வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது …
-
- 1 reply
- 1.2k views
-
-
Stage of Death : Sinhala Movie : Sri Lanka http://video.google.ca/videoplay?docid=-1849318537509916365 Stage of Death
-
- 6 replies
- 2.3k views
-
-
மணிரத்தினம் தம்பி விபத்தில் பலி மே 28, 2007 சென்னை: இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன். அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழ…
-
- 2 replies
- 1.6k views
-
-
வணக்கம். ஊமை பாடும் பாடலை யார் தான் கேட்க கூடுமோ வேசம் போடும் பூமியில் நியாயம் தோற்றுப் போகுமா. இந்த பாடல் எந்த படம் என்று யாராவது சொல்வீர்களா?
-
- 2 replies
- 1.2k views
-
-
"கேளடி கண்மணியில்" எஸ்.பி. பீ மூச்சு விடாமல் பாடிய இந்தப்பாடல் ஒலிப்பதிவின் கைங்கரியம் என்று சொல்லப்படுவதை நேரில் பாடி நிரூபிக்கிறார். எஸ்பிபி ஒரு மேடை நிகழ்ச்சியில். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாடகர் ரகுநாதன் மேடையில் இந்தப்பாடலை அப்படியே பாடுவதை கேட்டிருக்கிறேன் திரைப்படத்தில் - ஆரம்பத்தில் வரும் இளையராஜவின் படங்களுக்கு பிறகு பாட்டு ஆரம்பிக்கிறது.
-
- 2 replies
- 2.6k views
-
-
என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் எழுந்துள்ள புகார்கள் பொய்யானவை என்பதை நிரூபித்து நடிகர் ஸ்ரீகாந்த்தை மணப்பது நிச்சயம் என்று வந்தனா உறுதிபட தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், துபாயில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்த செய்தி வெளியான அடுத்த சிலநாட்களிலையே பெரும் அதிர்ச்சி குண்டு வெடித்தது. மணமகள் வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்ன் ஆகியோர் மீது பல கோடி பணத்தையும், சொத்துக்களையும் மோசடி செய்ததாக வழக்கு உள்ளதாக வெளியான அந்த செய்தியால் ஸ்ரீகாந்த் குடும்பம் நிலைகுலைந்தது. கல்யாணப் பத்திரிக்கை அச்சிடும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார் ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி. கல்யாணம…
-
- 11 replies
- 3k views
-
-
பெரியார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக சத்யராஜ் கூறியுள்ளார். லொள்ளு சபா தலைவரான சத்யராஜ், தான் நடித்த அத்தனை படங்களிலும் லொள்ளுத்தனம் இல்லாமல் நடித்ததே இல்லை. சீரியஸான கேரக்டரைக் கூட தனது குறும்புத்தனத்தால் கலகலக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட அசகாய சூர நடிகரான சத்யராஜ், பெரியார் படத்தில் நடித்த விதத்தைப் பார்த்து சினிமாக்கார்ரகள் அசந்து போயுள்ளனர். பல கமல்ஹாசன்களை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் பெரியார் வேடம் மூலமாக. பெரியார் படத்தில் நடித்ததற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்க இப்போது பெரியார் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கத் தயாராகி வருகிறாராம் சத்யராஜ். பெரியார் படத்தில் நடித்தற்காக …
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்துள்ள வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அவர்களின் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த வாரம்தான் ஸ்ரீகாந்த்தின் தந்தை தனது மகனின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 18ம் தேதி ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் நடைபெறும் என அவர் அறிவித்தார். இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிப் பழகி வந்தனர், எனவே இது காதல் கல்யாணம் என்றும் பின்னர் கூறப்பட்டது. ஸ்ரீகாந்த்தை கணவராக அடைவது நான் செய்த பாக்கியம், கிடைத்த வரம் என்று வந்தனா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அதேபோல மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ஸ்ரீகாந்த்தும். திர…
-
- 3 replies
- 1.3k views
-
-
