வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
-
அமிதாப் மகனாகவும், அவரது மகன் அபிஷேக் தந்தையாகவும் நடித்து பிரமாதமாக ஓடிய "பா" வெற்றிப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், பி.சி.ஸ்ரீராம் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும்தான். தற்போது வந்துள்ள புதிய செய்தி மீண்டும் இசைஞானி பாலிவுட்டின் ஒரு படத்திற்கு இசையமைக்க இசைந்துள்ளார் என்பதுதான். "பா" இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசைஞானிதான் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கும் ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். "இசைஞானியுடன் இணைந்து வேலை செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தென்னகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பெயர் வாங்கிய இசைஞானிக்கு இந்த் படம் ம…
-
- 0 replies
- 388 views
-
-
சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..! 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்…
-
- 0 replies
- 430 views
-
-
இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…
-
- 0 replies
- 324 views
-
-
-
- 0 replies
- 630 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HYPJbV_befs
-
- 0 replies
- 515 views
-
-
இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார். அதன் விவரம் வருமாறு: வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில…
-
- 0 replies
- 512 views
-
-
வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…
-
- 0 replies
- 434 views
-
-
ரூ. 4500 கோடி வசூல் செய்து ஹாரிபாட்டர் படம் சாதனை ஹாரி பாட்டர் கதையை தழுவி எடுக்கும் சினிமா படங்கள் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி பாகமான ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை உலகம் முழுவதும் அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பரபரப்பாக ஓடி வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து “பாக்ஸ் ஆப் கிட்” பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இப்படம் ரூ.4,500 க…
-
- 0 replies
- 596 views
-
-
சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஸ்கர் விருதையோ கிராமி விருதையோ வெல்வேன் என்று நான் நினைத்ததில்லை. உள்ளார்ந்த ஈடுபாடு, என்னை அந்த விருதுகள் வரை கொண்டு சென்றுள்ளது என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் அவர், இந்திய விளையாட்டு வீரர்களும் அத்தகைய ஈடுபாட்டுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ”ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு” என்ற தலைப்பில் அவர், வெளியிட்டுள்ள பதிவின் முழு விபரம்: ”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருகின்றன. அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். …
-
- 0 replies
- 273 views
-
-
-
ஆதிபகவன் திரைப்படத்திற்குப் பிறகு ஃபெப்சி தலைவராகவும், இயக்குனர் சங்க தலைவராகவும் பதவி வகித்துக்கொண்டிருந்த அமீர், தனது திறமை பதவிகளுக்கு அடியில் சிக்கிவிடக் கூடாது என முடிவெடுத்து ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆதாம்பாவா தயாரிப்பில் ‘கொள்ளைக்காரன்’ திரைப்பட இயக்குனர் சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். மதுரையைச் சேர்ந்த இளைஞன் அரசியலில் முன்னேறும் கதையை அலப்பறைகளுடன் சொல்கிறதாம் பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தியின் பாடி லாங்குவேஜ் மொத்தமும் அமீர் இறக்கியது என்பதால், இந்த கதையை அமீர் தைரியத்துடன் கையில் எடுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பி…
-
- 0 replies
- 440 views
-
-
அரசியல் பிரச்சனையால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டும் வடிவேலுவின் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதற்காக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பிரமாண்ட வடிவில் செட் அமைத்து 12 நாட்கள் இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர். இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வடிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராயல்ட்டி விஷயத்தில் ஆடியோ நிறுவனங்கள் இசையமைப்பாளர்களையும், பாடலாசிரியர்களையும் ஏமாற்றி வருவதாக இசைஞானி இளையராஜா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். தற்போது இளம் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இந்த பிரச்சனையை மறுபடியும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில் இளையதளபதி விஜய்-அமலாபால் ஜோடி நடிக்கும் ‘தலைவா’ படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி முடித்திருக்கிறார் See More at http://vuin.com/news/tamil/vijays-thalaivaa-audio-royalty-issue-becomes-critical
-
- 0 replies
- 886 views
-
-
