வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
-
- 10 replies
- 1.2k views
-
-
மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ! அண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது. விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவில், நிவின்பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போ…
-
- 2 replies
- 532 views
-
-
இதுவரை யாரையும் லவ் பண்ணலை... சொல்கிறார் தமன்னா மும்பை: இந்தி இயக்குநர் சாஜித் கானின் அடுத்தடுத்த 2 படங்களில் நடித்த தமன்னா இயக்குனரை ரகசியமாக சந்தித்து, காதல் வளர்த்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மேலும் தமன்னா-சாஜித் கான் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் இந்தக் காதல் விவகாரங்கள் குறித்து நடிகை தமன்னா விளக்கம் அளித்திருக்கிறார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/tamanna-explain-about-her-love-rumors-038945.html சிங்கன்கள் ட்ரை செய்யலாம். http://tamil.filmibeat.com/heroines/tamann…
-
- 5 replies
- 796 views
-
-
பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி! பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு கோவை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, என் மீது எந்த தவறும் இல்லை, இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது. இது பெண்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட கலாச்சார சீர்கேடு பாடல் என்று கூறி பல்வேறு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள்,மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டத்தில் குதித்தனர். ஊ…
-
- 2 replies
- 424 views
-
-
விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது: ராதிகா பரபரப்பு பேச்சு 'நையப்புடை' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்துக்கு அடிக்கும் பழக்கம் இயக்குநர் எஸ்.ஏ.சி-யிடம் இருந்து வந்தது என்று ராதிகா சரத்குமார் குறிப்பிட்டார். விஜயகிரண் இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நையப்புடை'. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தை காஸ்கோ வில்லேஜ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு இப்பட…
-
- 0 replies
- 450 views
-
-
அடுத்தடுத்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி, ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற வித்தியாசமான வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் சக்தி செளந்தர ராஜனுடன் இணைந்திருக்கும் படம் என்பதே ‘மிருதன்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கவைத்தது. தமிழின் முதல் ஜாம்பி (zombie) வகைப் படம் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது. மிகக் கடுமையான உழைப்பில் இந்தப் படத்தைத் உருவாக்கி இருக்கிறது ‘மிருதன்’ படக்குழு என்பதை ட்ரைலரிலேயே உணர முடிந்தது. படத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குமா? ஊட்டியில் ஒரு தொழிற்சாலையின் விஷக் கழிவு கலந்த நீரைக் குடிக்கும் நாய் ஜாம்பியாக உருவெடுக்கிறது. அந்த நாய் ஒரு மனி…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ் திடீர் நிறுத்தம் தமிழில் தொடர்ந்து 36 ஆண்டு களாக வெளியாகிவந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ், தனது வெளி யீட்டை திடீரென நிறுத்திவிட்டது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் 1980-ம் ஆண்டு ஜனவரியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வெளியிட்டார். ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்ற பெருமை இந்த இதழுக்கு உண்டு. இந்த இதழ் சார்பில் தென்னிந்திய திரைக் கலைஞர் களுக்கு ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்’ வழங்கப்பட்டு வந் தன. இந்த விருதை திரையுல கினர் பெருமையாக கருதினர். தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த இந்த இதழ், திடீரென நிறுத்தப் பட்டுவிட்டத…
-
- 0 replies
- 335 views
-
-
திரை விமர்சனம்: சேதுபதி சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அர…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழ் சினிமாவில் சாதி பற்றி அற்புதமான ஆவணப்படம்
-
- 0 replies
- 471 views
-
-