பாங்காக்கில், நிலநடுக்கம்: நடிகர் தனுஷ்-நயன்தாரா உயிர் தப்பினார்கள் சென்னை, மே.22- பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனுஷ்-நயன்தாரா ஆகிய இருவரும் உயிர் தப்பினார்கள். நிலநடுக்கம் காரணமாக அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. `யாரடி நீ மோகினி' என்ற புதிய படத்தை டைரக்டர் கஸ்தூரிராஜா சொந்தமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. படத்தை, ஜவகர் டைரக்டு செய்து வருகிறார். படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கி, பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை, தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் படமாக்க முடிவு செய்தார்கள். அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
கஜினியில் கலக்கிய சூர்யாவும்இ ஆசினும் மீண்டும் இணைகிறார்கள் ஹரியின் வேல் மூலமாக. 'மல்லுஇ டோலிஇ கோலி' என தென்னிந்திய சினிமாவைக் கலக்கி வந்த ஆசின்இ இப்போது 'பாலி'க்கு மாறியுள்ளார். மாறிய கையோடு இனி தென்னிந்தியாவை மறந்து விடுவாரோ என்று சகல சனங்களும் கலகலத்துக் கிடக்கும் நிலையில்இ தமிழில் புதிய படம் ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார் ஆசின். கஜினியின் இந்தி ரீமேக்கில் பிசியாகியுள்ளார் ஆசின். ஆமீர்கானுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் மூலம் இந்தியிலும் பின்னி எடுத்து பிசின் போட்டு கம்மென்று உட்கார்ந்து விடும் எண்ணம் உள்ளது ஆசினிடம். கஜினி தவிரஇ போக்கிரியின் இந்தி ரீமேக்கிலும் சல்மான் கானுடன் நடிக்கத் தயாராகி வருகிறார் ஆசின். இதுதவிர இன்னொறு இந்திப் படமும…
-
- 0 replies
- 849 views
-
-
ரோஜாக் கூட்டம் பார்த்திபன் கனவு, உயிர், பம்பரக்கண்ணாலே உள்பட பல தமிழ்படங்களில் கதாநாய கனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனா என்பவருக்கும் வருகிற ஜுன் 18-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சிடும் பணியÛயும் தொடங்கினர். திருமண பட்டாடைகள், நகை கள் போன்றவற்றை தேர்வு செய்யும் பணியும் துவங்கி யிருந்தது. இந்த நிலையில் வந்தனா அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது ரூ18 கோடி கடன் மோசடி புகார் தொடர் பான திடுக்கிடும் தகவல் வெளியானது. மணமகள் வந்தனா உள்ளிட்டோர் மீது கனரா வங்கி சார்பில் புகார் செய் யப்பட்டுள்ளது. இதை சி.பி.ஐ. விசாரித்து வரு…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
வைரமுத்து பதில்க்ள் யாரோ கதை எழுத, யாரோ இசையமைக்க, யாரோ பாட்டெழுத, யாரோ இயக்க, கடைசியில் நடிகர்கள் தானே பேரும் பணமும் வாங்குகிறார்கள்... அநியாயமில்லையா? ஒரு சம்பவம் சொல்கிறேன் : படம் : கைதியின் டயரி இடம் வாகினி அரங்கம். பாரதிராஜா இயக்கத்தில் இது ரோசாப் பூவு என்ற பாடலின் படப்பிடிப்பு. அடுத்த பாடலைக் கொடுக்கச் சென்ற நான் ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறேன். அந்தரத்தில் ஒரு கூண்டு. அதில் இரண்டு தட்டு, மேல்தட்டில் கனமான நடிகை (அனுராதா) ; கீழ்த்தட்டில் கமல், ரெடி டேக் என்றதும் டிராலியில் கேமரா உற்சவிக்கிறது ; உறுமி மேளத்திற்கேற்பக் கூண்டு சுற்றுகிறது. மேல்தட்டு மங்கை ஆடத் தொடங்கிய அடுத்த நொடி அந்தரத்தில் ஆடிய கூண்டு அறுந்து விழுகிறது. யாத்தே! பாரதிராஜா…
-
- 15 replies
- 3k views
-
-
உலகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது... வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு போல கண்களுக்குத் தெரிந்தது என்பதுதான். ஆதிக்க நாடுகளின் அழகு மிளிர் வானுயர் கட்டடங்களோ, கோபுரங்களோ, அடிமை தேசங்களின் அவலக் குடிசைகளோ அவர் கண்களுக்குத் தெரியவில்லை. பூமியில் இருந்தபோது புரியாத இந்த உண்மை வானில் உயரப் பறந்தபோதுதான் அவருக்குப் புலப்பட்டது. அது போல தன்னுடைய சமநோக்குப் பார்வையாலும், சீரிய சிந்தனையாலும் உயரப் பறந்த பெரியாரின் பார்வைக்கு ஏழை, பணக்காரன், கீழ் சாதி, மேல் சாதி, பால் பாகுபாடு போன்ற எவையும் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் "மனிதன்' என்பது மட்டும்தான்.…
-
- 4 replies
- 2.5k views
-
-
சிவாஜியும் சாவித்திரியும் நடித்த பழைய பாடல் காட்சி ஒன்றைப் பாருங்கள். "இந்தியன்" படத்தில் கமலஹாசன் - மொனிஷா நடித்த "மாய மச்சீந்த்ரா" பாடல் காட்சியில் இதைப் பின்பற்றி(காப்பி அடித்து) காட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? காதல் காட்சியில் "டெலிபோன் மணி" போல இல்லாமல் சுந்தரத் தமிழில் பேசிக்கொள்கிறார்கள்.
