Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 3-முறை உலகை சுற்றிவரும் தூரம் பயணித்த சிறிசேன – பணமே செலுத்தவில்லையாம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீட்டர் தூரம் பயணித்தமை அம்பலமாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கொழும்பு பத்திரிகை ஒன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களுக்கு அமையவே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதிமுக்கிய பிரமுகருக்கான ஹெலிஹொப்டர்களே இலங்கை விமானப்படையால் வழங்கப்பட்டன. அதன்படி அவர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ஹெலிஹொப்டர்களை 535 தடவைகளும், பி-412 ஹெல…

  2. அரச வாகனங்களை பறிமுதல் செய்ய, விசாரணைகள் முன்னெடுப்பு! முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி 11 அரச வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு வாகனங்கள் மாத்திரம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை மார்ச் 02 ஆம் திகதிக்குள் அரச வாகனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சக்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினும் அந்த அமைச்சர்கள் அவ்வாறு வாகனங்களை ஒப்படைக்கத் தவறியுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசிப்பிரிய சுட…

  3. அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்! தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தின் பின் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வாக்களிப்பதற்கு சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை சமர்ப்பித்து தனது வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள…

  4. வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களுக்கு தீர்வு வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் வருமானம் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலே, மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் சுமார் 11 கோடி ரூபாவும், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய கலாசார நிதியத்தில் நிலை…

  5. கோண்டாவிலில் அடிதடிக் குழு தாக்குதல்! யாழ்ப்பாணம் – கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு நேற்று (06) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/கோண்டாவிலில்-அடிதடிக்-கு/

  6. சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை (07) நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று (04) கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/வன்னி/சதநதரபரததல-அகழவ-பண-மனனடபப/72-252865

  7. இயக்கச்சி வெடி சம்பவம்; ஆசிரியை கைது; கரும்புலி நாள் பாதாகையும் மீட்பு! கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளனர். இந்த வெடிச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பக…

  8. வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/வெலிகடை-சிறைச்சாலையின…

  9. ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார். தொடர்ச்சியாக சமஷ்டியை எதிர்த்தவர்களும் கேலி செய்தவர்களும் இன்று அதை பெற்றுத்தருவதாக கூறுகின்றார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், அவ்வாறு கூறியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ள வேண்ட…

    • 2 replies
    • 528 views
  10. காங்கேசன்துறையில் இருந்து மஹரகம வைத்தியசாலை ஊடாக புதிய பஸ் சேவை! இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை முதல் மஹரகம வைத்தியசாலை ஊடாக காலி வரையான புதிய பஸ் போக்குவரத்து சேவையை நேற்று (06) ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து நேற்று இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக பயணமானது. மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.ஆ.எப்.அமீன், வடமாகாண பிராந்திய முகாமையாளர் செயலாற்றல் ஏ.ஜே.லம்பட், வடமாகாண பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை பாதுகாப்பு முகாமையாளர்…

  11. சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை பல்லின சமூகம் வாழும் பெரும்பான்மை நாடு. எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அக்கட்சி பெரும்பான்மை சமூகத்துக்கு முன்னுரிமை வழங்குவது சாதாரண ஒரு விடயமாகும். இதனை குறை கூற முடியாது. ஏனெனில் சிங்கள மக்களே பெரும்பான்…

  12. கதிர்காம பாத யாத்திரையை தடை செய்தால் என்ன நடக்குமென தெரியாது தேர்தல் பிரசாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுச் சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை தடைசெய்ய வேண்டுமென மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் அம்பிட்டிய சுமணரத்தன தோர் கேள்வி எழுப்பியுள்ளார். கதிர்காம பாத யாத்திரைகளை நிறுத்தினார் இனி வரும் தினங்களில் என்ன நடக்குமென கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்து மக்களுடைய பாரிம்பர…

  13. காலிமுகத்திடலில் துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண் : ரவி கருணாநாயக்க, அமைச்சர் பிரசன்ன கருத்து காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தானும் நண்பரும் தாக்கப்பட்டமை தொடர்பாக முகநூலில் அவர் இது தொடர்பான வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளார். காலிமுகத்திடலில் நேற்று மாலை மூன்று நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தவேளை பத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தன்னை துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மதுபோதையிலிருந்த ஒருவர் தகாதவார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதுடன் தனது நண்பரை தாக்கினார். அந்த சம்பவத்தை தான் படம்பிடிக்க ஆரம்பித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து சென்றனர் என அந்த பெண் தெரிவ…

  14. யானையை சீண்டி பார்க்காதீர்கள்; அடக்கினாலும் அடங்காது – ஆனந்தகுமார் ஐக்கிய தேசிய கட்சி நடமாடும் பிணமாய் அலையும் இறந்த கட்சியாகும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று இரத்தினபுரி மாவட்ட ஐதேக வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார். இறக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இன்று (06) வழிபட்ட பின்னர் இதனைக் தெரிவித்தார். மேலும், “ஒருபோதும் பதவிக்காக யானை சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார். …

  15. வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு! நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது. https://newuthayan.com/வாக்களிக்கும்-நேரம்-அதிக/

  16. சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன் மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்…

    • 1 reply
    • 565 views
  17. பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது? வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பா…

  18. பூநகரி விபத்தில் இளைஞன் பலி! கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/பூநகரி-விபத்தில்-இளைஞன்/

  19. ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு! இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ஆறு-இலங்கை-மீனவர்கள்-மீட/

  20. ஐவருக்கு மாத்திரமே அனுமதி இனிவரும் காலங்களில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணியொருவரை வழியனுப்புவதற்கு 5 பேர் மாத்திரமே, விமான நிலையத்தின் பயணிகளை வழி அனுப்பி வைக்கும் பகுதிக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென, விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன், விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவரகக-மததரம-அனமத/175-252859

  21. ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது. https://newuthayan.com/ஒட்டுசுட்டடான்-தான்தோன்/

  22. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில by : Yuganthini சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், இந்த அரசாங்கமானது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கிறது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனம், நிதியமைச்சுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் சமகால அரசாங்கத்தின் நிதிக் கொள்க…

    • 0 replies
    • 302 views
  23. போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன் by : Vithushagan எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நடக்க போகின்றது எமத…

    • 0 replies
    • 284 views
  24. கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார்…

    • 0 replies
    • 266 views
  25. புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால் by : Jeyachandran Vithushan விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்…

    • 0 replies
    • 254 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.