வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
துபாயில் தனியார் நிறுவனம் சார்பில், முதல் முறையாக ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தீம் பார்க் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் துபாயில் மிகப் பெரிய அளவில், ‘பாலிவுட் பார்க்ஸ் துபாய்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இது 2016ம் ஆண்டில் தயாராகிவிடும். இந்த தீம் பார்க்கில் இந்திய பாலிவுட் சினிமா தொடர்பான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. துபாயில் உள்ள ஜெபெல் அலி பகுதியில் இந்த தீம் பார்க் சுமார் 30 லட்சம் சதுர அடியில் உருவாகிறது. இதற்காக துபாயிலுள்ள தனியார் நிறுவனம் மும்பையிலுள்ள 5 சினிமா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீம் பார்க்கில் 16 வகையான…
-
- 0 replies
- 468 views
-
-
தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் ஸ்ருதி ஹாசன் முதலிடம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். #7MillionHeartsforShruthi தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தம…
-
- 0 replies
- 468 views
-
-
கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. …
-
- 0 replies
- 468 views
-
-
சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!! நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்…
-
- 0 replies
- 467 views
-
-
காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி... கலாபவன் மணி (45) : நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணி…
-
- 0 replies
- 467 views
-
-
புத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல் 2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்டிற்கு தமிழில் எட்டுப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் “அழகுகுட்டிச்செல்லம்”, சந்தானம் நடிப்பில் “வாலிபராஜா”, செல்வராகவன் எழுத்தில், கீதா செல்வராகவன் இயக்கும் “மாலைநேரத்துமயக்கம்”, சிம்ரன் நடிப்பில் “கரையோரம்”,சமுத்திரக்கனி, சக்தி நடிப்பில் “தற்காப்பு”, “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”, “கோடைமழை”, “பேய்கள் ஜாக்கிரதை” உள்ளிட்ட எட்டுப் படங்கள் ரீலீஸாகவிருக்கின்றன. பொங்கல்வரை ஓடினால் போதும் என்கிற மனநிலைய…
-
- 0 replies
- 467 views
-
-
[size=2]சூர்யா& கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் மாற்றான் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. அதுவும் குறிப்பாக நார்வேயில் மாற்றான் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள். [/size] [size=2] காரணம் கே.வி.ஆனந்த் நாணிகோணி என்ற பாடல் காட்சிக்காக நார்வேயின் அற்புதமாக அழகை அப்படியே செல்லுலாய்டில் பதிவேற்றி இருக்கிறாராம். மேலும் நார்வேயில் வாழும் தமிழ் மக்கள் சூர்யாவிடம் காட்டிய அன்பை பார்த்து பெரிதும் வியந்தர்ராம் சூர்யா. நாணிகோணி பாடல் காட்சியை பார்ப்பதற்கு நார்வேயில் மாற்றா-னுக்கு பெரும் கூட்டம் வரும் என்பதில் ஐயமில்லை. [/size] http://pirapalam.net/news/cinema-news/maatraan-111012.html
-
- 0 replies
- 467 views
-
-
க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல-சி.சரவண கார்த்திகேயன் – Uyirmmai - சி.சரவணகார்த்திகேயன் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr 58 mins | Christopher Nolan உலகெங்கிலும் காவல் துறை என்பது அத்துமீறல்களின் ராஜாங்கம் தான். எவ்வளவு மோசம் என்பதிலும், எண்ணிக்கையிலும், மாறுபாடு இருக்கலாம். ஆனால் அத்துமீறல் இருக்கவே செய்யும். காரணம் அதிகாரம் கைக்கு வரும் போது எல்லா மனிதர்களும் கொஞ்சமேனும் தம் மிருகஇயல்பை வெளிக்காட்டவே முனைகிறார்கள். அது மரணம் வரையிலும் கூடப் போவதைப் பார்க்கிறோம். அது மின்னபோலிஸில் போலீஸாரால் தெருவிலேயெ கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டோ அல்லது சாத்தான்குளம் காவல் ந…
-
- 0 replies
- 466 views
-
-
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…
-
- 0 replies
- 466 views
-
-
சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision
-
- 0 replies
- 466 views
-
-
டெலிவிஷனில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். இந்தியாவிலேயே திருநங்கை டைரக்டு செய்யும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28-ந்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷின் கிரிக்கெட் மைதா…
-
- 0 replies
- 466 views
-
-
களத்தில் கலக்கும் சூப்பர் வில்லன்கள்!- சூசைட் ஸ்குவாட் படம் எப்படி? ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லன்களுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர், டெட் ஷாட் போன்றவர்களுக்கே மவுசு ஜாஸ்தி. பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும், அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்குமான சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட். இந்த படத்தில் வில்லன்கள் தான் ஹீரோஸ்! வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது இந்த சூசைட…
-
- 0 replies
- 465 views
-
-
பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல் ரா திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து… ‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது? தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்ட…
-
- 0 replies
- 465 views
-
-
'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான்…
-
- 1 reply
- 464 views
-
-
நாடகமாடிய விஜய் - அமலா போல் கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா...' என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. இவருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது. 'எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்…
