வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANWAR RASHEED நடிகர்கள்: ரேவதி, ஷானே நிகம், சாய்ஜு க்ரூப், ஜேம்ஸ் எலியா; இசை: கோபி சுந்தர்; இயக்கம்: ராகுல் சதாசிவன்; வெளியீடு: சோனி லைவ் ஓடிடி. தமிழில் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்களே மாறிப் போயிருக்கும் நிலையில், மலையாளத்தில் பழைய பாணியில் வெளியாகியிருக்கிறது இந்த படம். மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு திகிலூட்டியிருக்கிறார்கள். கணவனை இழந்த ஆஷா (ரேவதி) தன் மகன் வினு (ஷானே நிகம்) மற்றும் வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயாருடன் வசித்து வருகிறாள். வினு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாம…
-
- 0 replies
- 331 views
-
-
ஒரு தமிழ் இளைஞன். ஹிந்தி இளைஞி. அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். காலா காலத்தில் காதலில் விழவும் செய்கிறார்கள். சுற்றுலா மையமான கோவாவில்தான் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் சாலைகள் ஊரடங்கு போடப்பட்டதுபோல் வெறிச்சோடிவிடுகின்றன. கடற்கரைகூட ஜிலோ என்று இருக்கிறது. புல்வெளிகள், தோப்புகள், துரவுகள் ஆகிய இடங்களில் பாடல்கள்… ஆடல்கள்… வழக்கம்போலவே இருவருடைய பெற்றோர்களும் காதலை எதிர்க்கிறார்கள். வழக்கம்போலவே காதலர்கள் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடக்கிறது. உலக சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத புதுமையாக, நாயகனின் பெற்றோர் காதலர்களை ஒருவருட காலம் பிரிந்திருந்து …
-
- 0 replies
- 1.9k views
-
-
Aahmi Doghi - The both us 2018 ஆண்டு வெளிவந்த ஒரு மாரத்திய மொழிப்படம். கெளரி தேஷ்பாண்டேயின் “ பாஸ் அலா மேத்தா” என்ற நாவலை மையமாக கொண்டு உருவாகிய படம். இதன் கதாசிரியர்கள்: Pratima Joshi & Bhagyashree Jadhav , தயாரிப்பு: Puja Chhabria, நெறியாள்கை: Pratima Joshi என இந்தபடத்தின் பெரும்பகுதி பெண்களால் உருவாக்கப்பட்டது. சாவித்திரியின் flashback கதையாகவே இந்தப்படம் ஆரம்பிக்கிறது. படத்தில் மட்டுமே தாயைப் பார்த்து வேலையாட்களின் கவனிப்பில் வளரும் கதாநாயகி சாவித்திரி, “ We aren’t emotional fools, we are practical” எனக்கூறியே மகளை வளர்க்கும் ஊரில் மிகவும் பிரபல்யமான வக்கீல் தந்தை, சாவித்திரியின் பதினைந்தாவதுவயதில், தந்தை மறுமணம் …
-
- 0 replies
- 406 views
-
-
ஜல்லிகட்டு அரசியல் பரிதாபங்கள் நன்றி : மெட்ராஸ் சென்ட்ரல் டிஸ்கி : சூனா பானா பாத்திரத்தை செதுக்கிய விதம் மிக அருமை!!
-
- 0 replies
- 482 views
-
-
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில…
-
- 0 replies
- 2.6k views
-
-
DD யுடன் செவ்வி வழங்குகிறார் வடிவேலு !!!
