வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ - விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள். “ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்ப…
-
- 0 replies
- 500 views
-
-
மெய் சிலிர்க்குது "மேதகு" திரைக்காவியத்தில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடலின் எழுத்து வடிவ காணொளி https://www.facebook.com/100008248091467/videos/2967682880183286/
-
- 0 replies
- 722 views
- 1 follower
-
-
விபச்சார விடுதி சென்னைக்கு தேவையா??
-
- 0 replies
- 904 views
-
-
ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, தாயையும் சேயையும் நலமாக வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன் பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு ஹெல்த் கேராகவும், ஹாஸ்பிடலாகவும் செயல்பட்டு வரும் டபிள்யூ.சி.எப்.-ன் சென்னை தி.நகர் கிளையை நடிகை தேவயானியும், காமெடிநடிகர் தம்பி ராமைய்யாவும் சமீபத்தில் டாக்டர் ராஜசேகர் தலைமையில் குத்துவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்.. பெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், சமைப்பீர்களா என்று கேட்க வேண்டும் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். …
-
- 0 replies
- 586 views
-
-
பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய பெண் இயக்குனரின் `வாட்டர்' படம் ஆஸ்காருக்கு தேர்வு லாஸ்ஏஞ்சல்ஸ், ஜன.24- ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய பெண் டைரக்டர் தீபா மேத்தாவின் வாட்டர் படம் சிறந்த அன்னிய மொழி படத்துக்கான விருதுக்கு போட்டியிடுகிறது. ஆலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும்விழா பிப்ரவரி25-ந்தேதி நடக் கிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கோடாக் அரங்கில் இந்த விழா நடக்கிறது. ஆஸ்கர் விருது பெறுவதற்காக போட்டியிடும் சிறந்த படங்கள் பட்டியலில் 5 படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் விவரம் வருமாறு: 1.பாபெல் 2.தி டிபார்ட்டட் 3. லெட்டர்ஸ் பிரம் டூ ஜிமா 4. லிட்டில் மிஸ் சன் ஷைன் 5.…
-
- 0 replies
- 954 views
-
-
சின்னதாய், த்ரில்லிங்காய், ஒரு புன்னகைப் புரட்சி – தமிழ் சினிமா வ.ஸ்ரீநிவாசன் இரண்டு நாட்கள் முன்பாக திடீரென்று கிளம்பி ‘டிமாண்டி காலனி’ என்கிற படத்தைப் பார்த்தேன். ‘டிக்கட் கிடைக்குமா?’ என்கிற சஸ்பென்ஸோடுதான் எல்லாம் ஆரம்பித்தது. நான் தியேட்டருக்குப் போனபோது அரங்கு நிறைந்து விட்டது. யாரோ ஒருவர் தன்னிடம் அதிகமாய் இருந்த டிக்கட்டுகளை விற்கப் போய் படம் துவங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பாக உள்ளே போனேன். படம் ஆரம்பித்ததும் முதல் 15, 20 நிமிடங்கள் “தப்பு செய்து விட்டோமே. பராபரியாக நன்றாக இருக்கிறது என்று யார் யாரோ சொன்னதையும், ஆங்கில ஹிந்துவில் நன்றாக இல்லை என்கிற மாதிரி இருந்த விமர்சனத்தையும் நம்பி வந்து விட்டோமே” என்று சோர்ந்து போனேன். எழுந்து வந்து விடலாம் ஒன்றும் பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். மிகவும் புகழ்பெற்ற திறமையான இசையமைப்பாளர் Wilhelm Furtwangler நாசி யேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிட்லரின் ஆட்சிக்காலத்தில் யேர்மனியர்கள் யார் யார் கிட்லரின் ஆட்சி உயரப் பலமாக இருந்தார்கள் என்ற விசாரணையில் துருவப்படுவதை மய்யப்படுத்தியது. நேசநாட்டுத்தரப்பின் யேர்மனியில் பாசிசவாதத்தை நீக்கும் நிகழ்ச்சி நிரலின் (de-nazification) அங்கமாக