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உணர்ச்சியூட்டி நடிக்கச் செய்த பெரும் ஆற்றல் கொண்ட நடிப்பின் 'யுகபுருஷர்', 'தாதா சாஹெப் பால்கே' நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம் இன்று! (21/07) 60 ஆண்டுகால நடிகர் என்ற முறையில் நாடகம் மற்றும் தமிழ் திரையுலகுக்கு தொண்டாற்றி, பல க…

  14. 2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்? அறிவியல் புனை கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந…

  15. பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…

  16. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன். கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா…

  17. அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் …

  18. பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்…

  19. பட மூலாதாரம்,@ACTORVIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2023, 04:24 GMT “இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி” என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று. இயக்குநர் எ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2023 கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வ…

  21. பட மூலாதாரம்,ACTOR VIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன. இதனால், வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவ…

  22. இணையத்தில் நேற்று ‘ஹலோ மீரா’ திரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது. திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அ…

    • 1 reply
    • 503 views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2023, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் "தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தை படைத்தவர் இளையராஜா" என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஒருவர். 80களில் அவரது பாடலுக்கு உருகியவர்கள் இதை அப்படியே ஏற்கக்கூடும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து, 5 தேசிய விருதுகள், குடிமை மரியாதைகள், கணக்கில்லா ஃபிலிம் ஃபேர் விருதுகள், சர்வேதச விருதுகள் என வாங்கி குவித்து அனைத்து தமிழ் மக்களுக்க…

  24. கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது adminMay 28, 2023 இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

  25. பட மூலாதாரம்,S KUMARESAN 26 மே 2023, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.