யாழில் 'யாழ் தேவி' திரைப்படத்தின் இசைவெளியீடு இன்று; நடிகை பூஜா வெளியிடுகிறார் 2016-02-15 10:41:37 இலங்கைக் கலைஞர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் 'யாழ்தேவி' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹொட்டேலில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகை பூஜா உமாசங்கர், இவ் விழாவில் யாழ் தேவி இசைத்தட்டை வெளியிடவுள்ளார். ராஜ்ஸ்டோன் புரொடக்ஷன் தயாரிப்பில் லோககாந்தன் இப் படத்தை இயக்குகிறார். சங்கர், கிரிஸ், நிரோஷா, மிதுனா உட்பட 50 இற்கும் அதிகமான கலைஞர்கள் இப் படத்தில் நடிக்கின்றனர். சுதர்ஷன் இசை அமைக்கிறார். பாட…
-
- 5 replies
- 1.9k views
-
-
விஜய்க்கு எக்ஸ்ட்ரா லைக், தனுஷ் செம கெத்து - DD குஷி பேட்டி! இளையராஜா , மாதவன் என அடுத்தடுத்த ஹிட் பேட்டிகள். கால் இன்னும் முழுமையாக சரியாகாவிட்டாலும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு தான் சேகரித்த ஒவ்வொன்றையும் அவ்வளவு ஆர்வமாய் காட்டுகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக சின்னத்திரையின் நம்பர் ஒன் தொகுப்பாளினி. ‘இது பல்லாங்குழி, எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும். ஜப்பான்லதான் உலகத்தின் உயரமான புத்தர் சிலை இருக்கு, இது அங்கிருந்து கோகுல் எனக்கு வாங்கிட்டு வந்த புத்தா. இதுல ஃபாரின் காய்ன்ஸெல்லாம் வெச்சிருக்கேன். இங்க்லீஷ் லிட்ரேச்சர் படிக்கறப்ப ஷேக்ஸ்பியர் பொறந்த ஊர் Stratford-upon-Avonக்கு போகணும்னு ஆசை. லண்டன்ல இருந்து அஞ்சு மணிநேர டிராவல…
-
- 0 replies
- 703 views
-
-
திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…
-
- 0 replies
- 472 views
-
-
ரகுவரன் : நிகழ மறுக்கப்பட்ட அற்புதம் - யமுனா ராஜேந்திரன் ய் நடிகர்களின் பாணியை நடிப்புக் கோட்பாடுகளை முன்வைத்து அனுமானிப்பது ஒரு வகை. பிறிதொரு முறை வேறுபட்ட நடிகர்களின் நடைமுறை நடிப்பை முன்வைத்துப் பேசுவது. இரண்டாவது அணுகுமுறையை முன்வைத்து ரகுவரன் எனும் நடிகரை அணுக விரும்புகிறேன். அமெரிக்க சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கொடுமுடிகளைத் தொட்ட ஒரு நடிகன் மார்லோ பிராண்டோ. தேசிய விடுதலை யுகமான அறுபதுகளின் உச்சநிலை படைப்புகளின் பின் ஓரநிலையில் இருந்த இலத்தீனமெரிக்க சினிமாவை மீளவும் உலகின் உச்சநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய நடிகன் கேயல் கார்சியா பெர்னல். வேறு வேறு காரணங்களை முன்வைத்து இந்த இருவருடனும் ரகுவரனை ஒப்பிட்டுப்பேச விழைகிறேன். மார்…
-
- 0 replies
- 803 views
-
-
10 மணித்தியாலம் தண்ணீாில் மிதந்தபடியே நடித்த ஹரிப்பிரியா கன்னட படவுலகில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜய ராகவேந்திரா தமிழுக்கு அறிமுகமாகும் படம் ‘அதர்வனம்’. இப்படத்தை ‘சிலந்தி’ படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கி வருகிறார். விஜயராகவேந்திரா, கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் மைத்துனன் ஆவார். விஜயராகவேந்திரா அறிமுகமாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடிக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட வேடத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஹரிப்பிரியா வெளுத்து வாங்கியுள்ளாராம். குறிப்பாக…
-
- 0 replies
- 318 views
-
-
' புலி இசை வெளியீட்டு விழா மன உளைச்சலை தந்தது' - டி.ஆர். வருத்தம்! 'புலி ' பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு, தான் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளானதாக 'போக்கிரிராஜா' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டி. ராஜேந்தர், "கதாநாயகியை தொடாமலேயே 35 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இதற்கு யாராவது விருது தருவார்கள் என்றால் இல்லை. எனக்கு அப்படி விருதும் தேவையில்லை. நான் விருதுக்காக அலைபவனும் அல்ல" எனக் கூறினார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் பி.டி. செல்வகுமார் தயாரிப்பில் 'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், " 'புலி' பட இசை விழா வெளியீட்டு விழாவுக்கு பிறக…
-
- 0 replies
- 578 views
-
-
திரை விமர்சனம்: பெங்களூர் நாட்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எ…
-
- 0 replies
- 351 views
-
-
-
- 22 replies
- 5.7k views
-
-
திரை விமர்சனம்: விசாரணை ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் சில் லறை வேலைகள் செய்து பிழைக் கிறார்கள் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும். வாடகை வீடு எடுத்துத் தங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத அவர்கள், ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ளச் சித்திரவதைகள் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத் தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கே.கே-வை (கிஷோர்) கைது செய்ய வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்…
