ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142936 topics in this forum
-
தமிழ் அரசியல் அரங்கில் செயற்பட்டுவருகின்ற பல அரசியல் தலைவர்களும் சுமந்திரன் வெளியிட்டு வருகின்ற நிலைப்பாடுகள், கருத்துக்கள் தொடர்பாக மிகப் பெரிய அதிருப்திகளை பதிவுசெய்து வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் சுமந்திரனின் போக்கு, நிலைப்பாடுகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் சுமந்திரனை திட்டி தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஏன்? சுமந்திரன் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் எழுகின்றன? எதற்காக சுமந்தினை அவரது கட்சியின் சகாக்கள் கூட எதிர்க்கின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்ற 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி இத…
-
- 3 replies
- 815 views
-
-
சிறுவனை தாக்கிய பொலிஸ் குழு; விசாரணை தீவிரம்! களுத்துறை – தர்கா நகரில் தாரிக் அஹமட் (14-வயது) என்ற ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பொலிஸ் குழுவொன்று தாக்கியமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் திகதி ஊரடங்கு அமுலில் இருந்த போது தர்கா நகரின் பொலிஸ் சோதனைச்சாவடி அருகே சைக்கிளில் சென்ற குறித்த சிறுவனை பொலிஸார் மற்றும் சிலர் இணைந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொளிகள் ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளன. 43 people are talking about this …
-
- 3 replies
- 555 views
-
-
வீடுகளுக்கு பொலிஸாருடன் செல்லும் மர்ம மனிதர்கள் கொழும்பில் வீடுகளுக்கு விபரம் சேகரிக்க பொலிஸாருடன் சிவில் உடையில் செல்லும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இன்று (05) பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாக கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள் – வாக்காளர் பதிவற்றவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு பொலிஸாருடன் சிவில் உடையில் மர்ம நபர்களும் சென்று தகவல் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/வீடுகளுக்கு-பொலிஸாருடன்/
-
- 2 replies
- 488 views
-
-
மூளையில் இரத்தக்கசிவு - வீடு திரும்பி 5 நாட்களின் பின் உயிரிழந்த 5 வயதுச் சிறுவன் மட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர், 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், கல்லடியை சேர்ந்த ஒருவரும் அவரின் மகனும் காயமடைந்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு மறுதினமே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவன் மீண்டும் சுகயீனமுற்ற நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், CT Scan எடுப்பதற்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்துள…
-
- 0 replies
- 339 views
-
-
போதை மாத்திரைகளுடன் மூவர் கைது! மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர். களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1360 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். https://newuthayan.com/போதை-மாத்திரைகளுடன்-மூவர/
-
- 0 replies
- 665 views
-
-
மன்னாரில் புலனாய்வு பிரிவால் அறுவர் கைது இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாருக்கு தனது பிள்ளையுடன் வந்த நபர் ஒருவர் மடு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர் எவ்வாறு மன்னாருக்கு வந்தார்கள் என அரச புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், படகு மூலம் அவர்களை இலங்கை…
-
- 0 replies
- 286 views
-
-
மந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இன்று (05) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது வீட்டுக் காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது காற்று காரணமாக குப்பையிலிருந்து பறந்த தணல் அயல் வீட்டாரின் தென்னை, பனை மீது விழுந்து தீ பற்றி பாரிய விபத்து ஏற்பட்டது என தெரியவருகிறது. இதைனயடுத்து சம்பவம் தொடர்பில் தீ அணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீ அணைப்புப் படை தீயை கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது. https://newuthayan.com/மந்துவில்-பகுதியில்-சற்ற/
-
- 0 replies
- 315 views
-
-
ஊடகப்பிரிவு - தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவை…
-
- 10 replies
- 1.3k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த - சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த - சிங்கள நாடு. தமிழர்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்துப் புலம்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை” என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். “வடக்கு, கிழக்கை நாம் பாதுகாக்க வேண்டுமெனில் இங்கு இராணுவத்தைத்தான் நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் நேரடிக் கண்காணிப்பில்தான் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெறும்" எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியை நாம் வரவேற்கின்றோம். பெரும்பான்மை பௌத்த - சிங்களவர்களின் வா…
-
- 1 reply
- 461 views
-
-
வீட்டுக்குள் கசிப்பை பதுக்கிய பூசகர் வசமாக மாட்டினார்! வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச…
-
- 7 replies
- 1k views
-
-
(எம்.மனோசித்ரா) பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (02) அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள…
-
- 3 replies
- 1.2k views
-
-
In கொழும்பு June 5, 2020 9:28 am GMT 0 Comments 1243 by : Benitlas நாட்டில் மேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பட்டப்படிப்பிற்கு தகுதி பெறும் மாணவர்களில் 31 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் ஏனைய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வியற்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் புதிய பீடங்களையும் புதிய கல்வியல் பிரிவுகளையும் அமைப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு 37,500 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானி…
-
- 0 replies
- 425 views
-
