ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து மீளாய்வு! இலங்கை – கொரிய நாட்டு அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் 2020ம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் சுமார் 144 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தற்பொழுது துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்ளப…
-
- 0 replies
- 425 views
-
-
சிறந்த எம்.பியாக சிறீதரன் தெரிவு -எஸ்.என்.நிபோஜன் இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத் தரப்படுத்தலில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், சிறந்த செயற்ப்பாட்டாளர் தரப்படுத்தலில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2ஆவது இடத்தையும் கட்சியின் தரப்படுத்தலில் முதலாமிடத்தையும், இவர் பெற்றுள்ளார். இவருக்கான வெற்றி பதக்கமும் விருதும், தபால் மூலம் அனுப்பப்பட்டு, அவரது அலுவலக…
-
- 1 reply
- 875 views
-
-
லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தனவின் கருத்திற்கு சம்பந்தன் பதில்! தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதிலளித்துள்ளார். அது தொடர்பில் அவர் வௌியிட்ட அறிக்கை பின்வருமாறு.... தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம் முதற்கொண்டு நீடித்து வருகின்றது. 1956ம் ஆண்டு தொடக்கம் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த நாட்டில் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாக கோரிக்கைகளை வைத்து தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த ஆதரவை அந்த கட்சிகளிற்கும் கொள்கைகளிற்கும் வழங்கி வந்துள்ளார்கள். ஐக்கிய நா…
-
- 0 replies
- 417 views
-
-
ருபெல்லாவை இலங்கை ஒழித்தது – உலக சுகாதார ஸ்பானம் உறுதி! இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் ருபெல்லா தொற்று நோயை கட்டுப்படுத்தியிருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (08) உறுதி செய்துள்ளது. 2023ம் ஆண்டளவில் அந்த இலக்கினை குறித்த இரு நாடுகளும் அடையும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தாலும் 2020ம் அண்டளவிலேயே அந்த இலக்கை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ருபெல்லாவை ஒழித்த முதல் நாடுகளாக இலங்கையும் மாலைதீவும் இடம்பிடித்துள்ளன. https://newuthayan.com/ருபெல்லாவை-இலங்கை-ஒழித்த/
-
- 1 reply
- 547 views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு பசில் கோரிக்கை by : Dhackshala புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், 19ஆவது திருத்தத்தில் இருந்து அல்லாமல் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒவ்வொரு பகுதியை இணைக்காமல், நாட்டுக்கு பொரு…
-
- 0 replies
- 351 views
-
-
எம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன் (ஆர்.யசி) தமிழ் மக்களை நோக்கிய ஆபத்தான அரசியல் சூழலொன்று உருவாகி வருகின்றது. எம்மை நோக்கிய பெளத்த, இராணுவ ஆக்கிரமிப்புகள் படையெடுத்து வருகின்றது. இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாட்டும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இரு…
-
- 0 replies
- 462 views
-
-
கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் இன்றையதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், புதிய அரசியல் சாசனத்தை அதாவது அடிமை சாசனத்தை கொண்டுவருவதற்காகவே. தமிழர்களை பலவீனப்படுத்தி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கொழும்பின் நிகழ்ச்சிநிரலில் சிந்திக்கவிடாமல் அடிமை வாக்களார்களாக கடந்த 11 வருடங்களாக கூட்டமைப்பு வைத்திருந்ததாக பெருமை கொள்கின்றது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்…
-
- 2 replies
- 490 views
-
-
மதரஸாக்கள், புர்கா மற்றும் காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் July 8, 2020 முஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் உடனடியாக பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முஸ்லீம் சமூகத்தில் உள்ள சில சக்திகள் மதவாதத்தை ஊக்குவித்தன என குற்றம்சாட்டியுள்ள அவர் அரசாங்கம் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடு…
-
- 0 replies
- 366 views
-
-
இன்னுமொரு சுமந்திரனே விக்னேஸ்வரன் – மயூரன் காட்டம் by : Benitlas விக்னேஸ்வரனிற்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இன்னொரு சுமந்திரனை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் என வன்னி மாவட்ட வேட்பாளர் செ.மயூரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வன்னி தேர்தல் களத்தில் இன்று பலர் பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதில் பெரமுனவில் போட்டியிடுகின்ற ஜனகநந்தகுமாரவுக்கு வன்னியில் வாக்களிப்பதற்கு தகுதியில்லை. அதேபோல் மான் சி…
-
- 4 replies
- 636 views
- 1 follower
-
-
கிளிநொச்சி வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். இயக்கச்சியைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி இவர் காயமடைந்திருந்தார். இதனையடுத்து, படுகாயமடைந்த அவர், கிளிநொச்ச…
-
- 0 replies
- 408 views
-
-
சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைப்பு அம்பாறை – கல்முனை மாநகரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் ‘சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப் பணிக்குமான அமைப்பின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று(07) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது. இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு “இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்…
