Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்! விநாயக சதுர்த்தியன்று கோச்சடையான்! ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்குப் பின் ரசிகர்களுக்கு பதில் தெரியாமல் இருந்த கேள்வி கோச்சடையான் படம் எப்ப ரிலீஸ் ஆகும்? என்பது தான். கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின், இன்று போய்... நாளை வா... கதையாக தனது டுவிட்டர் அக்கவுண்டில் Coming Soon... என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் ரசிகர்கள் படத்திற்காக அமைதியாக காத்துக்கொண்டிருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழா, சுதந்திர தினம் என ஒவ்வொரு முக்கிய தினத்திலும் கோச்சடையான் வராதா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சௌந்தர்யா அஸ்வினின் சமீபத்திய டுவீட். தனது டுவிட்…

  2. திரைப்படமாகும் பேரறிவாளன், சாந்தன், முருகன் வாழ்க்கை வரலாறு ஜூலை 12, 2014 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ…

  3. ரத்த சரித்திரம் - விமர்சனம் ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. சூரியாக சூர்யா, பரிடால் ரவியாக பிரதாப் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் என இரண்டு தனி மனிதர்களுக்கும் இருந்த வன்முறை போராட்டத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லி இருக்கிறது ரத்த சரித்திரம். ஆந்திராவில் நடந்ததாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நடந்ததாகவே கதை சொல்லப்படுகிறது... உண்மையில் நடந்தது என்ன என்று சம்பவங்களின் போது பல மர்மங்கள் நீடித்த நிலையில், படத்தில் சொல்லப்பட்ட கதையை பார்ப்போம். சினிமாவை தன் அரசியல் சக்தியாக மாற்றிய நடிகர் சிவராஜ் ( என்.டி.ஆராக சத்ருஹன் சின்ஹா). தேர்தலில் சிவராஜ் வெற்றியடைய முழு பலம் விவேக் ஓபராய். அரசியல் செல்வாக்கோடு அசைக்க ம…

  4. ஆஸ்கர் 2018: நிரூபிக்கப்பட்ட பெண்மை! (சிறந்த அயல்மொழிப் படம்) சிலி நாட்டு ஸ்பானிய மொழித் திரைப்படம் ‘எ ஃபெண்டாஸ்டிக் வுமன்’. நடந்துமுடிந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ஆஸ்கர் வரலாற்றில் திருநங்கையை மையக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கும் படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. சிலி நாட்டில் பாலினச் சிறுபான்மையினருக்கான அடையாளம் குறித்த சட்ட வரைவு இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில் இந்தப் படத்துக்குக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் அங்கீகாரம் அரசியல்ரீதியாகவும் கவனம்பெற்றிருக்கிறது. ஓர் இரவில் …

  5. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் சினிமாவாக எடுக்கப்படுகிறது. ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 24 வருடங்கள் ஈராக்கை ஆண்டார். ஆனால் ரசாயண குண்டுகளைத் தேடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இவர் அதிபராக இருந்த போது 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெருமளவில் விற்று சாதனை படைத்தன. இந்த நிலையில் அவர் எழுதிய 'ஷபீபா அண்டு தி கிங்', 'புரூனோ' ஆகிய கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்படுகன்றன. இவற்றை பிரபல பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென…

    • 0 replies
    • 447 views
  6. 'திருமகன்' உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா. இவரை அருண் என்பவர் கடத்தி விட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் 'ராமுடு மஞ்சு பாலுடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக தனது தாய் தம்பியுடன் ராஜமுந்திரி சென்றிருந்தார் ப்ரீத்தி. மொத்தம் 13 நாள்கள் ஷுட்டிங். ஒன்பது நாள்வரை பிரச்சனை ஏதுமில்லை. பத்தாவது நாள் காலை ப்ரீத்தியின் தம்பிக்கு உடல்நலமில்லாமல் போக, அவரது தாயார் ஹோட்டலில் ப்ரீத்தியின் தம்பியுடன் தங்கியிருந்திருக்கிறார். ப்ரீத்தி படப்பிடிப்புக்கு தனியாக சென்றுள்ளார். மாலையில் ப்ரீத்தி வர்மா திரும்பி வரவில்லை. படப்பிடிப்பு குழுவிடம் கேட…

  7. Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …

  8. விளையாட்டு, அரசியல், நிழ லுலகம் என எதை முதன்மைப் படுத்தினாலும் அதில் வலு வான குடும்பப் பின்னணியை அமைத்து யதார்த்தமான சித்தரிப் புடன் படங்களைத் தருபவர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் குடும்பமும் உறவு களும் இருக்கின்றன. அவற்றுடன் குற்றவியல் நடவடிக்கைகளும் ஊடாடுகின்றன. நிழல் உலக தாதாக்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சிக்கு எதிர்பாராத இடத்தி லிருந்து சவால் வரும்போது காவல் துறை அதிகாரி என்ன செய்வார் என்பதுதான் ‘பாயும் புலி’. சுதந்திரப் போராட்டத் தியாகியின் பேரன் காவல் அதிகாரியான விஷால். தன் அப்பா கேட்டுக்கொண்டதற்காக அரசியலில் நுழையாமல் இருக்கிறார் விஷாலின் அப்பா. ஆனால் விஷாலின் அண்ணன் சமுத்திரக்கனி அரசியலில் நுழையும் எண்ணம் கொண்டவர். அன்பும், பாசமும் மிக்க இவர்களது குடும்பம் வச…

