Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி எல்லையை ஒட்டிய மாசேரிக்கும் குடத்தனைக்கும் இடையில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், வீடு திரும்பிய நிலையில் தன்னை மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து (08.06.2020) தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது. இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் தப்பித்து வந்…

    • 4 replies
    • 645 views
  2. சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம்! கொழும்பு – 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டில் மரணித்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் சடலத்தின் அருகே 9எம்எம் பிஸ்டலும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/கொழும்பு-சுதந்திர-சதுர்க/

  3. மிருசுவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு அராஜகம்! யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது நேற்று (11) இரவு வாள்வெட்டுக் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்புக் கமெராக்களை அடித்து உடைத்துள்ளனர். இதன்பின்னர், அங்கிருந்த பணியாளர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்க…

  4. யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்பட்டது Jun 12, 20200 யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னாக விளங்கிய சங்கிலியனின் 401 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு, இன்று நல்லூரில் உள்ள சங்கிலியன் மன்னனின் நினைவு தூபியில் நடைபெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன் ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-சங்கிலி/

  5. கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மாற்றும் நடவடிக்கைக்கு அக்கராயன் பொது அமைப்புகள் எதிர்ப்பு. இன்று காலை அக்கராயன் பிரதேச 15 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்ததுடன் மனுக்களையும் கையளித்தனர். அக்கராயன் வைத்தியசாலை அருகாமையில் மக்கள் செறிவாக வசித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்தெ பொதுஅமைப்புகள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/கிளிநொச்சியில்-கொரொனா-வ/

  6. இனவாத சிந்தனைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கவும் - காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம்.! இனவாத சிந்தனை கொண்டவர்களுடைய விடயத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேட்டுள்ளது. மட்டக்களப்பு - தாழங்குடா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிரேஷ்ட கல்வி அதிகாரி எம்.ஐ.எம். நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஒரு சில தமிழ் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தாம் கண்டிப்பதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்மேளனம் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை பல்லின சமூக, கலாசாரத்தை பின்பற்றக்கூட…

  7. எல்லைப் பிரச்சினையில் முரண்பாடு வேண்டாம் - ச. ராசன் வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரச்சினை தொடர்பில் இரு மாவட்ட தமிழ் மக்களும் முரண்படாமல்பேசி தீர்க்க முன்வர வேண்டுமென, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ச.ராஜன் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை, எந்த அரசியல்வாதிகளும் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், “அம்பாறை மாவட்டத்தின் எல்லையென்பது, அங்கு வாழும் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கின்ற, தக்கவைக்கின்ற பகுதியாக காணப்படுகின்றது. “இந்த வக…

  8. கல்கிஸ்ஸை கடற்கரை மணல் மற்றும் நீரின் மாதிரிகள் தொடர்பில் மேலதிக ஆய்வு கல்கிசை கடற்கரையில் கழிவுகள் ஒதுங்கியுள்ளமை மற்றும் கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டிருந்த மணல் நிரப்பும் வேலைத் திட்டத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக சமுத்திர பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நலின் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை சுற்றுச்சுழல் பிரிவால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய துணைவேந்தர் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் விசேட குழுவினர் இன்று (09) கல்கிஸ்ஸை கடற்கரையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துணைவேந்தர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் குறித்த கடற்கரையில் பிளாஸ்டிக், பொலித்தின் உ…

  9. இணையவழி கருத்தரங்கிற்கு அழைப்பு! நிபுணர்கள் யூகே அமைப்பும் (VMUK), தேசிய ஒற்றுமை மன்றமும் (NUF) ஒருங்கிணைந்து வழங்கும் “எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு இலங்கை என்ற அடிப்படையில் சமூக பொருளாதார நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் பல்துறை நிபுணர்களின் இணையவழி கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரம் பிற்பகல் 6.30 மணிக்கும், பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.00 மணிக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய நேரம் பிற்பகல் 5.00 மணிக்கும், அமெரிக்க நேரம் காலை 9.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது. இதன்போது பேராசிரியர் சுஜிரித் மென்டிஸ், முன்னாள் எம்பி பேரியல் அஸ்ரப், நிதி ஆலோசகர் தம்பு செல்வகுமார் மற்றும் பிரிட்டிஷ் கன்செர்வ்டிவ் கட்சி ஆலோசகர் லோர்ட் நாஸ்பே ஆகியோரும் …

  10. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குலை கண்டித்து நாமல் மற்றும் மங்கள டுவிட்டர் பதிவு அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேசைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் …

    • 4 replies
    • 569 views
  11. ரணிலின் கருத்து உண்மைக்கு புறம்பானது…! சுகாதார அமைச்சு தெரிவிப்பு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சுகாதார அமைச்சுக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை கட்டப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டுக்கு 1.9 மில்லியன் டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஜீன் மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த பணத்தில் 855,869 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவுக்காக இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாகவும் மிகுதி பணம் மற்றைய திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளதாகவ…

  12. பனை அபிவிருத்தி சபை ஊடாக வடக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படத்தவும் உள்ளோம் என்று பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ‘அமைச்சர் விமல் வீரவன்ச பனை அபிவிருத்தி சபைக்கு அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதியில் அழிவுற்ற பனை வளங்களை மீளவ…

