வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தலைவா ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடிகளால் தீடீர் மாப்பிள்ளையாகி சனிக்கிழமை ரிலீஸானது 555. தலைவாவிற்க்காக காத்திருந்த நிறைய தியேட்டர்கள் 555 யை ரிலீஸ் செய்திருக்கின்றன. கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது. இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தங்கமீன்கள் பற்றி வாசிக்கும் போது இந்த சிறுமியின் நினைவு வந்தது . இந்த மலையாளப்படம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத ஐந்து குறும்படங்களை கொண்டது . அதில் முதலாவது படத்தில் நடிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு போல எந்த சிறுமி நடித்தும் நான் பார்த்ததில்லை ,அந்த கதையை எழுதவே மனம் இடம் கொடுக்குதில்லை , ஐந்து படங்களுமே மிக சிறந்தவை .அதில் எனக்கு மிக பிடித்தது ஒரு கட்டை உருவம் உள்ள ஆண் உயரமான பெண் தம்பதிகளுக்கான கதை . கடைசி படத்தில் இயக்குனர் பாசிலின் மகன் நடித்திருந்தார் .மிக நன்றாக நடித்திருந்தார் (றொபேட் டி நிரோ போல் இருந்தது ).மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்று கொடுக்கவேண்டும் . தவறவிடமுடியாத ஒரு படம் .
-
- 0 replies
- 710 views
-
-
'பருத்திவீரன்' படத்துக்கு பைனான்ஸ் சிக்கல், தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்! சில வாரங்கள் முன் வந்த இந்த செய்தி முழுக்க உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி. பருத்திவீரனான கார்த்தி புழுதிக் காட்டில் வில்லன்களுடன் மோதுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக தேனி மாவட்டத்தை சல்லடை போட்டு சலித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிக்கு ஐம்பது ஏக்கர் பரப்பளவாவது வேண்டும் என இயக்குனர் அமீர் சொன்னதால்தான் இந்த தீவிர வேட்டை. கடைசியில் புரொடக்ஷ்ன் ஆள்கள் ஐம்பது ஏக்கரில் நிலமொன்றை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறை. நிலம் புழு…
-
- 0 replies
- 930 views
-
-
-
ஐயப்பன் பாடலையே காப்பி அடித்த அனிருத்
-
- 1 reply
- 484 views
-
-
மேட்டர் கேள்வி பட்டிங்களா? ஏனுங்க நம்ம சிம்பு தம்பிய பின்னி எடுத்திட்டாங்களாம்ல? நெசமாலுமா? http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...uary/300106.asp
-
- 0 replies
- 1.3k views
-
-
பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..? மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா. பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா. ஒருநாள் நிஜமாகவே பேய…
-
- 0 replies
- 475 views
-
-
ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் 'கபாலி' திரையிடல்! பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் முதல் இந்திய படமாக 'கபாலி' திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தை தணிக்கை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் பாரீஸ் நகரில் உள்ள 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Gr…
-
- 0 replies
- 361 views
-
-
கடைசியாக தேதி அறிவித்து விட்டார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஆடம்பரம் ஐஸ் - அபிஷேக் திருமணத்தில் இருக்காதாம். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்குகூட அழைப்பில்லையாம்! இந்தியாவில் இப்படியொரு திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் விதமாக ஐஸ் - அபிஷேக் திருமணத்தை நடத்த விரும்பினார் அமிதாப்பச்சன். உதய்ப்பூர் அரண்மனையும் இதற்கு ஏற்பாடானது. திடீரென்று அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மிக எளிமையாக திருமணத்தை நடத்துகிறார்கள். சொல்ல மறந்து விட்டோமே.... திருமண தேதி ஏப்ரல் 20! திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பு. ஷாருக்கான் உள்ளிட்ட எந்த பாலிவுட் ஸ்டார்களுக்க…
-
- 0 replies
- 635 views
-
-
