ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
தலைமையைத் தீரமானிப்பதற்கு இ.தொ.கா புது வியூகம்? அழகன் கனகராஜ் நாடாளுமன்றத் தேர்தலில், ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளருக்கே, காங்கிரஸின் தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. ஆகையால், வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் தருவாயில் இன்றேல், மௌன காலத்தில் அறிவிக்கப்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், நடைபெறவுள்ள ந…
-
- 0 replies
- 353 views
-
-
உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் தவறின் பேராபத்து - வடக்கு ஆளுநருக்கு பறந்த கடிதம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று (2020.06.15) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரம…
-
- 0 replies
- 366 views
-
-
ஸ்ரீலங்கா மீது நம்பிக்கையில்லை! நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கடன் நிலைமைகள் மற்றும் பொதுவாக அரசாங்கம் கையாளும் நிதி கொள்கை சம்பந்தமாக எவ்வித நம்பிக்கையும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் ஜெய்கா நிறுவனம், ஸ்ரீலங்காவின் பழமையான மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்காளி அமைப்பாகும். இந்த நிறுவனம் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்…
-
- 0 replies
- 397 views
-
-
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் போது, வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோயாளர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரமுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அது போதுமானதல்ல. வழமைக்கு மாறான சுகாதார அவசர நிலையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்தையும் ப…
-
- 0 replies
- 227 views
-
-
பொலிஸ் வேடமிட்டு கொள்ளையிட்ட அதிபயங்கர கொள்ளையர்கள் சிக்கினர் பொலிஸ் சீருடை அணிந்து கொண்டு தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று கூறி பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்றை நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கொடமுள்ள பகுதியில் வீடொன்றுக்கு காரொன்றில் பொலிஸ் சீருடையில் சென்ற நால்வர் தங்களை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்தி கொரோனா நோய்த் தொற்று சந்தேக நபர்களை குறித்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக க…
-
- 0 replies
- 286 views
-
-
ஜனாதிபதியின் இரு முக்கிய அறிவிப்பு! கைத்தறி மற்றும் பற்றிக் ஆடைகளை இறுக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இன்று (15) இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊரடங்கு உத்தரவின் போது பொலிஸார் கைப்பற்றிய அனைத்து வாகனங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/ஜனாதிபதியின்-இரு-முக்கிய/
-
- 0 replies
- 348 views
-
-
தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன் தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், https://newuthayan.com/தேர்தல்-செலவுக்கு-மக்கள/
-
- 21 replies
- 1.9k views
-
-
கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது. கலட்டி வீதியால் செல்லும் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுவந்த இளைஞர்களின் தொல்லை தாங்காமல், குறித்த பெண்கள் தமது உறவினர்களிடம் விடயத்தை தெரிவித்ததை அடுத்து குறித்த பெண்களின் உறவுக்காரர்களால் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் நையப்புடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் த…
-
- 4 replies
- 660 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒருசிலரின் பொறுப்பற்ற இந்த செயலால் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். கொரோனா தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராதநிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவட…
-
- 0 replies
- 350 views
-
-
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்று இருவேறு வகையில் கருத்துக்கள் முன…
-
- 0 replies
- 411 views
-
-
(எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவை…
-
- 0 replies
- 355 views
-
-
உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த.தே.ம.முன்னணி பிரமுகர், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா மற்றும் பசிலிடம் பணம் பெற்றதாகக் கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் மிகுந்த வாதிப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களின் பனியிலும் குளிரிலும் க~;டப்பட்டு சம்பாதித்தது பொருளாதாரத்தால் போசித்த விடுதலைப் போராட்டத்தை, தமிழ் தாய்மார் தமது கழுத்தில் கிடந்த தங்கத்தைக் கொடுத்து தாங்கிய போராட்டத்தை, இளைஞர்கள் தங்கள் உயிரையே கொடுத்து நடாத்திய போராட்டத்தை, பசிலிடமும், பிரோமதாசாவிடமும் பணம் பெற்று நடாத்திய போராட்டமாக த.தே.மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் தெரிவித்த விவகாரம் புலம்பெயர் தேசங்களில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ்…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஷஹ்ரானுடன் எமது கட்சிக்கு தொடர்பில்லை – ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிம் மற்றும் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி – பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறான குழுவொன்று தங்களுடன் இருப்பதை யாரும் அ…
-
- 1 reply
- 587 views
-
-