-
- 0 replies
- 433 views
-
-
இறுதிச் சுற்று - திரை விமர்சனம் பெண்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சியாளராக ஹரியாணாவில் வேலை பார்ப்பவர் பிரபு (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்ட மைப்பின் தலைவருடனான முன்விரோ தத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய் யப்படுகிறார். வடசென்னை குப்பத் தில் உள்ள குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு பயிற்சி பெறும் பெண்களிடம் காணப் படாத இயல்பான திறமையையும் உத்வேகத்தையும் மீன் விற்கும் தடாலடிப் பெண்ணான ரித்திகா சிங்கிடம் (மதி) கண்டு வியக்கிறார். தன் அக்கா குத்துச்சண்டையில் வெற்றி பெற்று போலீஸில் சேர வேண்டும் என்பதுதான் மதியின் கனவு. ஆனால், மதியிடம் ஒரு சாம்பியனுக்கான கூறுகள் இருப்பதைக் கண்டு அவளுக்குப் பயிற்சி அளிக்…
-
- 2 replies
- 515 views
-
-
இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்! நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்த…
-
- 3 replies
- 653 views
-
-
கல்யாணத்துக்கு அப்புறம்.. நஸ்ரியாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. நஸ்ரியா குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பார்த்து பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். நஸ்ரியா குண்டானால் மற்றவர்களுக்கு என்ன? அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். பார்க்க எப்படி இருக்கிறோம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் நானும், நஸ்ரியாவும் என்று பஹத் தெரிவித்துள்ளார். Read more at: http://tamil.filmibeat.com/heroines/nazriya-s-weight-gain-is-no-one-concern-fahad-038700.html#slide43141
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்மனுக்கு லீவு... பேய்க்கு ஓவர் டைம்! - ‘அரண்மனை-2’ விமர்சனம் ஆக்ஷனோ... ரொமான்ஸோ... பேய் படமோ.. எது எடுத்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்கலாம். முதல் பாகம் ஹிட் என்பதால் கூடுதல் தைரியமும், குறைவான வேலையும் தேவைப்பட்டிருக்கிறது. ”ஆண்ட்ரியா நகரு நகரு... த்ரிஷா உட்காரும்மா.. ஹன்சிகா, நீ அப்படியே இரும்மா. வினய் ஸாரி... சித்தார்த் ஜி ஆவோ ஆவோ. சந்தானம் இல்லையா? அப்ப சூரி ஓகே!” - இவ்வளவுதான் மாற்றங்கள். அம்மன் சிலையை மறுபிரதிஷ்டை செய்ய கருவறையை விட்டு வெளியே எடுக்கிறார்கள். அந்த விடுமுறை நாளில் அம்மனுக்கு சக்தி இ…
-
- 0 replies
- 392 views
-
-
கனேடியத்தமிழ் சினிமாவில் பெண்கள் - கறுப்பி தென்னிந்தியா சினிமாவிற்கு கிடைத்திருக்கும் பரவலாக்கம், ஈழ, புலம்பெயர் சினிமாவிற்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் சினிமா எப்போது அந்தந்த நாட்டு சினிமாத்துறைக்குள் தன்னை நுழைத்துக் கொள்கின்றதோ அப்போதுதான் அதற்கான நிரந்தர தளமும் கிடைக்கும். தென்னிந்திய தமிழ் சினிமாவின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதனால் அதில் ஆய்வுகளை நிகழ்த்துவது சுலபம், ஈழத்தமிழ் சினிமாவில் என்று பார்த்தால்கூட மிகவும் குறைந்த அளவிலேயே படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. எனது தலைப்பு புலம்பெயர் தமிழ் சினிமாவில் பெண்கள். புலம்பெயர் எனும் போது அதற்குள் அடக்கும் நாடுகள் பல, அங்கிருந்து எத்தனை முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்திருக்க…
-
- 0 replies
- 543 views
-
-
நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்! பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குழந்த…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஆங்ரி ஏஞ்சல்... ஆவ்ஸம் மேடி..! - இறுதிச் சுற்று 'நாக்-அவுட்' விமர்சனம் தமிழில் வெளிவந்த 'ஸ்போர்ட்ஸ் சினிமா'க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று! குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனாலும் ஒரு வெற்றிகரமான, முரட்டுக் கோச்சாக இருக்கிறார் மாதவன். நேர்மையாக இருக்க நினைக்கும் எல்லோருக்குள்ளும் பொங்கி வழிகிற ரௌத்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிற காரணத்தினால் மீண்டும் அஸோசியேஷன் தலைமையினால் டெல்லியிலிருந்து, ஒரு சவாலோடு சென்னைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார். அந்தச் சவால் "அங்கிருந்து ஒரு சாம்பியனைக் கொண்டு வா பார்கலாம்' என்பதே. சென்னையில் ஜுனியர் கோச்சாரா…
-
- 0 replies
- 360 views
-