-
- 33 replies
- 6.5k views
-
-
கேன்ஸ் திரைப்படவிழாவில் ஐஸ்வர்யாராய்க்கு சிகப்பு கம்பள வரவேற்பு கேன்ஸ்: உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. தமிழ் திரைப்படமான "வெயில்' உட்பட ஏழு இந்திய திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகிறது. இது போல் உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் 60வது ஆண்டு விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் துவங்கியது. இந்த திரைப்பட விழாவில் வழக்கமாக ஒரு நாட்டுக்கு ஒரு நாள் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வசந்த பாலன் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படமான…
-
- 2 replies
- 1.3k views
-
-
அடுத்த மாதம் 18-ந் தேதி ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணம். ஸ்ரீகாந்தை தமிழ்நாட்டுக்கே தெரியும். வந்தனா? அவரை ஸ்ரீகாந்துக்கு மட்டுமே தெரியும். அதாவது ஸ்ரீகாந்த், வந்தனா குடும்பங்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். பெரியோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்று முதலில் கூறிய ஸ்ரீகாந்த் என்ன நினைத்தாரோ திடீரென்று நானும் வந்தனாவும் காதலர்கள் என்றார். இது என்ன திடீர் குழப்பம்? ஸ்ரீகாந்தும், த்ரிஷாவும், அபர்ணாவும் அப்புறம் வந்தனாவும் நல்ல நண்பர்கள். படம் வெற்றி பெற்றால் நான்கு பேரும் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்தான் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணத்தை அவர்கள் பெற்றோர்கள் தீர்மானித்தனர். அதுவரை நட்பாக பழகியவர்கள், பெற்றோரின் முடிவு தெரிந்து காதலர்களாயினர். இது நடந்தது எட்டு மாதங…
-
- 0 replies
- 1.1k views
-
-
நட்சத்ரங்களின் முதல் படம் நடிகர்கள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி சிவாஜி - பராசக்தி ஜெமினிகணேசன் - ஒளவையார் எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி முத்துராமன் - அரசிளங்குமரி ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் சிவகுமார் - காக்கும் கரங்கள் ஜெய்சங்கர் - இரவும் பகலும் ரவிச்சந்திரன் - காதலிக்க நேரமில்லை விஜயகுமார் - ஸ்ரீ வள்ளி ரஜினிகாந்த் - அபூர்வ ராகங்கள் கமலஹாசன் - களத்துர் கண்ணம்மா விஜயகாந்த் - இனிக்கும் இளமை சத்யராஜ் - சட்டம் என் கையில் பாக்யராஜ் - 16 வயதினிலே கார்த்திக் - அலைகள் ஒய்வதில்லை பிரபு - சங்கிலி முரளி - பூவிலங்கு (தமிழில்) ராம்கி - சின்னப்பூவே மெல்லப்பேசு பார்த்திபன் - தாவணிக்கனவுகள் அர்ஜூன் - நன்றி சரத்குமார் - கண் சிமிட…
-
- 5 replies
- 10.2k views
-
-
இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார். இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.
