ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143652 topics in this forum
-
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு? பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் 800 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், குறித்த திரைப்படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என அவரிடம் பகிரங்க வேண்டுகோளையும் விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் 8 மாவட்ட பிரதிநிதிகளும் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை சந்தித்து மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளர். இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மேலும் கருத்துத் தெரிவிக்க…
-
- 5 replies
- 555 views
-
-
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்தபெண் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சாரதி நடத்துநர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அதில் கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் பேருந்தின் நடத்துனர் குறித்த பெண்ணிற்கு கொரோணா தொற்று உறுதியானவுடன் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோணா தொற்று உறுதியாகியுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் உறுதிப்படுத்தினர் குறித்த நபருக்கு ஏற்கனவே PCR பரிசோதனை மேற்கொண்ட போது…
-
- 0 replies
- 353 views
-
-
இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் காணொளி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தியிரு…
-
- 5 replies
- 920 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு விழா 46 Views தமிழ் மக்கள் கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள உப அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடா வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.ilak…
-
- 0 replies
- 409 views
-
-
வாழைச்சேனை பிரதேசபையில் நடைபெறும் பாரிய அளவிலான அதிகாரதுஸ்பிரயோகம் மற்றும் ஊழல் அம்பலம். October 17, 2020 TMVP கட்சியின் ஆளுகைக்கு கீழ் இயங்கும் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் அவர்களாலும் பிள்ளையான் அவர்களின் தம்பி அகிலா அவர்களாலும் கோறளைப்பற்று பிரதேச சபையின் நிதி பாரியளவில் மோசடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் திகிலிவெட்டை பகுதிக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் பாதை திருத்துவதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் போதுமானதாக இருந்த போதும் சுமார் பத்தொன்பது இலட்சம் செலவிடப்பட்டதாக கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டு தற்போது கணக்காய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இதிலிருந்து அகற்றப்பட்ட 2500kg இரும்பு களஞ்சியத்திற்கு …
-
- 2 replies
- 581 views
-
-
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஆய்வுமையம், திறக்கப்பட உள்ளது… October 18, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் இதன் கட்டட மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும், திறப்பு விழா ஒழுங்கமைப்பில் காணப்பட்ட இழுபறி நிலையினால் மிக நீண்ட காலமாகப் பாவனைக்கு விடப்படாமல் இருந்தது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் (இலங்கை ரூ…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா.? இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளது என அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ளது என நம்பகரமாக அறியமுடிகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் காணொளி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதன்போது 13 ஆவது திருத்தச் சட்டத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
மகிந்தவின் பாதுகாப்பு பிரிவுக்கு இந்தியா சிறப்பு பயிற்சி 72 Views இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவுக்கு கருப்பு பூனைப்படை பயிற்சி அளித்துள்ளது எனத் தெரிவித்த படையின் தலைமை இயக்குனர், இதற்காக இந்திய பிரதமரை இலங்கை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று கூறியுள்ளார். கருப்பு பூனைப்படை எனப்படும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), கடந்த 1984ம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது. மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் அதன் பணிகளில் ஒன்று. இந்நிலையில், கருப்பு பூனை படையின் 36-வது ஆண்டு தினம், இந்திய தலைநகர் டெல்லி அருகே குர்கானில் உள்ள அதன்…
-
- 3 replies
- 924 views
-
-
முரளி பிறப்பால் ஒரு தமிழர்- ஆனால் உணர்வால் ஒரு தமிழரல்ல..’ என்று கூறும் முரளிதரனின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன், முரளிதரன் பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமான IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளார். முரளிதரன் தான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்ததாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று தெரிவிக்கும் அந்த இளைஞன், முத்தையா முரளிதரன் பற்றிய பல கற்பிதங்களுக்கு மாறன கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஏராளமான புதிய, அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். https://www.tamilwin.com/srilanka/01/258700?ref=home-imp-parsely
-
- 0 replies
- 934 views
-
-
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற்தடவையாக கலந்துகொண்ட நிலையில் அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயகக் கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்து வெள…
-
- 0 replies
- 525 views
-
-