-
- 0 replies
- 374 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடை வீரர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து மு…
-
- 0 replies
- 425 views
-
-
நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்! பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் குறித்த சந்த…
-
- 2 replies
- 510 views
-
-
சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கஜதீபன் தலைமையில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இளைஞர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கையில் , பொதுவான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லை. மாறாக சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். சுமந்திரனால் மேலும் 16 அரசியல் கைதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் நீங்கள் எதிர்கட்சியாக இருந்து செய்தது என்ன? தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஏ…
-
- 1 reply
- 663 views
-
-
யாழ் பல்கலையில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு! இராணுவக் கெடுபிடி, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05) தமிழீழ கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. https://newuthayan.com/blacktigers/ கரும்புலிகள் நாளான இன்று வட,கிழக்கில் இராணுவத்தினர் கெடுபிடி கரும்புலிகள் நாளான இன்று(05) அதனை யாரும் நினைவேந்தக் கூடாது என்பதற்காக இராணுவத்தாலும், படையினராலும் விசாரணைகளும் கைதுகளும் மேற்க…
-
- 1 reply
- 507 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடை வீரர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து மு…
-
- 0 replies
- 614 views
-
-
நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில்…! கருணா இராணுவத்தை கொன்றதும், உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். …
-
- 1 reply
- 376 views
-
-
இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை.! இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தவறான முறையில் பணம் சேகரித்த நபர்கள், போதை வர்த்தகர்கள் மற்றும் திடீரென பணக்காரர்களாகிய வர்த்தகர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் திடீரென சொத்துக்கள் சேகரித்த நபர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள், ஆயுத வர்த்தகர்கள், பயங்கரவாத செயல்கள், சைபர் மோசடியாளர்கள், இலஞ்சம் பெறுபவர்கள், உட்பட மோசடியான முறையில் பணம் சேகரித்த நபர்கள் தொடர்பில் பொலி…
-
- 2 replies
- 468 views
-
-
மஹிந்தவுடன் இணையும்படி புலிகளே என்னிடம் சொன்னார்கள்: கனகர் புதுக்குண்டு.! முள்ளிவாய்க்கால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில், ‘இனி போராட்டம் சரிவராது, இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கான உதவியையும் அபிவிருத்திகளையும் செய்யுங்கள்’ என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனால்தான், நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ச.கனகரத்தினம். அந்த ஒரு சொல், தனது அடி நெஞ்சில் இப்பொழுது வரை ஆழமாக இருக்கின்றதெனவும் கூறினார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், நேற்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
-
- 1 reply
- 778 views
-
-
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டமுடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம்- கஜேந்திரகுமார் by : Litharsan 13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து தரப்புக்களும் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கை…
-
- 2 replies
- 455 views
-
-
அறிமுகமாகின்றது “MyBus-SL” அலைபேசி செயலி பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அலைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) அறிமுகப்படுத்தினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. MYBUS-SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளதுடன், பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். அத்துடன், GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவி…
-
- 1 reply
- 386 views
-
-
பா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, தமிழ்மிரர் பத்திரிகை, இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களிலேயே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதி முக்கிய பிரமுகருக்கான ஹெலிக்கொப்டர்களே, இலங்கை விமானப் படையால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும் மைத்திரி பயன்படுத்தியுள்ளார். …
-
- 1 reply
- 510 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்! by : Vithushagan நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றனரா? என்றும் அங்கஜன் இராமநாதன் சவால் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர…
-
- 2 replies
- 721 views
-
-
நன்றி.. யாழ் இந்து பழைய மாணவர் முகநூல். பாடசாலையின் கற்கைகள் பகுதியளவு மாணவர்களுடன் உரிய சுகாதார நடைமுறைகளுடன் 6.7.2020 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 799 views
-
-
யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள் by : Litharsan சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொண்டுள்ள யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக 50இற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புக்களும் 150 முக்கிய நபர்களும் கையெழுத்திட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதலாம் திக…
-
- 3 replies
- 468 views
-