வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மந்திரப் புன்னகை: மாறுபட்ட முயற்சி செல்லமுத்து குப்புசாமி தமிழில் வலைப்பதிவர்களின் உலகம் ஒரு தனி உலகம். சாதி, அரசியல், ஆரிய-திராவிடச் சண்டைகள், ஈழம், பொதுவுடமை, சமையல், வெட்டிப்பேச்சு என அங்கே அலசப்படாத சங்கதிகளே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வலைப்பதிவுகள் அடைந்திருக்கும் எண்ணிக்கை பெருக்கமும், அவை இணையமும் நேரமும் இலகுவாகக் கிடைக்கிற வாசகர்களுக்குத் தீனி போடும் ரீதியும் நிச்சயம் கவனிக்கத்தக்கது. நினைத்த கருத்தை தெளிவாகப் பதிவு செய்யக்கூடிய கட்டற்ற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எதை வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் போகிற போக்கில் எழுதி விடலாம் என்பதாலும், மரபு ஊடகத்தினைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக இயங்க இயலும் என்பதாலும் மரபு ஊடகத்தினர் ஒரு…
-
- 0 replies
- 895 views
-
-
"நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?": காலா இயக்குனர் ரஞ்சித் பிரத்யேகப் பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஇயக்குனர் ரஞ்சித் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும் திரையுலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய அரசியல் குறித்தும் பிப…
-
- 0 replies
- 869 views
-
-
சாதிய அரசியல் முதல் சர்வதேச அரசியல் வரை சிவப்புச் சிந்தனைகளை சினிமாவில் விதைப்பவர் இயக்குநர் ஜனநாதன். ஜீவா- 'ஜெயம்’ ரவி இணைந்து நடிக்கும் படத்துக்கான ஏற்பாடுகள், இயக்குநர் சங்கப் பொருளா ளராக திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை, மரண தண்டனைக்கு எதிரான கூட்டங்கள் என்று பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தேன். ''ஆரம்பத்தில் என்கிட்ட வந்த ஜீவா - 'ஜெயம்’ ரவி இல்லை அவங்க. படத்தைத் தயாரிக்கப் பலரும் முன் வருகிறார்கள். அடுத்த வருடம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நிச்சயம் இதுவும் ஒன்றாக இருக்கும். இதுவும் அரசியல் பேசும் சினிமாதான்!'' ''பொதுவாக, மாற்று சினிமாக்களைப் பற்றிப் பேசுபவர்கள் உங்கள் படங்களைக் கவனமாகத் தவிர்ப்பதுபோலத் தெரிகிறதே?'' ''என் சினிமா மீது மட…
-
- 0 replies
- 811 views
-
-
திரை விமர்சனம்: டார்லிங் 2 நண்பனின் துரோகத்தால் தான் தங்களது காதல் தோற்றது என்று கருதும் காதல் ஜோடி ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதே ‘டார்லிங் 2’. ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிப்பது போன்ற திகில் காட்சியுடன் தொடங்கு கிறது படம். அடுத்த காட்சியில் தற்கொலை. அடுத்து, கலையரசன், காளி, ஹரி (மெட்ராஸ் ஜானி), அர்ஜுன், ரமீஸ், ஆகிய நண்பர்கள் வால்பாறைக்குச் சுற்றுலா போகிறார் கள். வால்பாறையில் ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். நண் பர்கள் ஒவ்வொருவராக ‘காட்டு காட்டு’ என்று காட்டுகிறது ஆவி. ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலில் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனைக் கொல்லப்போவ தாக மிரட்டுகிறது. ஆவிக்கு ஏன் கலையரசன் மீது கோபம்? கலையரசனால் ஆவ…
-
- 0 replies
- 449 views
-
-
கிறிஸ்தவ திருச்சபையின் விரோத போக்கினால், தன்னுடைய பாட்டி மது ஜ்யோத்சனா அகோரியின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் பாட்டி கடந்த ஜூன் 3-ம் தேதி இறந்துபோனார். தன் இறப்புக்கு முன், தன்னுடைய சொந்த ஊரான ஆட்டமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதை அவரின் கடைசி ஆசையாக வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து அவரின் உடல் கேரள மாநிலம் குமரகத்தில் உள்ள அவரின் சொந்த கிராமத்துக்கு எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. ஜூன் 5-ம் தேதி மும்பையில் இருந்து கோட்டயத்துக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் ஆட்டமங்கலத்தில் அடக்கம் செய்ய, அங்கிருந்த திருச்சபை அதிகாரிகள் எதிர்ப்பு…
-
- 0 replies
- 383 views
-
-