-
- 0 replies
- 680 views
-
-
சமந்தாவுக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்! JegadeeshSep 21, 2022 19:49PM தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும் கடந்த ஆண்டு ‘புஷ்பா’ படத்தில் ஆடிய ஒற்றை பாடலுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில், அதிக வெளிச்சத்தில் நடித்தால் வரக்கூடிய பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற தோல் நோயால் ந…
-
- 0 replies
- 345 views
-
-
2000க்குப் பிறகு மலையாள சினிமா: நல்ல சினிமாக்களுக்குச் சிறு இடைவேளை மலையாள சினிமாவின் முகம் 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. மோகன்லால், மம்மூட்டி என்ற இரு பெரும் நாயகர்களுக்குப் பிறகு திலீப், பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நிவின் பாலி போன்ற அடுத்த காலகட்ட நாயகர்களின் வரவு நிகழ்ந்தது. மிகுந்த அழுத்தமான கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கிவந்த சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், கமல் போன்ற இயக்குநர்கள் மாறிவரும் புதிய சூழலை எதிர்கொள்ளத் திணறிய காலகட்டமும் இதுதான். ஆரோக்கியமான மலையாள சினிமாவும், தாக்குப்பிடிப்பதற்குத் திணறியது. ஆனால் தொழில்நுட்பரீதியில் மலையாள சினிமா வளர்ச்சி அடைந்தது. ச…
-
- 0 replies
- 981 views
-
-
by Visar News No CommentIn Cinema News சினிமாவில் பிரபலங்களின் நிஜவாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை படமாக்குவது சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. நித்யானந்தாவைப் போன்ற சாமியாரின் வாழ்க்கை குறித்த படம் கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடாவில் ‘யாவரினு’ என்றப் பெயரில் எடுக்கப்பட்ட இப்படம், தமிழில் “சொர்க்கம் என் கையில்” என்ற பெயரில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படிருக்கின்றன. ஆனால் படம் வெளியிடுவதற்க்கு முயற்சி செய்துவருபவர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் மிரட்டுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. படம் வெளியிடுவதற்கான செயல்பாடுகளை அவர்கள் தடுத்து நிறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் படக்குழு பட…
-
- 0 replies
- 2.2k views
-
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந்தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவில்லை. இத்தனைக்கும் சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். லீ & லீ, வீட்டு வேலைகளை செய்பவர். http://www.youtube.com/watch?v=cI1AwZN4ZYg போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் & காங் என நாமகரணமும் சூட் டினார்கள். ஹாங்காங்கி…
-
- 0 replies
- 795 views
-
-
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் (ஜூன் 12, 1932) தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். பத்மினியும் சகோதரி…
-
- 0 replies
- 632 views
-
-
கவுதம் மேனனின் காதோர நரைக்கு ஊரே சேர்ந்து ஒரு 'ஹேர் டை' வாங்கித் தர வேண்டிய நேரம் வந்தாச்சு. ஒரு காதல் படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே இப்படத்தில் இருந்தாலும், 'காதல் எங்கேப்பா?' என்று தேட வேண்டியிருக்கிறது. ஒரு ஃபீலிங்கும் இல்லாத காதல் படத்தோடு நமக்கென்ன டீலிங் வேண்டிக் கிடக்கு என்று நினைத்த அநேக ஜோடிகள், தியேட்டருக்கு வந்த கையோடு திகைக்க திகைக்க விழிப்பது காதலின் ஹோல்சேல் அத்தாரிடியாக விளங்கி வந்த கவுதம் மேனன் படத்திலா? அட கடவுளே... இது அந்த மன்மதனுக்கே வந்த பட்டினி மயக்கம்! அறியாப் பருவம், அறிந்த பருவம், ஆள் கிடைத்தால் அப்படியே அமுக்குகிற பருவம்... இப்படி மூன்று பருவத்திலும் இருவருக்குள் நடக்கும் காதல் மயக்கங்களும், சண்டைகளும், ஊடல்களும்தான் இப்படத்தின் முழுக்கதை. டய…
-
- 0 replies
- 511 views
-
-
-