யாழ்.பருத்துறையில் வந்திறங்கிய சிங்கள மீனவர்களால் பதற்றம்..! கடற்றொழிலாளர் சங்கங்கள் மௌனம்.. யாழ்.பருத்துறை - கொட்டடி கடற்கரை பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு தொகுதியினர் வந்திறங்கியதால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பொழுதுபோக்காக நேரத்தை கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த குறித்த கடற்பரையில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் கடலட்டை பிடிப்பதற்காக பெருளவு சிங்கள மீனவர்கள் வந்திறங்கியுள்ளதுடன், பூசை வழிபாடுகளை நடாத்தி தொழிலுக்கான ஆயத்த பணிகளை செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் குழப்பமடைந்துள்ளபோதும் கடற்றொழிலாளர் சங்கங்கள் தொடர்ச்சியாக அமைதியாக இருந்து வருகின்றனர். https://jaffnazone.com/news/18422
-
- 3 replies
- 514 views
-
-
கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன் Sunday, June 14, 2020 | 7:50:00 PM | 0 comments . பாறுக் ஷிஹான்- கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வ…
-
- 1 reply
- 361 views
-
-
சான்றிதழ் வழங்க வந்த மைத்திரியை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) முற்பகல் பொலன்னறுவையில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த வைபவம் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகை தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு …
-
- 1 reply
- 426 views
-
-
எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போத…
-
- 27 replies
- 2.7k views
-
-
இலங்கையில் 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் — ஹர்ஷ சுட்டிக்காட்டினார் இலங்கையில் கொரோனா நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று முன்னாள் எம்பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். தொழில் திணைக்களம், 2,700 தொழில் நிறுவனங்களில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கு அமைய, அந்நிறுவனங்களில் கொரோனாவுக்கு முன்னர் 3,76 388 பேர் பணிபுரிந்துள்ள நிலையில், மே மாதமளவில் 263,412 பேருக்கு பணிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது போயுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ‘தொழில் திணைக்களத்தின் இந்த அறிக்கை, அமைச்சரவைக்கும் …
-
- 0 replies
- 381 views
-
-
மருந்துகளின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அனுமதியின்றி மருந்துகளின் விலைகளில் திருத்தங்கள் ம…
-
- 0 replies
- 358 views
-
-
ரயில் நிலையத்தில் குழப்பம்; இருவர் கைது! வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று (14) மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர் குறித்த நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டதுடன், அச்சுறுத்தலும் விடுத்து அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறு. இந்நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ரயில்-நிலையத்தில்-குழப்ப/
-
- 0 replies
- 430 views
-
-
வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை! யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இன்று (15) முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார். நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக எமது சபையின் எல்லைக்குள் இருக்கும் பொதுச் சந்தைகள் பூட்டப்பட்டன. அதற்கு மாற்றீடாக பொது இடங்களில் …
-
- 0 replies
- 358 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டில் இதுவரையில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராலும் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் 91 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போதுவரையில் மொத்தமாக 106 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட…
-
- 5 replies
- 880 views
-
-
யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது! யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் தாக்குதல்தாரிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள பிரதேசத்தில் காணப்படும் CCTV காணொளிகளை பொலிஸார் பரிசோதித்து வருகின்றனர். அதேவேளை, இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்ட…
-
- 8 replies
- 790 views
-
-
மரண தண்டனை கைதியை இலஞ்சம் பெற்று விடுவிக்கவில்லை கொழும்பு – ரோயல்பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி அன்ரனி ஜயமஹாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய தான் இலஞ்சம் பெறவில்லை, கல்வி சாதனையின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையை சேர்ந்த சுவிடன் பெண்ணை கொடூரமாக கொலை செய்த மரண தண்டனை கைதி அன்ரனியை தன்னிச்சையாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னில் விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மரண-தண்டனை-கைதியை-இலஞ்சம/
-
- 0 replies
- 292 views
-
-
நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து! யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் நேற்று (14) இரவு உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தாக மாறியதில் கத்திக்குத்துக்கு இலக்காகி சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. இதன்போது ஒருவர், பிறிதொருவரை கத்தியால் குத்த முனைந்தபோது, அங்கிருந்த சிறுமியின் கழுத்து பகுதியில் கத்தி குத்தியுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, சா…
-
- 0 replies
- 325 views
-