Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை பிரிக்கும் விடயங்கள் உள்ளதால் அதனை ஏற்க முடியாது – கம்மன்பில by : Benitlas நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் 3 வாரத்தின் பின்னர் சமர…

  2. போராளிகளை பதிவு செய்து கப்பல் மூலம் வெளியேற்ற பிரபாகரன் மறுத்தார் – சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமரான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம…

    • 10 replies
    • 1.3k views
  3. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூரில் விசேட பூஜை! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனினால் இன்று (புதன்கிழமை) காலை ருத்திராபிஷேகமும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், ‘ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு முக்கியமான பூஜை வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம். இது முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கிறது.…

  4. தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு த.தே.ம.முன்னணி தனியான ஏற்பாடு.! தியாக தீபம் திலீபனின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான தனியான ஏற்பாடுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் 15-ஆம் திகதி காலை 9 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியருகே முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வை ஒட்டி நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவுத் தூபி வளாகம் நேற்று முன்னணியினரால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் என அரசியல் ரீதியாக பிரிந்து நின்றே நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தி…

  5. புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு.! புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று (செப்-02) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் நிபுணர் குழுவில் தமிழ் - முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீ…

  6. பண்டாரவன்னியன் சிலை படிக்கட்டு விவகாரம்: வீதி திருத்த நிதியே எடுக்கப்பட்டது- வவுனியா நகரசபை வவுனியா நகரசபைக்குட்பட்ட 6ஆம் வட்டாரத்தில் வீதி திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதாக வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியனின் சிலைக்கு வருடத்தில் ஒருதடவை நினைவுதினத்தில் மாலை போடுவதற்கு வசதியாக மூன்று இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் (375,000) பெறுமதியில் படிக்கட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த படிக்கட்டு அமைக்கப்பட்டமை மற்றும் நிதி விடயங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. …

  7. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பா?- ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரி…

  8. அதிபரின் இடமாற்றத்துக்கு எதிராக மன்னாரில் போராட்டம்! மன்னார் – பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த பாடசாலையின் அதிபரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் இன்று (02) காலை பாடசாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கே.பிகிராடோவை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரி பள்ளிமுனை கிராமம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட…

  9. (செ.தேன்மொழி) இனவாதத்தை அடிப்படையாக கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாணசபை தேர்தல் முறை உருவாக்கப்பட்டது. தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா? இல்லை. எனவே மாகாணசபை முறையை பின்பற்றுவதுடன் , அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://www.vi…

    • 16 replies
    • 1.2k views
  10. மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது, மின்னர் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர். http://www.battinews.com/2020/09/27.html

    • 7 replies
    • 815 views
  11. இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித் இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களு…

    • 22 replies
    • 1.6k views
  12. சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது 20ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதனிடையே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நிபுணர் குழுவ…

    • 4 replies
    • 640 views
  13. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது; அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி September 3, 2020 ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் குறித்த உறுதி மொழி வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வாக்குறு…

  14. 17 வருடங்களின் பின் சுயேட்சை தரப்பிடம் நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு! September 2, 2020 (பாறுக் ஷிஹான்)நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் 17 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சி கைமாறியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில் அப்பதவி வெற்றிடமானதையடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று புதன்கிழமை(02) பதில் தவிசாளர் ஏ.கே அப்துல் சமட் தலைமையில் பிரதேச சபை சபா ம…

  15. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்… August 31, 2020 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், அண்மையில் இந்த விபரத்தை ஐநா வெளியிட்டிருந்தது. அத்துடன் மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த உண்மை மறுக்க முடியாதது என அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் .. ஆதவா ( செயற்…

  16. மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI படக்குறிப்பு, கோப்புப்படம் கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 29ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நிலஅதிர்வொன்று பதிவா…

  17. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்றோன் நகர், எமில்நகர், எழுத்தூர் உற்பட பல்வேறு கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளன. மழை நீர் வடிந்து செல்லக் கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள், ஒழுங்கான முறையில் பராமரிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது. முன்னாள் பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் ஆகியோரினால், கால்வாய்களுக்கு அருகில் வழங்கப்பட்ட காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது. எனவே மன்னார் நகர சபை…

  18. -என்.ராஜ் யாழில், 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். தற்போது வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்குத் தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது யாழில், கடந்த இரண்டு நாள்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லிமீற்றர் மழை வீ்ச்சியும் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2 30 மணி வரையில் 22.7 மழைவீழ்ச்சியும் அச்சுவேலிப் பகுதியில் 92.9 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது…

  19. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைபிற்கும், வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 19ம் திருத்தத்தில் பிரதான விடயங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவி காலம், பாராளுமன்றத்தின் பதவி காலம், மற்றும் தகவலறியும் உரிமை சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கான மூலவரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட மூலவரைபிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமை…

  20. இன, மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்! இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதற்காக இளைஞர், யுவதிகள் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியம் என பேராயர் கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார். ´அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்தான் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட அவிசுவாசத்தால் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது´. நாட்…

  21. சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதில் தங்க நகைகளை பறிகொடுத்ததாகத் தெரிவித்து 16 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதில் 30 பவுண் நகைகள் களவு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/arti…

  22. சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாமைக்கான காரணம்! நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த 2010 - 2015 காலப்பகுதியில், பிரேமலால் ஜயசேகர - பிரத…

  23. 13ஆவது திருத்தம் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- பிரசன்ன ரணவீர இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்த எந்தவொரு இறுதிமுடிவையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி, உடுநுவர பிரதேசத்திலுள்ள பித்தளை உற்பத்தியாளர்களைச் சந்திப்பதற்காக துறைசார் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அப்பகுதிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்தார். இந்த வி…

  24. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை – அங்கஜன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் சார்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், 13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய, அதனை முழுமையாக மாற்றுவதற்கு எந்த தரப்பினரும் பேசவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல…

    • 3 replies
    • 546 views
  25. தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் ஆயுதக் குழுக்கள் – மட்டூரான் தமிழர்களின் தாயகமான வடகிழக்கு மாகாணம் என்பது இன்றும் கட்டுக்கோப்புடன் தமது கலை, கலாசாரத்தினைப் பேணி தமது மொழியுரிமைக்கு பங்கம் ஏற்படாத வகையில் செயற்படும் மாகாணங்களாகும். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கங்களே இந்த நாட்டில் தமிழரை ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினை பயன்படுத்தி தமிழ் மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.