சட்ட விரோத மண் அகழ்வு – பலியாகும் உயிர்கள்! 34 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கித்துள் பகுதியில் உள்ள முந்தனையாறு பகுதியில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த ஆற்றுப்பகுதியின் ஓரத்தில் சுரங்கம் அகழ்ந்து மண் எடுத்துக்கொண்டிருக்கும் போது குறித்த மண் மேடு இடிந்துவீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய கரடியனாறு, இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் 20 வயது என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். …
-
- 2 replies
- 905 views
-
-
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை! பிரதமர் முன்மொழிவு தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு - சுமந்திரன் வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர். இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் 16.10.2020 இன்றையதினம் வவுனியா தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட…
-
- 0 replies
- 652 views
-
-
மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே. கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார் DicksithOctober 17, 2020 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று (17) மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவை விசேட தர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் தொடங்கியது! சுமந்திரன் பங்கேற்பு.! முன்னணி புறக்கணிப்பு.! அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் தொடங்கியுள்ளது. தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10.30மணியளவில் ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதற் தடவையாக வந்திருந்ததை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார். இதேவேளை கூட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் …
-
- 0 replies
- 468 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில், அக்காணிகளுக்குரிய விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகச் செல்லும்போது அரச திணைக்களங்களால் தடுக்கப்படுதல் மற்றும், அங்குள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயநிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பின் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் அடங்கிய க…
-
- 0 replies
- 575 views
-
-
எமது உறவுகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் தொடர்பை ஏற்படுத்தி தாருங்கிள் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எமது உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். இன்று கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். மேலும் அவர் அரசிற்கு விடுத்த கோரிக்கையில், ஹெகலிய ரம்புக்வெல அண்மையில் ஒரு கருத்தினை முன்வைத்திருந்தார். அதாவது காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று. அவ்வாறு அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் சிறீலங்கா விமான நிலையத்தினூடாக சென்றிருக்க வே…
-
- 1 reply
- 726 views
-
-
வவுனியாக் குளத்தினுள் மண் கொட்டி மூடும் விவகாரம்- வலுக்கும் எதிர்ப்பு வவுனியாக் குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு ரிப்பர் மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர் தேங்கி நிற்கக்கூடிய இடத்தை மூடியமைக்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் வவுனியாவில் பண முதலைகளின் குள ஆக்கிரமிப்பினால் பல ஏக்கர் குள நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரிந்த விடயமே. பாலை விடவும் குடிநீர் விலையேறியிருக்கக்கூடிய இச் சூழலில் சாதாரண மக்கள் நிலத்தடி நீர் மூலம் பெறும் குடிநீருக்கும் நாசம் விளைவிக்கும் செயற்பாட்டை வவுனியா நகரசபை, நீர்ப்பா…
-
- 0 replies
- 544 views
-
-
அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார் Bharati மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இ…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்பவரை அடக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்- மக்கள் காங்கிரஸ் by : Yuganthini சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக குரல் கொடுக்கின்றவரை அடக்கி ஒடுக்க நினைப்பதை நாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்கள், “முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினை கைது செய்யவேண்டும் என்பதற்காக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் அரசு உட்பட பாதுகாப்பு தரப்புகளிற்கு நாம்…
-
- 0 replies
- 914 views
-
-
ரியாஜின் மனுவை நிராகரிக்குமாறு அருட்தந்தை மனு தாக்கல் தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரன் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ர…
-
- 1 reply
- 581 views
-
-
கப்பலின் கெப்டன் கோடி ரூபா பணத்தை செலுத்தியுள்ளார் அண்மையில் தீப்பரவலுக்கு உள்ளான MT New Daimond கப்பல் கெப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கேட்டுள்ளது. குறித்த கப்பலின் கிரேக்க இன கெப்டனான தீரோஸ் ஹில்லியாஸ் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த இடையீட்டு மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த மனு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையி இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கப்பல் கெப்டன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர் பிழையை ஒப்புக் கொண்டு 12 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் செலுத்தி முடித்துள்ளதாக மன்றுக்க…
-
- 0 replies
- 607 views
-
-
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (16) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன. ஆனால், கன…
-
- 1 reply
- 644 views
-
-
மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு தமிழ் காங்கிரஸ் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இந்தக் கடிதம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரும் எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெறப்பட்டிருந்தது.இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்…
-
- 0 replies
- 319 views
-