[twitter] 12B படத்தை கொஞ்சம் மெருகேற்றி, நவீன டெக்னாலஜி, கிராபிக்ஸ் சேர்த்து, செல்வராகவன் ஸ்டைல் வசனங்கள் அடங்கிய படம்தான் இரண்டாம் உலகம். படத்தில் இரண்டு உலகங்கள். இரண்டு உலகத்திலும் ஓவ்வொரு ஆர்யா, அனுஷ்கா, முதல் உலகத்தில் உள்ள ஆர்யாவை டாக்டரான அனுஷ்கா, காதலிப்பதாக சொல்கிறார். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக அனுஷ்காவின் காதலை ஏற்க மறுக்கிறார். வேறு வழியில்லாமல் அனுஷ்கா வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அதற்குபின்பு ஆர்யா, மனம் மாறி அனுஷ்காவை காதலிப்பதாக கூறுகிறார். ஆனால் அப்போது அனுஷ்கா அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இந்நிலையில் இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா, ஒரு நாட்டின் தளபதி மகன். நல்ல வீரன். அனுஷ்கா அந்த நாட்டில் உள்ள சாதாரண குடிமகள்.…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனைப்படைத்திருக்கும் இசைக்குயில் பி.சுசீலா, இத்துடன் நிற்காமல் தனது "பி.சுசீலா டிரஸ்ட்" என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு மாத பென்ஷன் வழங்கி வருகிறார். தற்போது இந்த டிரஸ்டின் மூலம் பத்து பேருக்கு பென்ஷன் உதவியை கொடுத்துவரும் இவருக்கு இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இருக்கிறார். வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு உதவும் பி.சுசீலா, அதே சமயம் இந்த டிரஸ்ட்டின் மூலம் ஆண்டுதோறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி, சாதித்த பாடகர்களுக்கு "பி.சுசீலா விருது" என்பதையும் கொடுத்து வருகிறார். 2008ஆம் ஆண்டில் எஸ்.ஜானகிக்கு இந்த பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அ…
-
- 0 replies
- 602 views
-
-
``நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh வெடித்துச் சிரிக்க வைப்பார், கசிந்துருக வைப்பார், கண்கள் வலிக்க அழ வைப்பார், எழுந்து நடனம் ஆட வைப்பார்.... அவர்தான் நாகேஷ். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, யாராலும் தொட முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய பிறந்ததினம் இன்று. அவருடன் நடித்த மிகப்பெரும் பாக்கியத்தைப் பெற்ற சச்சு பேசினார் ``நாகேஷ் சார், அவரைப் பற்றிய நல்ல நல்ல நினைவுகளை என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்கார். அவருடைய டைமிங் வாய்ப்பே இல்ல. ஒரு நடிகரா டைரக்டர் பேப்பர்ல காண்பிக்கிற டயலாக்கை மட்டும் பேசாமல், அந்த டயலாக்குக்கு உயிர் கொடுக்குறதுதான் நாகேஷ் சாருடைய பலமே. அவருடைய வேகம் யாருக்கும் வராது. பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவர…
-
- 0 replies
- 679 views
-
-
எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை! வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி. வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அத…
-
- 0 replies
- 452 views
-
-
பாலியல் வன்கொடுமை (678 - Egypt Film) ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். மீள வெயியீடு செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி. சரி வெங்-காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு வாரப்பாடு என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் வாரப்பாடு இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்-காயம் என்ன கதை? ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை காவல்த்துறை எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடி…
-
- 0 replies
- 787 views
-
-
திரை விமர்சனம்: ஹலோ நான் பேய் பேசுறேன் நூதனமான முறைகளில் திருட்டுத் தொழில் செய்துவரும் அமுதன் (வைபவ்) கவிதாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதலிக்கிறார். ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷ், குப்பத்தில் சாவுக் குத்து நடனம் கற்றுத்தருகிறார். குத்து நடனத்தில் தான் வைக்கும் சோதனையில் வென்றால்தான் தன் தங்கையை வைபவுக்குக் கல்யாணம் செய்து தருவேன் என்கிறார். சோதனையில் வென்று காதலுக்கு அனுமதி பெற்ற சந்தோஷத்தில் வளைய வரும் வைபவ், சாலையில் விழுந்து கிடக் கும் ஒரு செல்போனைத் திருடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அந்த செல்போனில் இருந்து பேய் (ஓவியா) கிளம்புகிறது. வைபவ், கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பேயிடம் மாட்டிக்கொண்டு அல்லாடு கிறார்கள். பேய் ஐஸ்வர்…
-
- 0 replies
- 394 views
-
-
விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் டேனி என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக ச…
-
- 0 replies
- 351 views
-
-
வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் திடீரென அவர்கள் காதல் முறிந்து போனது. இருவரும் கண்ணீருடன் விடை பெற்றனர். பின்பு நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்தனர். இவர்கள் காதல் கல்யாணம் வரை சென்று இறுதியில் கல்யாணம் நடைபெறும் முன்பே நின்று போனது. தொடர் காதல் தோல்வியால் மனமுடைந்து போன நயன்தாரா ஒரு வழியாக அதில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்தார். சினிமாவில் இரண்டாவது ரவுண்டை தொடங்கிய நயன்தாரா நடிப்பில் மீண்டும் பிஸியாகினார். பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பழைய காதலரான சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தா…
-
- 0 replies
- 840 views
-
-
சிதம்பரம் ஜெயராமனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும், அந்த சாகாவரம் பெற்ற டூயட்டை மறக்கமுடியுமா? ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ பாடலுக்கும் இந்த அற்புத படத்திற்கும் சம்பந்தம் உண்டு’’ - நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் மனம் நிறைய பூரிப்போடு பேசினார். ‘‘பழம்பெரும் எழுத்தாளர் அகிலனின் அருமையான படைப்பான ‘பாவை விளக்கு’ நாவல், படமாக்கப்பட்டு 1960-ம் வருஷம் வெளியிடப்பட்டது. அப்பாவுக்கு எம்.என்.ராஜம் ஜோடி. டைரக்ஷன் கே.சோமு. இந்தப் படத்தில் வரும் கே.வி.மகாதேவனின் சூப்பர் ஹிட் பாடலான ‘காவியமா...’ பாட்டின் படப்பிடிப்பிற்காக ஒரு பெரிய யூனிட்டே ‘பதேப்பூர் சிக்ரி’ போயிருந்தது. அப்பாவுடன் அம்மாவும் போயிருந்தார்கள். எல்லோரும் டெல்லியில்தான் தங்கியிருந்தார்கள். ஷூட்டிங் முடித்துவிட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
விளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் ‘கத்துக்குட்டி’ நண்பன் ஜிஞ்சருடன் (சூரி) சேர்ந்து ஊர் வம்பு, அடிதடி என்று சுற்றிவரும் இளைஞன் அறிவழகன் (நரேன்). அம்மாவுக்கு செல்லப் பிள்ளையான, அப்பாவுக்கு அடங்காத பிள்ளையான அவர், தன் பகுதியில் விவசாயம் அழிந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். நாயகி ஸ்ருஷ்டி டாங்கே, பறவைகளை நேசிப் பது, செடிகொடிகள் வளர்ப்பது என்று இயற்கையை நேசிக்கும் கிராமத்து பெண்ணாக வருகிறார். ஒரு மோதலில் ஆரம்பிக்கும் நரேன் - ஸ்ருஷ்டி டாங்கேவின் சந்திப்பு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது. இந்நிலையில் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கு…
-
- 0 replies
- 315 views
-
-
கமல்ஹாசன் தன்னை திராவிட கழகத்தை சேர்ந்த ஒருவராக பிரகடனப்படுத்தியிருப்பவர். அதனாலேயே அவரால் பல விமர்சனங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும் “எம்மவர்” என்ற பாசத்தோடு கமல் என்ன செய்தாலும் அதற்கு அவர்களே ஒரு சமாதானத்தையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத இயக்குனரான சங்கரை ஒரு பார்ப்பனியவாதியாக இனங்காண முடிந்த இவர்களுக்கு கமலைப் பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான். தமிழ் சினிமாவில் பார்ப்பனர்களை மிகவும் அப்பாவிகளாக காட்டுகின்ற ஒரு வழக்கம் பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. பார்ப்பன சமூகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தொடக்கி வைத்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. பார்ப்பனர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனவெறி சிங்கள அரசினால் துரத்தி அடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வலிகளைச் சொல்ல ‘சிவப்பு’ என்ற டைட்டிலில் ஒரு படம் தயாராகி வருகிறது. நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்ஷிணி கோவிந்த் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் தான் இந்த சிவப்பு. ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் ஹீரோக்களாக நடிக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். கழுகு என்ற ஹிட் படத்தை கொடுத்த சத்யசிவா இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை டைரக்ட் செய்க…
-
- 0 replies
- 522 views
-
-