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்! by : Benitlas எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் பேருந்துகளின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்…
-
- 1 reply
- 493 views
-
-
மூன்று கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது துசித குமார தர்காநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மூன்று கிலோ கிராம் நிறையுடைய வல்லப்படைகளை, மோட்டார் சைக்கிளில் கொண்டுச்சென்றவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வித்தியாலய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரின் வீட்டைச் சோதனை செய்தபோது, ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு 200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீட்டை சோதனையிட்டபோது, கலகம் ஏற்படுத்திய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/மனற-கல-கரம-வலலபபடடயடன-ஒரவர-கத/95-251401 h…
-
- 4 replies
- 1k views
-
-
அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்! by : Benitlas விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் பிடியில் உள்ள இவ்வேளையில் வியன்னா பிரகடனத்தை விட ஒத்துழைப்பும், உயிர்களை காப்பாற்றுவதற்காக நாடொன்று பின்பற்றும் கட்டமைப்பை மதிப்பதுமே முக்கியமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த இராஜ…
-
- 2 replies
- 576 views
-
-
முல்லையில் குடும்பஸ்தரை காணவில்லை! முல்லைத்தீவு – பாலிநகர், வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர். யாரேனும் இவரை கண்டால் பாலிநகர், வவுனிக்குளம் என்ற முகவரிக்கோ அல்லது 0766602122, 0778027498, 0778860893 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர். https://newuthayan.com/முல்லையில்-குடும்பஸ்தர/
-
- 0 replies
- 491 views
-
-
சிறுமி துஷ்பிரயோகம்; தாய் உட்பட மூவர் கைது! அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதுடைய இளைஞன், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். https://newuthayan.com/சிறுமி-துஷ்பிரயோகம்-தாய/
-
- 0 replies
- 532 views
-
-
எமது கட்சி குறித்த அநாமதேய செய்திகளையும் வதந்திகளையும் நம்பவேண்டாம். தொழிலாளர் தேசிய முன்னணியை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு காலத்துக்குக் காலம் கட்டுக்கதைகளாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஒரு குழு இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இணையத்தில் வருகிறது என்பதற்காக அதில் வெளிவரும் அநாமதேய செய்திகளை நம்பி குழப்பமடையாமல் கட்சி செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கும் அதன் பொதுச் செயலாளரான முன்னாள் பாராள…
-
- 1 reply
- 527 views
-
-
24 மணிநேரத்தில்1,490 பேர் கைது ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 498 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 70,042 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 19,856 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் த…
-
- 0 replies
- 372 views
-
-
கிழக்கில் 13 சிறுவர் இல்லங்கள் இயங்கவில்லை கொரோனா நெருக்கடியால், கிழக்கு மாகாணத்தில் இயங்கிவந்த 52 சிறுவர் இல்லங்களில், 13 இல்லங்கள் மூடப்பட்டுள்ளனவென, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாத் தெரிவித்தார். இதனால் கிழக்கு மாகாணத்தில் 1,350 சிறுவர்களிருந்த இடத்தில் தற்போது 400 பேரே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். சமகால கொரோனா நெருக்கடி நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் நிலைவரம் தொடர்பாக, அவர் மேலும் கருத்துரைக்கையில், “நாங்கள் சிறுவர் இல்லங்கள் என அவற்றை அழைப்பதில்லை. மாறாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் எனத்தான் அழைக்கின்றோம். “மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 இல்லங்களும் திர…
-
- 0 replies
- 403 views
-
-
கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி?: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான தகவல்கள் இதோ..! (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணான தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். தற்போது டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருக்கும் அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்…
-
- 0 replies
- 407 views
-
-
கடத்தப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார். வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச்சென்றிருந்தனர். இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்…
-
- 0 replies
- 518 views
-
-
திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது! குருநாகல் – பொல்ஹாவெலவில் இரண்டு வீடுகளில் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் கடந்த பெப்ரவரியில் பனலிய மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களிலுள்ள இரு வீடுகளுக்குள் நுழைந்து தங்க நகைகளை திருடியுள்ளதாகவும் குறித்த நகைகளின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட நகைகளைத் தேடி பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் குற்றமொன்றுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட கேகாலையை சேர்ந்த பொலிஸ் அதிகாரியாவார் https://newuthayan.com/திருட்டில்-ஈடுபட்ட-முன்ன/
-
- 0 replies
- 381 views
-
-
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி! ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை தேசத்திற்கு பௌத்த சமயத்தின் செய்தியை சுமந்து வந்த அரஹத் மகிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது எமது நாட்டு மக்கள் பல்லாயிரம் வருடங்களாக பேணி வரும் வழக்கமாகும். தேரர் அவர்கள…
-
- 0 replies
- 651 views
-
-
அனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்! முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தேசத்தை நாகரீகமடையச் செய்த, தேசத்தை முதிர்ச்சியடையச் செய்த, தேசத்தை முன்னேற்றிய, தேசத்தைப் பாதுகாத்த புத்தமதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது. இந்தியாவின் அசோகப் பேரரசரின் ஆசிர்வாதத்துடன் வருகை தந்த மகிந்த தேரர் தலைம…
-
- 0 replies
- 362 views
-