  9. செருப்புக் காலுடன் கறி வெட்டும் கட்டையை மிதித்த விஜய்...!! பிகில்பட போஸ்டரை கிழித்து போராட்டம்...!! கறிக்கடைக்காரர்களை சமாதானம் செய்த ரசிகர்கள்...!! பிகில் படத்தில் விஜய் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக கூறி, போராட்டத்தில் குதித்த கோவையை சேர்ந்த இறைச்சிக்கடை வியாபாரிகளை, விஜய் ரசிகர்கள் சமாதானப் படுத்தி போராட்டத்தை வாபஸ்பெற வைத்துள்ளதுதான் சினிமா வட்டாரத்தில் இப்போது ஹாட்டாபிக்... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அப்போது பேசிய விஜய் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான தமிழக அமைச்சர்கள் விஜய்க்கு எதிராக பேட்டி மேல் பேட்டி கொடுத்து விஜய்யை நாராக கி…

  10. Banner: Century Films Cast: Prithviraj, Rima Kallingal, Narain, Samvrutha Sunil, Remya Nambeesan, Swasika Direction: Lal Jose Production: Prem Prakash Music: Ouseppachan இளமையான இனிமையான பொழுது போக்கு படம். அழகான கதாநாயகர்கள் ,மிக மிக அழகான கதாநாயகிகள் .மிக மிக மிக அழகான படப்பிடிப்பு . ஆனால் சாதாரண சினிமா கதை . பிரதாப் போத்தன் நடிப்பு அற்புதம் . யாழ் இளைஞர்களே தவறவிடாதீர்கள் .

    • 0 replies
    • 489 views
  11. நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.…

    • 0 replies
    • 661 views
  12. இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில் இங்கிலாந்து ராணியுடன் கமல் இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில், இங்கிலாந்து ராணியை சந்தித்த நிகழ்வு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ராணி ஆரோக்கியமாக கா…

  13. பட மூலாதாரம், SonyLiv, Youtube நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், சுபாஷ் செல்வன், அனன்யா ராம்பிரசாத், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், ஆஷிக் ரஹ்மான்; ஒளிப்பதிவு: கோகுல் பெண்டி; இசை: சதீஷ் ரகுநந்தன்; இயக்கம்: விக்னேஷ் கார்த்திக். ஓடிடியில் வெளியாகும் படங்களில் பல பெரும்பாலும் த்ரில்லர் படங்களாகவே அமைகின்றன. குறிப்பாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட த்ரில்லர்கள். "திட்டம் இரண்டு"ம் அப்படி ஒரு த்ரில்லர்தான். சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் ஆய்வாளர் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). வந்த சில நாட்களிலேயே அவரது தோழி சூர்யா (அனன்யா) காரில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அது விபத்தா, கொலையா, அந்த மரணத்திற்கும் தோழியின் கணவரு…

  14. தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்! இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கோங்கரா நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட இந்தியத் திரைத்துறையில் சில நூறு பெண் இயக்குநர்கள் கூட கிடையாது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திரைத்துறையில் நேரடியாக இயக்குநர் ஆகும் முயற்சிகள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அத்துறையில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். வெற்றி விகிதம் மிகக் குறைவாக உள்ள திரைப்பட இயக்குநர் என்கிற துறையில், ஆண் - பெண் பாகுபாடு இல்லாத நிலை உள்ளது என்ற…

  15. ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..! பல புதுமுகங்களுக்கான அடையாளம், சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி என ஓரளவு ஆரோக்கியமானதாக அமைந்தது இந்த வருட தமிழ் சினிமா. மேலும் ரிச்சி, வேலைக்காரன், அருவி, பலூன் என இந்த வருடம் வெளியாகும் படங்களே வெயிட்டிங்கில் இருக்க, அடுத்த வருடத்துக்கான ப்ளே லிஸ்ட் தயாராகிவிட்டது. 2018ல் வெளியாக இருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களின் பட்டியல் இதோ... இமைக்கா நொடிகள்: ஹாரர் பட வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றது `டிமாண்டி காலனி'. இயக்குநர் அஜய் ஞானமுத்து மேலும் கவனம் குவிய அவரின் அடுத்த படமான `இமைக்கா நொடிகளி'ல் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், …

  16. படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’ கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை மழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும…