கிட்லர் காலத்தில் பிரபலமானவர்களாக இருந்தவர்களிற்கும் கிட்லரின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றி கடுமையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் இனங்காணப்படாது புதிய யேர்மனியில் இலைமறைகாயாக இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு பிரபலமானவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா `வாட் ஈஸ் யுவர் ராஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் 12 கெட்டப்களில் ஆடி இந்தி திரையுலகினரை பரபரப்பாக பேச வைத்துள் ளார். இதற்கு முன் எந்த நடிகையும் இது போல் ஆடவில்லையாம். அதுமட்டுமின்றி இந்த பாட்டுக்கு 22 மணி நேரம் தொடர்ச்சியாக ஆடி படப் பிடிப்பு குழுவினரை வியப் பூட்டி உள்ளார். ஒரு தோற்றத்தில் ஆடி விட்டு உடனேயே `கெட் டப்பை’ மாற்றி மீண்டும் ஆடி விட்டு பிறகு அந்த வேடத்தையும் கலைத்து உட னேயே வேறு தோற்றத்துக்கு மாறி என தொடர்ச்சியாக 12 கெட்டப்புகளில் 22 மணி நேரம் தொடர்ச்சி ஆடியது சாதனையாக கரு தப்படுகிறது. ஒவ்வொரு வேடத்துக்கும், வெவ்வேறு ஆடைகள், அலங்காரம், மேக்கப், முக பாவனைகள் என பிரியங்கா ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
'வெள்ளச்சி படம்' ஒரு பார்வை [Wednesday, 2013-03-13 20:45:15] தந்தையால் சின்னா பின்னமாகும் ஒரு இளைஞனின் காதல்கதை.. பால் வியாபாரம் செய்பவர் செவ்வாளை. இவரது ஒரே மகன் பிண்டு. செவ்வாளை பல பெண்களுடன் தகாத உறவு வைத்து பணத்தை செலவிடுகிறார். இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக்காதலியின் கணவனிடமும் தந்தையை மாட்டி விடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல்.. அதே ஊரில் பிழைக்க வரும் சுசித்ரா உன்னியை பிண்டுக்கு பிடித்துபோக காதல்.. சுசித்ரா உன்னிக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். பிண்டுவின் நல்ல குணம் சுசித்ரா உன்னியையும் காதல்பட வைக்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய எதிர்க்கின்றனர். காதலை பிரிக்க பிண்டு மீதான வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடூர திட்டம் வகுக்கிறார். அதன் ப…
-
- 0 replies
- 814 views
-
-
திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக நடித்த நடிகைகள் கூட திருமணத்திற்கு பின் போர்த்திக்கொண்டு நடிப்பதுதன் வழக்கம். ஆனால் சினேகா விஷ்யத்தில் எல்லாமே தலைகீழ். திருமணத்திற்கு முன்பு வரை தன் வசீகர சிரிப்பை மட்டுமே கவர்ச்சியாக காட்டிய சினேகா (பாண்டி போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு), தற்போது திருமணத்திற்கு கவர்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளார். புதிதாக ஒப்பந்தமாகியுள்ள பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிற்காக கொடுத்த போஸ் ஒன்று படுகவர்ச்சியாக இருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த போஸ் கொடுத்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்த பின்புதான் பிரசன்னாவிற்கே தெரியுமாம்....கைகளை மேலே தூக்கியபடி, தொப்புள் தெரியும் இந்த கவர்ச்சி போஸை பார்த்து கடுப்பில் இருக்கிறார் பிரசன…
-
- 0 replies
- 1.1k views
-
-