  13. மட்டு போதனாசாலை பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜஹம்பத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் குழு இன்று (11) காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து தமது வைத்தியசாலை குறைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது குறிப்பாக சி.ரி (CT) ஸ்கேனர் இயந்திரமானது தற்போது செயலிழந்திருக்கின்ற காரணத்தினால் நோயாளர்களை அம்பாறை, கல்முனை ஆகியய வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளமை தொடர்பில் பேசப்பட்டது. புதிய நவீன தொழில் நுட்பம் அடங்கிய சி.ரி ஸ்கேனர் இயந்திரத்தை பெறுவதற்கான சகல உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது அமைச்சரவையின் அங்கீ…

  14. கூட்டமைப்பை ஆதரிக்க மகஜர் கையளித்த விடுதலை புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பாக நேற்றைய தினம் (10) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவை வவுனியா இலங்கைத் தமிழ் அரதசுக் கட்சி காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிப்பது தொடர்பில் நிபந்தனைகள் உள்ளடங்கிய கடிதமொன்றும் சேனாதிராஜாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இக் கடிதம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுப்பதாக மாவை சேனாதிராவினால் தெரிவிக்கப்…

  15. 1000 கிலோ கிடாரம் கிழங்குகளை பிடுங்கிய இருவர் கைது! மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவு, பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டதுடன், கிடாரம் கிழங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பனிச்சங்கேணி காட்டுப் பகுதியில் அதிரடிப் படையினரும், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களும் சோதனை மேற்கொண்டனர். இதன்போது மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள எழுபத்தையாயிர…

  16. 196 ஆசனங்களுக்காக 7452 பேர் போட்டி : மாவட்ட ரீதியிலான விபரங்கள் உள்ளே இம்முறை பொதுத் தேர்தலில் நாடு பூராகவும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7452 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 196 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளனர். அத்துடன் மேலும் 29 பேர் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதத்திற்கமை தேசிய பட்டியல் மூலம் தெரிவாகவுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மற்றும் அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கைகள் வருமாறு -(3) http://www.samakalam.com/செய்திகள்/196-ஆசனங்களுக்காக-7452-பேர்-போட்/

  17. தேவிபுரத்தில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்ட சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது …

  18. நுணாவில் வாள் வெட்டில் சிறுமி உட்பட ஐவர் காயம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று (11) மதியம் மற்றும் மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று மதியம் எஸ்.ஏவி (16-வயது) என்ற சிறுமி வீதியால் சென்ற போது குழு ஒன்று வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இதில் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு குறித்த சிறுமியின் சகோதரனான எஸ்.இளங்கீரன் (24-வயது) என்பவர் மீது அதே குழு வாளால் வெட்டியதாக கூறப்படும் நிலையில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பை சேர்ந்த ஜெயசீலன் ஜெனீலன் (28-வயது), ஜெ…

  19. மீசாலையில் நபர் ஒருவர் மீது வாள் வெட்டு! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இன்று (11) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். https://newuthayan.com/மீசாலையில்-நபர்-ஒருவர்-ம/

  20. தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு- சுமந்திரன் by : Litharsan தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால் அதை வழங்கத் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பலமான ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் . எமது மக்கள் இதனை ஏற்று மாற்று அணிகள் என்ற கோசத்தைப் புறக்கணித்து, பலமான ஒரு அணியாக தமிழ் தேசியக் கூட்…

    • 9 replies
    • 857 views
  21. ‘தொண்டமானின் இறுதி ஊர்வலத்தையும் போராட்டத்தையும் தொடர்புப்படுத்த முடியாது’ அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தையும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தையும் தொடர்புப்படுத்த முடியாதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடுவது பொறுப்பற்றச் செயல் எனவும் தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் உறு…

    • 0 replies
    • 353 views
  22. ’பொதுக்கூட்டம் நடந்தால் கொவிட் மீண்டும் வரும்’ பொதுக்கூட்டங்கள் கூட்டப்படுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், இதுபோன்ற பொதுக்கூட்டங்களை, அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொவிட்-19இன் பதிவுகள் குறைந்து வரும் நிலையில், சிலர் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முயன்று வருவதாக, அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவ்வாறான பொதுக்கூட்டங்களை நடத்துவதன் மூலம், சமூகத்துக்குள் கொவிட் - 19 பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டு…

  23. வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம் by : Dhackshala பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் …

    • 0 replies
    • 400 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் என்பதை எமது மக்கள் கடந்த தேர்தல்களில் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.இம்முறையும் எமது மக்கள் அவ்வாறு செயற்படுவார்கள். அதில் எமக்கு நூறு வீதம் நம்பிக்கை உண்டு. எனினும், இந்தத் தடவை எமது கரங்களை எமது மக்கள் மென்மேலும் பலப்படுத்த வேண்டும்.தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்கு பொதுத்தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்த வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான அறிவிப்ப…

    • 3 replies
    • 351 views
  25. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய, பக்கச்சார்பான, குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை தான் தெரிவித்து வருகின்றார். அது ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல. அவருடைய வரலாற்று ரீதியான சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144895

    • 5 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.