  17. ஆடி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா! கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல், படத்தயாரிப்பிலும் குதித்தார் நடிகை சோனா. தனியாக தயாரிக்காமல், சிலரை பார்ட்னராக்கி கனிமொழி என்ற படத்தை எடுத்தார். படுமோசமான தோல்வியைத் தழுவியது கனிமொழி. இந்தப் படத்தின் மூலம் சோனா இழந்த தொகை ரூ 5 கோடி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். இப்போது சோனா 'பாக்யராஜ் 2010'என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். முதல் படமே தோல்வி என்பதால், இந்தப் படத்தைத் தொடர்வதா நிறுத்திவிட்டு, அழகு நிலைய பிஸினஸில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளாராம். படத்தை எப்படியாவது வெளியிட்டு விடலாம்…

    • 0 replies
    • 765 views
  18. சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா !!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 7 ஆம் திகதியன்று பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இதில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூத்த நடிகை சிம்ரன் அவர்களையும், பொபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ஆகியோர்களையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்ட போது, "சிம்ரன், பொபி சிம்ஹா, சனத் ரெட்டி…

  19. பூஜை விமர்சனம் 5 நடிகர்கள்: விஷால், ஸ்ருதிஹாஸன், சத்யராஜ், ராதிகா, ஜெயப்பிரகாஷ், சூரி, ப்ளாக் பாண்டி ஒளிப்பதிவு: ப்ரியன் இசை: யுவன் சங்கர் ராஜா பிஆர்ஓ: ஜான்சன் தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி இயக்கம்: ஹரி கிராமங்களில் பண்ணையார்களுக்கிடையிலான அரசியல், வெட்டுக் குத்து, குடும்ப உறவுகளுக்குள் வரும் மனஸ்தாபங்கள், இவற்றுக்கிடையில் நாயகன் நாயகி காதல்... போலீஸ் கதைகள் போரடிக்கும் போதெல்லாம் ஹரிக்குப் பிடித்தமான கதைக் களம் இந்த மாதிரியான கிராமத்துக் கதைகள்தான்! கொஞம்சம் நிஜம்போலத் தெரியும்... ஆனால் பக்கா வணிக சினிமா. அதற்குள் இருக்கும் ஓட்டையைப் பற்றி யோசிப்பதற்குள் அடுத்த காட்சி அடுத்த காட்சி என பார்ப்பவர்களை ஒரு வேக மனநிலையில் வைத்திருந்து வெளியில் அனுப்பி வைப்பது ஹரியி…

  20. சினிமா ஆர்வலர்களின் கண்களுக்கும் கருத்துகளுக்கும் தீனிபோட சென்னையில் 'சினிமா டுடே' திரைப்பட விழா தொடங்கியது. திரைப்பட ஊடகம் தொடங்கப்பட்டு பவள விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் சர்வதேச திரைப்படவிழா (Film panorama) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்குகளில் தொடங்கப்பட்டது. நடிகர்கள் ஜெயம்ரவி, அருண்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், நடிகைகள் சினேகா, கஸ்தூரி, கீர்த்திசாவ்லா ஆகியோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய படவிழா நாளை வரை நடக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 30 படங்கள் தினமும் 10 ப…

  21. முதல் பார்வை: தும்பா உதிரன்சென்னை கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'. பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர…

  22. நெஞ்சத்தை கிள்ளாதே இன்னொருமுறை காதல் கோட்டை கட்ட முயன்றிருக்கிறார் அகத்தியன். திரைக்கதையின் இழுவையால் காதல் ஓட்டையாகிவிட்டது. நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறார் விக்ராந்த். வேலைதேடும் ஏழை பட்டதாரிபோல என்று நினைத்தால் கோடீஸ்வரர் மணிவண்ணனின் மகன் என்பது அடுத்த காட்சிகளில் தெரிகிறது. ஏன் இப்படி செய்தாய்... என்று கேட்கும் போலீசிடம் 'எல்லாம் ஒரு அனுபவத்திற்காகதான்' என படு கேஷூவலாக சொல்கிறார். விக்ராந்தின் கேரக்டருக்கு இது ஒரு சாம்பிள்தான். நாயகனின் பார்வையில் காதலையும் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறார். தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் பாரதியின் மனசை கூரிய வார்த்தைகளால் பஞ்சராக்கி அவமானப்படுத்துகிறார்.…

  23. எனது படத்திற்கு ஷாருக்கானும் சல்மான்கானும் தேவையில்லை தனது படத்தை வெளியிட பொலிவுட் ஹீரோக்களான சல்மான்கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பொலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நான் இரு கான்களையும் சரி, ஜாக்கி சான், டாம் க்ரூஸையும் சரி எனது புதிய படத்திற்காக அணுகவில்லை. அது வெறும் வதந்தி. எனது படத்தை வெளியிட சல…

    • 0 replies
    • 1.1k views
  24. 37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’ உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த, கலங்கடித்த.. சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது! ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.