-
- 17 replies
- 4.4k views
-
-
இதோ வர்றார்... இன்னொரு சிவாஜி! ரகளை அறிமுகம்! நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’யைத் தொடர்ந்து இன்னொரு ‘சிவாஜி’ ரகளையாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்திருக் கிறார். படத்தின் பெயர் ‘சிங்கக்குட்டி’. ஹீரோ, ஸ்ரீப்ரியாவின் சகோதரி மீனாவின் மகன் சிவாஜி. ‘‘இந்த சிவாஜி யார் தெரியும்ல... சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன்!’’ என்று இண்டஸ்ட்ரியில் புது ஹீரோ பற்றி ஷாக் சர்ப்ரைஸ் தருகிறார்கள். சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள ‘சிங்கக்குட்டி’ பட அலுவலகத்துக்குப் போனோம். நம்மை வரவேற்றவர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் கிரிஜா ஸ்வாமி. ‘‘ஆமா! இப்ப ஃபீல்டுக்குப் புதுசா வந்திருக்கிறது என் பேரன்தான். என் பொண்ணு மீனாவோட பையன். சிவாஜியின் பேரன். ‘சி…
-
- 26 replies
- 5.1k views
-
-
'இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உங்கள் இரவுகளை ரணமாக்க வருகிறார்கள்' இப்படி மிரட்டுவது நாமல்ல. திக் திக் பட அழைப்பிதழ்தான் அக்கா புருஷன் மீது தங்கை ஆசைப்படுவதாக கதை சொன்ன 'கலாபக் காதலன்' படத்தை எடுத்து பரபரப்பூட்டிய இகோர் அடுத்து பயமுறுத்தும் படம்தான் 'திக்..திக்..' தலைப்பிலேயே திரில்லர் சஸ்பென்ஸ் தெரியும்போது கதைக்கருவைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. பாக்யராஜின் மகள் சரண்யாவும், மும்தாஜும்தான் நாயகிகள். நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். குரு.முனீஸ்வரன் தயாரிப்பில் உருவாகவுள்ள 'திக்திக்'ல் இமான் இசையமைக்க, சண்டோனியோ ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, த…
-
- 0 replies
- 828 views
-
-
கேரளாவின் காசர்கோடுக்கு வந்த கன்னட நடிகையை துரத்தியடித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அந்த நடிகை ஜெயமாலா! அய்யப்பனை தொட்டேன் என்று கூறி ஆண்டவனையே ஆடம் டீஸிங் செய்த அதே ஜெயமாலா! சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகளும் வயதான பெண்களுமே அனுமதிக்கப்படுவர். மகளிர் மறைவுப் பிரதேசமான அய்யப்பன் சன்னிதியில், அய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பேட்டியளித்தார் ஜெயமாலா. இந்த சின்ன வெடி கேரள அரசியலில் யானை வெடியாக வெடித்தது. ஜெயமாலாவை கைது செய்ய போராட்டம் நடந்தது. தீட்டுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயமாலா சொன்ன அய்யப்பன் டச்சிங் வெறும் அல்வா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், கேரள போலீஸ் ஏனோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 1.1k views
-
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேலுமொரு தமிழ்படம் திரையிடப்படுகிறது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்த படம் 'மொழி'. காது கேட்காத வாய் பேச முடியாத இளம் பெண்ணின் உலகை, அவளது தன்னம்பிக்கையை, சுய கெளரவத்தை இப்படத்தில் ரசிக்கும்படி வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ராதாமோகன். மெல்லிய நகைச்சுவை இழையோட ஒரு சீரியஸ படத்தை தரமுடியும என்பதற்கு இன்று உதாரணமாக விளங்குகிறது 'மொழி'. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. கேன்ஸ் படவிழாவுக்கு ஏற்கனவே 'வெயில்' தேர்வாகியுள்ளது. 19-ம் தேதி திரையிடப்படும் 'வெயில்' திரைக்காட்சியில் பங்கேற்க அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கரும் இயக்குனர் வசந்தபாலனும் கேன்ஸ் செல்கின்றனர். இம்மாதம் 22-ம் தேதி கேன்ஸ் படவிழாவில் 'ம…
-
- 0 replies
- 975 views
-
-
கறை படிந்த நீதி பருத்திவீரன் வரையிலான வட்டாரப் படங்களின் சாதியச் சித்தரிப்புகள் குறித்து "மனிதர்களே நாம் உங்களை ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்" (திருமறை 49:13) என்னும் நபிகளின் வாசகத்தோடு பருத்திவீரன் படம் தொடங்குகிறது. தொழில் பகைமை மற்றும் 'கீழான' சாதி காரணமாக, தேவர் சமூகத்தவரால் கொலை செய்யப்படும் குறத்தியின் மகளை விசுவாசத்தின் பொருட்டுத் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே மணந்துகொள்ளும்போது சொந்தச் சாதியினர் ஏற்க மறுக்கின்றனர். விபத்தொன்றில் இறந்தபோதும் அத்தம்பதியினரின் மகன்மீதும் (பருத்திவீரன்) 'ஈனச் சாதி' பிறப்புக் காரணமாகப் பேதம் பே…
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சார சாகரத்தில் இணைகிறார். 'ரோஜாக்கூட்டம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு அவரது பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபாய்த்து வந்தார் ஸ்ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறார் வந்தனா. அண்ணாநகரை சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி. இவரது மகள் வந்தனா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் குடும்பமும் ஸ்ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரு குடும்பத்தினரும் இணைந்து ஸ்ரீகாந்த், வந்தனா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். "இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். வந்தனாவை ஏற்கனவே எனக்கு தெரியும். படித்தவர், அழகானவர், குடு…
-
- 3 replies
- 1.3k views
-