ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
உலக சமாதான சுட்டியில் 77ம் இடம் இலங்கைக்கு 2020ம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக சமாதான சுட்டியில் முதல் 10 இடங்களில் நியூசிலாந்து, போர்த்துக்கல், அவுஸ்திரேலியா, டென்மார்க், கனடா, சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு 139வது இடம் கிடைத்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறியுள்ளன. h…
-
- 0 replies
- 546 views
-
-
வாழைச்சேனையில் பெண் ஒருவர் காெடூர கொலை மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (வயது-60) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உசன் வைத்தியர் வீதியில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண் நேற்று இரவு பத்து மணியளவில் அதே வீதியில் வசித்துவரும் அவரது மகளின் வீட்டில் இருந்து தனது வீடிட்டிற்கு வந்ததகவும் இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்த பொது கதவு திறந்த நி…
-
- 0 replies
- 254 views
-
-
தொடர் கொள்ளை; ஐவர் கைதாகினர் திருகோணமலை – தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று (10) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலையூற்று பிரதேசத்தில் ஒன்றறை மாதங்களாக இடம்பெற்று வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொலைக்காட்சி, குளியலறை பொருள்கள், தையல் இயந்திரம், மின்விசிறி போன்ற பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/தொடர்-கொள்ளை-ஐவர்-கைதாகி/
-
- 3 replies
- 753 views
-
-
மோசமான கட்டத்திற்குள் நகரும் ஸ்ரீலங்கா! சர்வதேச பொறிக்குள் சிக்கும் ஆபத்து தொடர்பில் கடும் எச்சரிக்கை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளரும் அவரை சுற்றி இருக்கும் அடிப்படைவாதிகளும் நாட்டை உலகில் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளி வருவதாக அரசியல் ஆய்வாளரும் ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்கள் தற்போது இலங்கையை உலகில் இருந்து தனிமைப்படுத்தி வருவகின்றனர். உலகில் இருந்து இலங்கையை ஒதுக்கி வருகின்றனர். உலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை தவறான விதத்தில் முகாமைத்துவம் செய்து வருவதன் காரணமாக மிக மோசமான நெருக்கடியை தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்நோக்குவார்கள். தற்போதைய நிலைமையின் கீழ் சரியான வெளிநாட்டு கொள்கையை உருவாக்காது …
-
- 1 reply
- 435 views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு அடித்த லொத்தர்! நிரூபித்துக்காட்டிய சம்பந்தன் கொரோனா தொற்று உலகம் முழுவதும் திணறடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீலங்காவில் அதன் தாக்கம் குறைவடைந்து வருவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இதற்கிடையில், பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், அனைத்து தரப்பினரும் தேர்தலை நோக்கி ஓடத் தொடங்கியிருக்கிறார்கள். உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்வது என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பு காபந்து அரசின் பிரதமருடன் பேசியதன் வாயிலாக நிரூபித்துக்காட்டியது யாது? இவை தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மிக விரிவான விளக்கத்தினை எமது நிலவரம் நிகழ்ச்சியில் வழங்கியிருக்கிறார், இது தொட…
-
- 2 replies
- 591 views
-
-
(ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொல்பொருள் பிரதேசங்களையும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு ஜனாதிபதியின் விசேட செயலணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எழும் அழுத்தங்களை நிராகரித்து செயலணியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு செயலணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொல்பொருள் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். கிழக்கு மாகணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பிலான முதலாவது கூட்டம் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் …
-
- 4 replies
- 561 views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு அடித்த லொத்தர்! நிரூபித்துக்காட்டிய சம்பந்தன் https://www.youtube.com/watch?time_continue=184&v=PvtiK6gQnbk&feature=emb_logo
-
- 0 replies
- 501 views
-
-
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் இரு அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல் என்.ராஜ் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச் சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா திரும்பிய நிலையில், அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பஸ்ஸில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரிழந்த மற்றுமோர் இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 336 views
-
-
நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம்: 30 பேருக்கு மட்டுமே அனுமதி எம்.றொசாந்த் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தை, இம்முறை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், அத்துடன், அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம்,…
-
- 0 replies
- 215 views
-
-
யாழில் ஹெரோயின் கடத்திய பெண் கைது யாழ்ப்பாணம் – அரயாலை பகுதியில் வைத்தியசாலை ஊழியர்போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும், அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/அரியாலையில்-ஹெரோயினுடன்…
-
- 0 replies
- 395 views
-
-
இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை இணுவிலில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர், அண்மையில் நாடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கு இனங்காணப்பட்டுள்ளார்.இதையடுத்து, இணுவிலில் அவர் தங்கியிருந்த மற்றும் ஏழாவையில் தொடர்பு வைத்திருந்த மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும்13 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.இவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண…
-
- 0 replies
- 233 views
-
-