-
- 0 replies
- 464 views
-
-
உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர். அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம…
-
- 0 replies
- 464 views
-
-
தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம் கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஜனவரி 2023 'தொட்டி மீன்கள்' எனும் குறுந்திரைப்படம் - எல்லைகள் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனங்களையும் ஈர்த்திருக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் படத்தை நடராஜா மணிவாணன் இயக்கியிருக்கிறார். தேசியளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'தொட்டி மீன்கள்', 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா' உள்ளிட்ட பல தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மணிவாணன் - ஆரம்பத்தில் வானொலி ஊடகவியலாளராகப் பணியாற்றினார். அப்ப…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …
-
- 1 reply
- 464 views
-
-
அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே” இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் - ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன்,கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராணா இசை – கார்த்திக் ராஜா பாடல்கள் – பா. விஜய், கபிலன் நடனம் – ராஜ்விமல், ராபர்ட் ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல் கலை – தா. ராமலிங்கம் எடிட்டிங் – வி.டி. விஜயன் தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம் தயாரிப்பு –பி. ரமேஷ், இமானுவேல் எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.சசிதரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது “உன்னிடம் ஒன்றை …
-
- 0 replies
- 464 views
-
-
பதிவு செய்த நாள் : Dec 31 | 12:14 pm சென்னை, ‘‘சூர்யா, கார்த்தி இரண்டு பேரில் யார் சிறந்த அழகன், யாரை உங்களுக்கு பிடிக்கும்?’’ என்ற கேள்விக்கு அனுஷ்கா பதில் அளித்தார். இசை விழா கார்த்தி–அனுஷ்கா ஜோடியாக நடித்து, சுராஜ் டைரக்டு செய்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசை விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. அதில், திரளான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் பாடல் காட்சிகள், ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பாடல்களுக்கு கார்த்தி, நடிகைகள் நீது சந்திரா, தன்ஷிகா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் நடனம் ஆடினார்கள். டைரக்டர் சுராஜ் எழுதி, மனோபாலா, மனோகர் நடித்த நகைச்சுவை நாடகமும் நடந்தது. அனுஷ்காவிடம் பேட்டி விழாவில் நடிக…
-
- 0 replies
- 463 views
-
-
குஷ்பு வீட்டில் கல்லெறிந்த விஷயத்தை பற்றி குஷ்புவிடமே போன் செய்து அஜீத் விசாரித்ததாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது அஜீத்பேன்ஸ்.காம். இது எல்லா இணையதளங்களிலும் இறக்கை கட்டி பறந்தது. இதற்கு இதற்கு அஜீத் ரியாக்சன் செய்தாரோ இல்லையோ குஷ்புவின் ரியாக்சன் சூடாக இருந்தது. பேனா இருக்குன்னு என்ன வேணும்னாலும் எழுதறதா? ஒரு எல்லை தாண்டி இப்படி எழுதினா என்னால பொறுத்துகிட்டு இருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் பொங்கியிருந்தார் குஷ்பு. இது குறித்து அஜீத் என்ன சொல்கிறார்? என்று வலை படப்பிடிப்பில் இருந்தவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர் சில மீடியா நண்பர்கள், அதற்கு அஜீத் 'நான் என்னோட ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டேன். என் பேர்ல வர்ற இணைய தளத்தில் வர்ற செய்திக்…
-
- 1 reply
- 463 views
-
-
கல்கி 2898 AD : விமர்சனம்! christopherJun 28, 2024 08:42AM அறிவியல் புனைவோடு கலந்த மகாபாரதக் கதை! ’பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் தந்த ‘பான் இந்தியா’ அந்தஸ்தினால், தனது அடுத்தடுத்த படங்களை எப்படித் தருவது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொண்டார் பிரபாஸ். ’பான் இந்தியா’ படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் தான். சாஹோ, சலார், ஆதி புருஷ் போன்ற படங்கள் வந்து போன தடம் தெரியாமல் ஆனதுக்குக் காரணமாகவும் அதுவே இருந்தது. இந்தச் சூழலில் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்க வேண்டுமென்ற வேட்கையுடன் வெளியாகியிருக்கிறது, அவர் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்…
-
- 1 reply
- 463 views
-
-
காந்தக் குரல் அழகி.. கணீர் பாட்டழகி. கல்பனா அக்காவின் தீபா"வலி" ஸ்பெஷல்! பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பாடலாகப் பாடி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா. தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் தலையாய வேலை. கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் பயின்ற இவர், தற்போது ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார…
-
- 0 replies
- 462 views
-
-
எஸ்பிபி உயிருடன் இருந்தவரை இளையராஜாவை புகழாத மேடைகளே கிடையாது, எஸ்பிபி உயிருடன் இருந்தவரை அவரை இளையராஜா ஒரு மேடையில்கூட புகழ்ந்ததுகிடையாது. வாழும்போதே நட்பை கொண்டாடுங்கள் போன பின்னர் பேசி கைதட்டு வாங்கி என்ன புண்ணியம்?
-
- 2 replies
- 462 views
-
-
அலைகள் மூவிஸ் தயாரிப்பான உயிர்வரை இனித்தாய் முழுநீளத் திரைப்படம் நாளை - 27.07.2014 பாரீஸ் நகரத்தில் - சொம்ஸ் எலிசே பகுதியில் அமைந்துள்ள சிறந்ததோர் திரையரங்கிலே திரையிடப்படுகிறது. உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் திரைப்பட ரசிகர்கள் இருப்பதை அவர்களுடனான நேரடி உரையாடல்களின் போது தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு உள்ளது. அதனை இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அந்த வேகம் கொஞ்சம் தணிந்துள்ளது. …
-
- 1 reply
- 462 views
-