ப்ச்... எத்தனை ஹீரோவை காப்பாற்றியிருப்பார் சந்தானம்!? - சக்க போடு போடு ராஜா விமர்சனம் வருடத்திற்கு ஒரு படம் என்ற இன்ஸ்டால்மென்டில், ஹீரோ சந்தானத்தின் இந்த வருட ரிலீஸ் `சக்க போடு போடு ராஜா'. காதலில் ஜெயிக்க ஹீரோ போடும் திட்டங்களை, காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்கிறது படம். சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனோடு சேர்த்ததும், ஓப்பனிங் பாடல் போட்டு அறிமுகமாகிறார். “என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு, என்னை அசிங்கப்படுத்தீட்டானேடா... அவனப் புடிங்கடா" என உறுமுகிறார் தாதா சம்பத். அதனால், குடும்பத்தையும், நண்பர்களையும் தலைமறைவாக்கிவிட்டு, தானும் தலைமறைவாகிறார் சந்தானம். பதுங்கிக்கொள்ள சென்ற இடத்தி…
-
- 0 replies
- 391 views
-
-
சாசனம் சாசனம் நரை தட்டிய பருவம் தொட்டபோதிலும் மகேந்திரனின் சிந்தனையில் குறை தட்டவில்லை. கண்ணாடி தொட்டியில் ஊற்றப்பட்ட தண்ணீராய் இயக்குனரின் ஆக்கத்தில் தெளிவு புலப்படுகிறது. பாத்திர படைப்பு, கதைச் சொல்லும் விதம் ஆகியவற்றில் 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்களின்' சுவையில் கொஞ்சமும் மாற்றமில்லை மகேந்திரனிடம். பிள்ளை இல்லாதவர்களுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை சுவீகாரம் செய்து கொடுப்பது செட்டிநாட்டு மக்களிடம் இருந்த இருக்கும் ஒரு பழக்கம். அப்படித்தான் இந்த கதையின் நாயகன் அரவிந்த்சாமியும் சுவீகாரம் செய்து கொடுக்கப்பட்டவர். சுவீகாரம் செய்து கொடுத்துவிட்டால் பிறந்த வீட்டையும் பெற்றவர்களையும் பார்க்கக்கூடாது என்பது எழுதாத சாசனம். அந்த சாசனத்தில் சிக்கி ந…
-
- 0 replies
- 889 views
-
-
கே.எஸ்.பாலச்சந்திரனும் திரைப்படங்களும் http://ksbcreations5.blogspot.com/2010_11_01_archive.html
-
- 0 replies
- 673 views
-
-
''லைகாவிற்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் என்ன தொடர்பு?" - விஷாலை குறிவைக்கும் கேள்விகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சினிமா ஸ்டிரைக், சங்கத்துக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதி.. இவையெல்லாம் பொதுக்குழு கூட்டி எடுக்கப்பட்ட முடிவுகளா? போன்ற பல கேள்விகளை முன்னிறுத்தியும், விஷால் பதவி விலக வேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழ…
-
- 0 replies
- 388 views
-
-
நவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி வெளியாகுமென அந்தப் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஏப்ரலில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போனது. …
-
- 0 replies
- 398 views
-
-
விமர்சனம் ; ‘ வந்தா ராஜாவாத்தான் வருவன் ’... அண்டாவுல பால் யாருக்குன்னு தெரியுமா..? பவண் கல்யாண் நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியிருந்த தெலுங்குப் படமான ‘அத்தரினிகி டேரடி’ யின் ரிமேக் தான் இந்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. இதெல்லாம் ஒரு கதை. இதை ரீமேக்க பணம் கொடுத்தெல்லாம் வாங்க வேண்டுமா? என்ற கேள்வி படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை உங்கள் மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு சப்பைக் கதை. ஒரு சுந்தர்.சி. படத்தில் வழக்கமாக என்னவெல்லாம் இருக்கும் என்று சின்னதாக ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள்.. முதலில் கதையில் ஒரு பெருங்கூட்டம் இருக்கும். ஆளாளுக்குக் கூத்தடிப்பார்கள். கதாநாயகிகள் படு செக்ஸியாய் உடை அணிந்திருப்பார்கள்.…
-
- 0 replies
- 728 views
-
-
7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம். தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய.... பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட முடிச…
-
- 0 replies
- 1.6k views
-
-