கோடம்பாக்கத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்றை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளனர் .குற்றாலம் பட இயக்குனர் சஞ்சய் ராம் மற்றும் நடிகர் வாலி குழுவினர் . "காதலை கண்டு பிடிச்சவன் யாரு ... Â மவனே கையில்Â கிடைச்சா செத்தான்Â “ Â Â Â -என்ற பாடல் வரிகளை எழுதி அதில் நடித்திருக்கிறார் நடிகர் வாலி .இவர் அஜித்தின் தீவிர ரசிகர் .பாடலாசிரியர் வாலி பிறந்த எண் 3.தன்னுடைய பிறந்த நாளின் கூட்டுத் தொகைÂ அதே முன்றாக வருவதால் வாலி இன் பெயரை யே வைத்து விட்டாராம் .இந்த பாடல் உருவாகக் காரணம் என்ன ?எனக் கேட்ட போது பல விசயங்களை பேசினார் . காதலிக்காத மனிதர்கள் இருக்க முடியாது .ஆனால் காதலில்Â ஜெய்தவர்களை விடÂ தோற்றவர்களே அதிகம் .அதனால் காதல் தோல்வி பாடல்களுக்கு எப்போதுமே மவுசுÂ அதிகம் .ஏற்க…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழர் திருநாளில் "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சி தைப்பொங்கல் தமிழர் திருநாளில் தலைவரின் காவியம் உலகத்தமிழர்களின் படைப்பான “மேதகு-II” ஒப்பாரும்...மிக்காருமில்லா தமிழீழ தேசியத்தலைவரின் தியாக வரலாற்றின் சிறுதுளியான "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சியை,தைப்பொங்கல் தமிழர் திருநாளில் வெளியிடுவதில் பேருவுவகை அடைகின்றோம்... https://www.thaarakam.com/news/9c796ea1-3298-4b5c-9461-04bdc1f25e89
-
- 0 replies
- 358 views
-
-
ஒரு மகள் கேட்டோம். ஒரு அழகான தேவதையே கொடுத்திருக்கிறார் கடவுள்’ இப்படித்தான் தங்களது செல்ல மகள் ’அனொஸ்கா’ பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் அஜித்தும், ஷாலினியும். ‘அன்ஷூ..அன்ஷூ..’ என்று செல்லமாக அழைத்தால் இன்னும் சிறகு விரிக்காத இரண்டரை வயது லிட்டில் ஏஞ்சலாக மிதந்து வருகிறாள். ’வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? சாப்பிட்டீங்களா?’ என்று மழலைக் குரலில், மெச்சூர்டான பெண்ணைப் போல அக்கறையோடு விசாரிக்கிறாள். ஒரே நாளில் நீங்கள் எத்தனை முறை அன்ஷூவைச் சந்தித்தாலும் அவரது அப்பாவைப் போலவே இப்படித்தான் வாஞ்சையோடு கேட்கிறாள். குணத்தில் அப்படியே அஜித்தையும், ஷாலினியையும் சரியான விகிதத்தில் கலந்த பக்கா காம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
எனது கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தாமல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் கவுதம் மேனன். இதனால் நானும், அவரும் நண்பர்களாக பிரிகிறோம், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் கவுதம் மேனன், இந்தியிலும் நாயகியாக த்ரிஷாவையை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். இதற்காக த்ரிஷாவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… த்ரிஷாவுக்கு பதிலாக மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டார் கவுதம் மேனன். இதனால் கடுப்பான த்ரிஷா, கோபத்தில் உச்சத்துக்கே சென்றுள்ளார். கவுதமுடனான நட்பு முறிவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கவுதமும் நானும் நண்பர்களாகப் பி…
-
- 0 replies
- 905 views
-
-
"கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்?" '16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive Chennai: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படம்தான் ஸ்ரீதேவி முழு நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்தது. தமிழ்சினிமா மட்டுமல்ல, இந்தி திரைப்பட உலகில் உச்சாணிக் கொம்பில் ஜொலித்த ஸ்ரீதேவி இந்திபட உலகத்துக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர், பாரதிராஜா. ஸ்ரீதேவியை இழந்த பாதிப்பில் கலங்கியிருந்த இயக்குநர் பாரதிராஜாவை அவரது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சந்தித்துப் பேசினோம். ''நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி படித்தாள். அவள்தான் என் கனவுலக் பிரதேசத்தின் 'ம…
-
- 0 replies
- 419 views
-
-
சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். பேச்சிலராக இருந்தபோது சூர்யாவிடம் இருந்த கலகலப்பு பிளஸ் ரசிகர்களை மதிக்கும் மனோபாவம் குடும்பஸ்தரான பிறகு மிஸ்ஸிங். காரணம் திருமதி சூர்யா? சென்னை கடையொன்றில் இந்த ஜோடி பர்சேஸ் செய்தது. ரசிகர்கள் வெளியே கூடிநின்றனர். அதிகமும் சாப்ட்வேர் என்ஜினியர்கள். வெளியே வந்த சூர்யா,ஜோதிகா ஜோடி காத்து நின்ற ரசிகர்களை கண்டு கொள்ளாததுடன், 'கஜினி' முகத்துடன் தொலைச்சுடுவேன் என்பதுபோல் சுண்டு விரலை நீண்டி மிரட்டினார் சூர்யா. இந்த அவமரியாதையால் சுண்டிவிட்டது ரசிகர்களின் முகங்கள். இதேபோல் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றது இந்த நட்சத்திர ஜோடி.தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதியில் சிறது ஒய்வு எடுத்தவர்கள் ஒன்பது மணிக்கு க…
-
- 0 replies
- 809 views
-