வதந்தியில் தொடங்கிய அபிஷேக் - ஐஸவர்யாராயின் திருமணம் ஜெயத்தில் முடிய இன்னும் இரு தினங்களே காத்திருக்கிறது. காஸ்ட்லியான அழைப்பிதழ்கள், ரகசியமான நிகழ்ச்சி ஏற்பாடுகள் என பாலிவுட் ரசிகர்களின் லப்டப்பை எகிற வைத்துள்ள இத்திருமண விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் 18-ந் தேதி மெகந்தி அணிவிக்கும் நிகழ்ச்சியும் மறுநாள் திருமணமும், 20 - ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரையுலகமே திரண்டு இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துச்சொல்ல காத்திருந்தாலும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்துவரும் அமிதாப்பச்சன் நேற்று …
-
- 1 reply
- 972 views
-
-
சிறுவர், சிறுமியருக்கு செக்ஸ் கல்வியை அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு விளக்கிக் சொல்ல வேண்டியது அவசியம் எனறு நடிகை குஷ்பு கூறியுள்ளார். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை, ஆனால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப் போய் பெரும் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு. செருப்பு, விளக்குமாறுகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் தான் பேசியதற்காக மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார் குஷ்பு. அந்த சர்ச்சை அத்தோடு ஓய்ந்தது. இப்போதெல்லாம் தமிழகத்திற்குள் எங்காவது பேச நேரிடும்போது படு ஜாக்கிரதையாக பேசி வருகிறார் குஷ்பு. ஆனால் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செக்ஸ் கல்வி குறித்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய திருநாட்டின் நீண்ட நாள் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அபிஷேக்பச்சன் நேற்றுமாலை ஐஸ்வர்யாராயின் கழுத்தில் தாலி கட்டி, இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா மாட்டார்களா என்ற நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் திருமணம் ஜுஹு பகுதியில் அமிதாப்பச்சனுக்கு சொந்தமான பிரதிக்ஷா பங்களாவில் நடந்தது. மணமகள் ஐஸ்வர்யாராய் காக்ரா உடை அணிந்திருந்தார். மணமகன் அபிஷேக் ஷெர்வானி. பங்களாவுக்கு சிறிது தூரம்வரை காரில் வந்த அபிஷேக் பின் குதிரையில் ஏறிக் கொண்டார். அதற்குமுன் உற்சாக மிகுதியில் சிறிது நேரம் நடனம் ஆடினார். பதினொரு புரோகிதர்கள் மந்திரம் சொல்ல திருமண சடங்கு நடந்தது. முன்னதாக பிரதிக்ஷா பங்களாவின் வெளியே ஜானவி கபூர் என்ற நடிகை கையை கிழித்து தற்கொ…
-
- 0 replies
- 844 views
-
-
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அபிஷேக் பச்சன் வீட்டில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மானை விட்டு பிரிந்தார். பிறகு விவேக் ஓபராயைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி பகிரங்கமாக செய்தி வெளியிட வேண்டும் என்று விவேக் கேட்டதால் அவரை விட்டும் ஐஸ்வர்யா பிரிந்தார். அதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் 2007 பிப்ரவரியில் திருமணம்? பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று தெரிகிறது. தமது திருமணம் பற்றிய அறிவிப்பை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாளான நவம்பர் 1ம் தேதி அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் - ஐஸ்வர்யா இருவரும் மணிரத்னம் இயக்கும் குரு படத்தின் ஷூட்டிங்கின் போதுஇ அமிதாப் பச்சனின் குடும்ப ஜோசியரான சந்திர சேகர சுவாமிஜியைச் சந்தித்து ஆலோசனை பெற்றதாக கர்நாடகாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவாமிஜி தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…
-
- 0 replies
- 803 views
-
-
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா- அபிஷேக் திருமணம் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அவர்கள் திருமணம் நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு முன்னணி நடிகர் ஹிருத்திக்ரோஷனுடன் முத்தக்காட்சியில் ஐஸ்வர்யா நெருக்கமாக நடித்ததால் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரு குடும்பத்தினர் முன்னிலையில், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற வேண்டிய திரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம் கல்யாண்குமார். எம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, ஐஸ்வர்யா ராய் திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈ…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வரும் முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்த நெருக்கமான காட்சிகள், அமிதாப் பச்சன் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரன்…