கமல் சார் வணக்கம்...! மீடியா என்னும் அசுரனின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்பே கண்டுகொண்ட நடிப்பின் அசுரன் நீங்கள். எனவே, இந்த கடிதம் உங்களை வந்து சேரும் என நம்புகிறேன், வந்து சேராமலும் போகலாம்... இந்த பதிவை படிக்கும் உங்களின் ரசிகர்கள் பாதியிலேயே இந்த பதிவை படிப்பதை நிறுத்தலாம்... ஆனாலும், நான் நினைத்ததை பதிவு செய்ய நினைக்கிறேன்.. ஈரோடு பாரதி தியேட்டரில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக இரண்டடி அகலமுள்ள டிக்கெட் கவுண்டரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு முட்ட காத்திருந்து, வேர்வையில் நனைந்து, கசங்கிய ஆடையுடன் அந்த படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை ஈரோடு ஆனூர் தியேட்டரில் பெண்களைப்போல் கண்ணீர் சிந்தியபடி 'மகாநதி' படத்தை பார்த்தபோதும் தங்கள…
-
- 0 replies
- 938 views
-
-
தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவில் ஏகபோக கதை களங்கள். அண்ணன் தங்கை பாசம், காதல், தாய் தந்தை பாசம், தோழமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம். இப்படி உயிர் கொடுத்த படத்தை வெளியிடுவது தான் இங்கே மிக மிக சிரமம். எந்த நேரம் யார் மனுவுடன் நீதிமன்ற வாசலில் நிற்பார்களோ என தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம். 2000 வரை கூட வெகு ஜன மக்கள் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாகவே பார்த்தனர் தமிழக மக்கள். 2000-க்கு பிறகு மக்கள் திரைப்படங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர். அதற்கு பிறகுதான் தொடங்கியது தலைவலி. எதை எடுத்தாலும் குற்…
-
- 0 replies
- 643 views
-
-
"என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம்" - நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல் படம்: சி.குமார் 1965–ல் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் திரைப் பிரவேசம் செய்தவர் சிவகுமார். ஒரு நீண்ட திரைப் பயணத்துக்குப் பிறகும் ஒரு சினிமா நட்சத்திரமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர். திரையுலகில் இப்படியும் ஒரு முன்மாதிரிக் கலைஞரைக் காணமுடியுமா என்று வியக்கும் விதமாகத் தூய வாழ்முறையால் ‘கலையுலக மார்க்கண்டேயனாக’ கொண்டாடப்படும் அவர் தனது 75- பிறந்த நாளில் அடியெடுத்துவைக்கிறார். சிறந்த நடிகர், தலைசிறந்த ஓவியர் ஆகிய அடையாளங்களையும் தாண்டி, தேர்ந்த எழுத்தாளராகவும், ஆற்றல்மிக்க பேச்சாளராகவும் தனது தளங்களை கடந்த 15 ஆண்டுகளில் விரித்துக்கொண்டுள்ளார…
-
- 0 replies
- 320 views
-
-
தமிழ் சினிமா : ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி சீரியசாகப் பேசும்போது, அதற்குச் சம்பந்தமேயில்லாத வேறொரு விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். (குறிப்பாக திருமணத்திற்குப் பின் தான் இந்த நிலை என்று சொல்லலாம்!) சென்றவாரம் எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் ஒரு அண்ணனிடம் போஃனில் பேசிக்கொண்டிருந்தேன். 'இப்போதெல்லாம் 30 லட்சரூபாய்க்கு மேற்பட்ட வீடுகள் விலை போவதில்லை' என்றும் ' சிறுபட்ஜெட் வீடுகளையே மக்கள் விரும்பி வாங்குவதால், அத்தகைய வீடுகளையே கட்டி, விற்றுக்கொண்டிருப்பதாகவும்' சொன்னார். நான் பதிலுக்கு 'அது சரி தான்ணே, கஸ்டமர் என்ன விரும்புறாங்களோ அதைக் கொடுப்பது தானே முறை' என்று சொல்லிக்கொண்டி…
-
- 0 replies
- 615 views
-
-
2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்! மின்னம்பலம்2022-01-10 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடி…
-
- 0 replies
- 487 views
-