ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி. by : Litharsan கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும்…
-
- 10 replies
- 951 views
-
-
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு by : Dhackshala 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றிலிருந்து 14 நாட்களுக்கு இதுதொடர்பான வியாக்கியானத்தை தெரிவிக்க காலம் வழங்கப்பட்டுள்ளது. நாம் இந்தக் காலத்தில் இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். …
-
- 0 replies
- 438 views
-
-
அரசுக்கு எதிராக தமிழர்கள் மீண்டும் போராடும் நிலைமை உருவாகலாம்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை by : Yuganthi தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரசு, அஞ்சலி செலுத்தும் விடயத்தில் ஜனநாயகத்தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அப்பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன், ஊடக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை)…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 2074 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரண்டாயிரத்துக்கு அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஆரம்பம் முதல் 2074 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=134026
-
- 0 replies
- 291 views
-
-
பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணையவழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மா…
-
- 50 replies
- 4.5k views
-
-
ஊடகம் ஒன்றில் தனது நடிப்பை வெளிப்படுத்திய பிள்ளையான்! September 21, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார். 2009 போர் களத்தில் கருணா, பிள்ளையான் , மற்றும் சில ஒட்டுக்குழுக்கள் நேரடியான பங்கேடுத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்று பிள்ளையான், கருணா போன்றோர் தமக்குக்கு சம்மந்தம் இல்லாததைப் போன்று அரசியலுக்கான தமிழ்மக்கள் முன் தமது நடிப்பை வெளிக்காட்டுகின்றனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்…
-
- 2 replies
- 561 views
-
-
இராணுவம் அச்சுறுத்துவதாக வவுனியா மக்கள் குற்றச்சாட்டு.! வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம் பிலவு என்ற 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்கள் நூறு வருடங்கள் பழமையானது. இன்று எமது பரம்பரை, விவசாயகாணிகளிற்கு செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கிறது. காணியின் உறுதியை தந்தபின்னர் காணிக்குள் இறங…
-
- 0 replies
- 393 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரின் நிலைப்பாடும் இதுவே! விக்னேஸ்வரனுக்கு பதில் தனித்தாயகம் வேண்டுமென்ற கருத்திற்காகவே 30 வருடமாக யுத்தம் செய்து அந்த நிலைப்பாட்டை இல்லாது செய்தோம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனின் கருத்துக்களால் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டு, அது மீண்டுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும் என்பதாலேயே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் கூறிய தமிழ் மொழி தொடர்பான வரலாறு குறித்து எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. …
-
- 1 reply
- 761 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்வதால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை - முபாறக் அப்துல் மஜீத் AdminSeptember 20, 2020 (பாறுக் ஷிஹான்)20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப்பில்லை என்றே எண்ணத் தோன்றுவதாக உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் கட்சியின் தவிசாளர் றுஸ்தி நஸார் தலைமையில் 20 ஆவது அரசியல் திருத்த சட்டமும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் என்ற தொனிப்பொருளில் நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரி…
-
- 0 replies
- 267 views
-
-
தொழில் நிமித்தமாக.. சவுதி அரேபியாவுக்குச் சென்ற, 28 இலங்கையர்கள் மரணம் தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். அதேநேரம், உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும் சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இறுதியாக தொற்று உறுதியான மூவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெர…
-
- 0 replies
- 311 views
-
-
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று முதல் புதிய திட்டம் அமுல்! கொழும்பின் 4 மார்க்கங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோரை அடையாளம் காணும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களின் நலன் கருதி கொழும்பு நகரிலும் அதனை அண்மித்த நகர்ப்புறங்களிலும் அதிகமான பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உரிய வழிகாட்டல்களை வழங்கி வரு…
-
- 0 replies
- 466 views
-
-