திரை வெளிச்சம்: பலே… பலே… ‘பஃபே’ விருந்துகள்! ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியிலிருந்து.... திரையரங்குகளுக்கெனத் தயாரானத் திரைப்படங்கள் பலவும், கரோனா காரணமாக ஓ.டி.டி தளங்களில் வெளியாகிவருகின்றன. இவைதவிர ஓ.டி.டி. தளங்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரான ஆந்தாலஜி திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. தமிழ்ச் சூழலில், பிரபல இயக்குநர்கள், கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி அமேசானில் வெளியான ‘புத்தம் புது காலை’, நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் ‘பாவக் கதைகள்’ போன்ற ஆந்தாலஜி முயற்சிகள், தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுபோல் சினிமா ரசிகர்களைப் பரவலாக ஈர்த்துவருகின்றன. வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பொதுவான ஒரு கருத்தாக்கம், காலகட்டம் அல்லது இலக்கிய வடிவத்தைக் கொண்ட க…
-
- 0 replies
- 510 views
-
-
உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருக்கின்றனவா....? நான் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வியை இங்கும் பகிர விரும்புகிறேன்....நாம் அனைவருமே கடந்த காலத்தின் முக்கியமாக நமது பால்யங்களின் நினைவுகளை பொக்கிஷமாக சுமப்பவர்கள்தான்... அதற்கான காரணம் நாம் நம் அம்மா அப்பா, உண்மையான நண்பர்கள், உறவினர்கள் என்ற ஒரு வளையத்துக்குள் மிகப் பாதுகாப்பாக உணர்ந்தோம்.. ஆனால் வயது போக போக.. அது புகையைப் போல.. வாழ்வின் தீரா பக்கங்கள் நகர்ந்து கொண்டே வந்து வெற்றிடம் நோக்கிய புள்ளியில் முதுமை என்ற கருப்பு வெள்ளையில் நிற்க வைத்து விடுவதில்.. பகிரவே முடியாத பகிர்ந்தாலும் உணரமுடியாத தூரத்தில் ஆளற்ற தனிமைக்குள் நின்று விடுவதாக மனம் செய்யும் மாயம் அல்லது நிஜம் சொல்லும் உலகம் என்று எப்படி …
-
- 0 replies
- 328 views
-
-
வாட் இஸ் யுவர் நேம்? என்று கேட்டால்கூட சிரிப்பையும் சிணுங்கலையும் வெளிப்படுத்தும் சிரிப்பழகி லைலா. தனது கன்னக்குழியழகில் தமிழ் சினிமா ரசிகர்களை தடுமாறி விழவைத்த லைலா, கடந்த வருடம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலேயே கல்யாணம் கட்டிக்கொண்டு மும்பையில் குடிபுகுந்தார். பால் கணக்கில் ஆரம்பித்து கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து போடுவதுவரை முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்ட லைலா விரைவில் அம்மா ஸ்தானத்தையும் அடையப்போகிறாராம். இப்போது அவர் சிலமாத கர்ப்பமாக இருக்கிறாராம். குழந்தையின் ஆரோக்கியம் கருதி ஆறுமாதம் வரை லைலாவை ஒய்வெடுக்க சொல்லி டாக்டர் அறிவுறுத்தியிருக்கிறாராம். லைலா மீண்டும் நடிக்க வேண்டுமென்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு லைலாவின் பதில் எ…
-
- 0 replies
- 767 views
-
-
[size=2] ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் பின்னணி வரை நீள்கிறது மாற்றான். [/size][size=2] விஞ்ஞானி ராமச்சந்திரனின் மரபு அறிவியல் சோதனை காரணமாக சூர்யா இரட்டையர்களாக பிறக்கிறார்கள். [/size] [size=2] இருவருக்கும் சேர்த்து ஒரு இதயம் தான். அப்பா பால் பவுடர் வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கிறார். வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ராமச்சந்திரன் நடத்தும் நிறுவனத்தை உளவு பார்க்க வருகிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ராமச்சந்திரனின் சூழ்ச்சியால் இரட்டையர்களில் ஒருவர் இறக்கிறார். அவரின் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.[/size] [size=2] அவர் வெளிநா…
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞராக தொடங்கி முன்னணி நடிகரான ‘சீயான்’ விக்ரமின் கதை - பிறந்தநாள் பகிர்வு ACTOR VIKRAM OFFICIAL / FACEBOOK ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் 'விக்ரம்'. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ! விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை. தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சி…
-
- 0 replies
- 390 views
-
-
``அல்லு அர்ஜுன்கூட நடிக்க மாட்டேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன்... ஏன்னா?!'' - விஜய்சேதுபதி எங்கேயாவது ஆடிஷனுக்குப் போனா, `மூஞ்சி ரொம்ப முத்தியிருக்கு... ஹீரோ மெட்டீரியல் இல்ல'னு சொல்லுவாங்க. நானும், சரி அப்பா கேரக்டருக்கு முயற்சி பண்ணலாம்னு இருந்தேன். ஏன்னா, நிஜ வாழ்க்கைல வயசு முப்பதைத்தொட்டு ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தேன். விஜய்சேதுபதி என்றாலே வெரைட்டிதான். ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை எனத் தனக்குப் பிடித்திருந்தால் எந்தவிதமான கேரக்டரிலும் நடிப்பார். சினிமாவிலும் நடிப்பார், குறும்படத்திலும் இருப்பார், வெப்சிரிஸூக்கும் வருவார் எனத் தன்னைச் சுற்றி எந்த இமேஜ் வட்டத்தையும் வரைந்துகொள்ளாதவர். கையில் ஏகப்பட்ட படங்களோடு …
