Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டு நிபந்தனைகளுடன் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்றத் தயார் – சஜித் தரப்பு இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படுவதே ஒரு நிபந்தனை என கூறினார். மேலும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்துக்கொள்ள…

    • 0 replies
    • 366 views
  2. இடைக்கால கணக்கு அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் பாராளுமன்றம் நாளை (27) காலை 9.30 க்கு கூடவுள்ளது. இதன்போது செப்டேம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் (28) இடம்பெறவுள்ளன. மேற்குறித்த இரண்டு தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 6.30 வரை இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும். நேற்…

    • 0 replies
    • 472 views
  3. ’நாடாளுமன்றக் குழு கூடாது’ -க. அகரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுக்குப்பின்னர் கூடவிருந்த நாடாளுமன்றக் குழுக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றார். கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், கொறடா பதவிகள் தொடர்பில், நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே மேற்படி விவகாரம் தொடர்பில் அவரிடம் கேட்டபோ…

    • 0 replies
    • 426 views
  4. விமல் வீரவன்ச கூறுவது தவறு: தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை- சீ.வீ.கே. விமல் வீரவன்ச கூறுவதைப் போல தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தமிழ் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. தமிழ்…

    • 0 replies
    • 260 views
  5. கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு – யாழில் சம்பவம் யாழ். சுன்னாகம் – அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நவாலி கலையரசி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/கட்டடம்-இடிந்து-விழுந்தத/

    • 1 reply
    • 538 views
  6. பிரச்சினைகளை தீர்க்க கோரி யாழ்பல்கலை பாதுகாப்பு ஊழியர்கள் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற களவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று காலப்பகுதியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாங்கள் பணியாற்றிய போதிலும் தங்கள் மீது இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொழில் சங்கம் முன்வைத்துள்ளதாக பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ள…

  7. யாழ்.நகரத்தில் பொலித்தீனுக்கு செப். 15 முதல் தடை ! யாழ். மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் நிறைவேற்றுவதற்கு சபை நேற்று அனுமதி வழங்கியது. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும் அப்போது வர்த்தகர்கள் மற்றும் உணவகங்களின் கோரிக்கையின் பெயரில் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தினை மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் எதிர்வரும் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் முடிவு நேற்றைய…

  8. சொந்த காணியை துப்புரவு செய்த விவசாயி கைது..! எல்லை கிராமங்களில் இராணுவம், வனவள திணைக்களம் தொடர் அடாவடி.. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, சூரியன் ஆற்றுக்கு அப்பால் உள்ள வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதுடன், சீரமைப்புப் பணிக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும், வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதேவேளை சூரியன் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் இனி, தமிழ் மக்கள் விவசாயம் செய்யக்கூடாதென வனவளத் திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் மற்றும், இராணுவத்தினரும் மிரட்டியதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அப்பகுதி விவசாயிக் மேலும் கருத்துத் தெர…

  9. மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழிவாய்ப்பு – அமைச்சரவை அனுமதி! மேலும் பட்டதாரிகள் பத்தாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை இன்று (19) அனுமதி வழங்கியுள்ளது. கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது, அதனை செவிமடுத்த ஜனாதிபதி, அனைவருக…

  10. எங்களை கொன்றொழியுங்கள் உங்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என செயற்பட முடியாது புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பார்கள். புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு அல்லது நிவாரணம் வழங்கினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது போலாகும் என்று வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், “எவராவது காணாமல் போனவர்கள் என்று கூறுவார்களாக இருந்தால், அவர்களைத் தேட முடியாதென்றே அர்த்தம். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கான அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களில் அரைவாசிப் பேர் வெளிந…

    • 2 replies
    • 445 views
  11. இலங்கையின் உள்ளீட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு கிடையாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று எல்லாவல மேதானந்த தேரர் கொதித்தெழுந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” இலங்கைப் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவிக்க இந்திய தூதுவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை, இந்தியாவின் உறவைப் பலப்படுத்துவது மட்டுமே அவரது பணி. அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுவரிடம் 13 தொடர்பில் கதைக்கச் சொல்லும் போது அவர் அதை நிராகரித்திருக்கலாம். …

    • 3 replies
    • 567 views
  12. முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சந்திரசிறிக்கு பின்னர் வடக்கில் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரச நியமனங்களில் பலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கபட்டுள்ளதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் அவர்களது சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அவர்கள் பட்டதாரிகளாக உள்வாங்கப்ப…