-
- 0 replies
- 262 views
-
-
ஐஸ்வர்யா ராய் திருமணம் ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்
-
- 82 replies
- 27.2k views
-
-
ஐஸ்வர்யா ராய்க்கு விருது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு (42) இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. தனது மகள் ஆராத்யாவுக்கு விருதை அர்ப்பணித்த ஐஸ்வர்யா ராய், ‘‘சர்வதேச மேடையில் இந்திய பெண்மணியாக பிரதி நிதித்துவம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நடிகையாகவும், சிறந்த பெண் மணியாகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள்…
-
- 0 replies
- 331 views
-
-
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஜெயா பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் மணந்ததில் இருந்து குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. விழாக்களில் மாமனார், மாமியார், கணவருடன் ஐஸ்வர்யா கலந்து கொண்டு குடும்த்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். இந்நிலையில் ஐஸுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் சென்ற ஐஸ் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டு வந்தார். அமிதாப் குஜராத் மாநில …
-
- 9 replies
- 917 views
-
-
ஐஸ்வர்யாராயிடம் நட்ட ஈடு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஏமாற்றியதாக இலங்கையர் நீதிமன்றில மனு:- 07 மே 2014 இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரமும், முன்னாள் உலக அழகியுமான ஜஸ்வர்யா ராய் பச்சன் தம்மை ஏமாற்றியதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையர் ஒருவர் கொழும்பு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் காதல் தொடர்பைப் பேணியதாக நிரோசன் தேவப்பிரிய என்பவர் தெரிவித்துள்ளார். நிரோசன் தற்போது தாய்வானில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் புதல்வரும் நடிகருமான அபிஷேக் பச்சனை கரம் பிடித்தனைத் தொடர்ந்து பாரியளவில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு நட்ட ஈடு கோர வழக்குத் தொடர திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்…
-
- 4 replies
- 520 views
-
-
புதன்கிழமை, 17, நவம்பர் 2010 (11:6 IST) ஐஸ்வர்யாராய் மீது வழக்கு ஐஸ்வர்யாராய், ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ் இந்திப் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இப் படத்தில் இருவரும் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருப்பதாகவும் இதனால் ஐஸ்வர்யாராய் மீது அபிஷேக் பச்சன் கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் இன்னொரு சர்ச்சையிலும் ஐஸ்வர்யாராய் சிக்கியுள்ளார். அவர் இப் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை மும்பை நகரம் முழுவதும் போஸ்டர்களாகவும், பேனர்களாகவும் விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தில் ஐஸ்வர்யாராய் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து…
-
- 1 reply
- 806 views
-
-
ஒட்டுண்ணி கொரிய திரைப்படமான பரசைட் திரைப்படம் அண்மையில் ஆங்கில எழுத்துருவில் பார்த்தேன் பல தரப்பும் மிக சிறந்த படைப்பு என்ற கருத்திற்கமைய இத்திரைப்படத்தை பார்த்தேன் படம் முடிவில் படம் பார்க்கலாம் இரகம் ஆனால் இன்று இத்திரைப்படம் சிற்ந்த படத்திற்கான ஒஸ்கார் விருதினைப்பெற்றுள்ள தகவலை அறிந்தேன் இத்திரைப்படம் தொடர்பாக ஒரு புது திரி ஒன்றினை ஆரம்பித்த நோக்கம் இத்திரைப்படம் தொடர்பாக கள உறவுகள் என்னநினைக்கிறீர்கள் என்ற உங்கள் பார்வை என்ன என்பதே
-
- 2 replies
- 1.2k views
-