Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின…

    • 6 replies
    • 1.2k views
  2. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் 25 ஆயிரம் சிங்கள குடும்பங்களும், 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றவேளையில் அவர் இதனைக் கூறினார். இத…

  3. தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளையும் கௌரவத்தையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவற்றையெல்லாம் புறந்தள்ளி, பொதுவான சிந்தனைக்குள் வேற்றுமையில் இவர்கள் ஒற்றுமை கண்டிருப்பது, தமிழின வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த ஒற்றுமையானது தொடர வேண்டும் என்பதில…

  4. தாக்கினால் திருப்பி தாக்குவோம். தேரருக்கு எச்சரிக்கை

  5. நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர் - சபையில் சிறிதரன் எம்.பி! தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார். இந்தச் சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செய…

  6. மட்டக்களப்பில் வீடற்றோர் பிரச்சினை: துறைசார் அமைச்சுடன் சாணக்கியன் கலந்துரையாடல்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/07/R.Sanakkiyan-2.jpg தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்தவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றதுடன், இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை…

  7. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாகப் போகின்றார். அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ச்சியாக போராடிய ஒருவர் இறுதியாக பொம்மையாக அமர வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் …

  8. அம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:19 http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0c624b0305.jpg பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு சலாம் பள்ளி பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு, நேற்று (22) தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. …

  9. ‘இருபதுக்கு 20 எடுப்போம்’ Nirosh / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:40 அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருபது பேரின் ஆதரவுடன், நிறைவேற்றிக்காட்டுவோம் என, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சவால்விடுத்தார். “20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்” என்றார். “இருபதுக்காக, 20 பேரை ஆளும் தரப்பினர் பக்கத்துக்கு இழுத்தெடுப்பதற்…

  10. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/Supreme-Court.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவத…

  11. ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை ஆஜராகவுள்ளோர் விபரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்களை இன்று (23) பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரத்திய…

  12. 20வது சட்டமூலத்தினால் இலங்கை சர்வதேச ரீதியாக பல அழுத்தங்களை எதிர்கொள்ள நேரும் – லக்ஷமன் by : Dhackshala 20வது திருத்தச் சட்டமூலத்தினால் சர்வதேச ரீதியாக இலங்கை பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீன ஆணைக்குழுக்களை ஐக்கியத் தேசியக் கட்சி ஸ்தாபிக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கமே சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தது. …

  13. தென்னாபிரிக்க தூதரகத்தில் பணியாற்றிய, கிளிநொச்சியைச் சேர்ந்தவர் தற்கொலை தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கையர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரேத பரிசோதனையை அடுத்து குறித்த நபரின் சடலத்தை இலங்கைக்குக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். http://athavannews.com/தென்னாபிரிக்க-தூதரகத்தி/

  14. யாழ்ப்பாணம் – வடமராட்சி, நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலயம் மீதான அரச படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும். இன்றைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலயக் கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்க்கு பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்க்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை நாகர்கோவில் கிராமத்திற்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆட்கள் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மா…

  15. மனித உரிமை ஆணையாளருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம் சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறிய ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி மிசெல் பச்செலெட் ஜெரியாவிற்கு நன்றி கூறி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ந் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் …

  16. மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்புப் போராட்டம்? மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன பூமி என்ற பெயரில் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோரியும், மட்டக்களப்பு – பன்குடாவெளியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பிரதேச மக்களினால் இன்று ஏற்பாடு செய்யபட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் விவசாயிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இன நல்லுறவிற்கு பாதகம் ஏற்படும் வகையில், செயற்படும் தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும், அரச அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொலிஸார் கடமையினை சரியான மு…

  17. ஐ.நா. உள்விவகாரங்களில் தலையிடாது என உறுதியாக நம்புகிறோம்- சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான முக்கியத்துவத்தை ஐக்கியநாடுகள் சபை கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, “கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில மாதங்களுக்குள் பொருளாதாரங்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் சமூகங்களைப் பாதித்துள்ளது. கொரோனா சவாலை இலங்கையால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையி…

  18. முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் டக்ளஸ் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(22.09.2020) கேள்வி பதில் அமர்வில் கலந்து கொண்டு பதிலளிக்கையிலேயே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வடக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'நீண்டகாலமாக தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கு கடற்பரப்பி…

  19. அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை சட்டத்தரணி இந்திக கல்லேஜ் தாக்கல் செய்துள்ளார். அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த அபேவர்தன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார். https://www.virakesari.lk/article/90477

  20. 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எ…

  21. பிரபாகரனுக்கு ஐ.தே.க. நாட்டை எழுதிக் கொடுத்ததை போன்ற ஒரு நிகழ்வு கோட்டா – மஹிந்த ஆட்சியில் நடைபெறாது:மஹிந்தானந்த by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindananda.jpg ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று கோட்டா – மஹிந்த ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விடயம் கு…

  22. மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கான காரணம் வெளியானது கண்டி – புவெலிகடவில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் அஸ்திவாரம் பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இடிந்த வீழ்ந்த ஐந்து மாடிக் கட்டடம் தாழ்வான, திறந்தவெளி வடிகால் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்டத்தின் தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவியியலாளர் சமந்த போகாஹாபிட்டிய குறிப்பிட்டார். நீர் வடிகால் மற்றும் ஏனைய சிக்கல்கள் காரணமாக, கட்டடம் நிலையானதாக இருக்காது என்றும் தரையுடனான அதன் தொடர்பும் வலுவாக இருக்காது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டமைப்பின் தரமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததாக …

  23. சாக்குப் போக்குக் கதைகளைக் கூறி அரசாங்கம் நழுவிவிட முடியாது; மாவை சேனாதிராஜா “நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா. “தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவு…

  24. இங்கு யாரும் துள்ளக்கூடாது: மன்னார் நகரசபையில் ஏற்பட்ட முறுகல் நிலை | ஈழ அரசியல் போகும் பாதை🤔 காதால் இரத்தம் வந்த படியால் முழுவதையும் பார்க்கவில்லை😪 14.30-35 இல் ஒருவர் கமராவை பார்த்து சிரித்தார் பாருங்கள் அதில் ஆயிரம் அர்த்தங்கள்😂

  25. Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 02:14 - 0 - 206 AddThis Sharing Buttons Share to FacebookFacebookShare to TwitterTwitterShare to WhatsAppWhatsApp ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.