உயர்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலால் குழப்பம்! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991ம் ஆண்டு முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு – பட்டங்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ள நிலையில், கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப நிலை தோன்றியிருக்கிறது. உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி, வெளியிடப்பட்ட 2163/21ம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 17வது புதிய துறையாக மொழி பெயர்ப்புக் கற்கைகள் துறையும், விஞ்ஞான பீடத்தில் 7வது கற்கைத் துறையான கடற்றொழில் துறையை உடனடுத்த…
-
- 0 replies
- 440 views
-
-
மீண்டும் சீருடைகளை வழங்க அரசு தீர்மானம்! சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. குறித்த நடைமுறையால் மோசடிகளும் சிக்கல்களும் எழுந்திருந்தன. இந்நிலையிலேயே மீண்டும் சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. https://newuthayan.com/மீண்டும்-சீருடைகளை-வழங்க/
-
- 0 replies
- 600 views
-
-
பொலிஸாருக்கு எதிராக 14 வயது சிறுவன் முறைப்பாடு! காலி – எல்பிட்டிய பகுதியில் தந்தையை கைது செய்ய 14 வயது சிறுவனை தடுத்து வைத்த சம்பவம் அண்மையில் நடைபெற்றது. எனினும் அதனை மறுத்த பொலிஸார், தந்தையை கண்டுபிடிக்க சிறுவன் தம்மிடம் கோரிக்கை விடுத்து நடித்தான் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தந்தையை கைது செய்ய தன்னை தாயாருக்கும் கூறாமல் பொலிஸார் அழைத்து சென்றனர் என்று தெரிவித்து பொலிஸாருக்கு எதிராக இன்று (10) குறித்த சிறுவனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது தாயாருடன் சென்று இந்த முறைப்பாட்டை குறித்த சிறுவன் பதிவு செய்துள்ளான் https://newuthayan.com/பொலிஸாருக்கு-எதிராக-14-வயத/
-
- 0 replies
- 359 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான மொஹம்மட் சஹ்ரானின் புத்தளம், வனாத்தவில்லு பயிற்சி முகாமை கண்டுபிடித்த, சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது தகவல்கள் அம்பலமாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி. கைது செய்துள்ள சந்தேக நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றினை ஆராய்ந்த போதும், அது சார்ந்த விசாரணைகளின் போதும் அந்த தகவல் வெளிபப்டுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்ட வனாத்துவில்லு முகாம் சுற்றிவளைக்கப்பட்ட போது எட…
-
- 0 replies
- 381 views
-
-
இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ரத்ததான தேர்தல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இட…
-
- 0 replies
- 284 views
-
-
சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்ட 22ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது. கொரோனாத் தொற்றைக் காரணங் காட்டி பொலிஸார் குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதித்திருந்தனர். எனினும் தடையையும் மீறி படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தாக்குதலில் 4 பிள்ளைகளை இழந்த தந்தை புஸ்பராசா பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். …
-
- 0 replies
- 499 views
-
-
யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா..! வடக்கு சுகாதாரதுறை உசார் நிலையில்.. யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம் 1ம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார். இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விசேட படகு சேவை மூலமாக அவர் இந்தியா சென்றுள்ளார். அங்கு 2ம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.இணுவில் பகுதியில் 45 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்துள்ளார். குறித்த நபருடைய …
-
- 3 replies
- 442 views
-
-
ராஜித சேனாரத்னவுக்கு பிணை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில், ராஜித சேனாரத்னகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஜத-சனரதனவகக-பண/175-251671
-
- 0 replies
- 442 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச by : Benitlas தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ஆணைக்குழு பதவி விலகவேண்டும் எனவும் கோரியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நடந்துகொள்ளும் விதத்தினை வைத்து பார்க்கும்போ…
-
- 0 replies
- 302 views
-
-
ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது by : Jeyachandran Vithushan கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக கொழும்பில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முன்னிலை சோசலிச கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த போராட்டத்தினை நடத்துவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத…
-
- 5 replies
- 634 views
-
-
ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது! by : Benitlas எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/ஓகஸ்ட்-5-இல்-பொதுத்-தேர்தல/
-
- 0 replies
- 546 views
-
-
கல்முனையை பொறுத்தவரையில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.! முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைப்பிரச்சினை நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் முஸ்லிம் காங…
-
- 0 replies
- 372 views
-
-
அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை, எனவே தயவு செய்து அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை (9) தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி திருக்கோவில் விநாயகபுரத்தில…
-
- 2 replies
- 510 views
-
-
ஸ்ரீலங்கா பொலிஸின் அடாவடி! பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை: வெளியானது காணொளி அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததை அடுத்து இதில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீலங்கா பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்து ஜீப் வண்டியில் தூக்கிப்போடும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவரை கைது செய்யும் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி ஜீப் வண்டிக்குள் வீசியுள்ளனர். …
-
- 1 reply
- 722 views
-