மக்கள் மீது கவனத்தை திருப்பிய சுமந்திரன் அரசியல்வாதிகளுக்கு தோல்வியேற்படும் போது தான் மக்கள் மீதான கரிசனைகள்; அவர்களுக்கு வருவதுண்டு. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் விதிவிலக்கில்லை. அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வியை தொடர்ந்து மக்களின் தேவைகள் தொடர்பில் அதன் கவனம் திரும்பியுள்ளது. யாழ் மாநகரசபையில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் உள்ள 86 குடும்பங்களுக்கு 10 கழிவறைகளை கட்டிக்கொடுக்கும் பணியை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்றார். தற்போது அங்கு இரண்டு கழிப்பறைகளே உள்ளன. இதற்கான செலவான ஒரு மில்லியன் ரூபாய்களை சமூகவலைத்தளங்களின் ஊடாக அவர் சேகரித்து வருகின்றார். இதனிடையே> புலம்பெயர் சமூகத்த…
-
- 1 reply
- 437 views
-
-
தமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்! மிரண்டுபோயுள்ள ராஜபக்ஷ அரசு தமிழ் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ஷ அரசு மிரண்டுபோயுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்க அரசு விதித்துள்ள தடை குறித்து செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழ் அரசியலில் பி…
-
- 0 replies
- 761 views
-
-
இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத…
-
- 6 replies
- 866 views
-
-
புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில…
-
- 21 replies
- 1.5k views
-
-
பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020 ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
செம்மணி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு- பலர் கைது செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது, “டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவ…
-
- 17 replies
- 1.2k views
-
-
நினைவுகூரும் அடிப்படை உரிமையை மறுத்தால் போராட்டம்; தமிழ்க் கட்சிகளின் கூட்ட முடிவு குறித்து சுரேஷ் BharatiSeptember 19, 2020 “30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும். எனவே அரசு இந்தத் தடைகளை அகற்றவேண்டும். இதற்கான, கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன். திலீபனின் …
-
- 2 replies
- 508 views
-
-
ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம…
-
- 15 replies
- 1.5k views
-
-
இலங்கை சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி.! இலங்கையின் விமான நிலையங்களை திறப்பதற்கான எண்ணம் தற்போதை சூழ்நிலையில் கிடையாது என்று சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவி்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இலங்கையிலுள்ள சுமார் 2.20 கோடி பேரின் சுகாதார பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிக்கையை வழங்கும் வரை விமான நிலையங்கள் எதுவும் திறக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்காணிப்பு மேலும் இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடல் மார்க்கமாக வருபவர்கள் தொடர்பாக கடற்படையினர் மிகவும் கவ…
-
- 2 replies
- 685 views
-
-
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை – அரசாங்கம் Rajeevan ArasaratnamSeptember 19, 2020 இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை வருடங்களாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ள இலங்கைக்கு வெளியே இருந்துமுன்வைக்கப்பட்ட நல்லிணக்க கட்டமைப்பினை தொடர்வதை கைவிட்டுவிட்டு இலங்கையின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவத…
-
- 3 replies
- 521 views
-
-
ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்க தேரர் தமது நம்பிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6வது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபையின் மூலம் இதுவரை முன்வைத்த ஆலோசனைகளை செயற்படுத்துதல் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புராதன இடங்களை பாதுகாத்தல், குறைபாடுகள…
-
- 2 replies
- 489 views
-
-
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’- க.வி. விக்னேஸ்வரன் அறிக்கை கௌரவ மாவை சேனாதிராஜா மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்கள், ஜனநாயகம் மற்றும் மனிதநேய பண்புகளுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காமல் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழரசு கட்சியின் தலைவர் கௌரவ மாவை சேனாதிராசா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன். இத்தகைய செயற்பாடுகள் இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானவை. அத்தோடு, இத்தகைய செயற்பாடுகள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி, அரசியல் சாராத வகையில் முன்னெடுக்கப்…
-
- 1 reply
- 463 views
-
-
மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும்; உறுதியாகக் கூறுகின்றார் அங்கஜன் BharatiSeptember 18, 2020 மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள அரசாங்கத்தினால் நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 14 திகதி யாழ்.வருகை தந்த வீடமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட…
-
- 1 reply
- 407 views
-