-
- 0 replies
- 355 views
-
-
தமிழ் கலாச்சார நுண் அலகுகளும் அடித்தள மக்கள் சினிமாவும் 1983 ஆம் வருடம் மூன்று ஆண்டகளுக்கு மேலாக தொடர் மரணங்கள் எங்கள் குடும்பத்தை துரத்திய காலமது. மருத்துவமனைகளின் வராந்தாக்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நாட்களவை. குடிப்பழக்கம் உண்டென்றாலும், அதன்வழியே தப்பிச்செல்லும் வாய்ப்பற்றகாலம். செகண்ட் ஷோ என்று அறியப்பட்ட பின்னிரவு சினிமாக் காட்சிகளே, மனப்பிறழ்வின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்த என்¬¬க் காத்து ரட்சித்தன. அப்படியொரு நாளின் பின்னிரவில் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. கதைக்களம் தேனி அல்லி நகரத்தின் அருகிலுள்ள காக்கிவாடன்பட்டி. எட்டுப்பட்டி இளைஞர்கள் பிடிக்கும் அடங்காத ஜல்லிக்கட்டுக்காளைக்கு சொந்தக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி- நயன்தாரா திருமணம்!! சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பின் ஒளிப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. மல்ட்டி ஸ்டா…
-
- 0 replies
- 1.4k views
-
-
பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்! Dec 28, 2022 16:44PM IST ஷேர் செய்ய : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா புரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட …
-
- 0 replies
- 332 views
-
-
உலகிலேயே ஹாங்காங்கில் முதல் முறையாக “3டி” ஆபாச படம் தயாராகியுள்ளது.தற்போது ஆலிவுட் படங்கள் “3டி” எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாராக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். இதே தொழில் நுட்பத்தில் ஆபாச படங்களையும் தயாரித்தால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக தற்போது சீனாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஹாங்காங்கில் “3டி” முப்பரிமாணத்தில் ஆபாச படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச “3டி” சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திர…
-
- 0 replies
- 872 views
-
-
திரை விமர்சனம் - ஜாக்பாட் ஜோதிகா, ரேவதி இருவரும் திருட்டை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ரயில் பயணிகளை ஏமாற்றுவது, சிறுவர்களை வைத்து மற்றவர்களிடம் பணம் பறிப்பது என சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில், அந்த ஏரியா தாதா ஆனந்தராஜின் காரை திருடுகின்றனர். எல்லா இடங்களிலும் சாதுர்யமாக தப்பிவிடும் இருவரும், தியேட்டரில் ஒரு காவல் துறை அதிகாரியிடம் தகராறு செய்வதால் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். அங்கு கைதி சச்சுவின் அறிமுகம் கிடைக்கிறது. புராணங்களில் வருவது போல, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் ஒன்று, தாதா ஆனந்தராஜ் வீட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருக்கும் தகவலை அவர் மூலமாக தெரிந்துகொள்கின்றனர். இவர்களோடு யோகிபாபுவும் சேர்ந்துகொள்கிறார். ஆ…
-
- 0 replies
- 580 views
-
-
டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி ஜேம்ஸ் கமரோனின் புகழ் பெற்ற திரைப்படம் டைட்டானிக் பதினைந்து வருடங்களுக்கு பின் 3டி தொழில் நுட்பத்துடன் திரைக்கு வந்துள்ளது. தற்போது டென்மார்க் திரையரங்குகளில் இப்படம் காண்பிக்கப்படுகிறது, ஆனால் முன்னைய டைட்டானிக் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் அற்புதமான சாதனை என்று போற்றப்படுகிறது. 3டி தொழில் நுட்பத்தில் திரைக்கு வந்துள்ள டைட்டானிக் 100 மில்லியன் குறோணர் முதலிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 750.000 மணி நேரங்கள் பாவித்து மாற்றியுள்ளார்கள் என்றும், நூற்றுக்கு நூறு வீதம் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். படத்தை பார்க்கும் போது எதிர்பார்த்து போன மகிழ்…
-
- 0 replies
- 1k views
-