ஏற்கெனவே தமிழ் சினிமா இந்த ஆண்டு 100 படங்களைத் தாண்டிவிட்டது, எண்ணிக்கையில். மிசச்சமிருக்கும் மாதங்களில் இன்னொரு செஞ்சுரியையும் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் கிட்டத்தட்ட 20 படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்ற http://tamil.oneindia.in/movies/news/2013/08/20-films-waiting-release-august-180340.html தலைவா ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் வெளியாகிறது. ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் இந்தப் படம் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது ஆதலால் காதல் செய்வீர் சுசீந்திரன் இயக்கத்தில் ரெட்ஜெயன்ட் தயாரித்துள்ள படம் ஆதலால் காதல் செய்வீர். ஆகஸ்ட் 15 ஸ்பெஷலாக வெளியாகிறது. தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா படத்…
-
- 0 replies
- 2k views
-
-
“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி அமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது. அன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்! மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள். அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா. பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை…
-
- 0 replies
- 983 views
-
-
இளைய தளபதி விஜய் – தீவாளி வீடியோ தொலைக்காச்சி நிகழ்சி http://www.kadukathi.com/?p=1221
-
- 0 replies
- 898 views
-
-
பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு விலைபோனது ? அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர். இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் ரூ.3 க…
-
- 0 replies
- 720 views
-
-
தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்! 26 Feb 2025, 5:41 PM அ. குமரேசன் சில திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தாலும் அதை வெளிப்படுத்தும் கலையாக்கத்தாலும் பேசப்பட வேண்டிய படைப்புகளாக இருக்கும். வேறு சில படங்கள் அவற்றில் பேசப்பட்ட கருத்துகளைப் பற்றிச் சமுதாயத்தையே பேச வைப்பவையாக இருக்கும். பேச வைக்கிற ஒரு படம்தான் ‘காதல் என்பது பொது உடைமை’. காதல் மதம் பார்த்து, சாதி பார்த்து, இனம் பார்த்து, வயது பார்த்து, நாடு பார்த்து – ஏன் பாலினம் பார்த்துக்கூட – வருவதல்ல. எதிர்ப் பாலினத்தவர்களிடையே மட்டும்தான், பெண்ணுக்கும் ஆணுக்கும்தான், காதல் பூக்கும் என்றில்லை. சமுதாயத்தில் அப்படித்தான் நம்பப்படுகிறது, அதுதான் இயற்கை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. (எதிர்ப் பாலி…
-
- 0 replies
- 143 views
-
-
கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியானது கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கபாலி படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. பிரமாண்ட விழாவாக இல்லாமல், இணையத்தளத்தில் இந்த இசை வெளியீட்டை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக, படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளனர். 1. உலகம் ஒருவனுக்கா... பாடலாசிரியர் - கபிலன் சொல்லிசை (Rap) - விவேக் பாடலை பாடியவர்கள் - அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா 2. மாய நதி... பாடலாசிரியர் - உமா தேவி பாடலை பாடியவர்கள் -அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா …
-
- 0 replies
- 373 views
-
-
அஜீத் நடிக்கும் வலை படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி நடிக்கும் இப்படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல ஒரு பாடல் காட்சியை எடுக்க இருக்கின்றார்களாம். இதற்காக மும்பையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள செட் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. மார்ச் 26 தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இதற்காக வலை படக்குழு நாளை மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த படத்தில் இந்த பாடல் காட்சிதான் ஹைலைட் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும் இந்த படத்தின் மூலம் அஜீத் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்…
-
- 0 replies
- 587 views
-
-
பிரசாத் ஸ்டூடியோ: காணாமல் போன இளையராஜாவின் கூடம் - வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட ஒரே அரங்கு பட மூலாதாரம்,ILAYARAJA FB இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வது தொடர்பாகவும், அங்கு இருந்த அவரது இசைக்குறிப்புகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை பெறவும் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை. அந்த இடம் மாற்றப்பட்டிருப்பதாக இளையராஜா தரப்பு கூறுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி இளையராஜா தரப்பு, அவரது பொருட்களை திரும்பப்பெறுவது தொடர்பாக …
-
- 0 replies
- 439 views
-
-
விக்ரமின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா! ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதில் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகி…
-
- 0 replies
- 373 views
-