    • 2 replies
    • 414 views
  13. இலங்கையில் 2100 ஆம் ஆண்டளவில் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும்.! இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல். இன்னும் 80 ஆண்டுகளில்,குறிப்பாக 2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு விகிதங்கள் குறித்து "தி லான்செட்" பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளிவந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் கருத்தரிப்பு வீதங்கள், இறப்பு விகிதம், இடம் பெயர்வு மற்றும் சாத்தியமான மக்கள் தொகை மாற்றம் ஆகியவற்றை இந்த அறிக்கை கணக்கில் எடுத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கையின் மக்கள் தொகை 2100 …

  14. ஐதேகவின் செயற்குழு கூட்டம் தோல்வி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தேசிய பட்டியல் ஆசனம் மற்றும் கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளது. தற்போதைய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (25) கூடியது. தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பான முடிவு மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது. இருப்பினும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக்கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதேவேளை புதிய தலைவர் தெரிவு செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக…

  15. வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது. இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது குறித்த பயனாளி உலக விவசாய ஸ்தாபனத்தின் உதவியால் 2017 இல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட்ட 40 டொம் ஜேசி மாங்கன்றுகளை சிறப்பாக பராமரித்துள்ளார். மேலும் 20 புதிய மரங்களை தொடர்ச்சியாக கொள்வனவு செய்து நாட்டியுள…

  16. “நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய சி.வி.விக்னேஸ்வரன் எம்பி ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது” இவ்வாறு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், “6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது. அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்படும். அதனை பின்னர் வேறு …

  17. யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் முதலாம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்…

  18. (செ.தேன்மொழி) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை புதைக்கவோ , எரிக்கவோ முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள போதிலும் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளாமலே செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹூமான் , அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை அவர்களின் கும்பத்தாரின் விருப்பத்தின் பெயரில் எரிக்கவும…

  19. (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் ஒருபோதும் இடைநிறுத்தப்பட மாட்டாது. எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் எமது நாட்டு பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். இவ்வாறன சூழலில் இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தம்புள்ளையில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் , ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் சமூகப்பரவல் ஏற்படவில்லை. எனினும் உலகலாவிய ரீதியிலான நிலைமையை அவதானிக்கும் போது எமது நாட்டி…

  20. தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி உரை ஆற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து ஆராய்வதாக குறித்த …

  21. அதிக விவசாய விளைச்சளைப் பெற ஜனாதிபதியின் யோசனை பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விவசாய விளைச்சளை அதிகரிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக பல யோசனைகளை முன்வைத்தார். கொவிட் நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து தேசிய விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி உரப் பாவனை, விவசாய புத்தாக்க ஆராய்ச்சிகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகள் குறித்தும் கவனம் செலுத்தி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் சவாலான இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.…

  22. யாழ் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வசதி இன்மையால் இடர்நிலை! யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை என்று யாழ் மாவட்ட கமக்கார அமைப்பு அதிகார சபையின் செயலாளர் எஸ்.செல்வரத்தினம் தெரிவித்தார். யாழ் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “யாழ் மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோல உற்பத்திக்கு செலவு செய்யும் பணத்தை அவர்கள் விளைச்சலின் போது பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தி…

    • 4 replies
    • 711 views
  23. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோள்! அரசியல் பேதங்களை கைவிட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார். 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இதில் பிரதம உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´நாட்டு மக்கள் அமைச்சர்களை கட்டிக்காக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் அவசியம் என்றே அவர்கள் விரும்புகின்றனர்…

    • 0 replies
    • 328 views
  24. இலங்கையில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டமைக்கான காரணம்? இலங்கையில் தற்போதைய வாகனங்களின் இருப்பு இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு போதுமானது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத தெரண தொலைக்காட்சியில் நேற்று (24) ஒளிபரப்பான ´360´ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். வாகன இறக்குமதி பெரிய அந்நிய செலாவணி ஈட்டிதர கூடியது எனினும், ஆனால் தற்போது அரசாங்கம் தேவையற்ற பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், ´தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பபட்டுள்ளது. குறிப்பாக 2019 வரை வருடத்திற்கு 1,000 மில்லியன் முதல் 1,200 மில்லியன் வரை …

    • 0 replies
    • 303 views
  25. டக்ளஸின் கோரிக்கை வீண் – கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் நான்கு தேரர்கள் நியமனம் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் நால்வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் பௌத்த பீடாதிகள் உட்பட மேலும் நான்கு தேரர் இந்தச் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசன…

    • 0 replies
    • 337 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.